புயற்பருந்தின் பாடல்
- மார்க்சிம் கார்க்கி
"நெடுங்கடலில் ஓங்கியெழுகின்ற அலைகளுக்கு மேலே,
வீசி இரையும் காற்றினால் புயல் முகில்கள் திரள்கின்றன."
"மேகத்திரளுக்கும் விரிதிரை கடலுக்கும் நடுவே இருள் கிழித்துப் பாயும் மின்வெட்டுப் போல் கடற்பருந்து பாய்ந்து பறக்கிறது.
அது புயலின் வருகையால் களிப்புடன் எதிர்பார்க்கிறது."
"புயல் வருகிறது என்பதன் அறிகுறியாக அதன் கூவல் ஒலிக்கிறது.
அதன் கூவலில் அடங்கியுள்ள கடுஞ்சினத்தின் வலிமையும், விருப்பத்தின் சுடர் வீச்சையும் வெற்றியிலுள்ள நம்பிக்கையையும் மேகங்கள் உணருகின்றன."
"ஆழிப் பரப்பை நோக்கி கீழிறங்கும் புயல் முகில்கள் மென்மேலும் இருண்டு தோன்றுகின்றன."
"இடி முழங்கும் புயலை எட்டிப் பிடிக்க நெடுந்திரைகள் பாட்டிசைத்து எழுந்தாடுகின்றன."
"புயல் நெருங்குகிறது. இதோ மூண்டு கிளம்புகிறது."
In English:
http://www.marxists.org/archive/gorky-maxim/1901/misc/x01.htm
No comments:
Post a Comment