Wednesday, November 7, 2012

தேசிய இனப்பிரச்சனையும் - இன்றைய ஏகாதிபத்தியமும், தொழிலாளி வர்க்கத்தின் கடமைகளும்



லெனின் ஆற்றிய தேசிய இனப்பிரச்சனை குறித்த அவரது கருத்துக்களோடு இதை நாம் அணுகுவதே உண்மையைப் நோக்கி நம்மை பயணிக்கச் செய்யும்.

லெனின் 1913-ல் செப்டம்பர்-அக்டோபரில் போலந்தில் பேசிய போது "கலாச்சார - தேசிய இனத் தன்னாட்சி" என்ற கோஷத்தை கடுமையாக விமர்சித்தார். தான் எழுதிய தேசிய இனப் பிரச்சனை குறித்த புத்தகத்தில்  இவ்வாறு குறிப்பிடுகிறார். 


"கலாச்சார - தேசிய இனத் சுய ஆட்சி" கோரிக்கை மிகத் தந்திரமான, மிகத் தீங்கான தேசியவாதம் என்றார்.

லெனின் மேற்கொண்டு தேசிய இனப் பிரச்சனையை பற்றி கூறியதாவது அரசு ரீதியில் (சோவியத் யூனியனிலிருந்து) பிரிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கக் கடமைகளின் நோக்கில் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள், முறைகள், வழிகளைப் பற்றியும் வரையறுத்து கூறினார்.

பிற்போக்குவாதத்தினுடைய தேசியவாதம் ஆக்கிரமிப்பு மிக்கதாகி வருகிறது.
மொழியின் முக்கியத்துவம்:

ஒரே அரசில் வாழ்ந்து வரும் தேசிய இனங்களை பொருளாதார பரிவர்த்தனைகளின் தேவைகள் பெரும்பான்மையோரின் மொழியைக் கற்றுக் கொள்ளும்.

ஜனநாயக அரசின் நாகரீகக் குடிமக்கள் பெரும்பாலோருக்குப் புரிகிற மொழியில் பேச  வேண்டுமென விரும்புகிறார்கள் என்பதுதான் காரணம்.
ஒரு நாட்டில், வாணிப உறவுகளின் நலன்களை முன்னிட்டு எந்த மொழி தெரிந்திருந்தால் பெரும்பாலோருக்கு அனுகூலமாக இருக்கும் என்பதைப் பொருளாதார பரிவர்த்தனையின் தேவைகள் தாமாகவே தீர்மானித்துக் கொண்டு விடும்.

மிதவாதிகள் எல்லா அரசியல் பிரச்சனைகளையும் எப்படி அணுகுகிறார்களோ அதே விதத்தில் தான் மொழிப் பிரச்சனையையும் அணுகுகிறார்கள்.
எல்லா தேசிய இனங்களது முதலாளி வர்க்கங்களும் ஆஸ்திரியாவிலும் ருஷ்யாவிலும் தேசிய இனக் கலாச்சாரம் என்று கோஷமிட்டுக் கொண்டு மெய் நடப்பில் தொழிலாளர்களைப் பிளவுபடுத்தியும், ஜனநாயத்தை வலுவிழக்கச் செய்தும், மக்களது உரிமைகளையும், மக்களது சுதந்திரத்தையும் விற்பதற்காக பிரபுத்துவவாதிகளிடம் விலை பேசிப் பேரம் புரிந்து வருகிறார்கள்.

இனப்பிரச்சனையில் தொழிலாளி வர்க்கத்தின் கடமை:

தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் கோஷம் தேசிய இனக் கலாச்சாரம் அல்ல: ஜனநாயகத்தின் உலகு தழுவிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வ தேசியக் கலாச்சாரம் ஆகும். எல்லா விதமான நேர்முக இன வேலைத்திட்டங்களையும் கொண்டு முதலாளி வர்க்கம் மக்களை ஏமாற்றட்டும். வர்க்க உணர்வு படைத்த தொழிலாளி அதற்குக் கூறும் பதில் இதுதான்: (முதலாளித்துவ உலகில், இலாபத்துக்கும் சண்டை சச்சரவுக்கும் சுரண்டலுக்குமான உலகில் பொதுவாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்படியான அளவுக்கு) ஒன்றே ஒன்று தான். முரண்பாடற்ற ஜனநாயம் ஒன்றேதான் ஒன்றுதான் அந்தத் தீர்வு.

தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் வருமாறு:
எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எவ்விதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை:

தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணய பிரச்சனை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்:
எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ இருக்கும் படியான எந்த நடவடிக்கையும் நாம் மேற்கொள்ள முடியாது.

தேசிய இனப்பிரச்சனையில் தொழிலாளி வர்க்க ஜனநாயம் என்ன செய்யவேண்டும் என்றால், எந்த விதமான பூர்ஷ்வா தேசியவாதத்துக்கும் நேர்மறையான முறையில் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளி வர்க்க ஐக்கியமடையவும், ஒருங்கிணையவும் வேண்டும்.
இப்படி ஐக்கியத்தாலும் ஒருங்கிணைவாலும் மட்டுமே ஜனநாயத்திற்காக முனைந்து நின்று பாடுபட முடியும், மூலதனத்துக்கு எதிராக (மூலதனம் ஏற்கனவே சர்வதேசியத் தன்மையைப் பெற்று வருகிறது), தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாத்து நிற்க முடியும். எல்லாத் தனியுரிமைகளுக்கும் எல்லாச் சுரண்டலுக்கும் அந்நியமான புதிய வாழ்க்கை முறையை நோக்கி மனிதகுலம் வளர்ச்சியுறுவதற்காகப் போராட முடியும்.

இன்றைய முதலாளித்துவம்:

மார்க்சியக் கண்ணோட்டத்தில், அதாவது வர்க்கப் போராட்டத்தின் கண்ணோட்டத்திலிருந்து தேசிய இனப் பிரச்சனையை பார்க்கும் போது, இன அடிப்படையில் நாம் பிரிந்தால் வர்க்க அடிப்படையில் இணைவது என்பது சாத்தியமற்றதாக்கிவிடும். இது முதலாளித்துவத்திற்கு மிகச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துவிடும்.

ஏற்கனவே உலகமெங்கும் எத்தனித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சாதாகமான சூழலை இது உண்டாக்கி விடும். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா தனது செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், ஆசிய பசிபிக் பகுதியில் தனது செல்வாக்கை அதிகப்படுத்திட எல்லாவித வாய்ப்புக்களையும் பயன்படுத்த திட்டமிட்டு, ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்ட போரை சாதகமாகச் செயல்படுத்த இலங்கை மீது போர்குற்றச் சாட்டைக் கூறி இலங்கைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு இலங்கையை அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எண்ணிக் கொண்டிருக்கிறது. 

No comments:

Post a Comment