நாம் ஏன் இத்தனை சிரமப்பட வேண்டும் ?
ஒரு புதிய சட்டை வாங்க, மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் கனவு காண வேண்டும். சேமிக்க வேண்டும். ஆனால் ஒரு பிரிவினருக்கு மட்டும் எல்லாமே எளிதில் கிடைத்துவிடுகிறதே!
ஏழைகள் மென்மேலும் ஏழைகளாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பணக்காரர்களுக்கு மட்டும் பணம் குவிந்து கொண்டே இருக்கிறது, எப்படி?. இதற்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டே போனால் உண்மை புரியும். தலைவர் மார்க்ஸ் சொன்ன கருத்துக்கள்தான். அவர் கூறிய மூலதனக் கருத்துக்கள்தான். உழைப்பு சுரண்டப்படுவதன் மூலம் கிடைக்ககூடிய உபரி மதிப்பு (Surplus Money) ஒருவரிடமே சென்று குவிவதன் ஆரம்பம்தான், பணம் உள்ளவர்களிடம் மட்டும் சேர்வதற்க்கான காரணம். இதைத்தண்டி இவர்களை எல்லாம் கட்டுபடுத்த வேண்டிய அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவாக செயல்ப்படும்வரை இதை மாற்ற முடியாது. இதற்க்கு இரண்டே வழி ஒன்று அவர்களாகவே மாறவேண்டும், அது நடக்காது. இரண்டாவது நாம் நமது சொந்த ஆசைகளை விட்டுகொடுத்து இந்த உலகை நல்வழிக்கு கொண்டு செல்லும் வழியில் சென்று அனைவருக்கும் நமது கருத்துகளை எடுத்து சொல்லி நம் பக்கம் திரட்டி பணம்படைதவர்களை, ஏகாதிபத்தியக்கரர்களை நாம் அனைவரும் மாற்ற வேண்டும். உலகம் மாற வேண்டும் , அதற்க்கு முதலில் நீ மாற வேண்டும். மாற்றம் என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் அது எந்த வகையில், எந்த முறையில், யாருக்கு சாதகமாக மாறிக்கொண்டு இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அந்த மாற்றம் எற்றுக்கொள்ளகூடியதா? இல்லை ஏற்று கொள்ள முடியாததா என்று!
No comments:
Post a Comment