உலகம் முழுவதிலும் ஆயிரம் ஆயிரமாய் உழைக்கும் வர்க்க மக்கள் இரங்கல் ஊர்வலம் போனதையும் சமீப காலத்தில் இந்த உலகம் பார்த்திருக்கவில்லை.
தென் அமெரிக்காவின் முகத்தோற்றத்தை மாற்றி அமைத்த இடதுசாரி புரட்சியாளர் வெனிசுளாவின் அதிபர் , தோழர் சாவேஸ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார்.. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு மாபெரும் திருப்பத்தை கியூபாவுடன் இணைந்து இலத்தீன் அமெரிக்க நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறார்... அமெரிக்காவின் எண்ணெய் வள பசிக்கு இறையாகாமல் சோசலிச பாதையில் அமெரிக்காவிற்கு அடி பணியாமல் வெனிசுலா நாட்டை 20 ஆண்டுகளாக வீறு நடையேற்றியவர் சாவேஸ்...
தோழர் ஸ்டாலின் இறந்ததும் தோழர் சாவேஸ் இறந்ததும் ஒரே தேதி ஒரே மாதம் வருடம்தான் வேறு (ஸ்டாலின் இறந்த தினம் 5 March 1953, சாவேஸ் இறந்த தினம் March 5, 2013) இருவரையும் ஒப்பிட முடியாது. ஆனால், இருவரின் நோக்கமும் ஒன்றே! ஏகாதிபத்தியத்தை உடைத்தெறிய வேண்டும் என்பதே....
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிராக நேருக்கு நேர் மோதிக் கொண்டிருப்பவர்கள்”
நம் நாட்டில் (இந்தியா) உள்ள சில வார இதழ்களும் சாவேசுக்கு சர்வாதிகாரி பட்டம் அளித்து தனது முதலாளித்துவ சிந்தனையை நிரூத்துக் கொண்டிருக்கின்றன... இங்கு இருப்பவனே இப்படி என்றால் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்தம் - அமெரிக்கா என்ன செய்வான்.... அமெரிக்காவின் சதிகளுக்கு ஒரே ஒரு உதாரணம் பிடல் தான். 635 முறை பிடலை கொலை செய்ய முயற்சித்துள்ளது என்று அவரே எழுதியுள்ளார்.......
“அதெப்படி லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 6 தலைவர்களுக்கு அடுத்தடுத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது? புற்றுநோய் பாதித்த ஆறு பேருமே தங்களது நாடுகளை சுதந்திரமாக, இறையாண்மை மிக்க தேசங்களாக வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள்;
மேலும் தெரிந்து கொள்ள.......
No comments:
Post a Comment