லெனினின் மறைவிற்குப் பிந்தைய உடனடி காலகட்டத்தில் லெனினின் போதனைகளை திரித்துக் கூறிய டிராட்ஸ்கிய வாதிகளோடும், இதர திரிபுவாதிகளோடும் கடுமையாகப் போராடியதுடன், சோசலிசப் புரட்சியைக் கட்டி முடிப்பதற்குப் பிரதான முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சி அவசியம் என்றும் அந்தப் பணியை சோவியத் ரஷ்யா துவக்குவது சாத்தியமே என்கிற லெனினின் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தவர் ஸ்டாலின்.
மிகவும் பின்தங்கியிருந்த சோவியத் ரஷ்யாவை ஒரு வளர்ச்சியடைந்த தொழில்மய நாடாக மாற்றும் பணியை நடத்திச் சென்றவர் ஸ்டாலின்.
சர்வதேச முதலாளிகளின் முன்னணிப் படையான இட்லரின் பாசிஸம் தொடுத்த பயங்கரமான தாக்குதலை முறியடிக்க சோவியத் யூனியனின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தேவையான வலிமையை இதுதான் அளித்ததும் ஸ்டாலின்தான்..
மேலும் சோவியத் யூனியனுக்கும் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கும் ஸ்டாலின் தலைமை வகித்த சால கட்டத்தில்தான் கணிசமான ஐரோப்பிய ஏகாதியபத்திய சக்திகளின் காலணி நாடுகளில் அடிமைப்பட்டுக் கிடந்த கோடிக் கணக்கான மக்கள் தங்கள் தேச விடுதலைப் போராட்டத்தை நடத்தி முடித்து விடுதலை பெற்றனர். இது மனித குலத்திற்கு ஸ்டாலின் அளித்த இன்னுமொரு மிகப் பெரிய சேவையாகும்.
நிகிதா குருச்சேவில் தொடங்கி மிக்கையில் கோர்பச்சேவில் முடிவடைந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதத் தலைமையின் மீதான விமர்சனமானது, ஸ்டாலினின் எதிர்மறையான குணாம்சத்தையும் அவரது பணிகளையும் எதிர்ப்பது என்கிற போர்வையில் மார்க்சிய லெனினியத்தின் மீதே தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தினார்கள் என்பதே. சொவியத் நாட்டின் மீதும், கட்சியின் மீதும் ஸ்டாலின் தலைமை வகித்த முப்பதாண்டு காலத் தலைமையின் கீழ் நிகழ்ந்த உலக சோசலிசத்திற்கான மகத்தான சாதனைகளை அவர்கள் இழிவு படுத்தி விட்டார்கள்.
No comments:
Post a Comment