Sunday, September 9, 2012


பெண் அடிமைத்தனத்தி்ன் புதிய முகங்கள்
இந்திய பெண்கள் இப்போது‍ வேறுவிதமான பிரச்சனைகளை எதிர் கொண்டிருக்கின்றனர், சமூகத்தை நவீனமாக்குவதற்கான போராட்டத்தோடு‍ இது‍ தொடர்புடையது. இப்பிரச்சனைகள் வெளி வந்துள்ளதற்கான காரணம் இந்திய சமூகம் ஒன்றரை நூற்றாண்டு‍ காலமாக நவீனமயமாகிக் கொண்டு‍ வருகிறது. இதன் விளைவு, கூடுதலான பெண்கள் படிக்கிறார்கள். தனிப்படையான வேலைகள் கிடைக்கின்றன, சொத்திற்கான சட்ட உரிமைகள் அங்கீகரிக்கப்படு்கின்றன. திருமண வாழ்க்கை பழங்காலக் கட்டுப்பாடுகளிலிருந்து‍ விடுபடுகிறது. ஆனால் இவையெல்லாம் இந்திய சமூகத்தை முதலாளித்துவத்தை நோக்கிப் போகச் செய்கிறது. 
இதன்  பொருள், முற்காலத்து‍ அடிமைத்தனத்திற்கு‍ பதிலாக புதிய வடிவங்கள் வெளிவந்து‍ கொண்டிருக்கின்றன. "பழைய சங்கிலிகள் பாதி உடைந்து‍விட்டது‍ / புதிய சங்கிலிகள் அவ்விடங்களைப் பிடிப்பதற்காக"!. 
ஊதியம், வேலைப்பளு, வாடகை, கடன், வரிகள், விலைவாசி உயர்வு போன்ற பல பிரச்சனைகள் எல்லா உழைக்கும் மக்களுக்கும் உண்டு. இந்தப் பிரச்சனைகள் ஒவ்வொன்றிலும், ஆண்களைவிட பெண்கள் இன்னும் அதிக சாதகமற்ற சூழ்நிலைக்கு‍ தள்ளப்படுகிறார்கள். 
வேலை செய்யப்படுபவர்களில் முதலானவர்களும், வேலைக்கு‍ எடுக்கப்படுபவர்களில் இறுதியானவர்களும் பெண்களே. பல இடங்களில் அவர்கள் ஆண்கள் வேலையைச் செய்தும் குறைந்த கூலியையே பெறுகின்றனர். வேலையிடத்தில் தரக்குறைவாக நடத்தப்படுகின்றனர். வீடு‍ திரும்பும் வழியில் துன்புறுத்தப்படுகிறார்கள். 
நாள் முழுவதும் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும் கடுமையாக வேலை செய்துவிட்டு‍ மாலையில் வீட்டு‍ வேலையிலும் ஈடுபட வேண்டும்.

இதைத்தான் தோழர்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் தங்களது‍ காலத்தில் அழியாத நூலான தம்யூனிஸ்ட் அறிக்கையில் முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களுக்கு‍ அளிக்கப்படும் மிக மோசமான நடத்தையைத் தெளிவாக எடுத்துச் சொல்லுகிறார்கள்.

மொத்த சமூகப் போராட்டமே பெண்களுக்கு‍ விடுதலையைப் பெற்றுத் தரும்:
நிலப்பிரப்புக்களுடனும், ஏகாதிப்த்தியத்துடனும் கூட்டு‍ வைத்து‍ வளர்ந்து‍ கொண்டிருக்கும் முதலாளித்துவத்தையும் அதனால் அழிக்க முடியாமல் இன்னும் இருந்து‍ கொண்டிருக்கும் ஜாதி, மதம், இனப் பாகுபாட்டு‍ அடிப்படையில் இயங்கி வரும் முதலாளித்துத்திற்கும் முந்தைய சமுதாயத்தையும் சேர்த்து‍ இந்த இரண்டு‍ வர்க்க சமூகங்களையும் இந்திய மக்கள் எதிர்த்துப் போராடி‍ வருகிறார்கள். இப்போராட்டமே ஒரு‍ மக்கள் ஜனநாயக அரசைக் கொண்டு‍வர முடியும். அதன் அடிப்படையில் ஒரு‍ சோசலிச சமுதாயத்‌தையும்,  இறுதியாக கம்யூனி்சத்தையும் அடைய முடியும். முழுமையான பெண் விடுதலைக்கு‍ இத்தகைய போராட்டம்தான் தேவை. அனைத்து‍ மதங்களும் பெண்களை இரண்டாம் பட்சமாகவே பார்க்கின்றன. பெண்களை சமமாக நடத்தும் போதுதான் அவர்கள் மீதான கொடுமைகளும் நிறுத்தப்படும். அதுதான் இன்றைய தேவை............. E.M.S. Nambooridipad.

No comments:

Post a Comment