கம்யூனிஸ்ட் அகிலம் - ஒரு சுருக்கமான வரலாறு
Thursday, July 11, 2013
Wednesday, July 10, 2013
Theekkathir - படேலுக்கு எதிராக படேலை நிறுத்தும் பி.ஜே.பி !
சீத்தாராம் யெச்சூரி எம்.பி
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவாகச் செயல்பட்டு வரும் பி.ஜே.பி எதிர் வரும் 2014 தேர்தல்களுக்கு முன்பாக தனது அடிப்படை நிலைப்பாட்டிற்குத் திரும்பியிருப் பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஆர். எஸ்.எஸ்.சின் சகிப்புத் தன்மையற்ற பாசிசக் குணம் கொண்ட ‘இந்து ராஷ்ட்ரா’ நோக்கங் கள் விடுதலைப் போராட்ட காலத்தில் முறி யடிக்கப்பட்டன. சுதந்திர இந்தியா ஒரு நவீன, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக மலர்ந் தது. எனினும் அந்த நவீன இந்தியக் குடியர சை ‘இந்து ராஷ்ட்ரா’வாக மாற்றும் முயற்சி யினை ஆர்.எஸ்.எஸ் கைவிடவில்லை. ஆர்.எஸ்.எஸ்.சின் பேராசான் குரு எம்.எஸ். கோல்வால்கர் ‘இந்து ராஷ்ட்ரா’வின் இலட் சியங்களை தெளிவாக வரையறுத்தவர். “அந்நிய இனங்கள் (இந்து அல்லாதவர் எனக் கொள்ள வேண்டும்) இந்துக் கலாச் சாரத்தினையும், மொழியினையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்; இந்து மதத்தை உயர்நிலையில் வைத்துப் போற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்; இந்து தேசத்தைச் சேர்ந்த இந்து இனம், கலாச்சாரம் ஆகிய வற்றிற்கு வந்தனை செய்வதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் அவர்கள் மனதில் இருக் கக் கூடாது; இந்து இனத்துடன் இரண்டறக் கலந்து விட வேண்டும். அப்படிச் செய்யா விடில், இந்து தேசத்தில் அவர்களுக்கு முன் னுரிமைகள் மட்டுமல்ல, எவ்வித உரிமையும் சலுகையும் இருக்காது, ஏன், குடியுரிமை கூட இருக்காது.” இவை தான் குருஜி கோல்வால் கரின் கோட்பாடுகள்.
வரலாறு திருத்தப்படும் !
மத ரீதியாக மக்களைக் கூறு படுத்து வதற்கு, வரலாற்றைத் திரித்து மாற்றி எழுது வது இன்று அவர்களுக்குத் தேவைப்படு கிறது. “மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், வரலாறு குறித்த பாடத்திட்டங்களை திருத்தி யமைப்போம்” எனவும், “ஏற்கனவே இதைச் செய்ய முயன்றோம், மீண்டும் அந்த முயற் சியில் ஈடுபடுவோம்” எனவும், அண்மையில் பி.ஜே.பியின் முன்னாள் எம்.பி ஒருவர் கூறி யிருக்கிறார். “வரலாற்று நூல்கள் மீண்டும் திருத்தப்படும் பி.ஜே.பி” என்ற தலைப்பில் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் (24,ஜூன்,2013) இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது. அதே நாளில், “ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந் தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்படுவதை நாடு எதிர் பார்த்துக் காத்திருக்கிறது” என அத்வானி கூறியிருக்கிறார்.
ஒற்றுமைச் சிலை’
விடுதலைப் போராட்ட காலத்தில் தோற் கடிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்சின் திட்டங் களை மீட்டெடுத்து அவற்றை நிறைவேற்றும் முயற்சியில் பி.ஜே.பி இன்று ஈடுபட்டு வருகிறது. விடுதலைப் போராட்டத்தின் தள நாயகர்கள் சிலரை சுவீகாரம் செய்து கொண்டு, அவர்களை இந்துத்துவ தலைவர்கள் போல சித்தரிக்கும் முயற்சியில், அவர்களுக்கு வர லாற்றைத் திருத்துவதற்கன தேவை ஏற் பட்டிருக்கிறது. சர்தார் வல்லபாய் படேலின் பெயரை அந்த வகையில் பயன்படுத்தும் பெரும் முயற்சி தொடங்கியிருக்கிறது. ஆர். எஸ்.எஸ் / பி.ஜே.பியின் செல்லப் பிள்ளை யான நரேந்திர மோடி, சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக ‘ஒற்றுமைச் சிலை’ ஒன்றினை நிறுவப் போகிறாராம். இதற்கான இரும்பினை நன்கொடையாக வழங்குமாறு நாடு முழுவதுமுள்ள விவசாயிகளைக் கேட் டுக் கொண்டுள்ளார். “இந்தியாவின் இரும்பு மனிதரின் நினைவினை மேலும் சிறப்பாகப் போற்றும் வகையில், நியூயார்க் நகரில் இருக் கும் சுதந்திர தேவியின் சிலையைப் போல் இரு மடங்கு உயரமாக அவரது சிலையினை நாம் நிறுவ உள்ளோம்” எனக் கூறியிருக்கிறார். “அந்தச் சிலை, செழுமையான கலாச்சாரத் துடனும், பாரம்பரியங்களுடனும் இணைந்த இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டின் உள்ளடக்கமாக அமையும்” எனவும் அவர் கூறியுள்ளார். அயோத்தியில் சர்சைக் குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற் காக நாடு முழுவதும் செங்கற்கள் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் மதத் துவே ஷத்தின் அடிப்படையில் இந்துக்கள் திரட்டப் பட்ட போது, ஆங்காங்கு கலவரங்கள் வெடித்து, அதில் பல உயிர்கள் பலியாகின. நாடு முழுவதும் இப்படி மத வெறி உசுப்பி விடப்பட்ட சூழ்நிலை தான், முதல் முதலாக மத்தியில் பி.ஜே.பி கட்சியினை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இப்போதும் அது போன்ற ஒரு சூழ்நிலையினை உருவாக்கும் வேலையினை பி.ஜே.பி செய்து வருகிறது. பல்வேறு வேறுபாடுகளுக்கும் இடையில் மக்கள் மத்தியில் இருந்த பொதுத்தன்மை தான், சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்திய ‘இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு’ சித் தாந்தத்தின் அடிப்படையாக இருந்தது. வேற்று மைக்குள் ஒற்றுமை என்ற உயர்ந்த அந்தக் கோட்பாட்டின் அடித்தளத்தினை சிதைக்கும் வேலையினை, இன்று ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுச் செய்து வருகிறது.
மகாத்மா கொலை ‘நல்ல செய்தி’யாம் !
மகாத்மா காந்தி படுகொலையினை யடுத்து, இதே சர்தார் வல்லபாய் படேல் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினைத் தடை செய்தார் என்பதை இங்கு நினைவு கூர்வது அவசியம். “ சங் ( ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் ஆட்சேபணைக்குரிய, அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் கட்டற்றுத் தொடர்கின்றன. சங் வன்முறைக் கலாச் சாரத்தினைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. அதில் பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன. அதில் இன்று கடைசியாக பறிபோயிருக்கும் அரியதும் மகோன்னதமானதுமான உயிர் மகாத்மாவினுடையது.” ஆர்.எஸ்.எஸ்சை தடை செய்வதற்காக, சர்தார் படேல் நேரடி யாக வரைவு செய்து தயாரித்த, 4.2.1948 தேதி யிட்ட இந்திய அரசின் அறிவிப்பு இது. மகாத் மாவின் அந்தரங்கச் செயலாளர் பியாரேலால் நய்யார் எழுதிய ‘மகாத்மாவின் இறுதி நாட்கள்’ என்ற நூலில், ஒரு விஷயத்தினை நினைவு கூர்கிறார். “ மகாத்மாவின் படுகொலைக்குப் பின்னர் ஒரு இளைஞன் சர்தார் படேலுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பினான். மகாத்மா கொல்லப்பட்ட அந்த துக்கமான வெள்ளிக் கிழமை மாலையில் ‘நல்ல செய்தி’ கேட்பதற் காக வானொலிப் பெட்டிகளை தயாராக வைத் துக் கொள்ள வேண்டும் என்று, சில இடங் களில் ஆர்.எஸ்.எஸ் தனது உறுப்பினர் களுக்கு முன் கூட்டியே அறிவுறுத்தியிருந்த தாம். அது வரை ஆர்.எஸ்.எஸ்சில் துடிப்புடன் இயங்கி வந்த தான், இந்தச் சம்பவத்தின் விளைவாக வெறுப்படைந்து ஆர்.எஸ்.எஸ் குறித்த மாயையிலிருந்து விடுபட்டதாகவும், தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான். அது தவிர தில்லி உட்பட, பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்களில் மகாத்மாவின் கொலை இனிப்பு வழங்கிக் கொண்டாடப் பட்டது.” (பக்.எண் 756)
ஒற்றைக் கலாச்சாரம் !
இப்போது அந்த வரலாற்றினை முழுவது மாகத் திருத்தி, சர்தார் வல்லபாய் படேல் வலியுறுத்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட் டினை சிதைத்து, தங்களது ஒற்றைக் கலாச் சார இந்து ராஜ்யத்தினைத்தான் அவரும் வலியுறுத்தியது போன்ற பிரமையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். ஆர்.எஸ். எஸ்.சும், பி.ஜே.பியும் இத்தகைய சித்தாந்த போலி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசி னை இந்து ராஜ்யக் குடுவைக்குள் அடைக் கும் முயற்சியே இது. பல சமஸ்தானங்களாகப் பிரிந்து கிடந்த பகுதிகளை இணைத்து ஏக இந்தியக் குடியரசை உருவாக்கியதில் வெற்றி பெற்றவர், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல்; இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்பதில் ஐயமில்லை. இவரது முயற்சி களுக்கு கம்யூனிஸ்டுகள் நடத்திய விவசாயி களின் பெரும் போராட்டங்களும் உதவின. இவையெல்லாம் செழுமையான பன்முகக் கலாச்சாரங்களை இணைத்து, ஒன்றுபட்ட நவீன குடியரசு அமைப்பதில் உதவின. ஆனால், இன்று அந்தப் பாரம்பரியங்களை உடைத்தெறியும் வேலையினை ஆர்.எஸ். எஸ்.சும் பி.ஜே.பியும் செய்து வருகின்றன.
திராணியில்லா காங்கிரஸ் !
சர்தார் வல்லபாய் படேல், ஒரு விடு தலைப் போராட்ட வீரர் மட்டுமல்லாமல், காங் கிரஸ்காரரும் கூட. ஆனால் இன்று அந்தக் காங்கிரஸ் தலைவரை தங்களது நோக்கங் களுக்காக பி.ஜே.பி தவறாகப் பயன்படுத்தும் பொது, அதைத் தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது குறைந்த பட்சம் தட்டிக் கேட் பதற்கோ கூட திராணி இல்லாத பரிதாப நிலையில் காங்கிரஸ் கட்சி இருந்து வரு கிறது. எது எப்படியிருப்பினும், இந்தியாவின் எதிர்கால நலன்களைக் கணக்கில் கொண்டு, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக அஸ்திவாரத்தை வலுப்படுத்திக் காப்பது மிக அவசியம். விடுதலைப் போராட்டங்களின் அடையாளங்களை அபகரித்துக் கொண்டு, வரலாற்றினை திருத்தி எழுதும் முயற்சிகளை முற்றிலுமாக முறியடிக்க வேண்டும்.
மறைந்தவற்றின் நினைவுச் சின்னம் !
‘ஒற்றுமைச் சின்னம்’ என்று அமெரிக்க ‘சுதந்திர தேவி’ சிலையுடன் ஒப்பிட்டுப் பேசும் வேளையில், எனக்கு ஒரு நகைச் சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது. பிரெஞ்சுப் புரட்சியின் இலட்சியங்களான ‘சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற லட் சியங்களை நினைவு படுத்தும் வகையில், (இன்று நியூயார்க்கில் இருக்கும்) சுதந்திர தேவி சிலையினை பிரான்ஸ் அமெரிக்காவிற்கு பரிசாகத் தந்திருந்தது. அமெரிக்கா, வியட்னாம் போரில் ஈடுபட்டிருந்த காலத்தில், அமெரிக்கா விற்குச் சென்றிருந்த ஒரு பிரான்ஸ் நாட்டுச் சுற்றுலாப் பயணி, அந்தச் சிலையைப் பார்த் துக் கூறினாராம், “ பரவா யில்லையே, நமது நாட்டில் மறைந்தவர் களுக்கு நினைவுச் சின் னம் வைப்பது போல, அமெரிக்காவிலும் மறைந்துவிட்டவை அனைத்திற்கும் நினை வுச் சின்னம் வைத்து மரியாதை செய்யும் பழக் கம் உண்டு போல இருக்கிறதே” என்றாராம். இப்போது திட்டமிடப்படும் ஒற்றுமைச் சின்னமும், ஆர்.எஸ்.எஸ்- சின் இந்து ராஷ்ட்ரா திட்டமும் வெற்றி பெரும் பட்சத்தில், பல்வேறு சிறப்பு மிக்க சமூக ரீதியான, கலாச் சார ரீதி யான, மத ரீதியான இணைப்புடன் இந்தியா வின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என எத்தகைய மாண்புகளுக்காக சர்தார் படேல், தனது வாழ்நாட் களை அர்ப்பணித்துக் கொண் டாரோ, அந்த மாண்புகள் அனைத்தும் மாண்டு போய் விடும். மாண்டு போனவற்றின் நினைவுச் சின்னமாக இவையெல்லாம் மாறிவிடும். நவீன இந்தியாவின் வலிமையான எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டு மெனில், இவை எதையும் நாம் அனுமதிக்கக் கூடாது.
Tuesday, July 9, 2013
விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்-1
-என்.குணசேகரன்
“மார்சிய
தத்துவம் உண்மையானது; அதனால் தான்
அது சர்வ
வல்லமை கொண்டதாக
விளங்குகிறது” — லெனின்.
சிறிது
காலத்திற்கு
முன்பு
வரையிலும்
கூட, ‘மார்சியம்
காலாவதியாகிவிட்டது’ என்ற
கருத்தை
அடிப்படையாகக்
கொண்டு
ஏராளமான
கட்டுரைகள்
வந்துகொண்டிருந்தன. இப்போது
கூகிள்
தேடலில்
‘marxism is dead’ என்று
குறிப்பிட்டுத்
தேடினால்
சுமார்
40 இலட்சத்திற்கும் மேற்பட்ட
வலைத்தளங்களும்
கட்டுரைகளும்
வருகின்றன.முதலில்
வருகின்ற
கட்டுரைகளிலிருந்து
துவங்கி
நீண்டதூரம்
உள்ளே
சென்றாலும்,
நேரடியாக
‘மார்க்சியம்
செத்துவிட்டது’
என்ற
கருத்து
கொண்ட
கட்டுரைகளை
காண
முடியவில்லை.மார்க்சியத்தை
வாழ்நாள்
முழுவதும்
எதிர்த்து
வந்த
அறிவுஜீவிகள்
முகாம்
தற்போது
சிரமப்படுவதாகத்
தெரிகிறது.
உலக
முதலாளித்துவப்
பத்திரிக்கையான
‘எகனாமிஸ்ட்’
கூட,” ஒரு அரசாங்க முறை என்ற வகையில் கம்யூனிசம் இறந்துவிட்டது அல்லது இறந்து வருகிறது.சிந்தனை முறை என்ற வகையில் அதன் எதிர்காலம் உறுதியானதாக உள்ளது”என்று எழுதியுள்ளது.
மார்க்சியத்தை
எதிர்ப்பது என்று
முடிவெடுத்த பிறகு
ஏன் இவர்களிடம்
இவ்வளவு தடுமாற்றம்?
மார்க்சியமும்,கம்யுனிசமும்
இறந்து
விட்டது
என்று
சொல்லுகிறவர்களால்
‘இனி,முதலாளித்துவமே
ஒரே
மாற்று’
என்று
ஓங்கி
சொல்ல
முடியவில்லை.2008-ல்
துவங்கிய
உலக
நெருக்கடி
சூறாவளி
போன்று
உலகப்
பொருளாதாரத்தை
ஓயாமல்
தாக்கி
வருகின்றது.சாதாரணமாக சூறைக்காற்று
தாக்குகிறபோது
ஏழை,பணக்காரன்
வித்தியாசம்
பார்க்காமல்
அனைவரையும்
தாக்கும்.ஆனால்
உலக
நெருக்கடி
எனும்
இன்றைய
சூறைக்காற்று
சமுகத்தின்
அடித்தட்டில்
வாழ்வோரை
விரட்டி
விரட்டித்
தாக்குகிறது.தன்னையும் காத்துகொண்டு,நெருக்கடி
சூழலிலும்
தனது
மூலதனத்தை
வளர்த்துக்கொள்ளும்
வித்தை
தெரிந்தது,முதலாளித்துவம்.
ஏனென்றால்
அது
அரசியல்
அதிகார
பீடத்தில்
அமர்ந்திருக்கிறது.
இந்த
நிலைமை
தான்
மார்க்சியத்தை
ஒரேயடியாகத்
தாக்கும்
உக்கிரத்தை
குறைத்திருக்கிறது
எனலாம்.ஆனால்,மார்க்சிய
எதிர்ப்பு
நின்றுவிட்டது
என்ற
முடிவுக்கு
வரமுடியாது.அது
பல்வேறு
வடிவங்களை
எடுத்திருக்கிறது.மார்க்சியத்தின்
சில
கோட்பாடுகளை
பிரித்தெடுத்து
அவை
இன்றைய
காலக்கட்டத்தில் பொருந்தாது
என்று
வாதிடுகிற
பலர்
உள்ளனர்.உதாரணமாக,மார்க்ஸ்
கால
தொழிலாளி
வர்க்கம்,இப்போது
இல்லை
என்று
சிலர்
எழுதி
வருகின்றனர்.இதன்
மூலம்,அவர்கள்
புரட்சிகர
மாற்றம்
சாத்தியமில்லை
என்ற
கருத்தை
மறைமுகமாகவோ,நேரடியாகவோ
பரப்பி
வருகின்றனர்.
மார்க்சியத்தின்
இன்றைய
பொருத்தப்பாடு
குறித்த
விவாதம்
புதிது
அல்ல.நீண்ட
காலம்
மார்க்சியர்கள்
மற்றும் மார்க்சிய
எதிரிகள்
விவாதித்து
வந்துள்ளளனர்.இந்த
மாபெரும்
விவாத
அக்கினியில்
மூழ்கினாலும்
மேலும்
மேலும்
பலம்
பெற்று
வரும்
தத்துவமாக
மார்க்சியம்
திகழ்கிறது.
மறைந்த
வரலாற்று
அறிஞர்
எரிக்
ஹாப்ஸ்வம்
மூன்று
தளங்களில்
மார்க்ஸ்
அசுர
பலம்
கொண்டவராக
இருந்து
வருகிறார்
எனக்
குறிப்பிடுகிறார்.1.பொருளாதார
சிந்தனை,2.வரலாற்று
சிந்தனை
மற்றும்
வரலாற்று
ஆய்வு,3.சமூகவியல்
துறையில்
நவீன
ஆய்வுமுறை
ஆகியவற்றில்
மார்க்சின்
தேவையையும்,பொருத்தப்பாட்டையும்
உதறித்
தள்ள
முடியாது
என்கிறார் ஹாப்ஸ்வம்.அதே போன்று
தத்துவ
ஞானி
என்ற
வகையிலும்
மார்க்ஸ்
முக்கியமானவர்.
எரிக்
ஹப்ஸ்வம்
மார்க்சின்
இன்றையப்
பொருத்தப்பாட்டினைப்
பற்றிப்
பேசுகிற
போது
முதலாளித்துவம்
பற்றிய
மார்க்சின்
பார்வை
இன்றைக்கும்
பொருத்தமானது
என்கிறார்.மனிதப்
பொருளாதாரத்தில்
முதலாளித்துவம்
என்பது
வரலாற்று ரீதியாக
தாற்காலிகமான ஒரு
பொருளாதார முறை
என்று
மார்க்ஸ்
நிறுவியது
இன்றைக்கும்
பொருத்தமானது.
மார்க்ஸ்
காலத்திலிருந்து
முதலாளித்துவம்
தனது
வடிவங்களில்
சிலவற்றை
மாற்றியிருக்கிறது;ஆனால்
அதன்
சாராம்சம்
மாறிடவில்லை.உற்பத்தி
சாதனங்களை
தனது
உடைமையாகக்
கொண்டுள்ளோரின்
இலாபத்திற்காக
தொழிலாளர்
உழைப்பைச்
சுரண்டுவது
என்கிற
முதலாளித்துவத்தின்
சாராம்சம்
இன்றும்
நீடிக்கிறது.
மார்க்சிற்குப் பிறகு மார்க்சின் முதலாளித்துவ பகுப்பாய்வு என்கிற அடித்தளத்தில் நின்று முதலாளித்துவ மாற்றங்களை ஆய்வு செய்தவர்கள் பலர்.தத்துவத்தில்,பொருளாதாரத்தில்,சமூகவியலில் பல மார்க்சிய பங்களிப்புக்கள் உலகின் எல்லா திசைகளிலிருந்தும் வெளிவந்துள்ளன.இவை மார்க்சியத்தை புதிய நிலைமைகளில் வளர்த்தெடுக்கும் முயற்சிகளாகத் திகழ்கின்றன.
புதிய நிலைமைகளில் “மார்க்சியத்தின் போதாமையை”சரி செய்வதாகச் சொல்லி மார்க்சியத்தை மறுப்பதும்,மார்க்சியப் போர்வையில் இருந்து கொண்டு அதன் புரட்சிகர ஜீவநாடியை அழிக்க முயல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.இவை மார்க்சியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் அல்ல. மேற்கண்ட இரண்டையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும்.
மார்க்சிய பங்களிப்புக்கள் பல வகை உண்டு.தத்துவம்,பொருளாதாரம்,சமூகவியல் துறைகளில் மார்க்சியம் பெரு வளர்ச்சி பெற்று வருகின்றது.அதே போன்று முதலாளித்துவத்தை வீழ்த்தி புதிய சமுகத்தை,சோசலிசத்தை எவ்வாறு கட்டியமைப்பது என்கிற தளத்திலும் ஏராளமான பங்களிப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.புரட்சிகர மாற்றத்தை சாதிப்பதற்கான உத்திகள், அமைப்புக் கோட்பாடுகள் என விரிந்த அளவில் மார்க்சியம் வளர்ச்சி பெற்று வருகின்றது.
இந்த வளர்ச்சி அனைத்தையும் தொகுப்பது இமாலயப் பணி. இந்த குறுந்தொடர் கடந்த அரை நூற்றாண்டில் மார்க்சியம் வலியுறுத்தும் ‘புரட்சி’ மாற்றத்திற்கான பாதையை செழுமைப்படுத்திட, செய்யப்பட்டுள்ள பங்களிப்புக்களை மட்டும் விவாதிக்கிறது.
மார்க்சியம் வெறும் வறட்டு சூத்திரமல்ல.அது நடைமுறைக்கு வழிகாட்டி என்பதை உணர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்திட இடையறாத போராட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.ஒரு மார்க்சிய இயக்கம் தனது நாட்டில் மாற்றத்தை சாதிக்க முனையும் போது,தனது நாட்டின் சமுக பொருளாதார அரசியல் இயங்கு முறைகளை தீவிரமாக ஆய்வு செய்கிறது.அந்த ஆய்வின் அடிப்படையில் செயல்படுவதற்கான உத்திகளையும்,திட்டங்களையும் உருவாக்குகிறது.நிலைமைகளை ஆராய்வதற்கும்,திட்டங்களை உருவாக்குவதற்கும் மார்க்சியம் துணை நிற்கிறது.ஆக,மார்க்சிய அறிவு நிலைமைகளை அறிய,புதிய அறிவு பெற உதவுகிறது.அதே நேரத்தில் உருவாக்கப்பட்ட நிலைமைகள் பற்றிய நிர்ணயிப்புக்களும்,திட்டங்களும் மார்க்சியத்திற்கு புதிய பங்களிப்பாக வந்து சேர்ந்து,மார்க்சியம் வளமும் வளர்ச்சியும் பெறுகின்றது.
ஜார்க் லூகாச், லெனினைப் பற்றி எழுதுகிற போது,லெனினுக்கு எதையும் சாதிக்கும் குணம் எதிலிருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.”..லெனின் உண்மை நிலைமைகளிலிருந்து கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்திக் கொண்டதில்லை.அதே நேரத்தில் எப்போதும் செயல்படுவதற்கும் தயார் நிலையில் அவர் இருப்பார்” இதுவே தத்துவமும் நடைமுறையும் இணைந்த மார்க்சிய செயல்பாடு.
இனி ‘புரட்சி’ மாற்றத்திற்கு புகழ்பெற்ற
மார்க்சிய அறிஞர் ஜார்க் லூகாச்சின் பங்களிப்பை காண்போம்.
(புத்தகம் பேசுது இதழில்
வெளியான முதல் பகுதி)
(தொடரும்)
Subscribe to:
Posts (Atom)