சிறையிலிருந்து தப்பி வரும்படி தோழர்கள் பகத்சிங்கை கேட்டுக் கொண்டனர், ஆனால் பகத்சிங் மறுத்தார். தப்பி வந்து கூடுதலான நாட்கள் வாழ்ந்து என் பலவீனங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்து என் வாழ்க்கை நீர்த்துப்போவதை விட இப்படியே இறந்துபோய் எல்லாத் தாய்மார்களுக்கும் பிடித்தமான ஒரு பிள்ளையாக தங்கள் குழந்தைகளுக்குக் காட்ட ஒரு முன்னுதாரணமாகச் சாவதே சிறந்தது என்று சொல்லிவிட்டார். 1931 மார்ச் 21-ம் தேதி பகத்சிங்கும் இன்னும் சில தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர்.
தூக்குமேடைக்குப் போகும் போது அவர்கள் உரக்கப் பாடியபடி சென்றனர்:
"அன்னைத் திருநாட்டின் மீது கொண்ட என்
அன்பு மறையாதே! எப்போதும்! எப்போதும்!
அந்த அன்பின் வாசம் எஞ்சிக் கிடக்கும்!
என் எலும்பின் துகள்களிலும்
என் சடலம் எரிந்து எலும்புகள் தெரிக்கையில்
இன்குலாப் என்றே முழங்கும்".
தூக்குக் கயி்ற்றை கழுத்தில் மாட்டுவதற்கு முன்பாக "என் தேசம் விடுதலை பெறுவது நிச்சயம். ஏகாதிபத்தியம் நொறுங்கி வீழ்வது நிச்சயம். இன்குலாப் ஜிந்தாபாத்" என முழங்கினார் பகத்சிங்.
No comments:
Post a Comment