Friday, April 19, 2013
Tuesday, April 9, 2013
Friday, April 5, 2013
The Making of the Madras Working Class
என் நெஞ்சைத் தொட்ட புத்தகம்
பிரகாஷ் காரத்
தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு (The Making of the Madras Working Class) என்னும் புத்தகம் லெப்ட்வேர்ட் (Leftworld) பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டு, அவர்களது அலுவலகமான “மே 1” அரங்கத்தில் மார்ச் 21 அன்று வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நூலினை வெளியிட்டுப் பேசியதாவது:
‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடு மாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தால் வெளி யிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளி யீட்டாளர்களே புத்தகத்தை வெளியிடும் நிகழ் வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத் தகத்தின் உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட ஒப்புக் கொண்டேன்.
நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும் இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத் தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாந கரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப கால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநக ரத்தில் தொழிற்சாலைகளும் தொழிலாளர் களும் உருவான பின்னணி குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். 1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக் கப்பட்டிருக்கிறது.
இந்தியாவிலேயே முதலாவ தாகப் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக மத ராஸ் லேபர் யூனியன்தான் கருதப்படுகிறது. மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக ‘பின்னி’ என்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது. 1918இலிருந்து ‘பின்னி’ ஆலை தான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக் கத்தின் மையமாக இருந்திருக்கிறது.
பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும் போது, அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற் சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென் னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்க வேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர் கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந் திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு , அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்த தையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப் பிட்டிருக்கிறார்.
மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர் பார்க்க முடியாத பின்புலத்திலிருந்து வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங் கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறு வனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார். தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணி களும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடை களின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக் கின்றனர்.
உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வபதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வபதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார்.மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழி லாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்கு வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது. தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் ‘பின்னி’யில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார்....... ....
Subscribe to:
Posts (Atom)