ஒட்டுமொத்தமாக நம் சமூகமே குறுகிய உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கிறது.. எப்போதும் என் இனம், என் ஜாதி என்கிற குறுகிய வட்டத்தில் சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் பிரச்சனையே. நாம் மிகப் பெரிய பிரச்சனைகளை பற்றி சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறோம்.. தமிழ்நாட்டிற்குள்ளே நாம் இத்தனை ஜாதிய ரீதியாக பிரிந்து நின்றால்
எப்போது நாம் தேசம் தழுவிய பிரச்சனைகளை பற்றி பேச போகிறோம்...
உலக அளவிலான பிரச்சனைகளை பற்றி பேச போகிறோம்....
உலக அளவில் இருக்கும் கொஞ்சம் கனிம மற்றும் இதர வளங்களை கொள்ளை அடிக்க ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்க, நாம் மட்டும் இன்னும் நமக்குள்ளே நான் பெரியவன், நீ சிறியவன் என்று போட்டி போடுவதிலே இருக்கிறோம். கடைசியில் ஏமாறப் போவது நாம் அனைவரும் தான்..
கடைசியில் அவன் கொண்டு போன மிச்ச மீதிகளை பங்கிடுவதில் நமக்குள்ளே தான் மறுபடியும் பிரச்சனை எழப்போகிறது.. இதற்கு எடுத்துக் காட்டுதான் ஒரிஸ்ஸாவில் சமீபத்தில் இரு தரப்பு இன மக்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனை.. பொதுவாக இருதரப்பு மக்களும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் தான், தங்கள் வாழ்வாதாரத்தை இவர்கள் பறித்து நமக்கு போட்டியாக வந்துவிடுவார்கள் என்ற மனநிலையில் (பங்கிட்டு கொள்ள இயலாத மனநிலை, பிரச்சனைக்கான தீர்வை அறிய முடியாத மனநிலையில்) தான் அங்கு கலவரம் ஏற்பட்டிருக்கிறது..
No comments:
Post a Comment