வாழ்க்கையைப் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் துவங்கும் எல்லோருடைய வாழ்க்கையும் சில தருணங்களில் சூழ்நிலையினால் வேறு வழியிலான பாதையில் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இந்தச் சூழ்நிலைக்கு ஏனோ மிகுதியானோர் பலியாகிவிடுகின்றனர். தான் செல்ல இருக்கும் பாதையைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் இருப்பதில்லை. இதன் விளைவு ஏதோ ஒரு கல்வி, சராசரியான வாழ்க்கை விட மிகவும் கீழான சுயநலமுள்ள ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடுகிறார்களே அவர்களையே அறியாமல்.
வாழ்க்கைக்கு எவ்வளவு அர்த்தங்கள் நாம் கொடுத்தாலும், எல்லோருடைய வாழ்க்கைச் சூழ்நிலையும் வித்தியாசத்துடன் தான் இருக்கிறது, சில ஒற்றுமையுள்ள விஷயங்கள் மட்டும் தான் இருக்க முடியும்.
வீடற்ற ஒருவனின் விடியல் பொழுது என்பதும், மாளிகையில் தூங்கி எழுபவனின் விடியல் பொழுது என்பதிலும் இருக்கக்கூடிய வித்தியாசங்கள் என்பதிலிருந்து தோன்றும் முரண்பாடு மற்றும் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய வேறுபாடுகளுக்கு காரணம் என்னவென்ற சிந்தித்தால் விஷயம் புரியும்.
பணம் படைத்தவன் எப்படிப்பட்ட வசதிபடைத்த வாழ்வையும் வாழ முடியும் என்ற "எழுதப்படாத சட்டம்" இருப்பதை அறிய முடியும். இந்தப் பின்னணியில் உள்ள வரலாற்றுச் சுரண்டல் என்பதை யாராலும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அப்படியே புரிந்து கொண்டாலும் அதற்கான தீர்வை கம்யூனிசம் என்ற ஒன்று இல்லாமல் தீர்த்துவிட முடியாது என்பதும் தெரியாமல் போய்விடும். என்னைக் கேட்டால் ஒரு கம்யூனிஸ்ட்டால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment