Tuesday, July 9, 2013

விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம்-1

                                                                                                                                         -என்.குணசேகரன்

மார்சிய தத்துவம் உண்மையானதுஅதனால் தான் அது சர்வ வல்லமை கொண்டதாக விளங்குகிறது” — லெனின்.



சிறிது காலத்திற்கு முன்பு வரையிலும் கூட, மார்சியம் காலாவதியாகிவிட்டது’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான கட்டுரைகள் வந்துகொண்டிருந்தனஇப்போது கூகிள் தேடலில் ‘marxism is dead’ என்று குறிப்பிட்டுத் தேடினால் சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட வலைத்தளங்களும் கட்டுரைகளும் வருகின்றன.முதலில் வருகின்ற கட்டுரைகளிலிருந்து துவங்கி நீண்டதூரம் உள்ளே சென்றாலும், நேரடியாகமார்க்சியம் செத்துவிட்டதுஎன்ற கருத்து கொண்ட கட்டுரைகளை காண முடியவில்லை.மார்க்சியத்தை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்த அறிவுஜீவிகள் முகாம் தற்போது சிரமப்படுவதாகத் தெரிகிறது

உலக முதலாளித்துவப் பத்திரிக்கையானஎகனாமிஸ்ட்கூட,” ஒரு அரசாங்க முறை என்ற வகையில் கம்யூனிசம் இறந்துவிட்டது அல்லது இறந்து வருகிறது.சிந்தனை முறை என்ற வகையில் அதன் எதிர்காலம் உறுதியானதாக உள்ளதுஎன்று எழுதியுள்ளது.

மார்க்சியத்தை எதிர்ப்பது என்று முடிவெடுத்த பிறகு ஏன் இவர்களிடம் இவ்வளவு தடுமாற்றம்?

மார்க்சியமும்,கம்யுனிசமும் இறந்து விட்டது என்று சொல்லுகிறவர்களால்இனி,முதலாளித்துவமே ஒரே மாற்றுஎன்று ஓங்கி சொல்ல முடியவில்லை.2008-ல் துவங்கிய உலக நெருக்கடி சூறாவளி போன்று உலகப் பொருளாதாரத்தை ஓயாமல் தாக்கி வருகின்றது.சாதாரணமாக  சூறைக்காற்று தாக்குகிறபோது ஏழை,பணக்காரன் வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் தாக்கும்.ஆனால் உலக நெருக்கடி எனும் இன்றைய சூறைக்காற்று சமுகத்தின் அடித்தட்டில் வாழ்வோரை விரட்டி விரட்டித் தாக்குகிறது.தன்னையும்  காத்துகொண்டு,நெருக்கடி சூழலிலும் தனது மூலதனத்தை வளர்த்துக்கொள்ளும் வித்தை தெரிந்தது,முதலாளித்துவம். ஏனென்றால் அது அரசியல் அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறது

இந்த நிலைமை தான் மார்க்சியத்தை ஒரேயடியாகத் தாக்கும் உக்கிரத்தை குறைத்திருக்கிறது எனலாம்.ஆனால்,மார்க்சிய எதிர்ப்பு நின்றுவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியாது.அது பல்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது.மார்க்சியத்தின் சில கோட்பாடுகளை பிரித்தெடுத்து அவை இன்றைய காலக்கட்டத்தில் பொருந்தாது என்று வாதிடுகிற பலர் உள்ளனர்.உதாரணமாக,மார்க்ஸ் கால தொழிலாளி வர்க்கம்,இப்போது இல்லை என்று சிலர் எழுதி வருகின்றனர்.இதன் மூலம்,அவர்கள் புரட்சிகர மாற்றம் சாத்தியமில்லை என்ற கருத்தை மறைமுகமாகவோ,நேரடியாகவோ பரப்பி வருகின்றனர்.

மார்க்சியத்தின் இன்றைய பொருத்தப்பாடு குறித்த விவாதம் புதிது அல்ல.நீண்ட காலம் மார்க்சியர்கள் மற்றும்  மார்க்சிய எதிரிகள் விவாதித்து வந்துள்ளளனர்.இந்த மாபெரும் விவாத அக்கினியில் மூழ்கினாலும் மேலும் மேலும் பலம் பெற்று வரும் தத்துவமாக மார்க்சியம் திகழ்கிறது.

மறைந்த வரலாற்று அறிஞர் எரிக் ஹாப்ஸ்வம் மூன்று தளங்களில் மார்க்ஸ் அசுர பலம் கொண்டவராக இருந்து வருகிறார் எனக் குறிப்பிடுகிறார்.1.பொருளாதார சிந்தனை,2.வரலாற்று சிந்தனை மற்றும் வரலாற்று ஆய்வு,3.சமூகவியல் துறையில் நவீன ஆய்வுமுறை ஆகியவற்றில் மார்க்சின் தேவையையும்,பொருத்தப்பாட்டையும் உதறித் தள்ள முடியாது என்கிறார் ஹாப்ஸ்வம்.அதே போன்று தத்துவ ஞானி என்ற வகையிலும் மார்க்ஸ் முக்கியமானவர்.

எரிக் ஹப்ஸ்வம் மார்க்சின் இன்றையப் பொருத்தப்பாட்டினைப் பற்றிப் பேசுகிற போது முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் பார்வை இன்றைக்கும் பொருத்தமானது என்கிறார்.மனிதப் பொருளாதாரத்தில் முதலாளித்துவம் என்பது வரலாற்று ரீதியாக தாற்காலிகமான ஒரு பொருளாதார முறை என்று மார்க்ஸ் நிறுவியது இன்றைக்கும் பொருத்தமானது.  
    
மார்க்ஸ் காலத்திலிருந்து முதலாளித்துவம் தனது வடிவங்களில் சிலவற்றை மாற்றியிருக்கிறது;ஆனால் அதன் சாராம்சம் மாறிடவில்லை.உற்பத்தி சாதனங்களை தனது உடைமையாகக் கொண்டுள்ளோரின் இலாபத்திற்காக தொழிலாளர் உழைப்பைச் சுரண்டுவது என்கிற முதலாளித்துவத்தின் சாராம்சம் இன்றும் நீடிக்கிறது
    
மார்க்சிற்குப் பிறகு மார்க்சின் முதலாளித்துவ பகுப்பாய்வு என்கிற அடித்தளத்தில் நின்று முதலாளித்துவ மாற்றங்களை ஆய்வு செய்தவர்கள் பலர்.தத்துவத்தில்,பொருளாதாரத்தில்,சமூகவியலில் பல மார்க்சிய பங்களிப்புக்கள் உலகின் எல்லா திசைகளிலிருந்தும் வெளிவந்துள்ளன.இவை  மார்க்சியத்தை புதிய நிலைமைகளில் வளர்த்தெடுக்கும் முயற்சிகளாகத் திகழ்கின்றன.

புதிய நிலைமைகளில் “மார்க்சியத்தின் போதாமையைசரி செய்வதாகச் சொல்லி மார்க்சியத்தை மறுப்பதும்,மார்க்சியப் போர்வையில் இருந்து கொண்டு அதன் புரட்சிகர ஜீவநாடியை அழிக்க முயல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.இவை மார்க்சியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் அல்லமேற்கண்ட இரண்டையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும்.

மார்க்சிய பங்களிப்புக்கள் பல வகை உண்டு.தத்துவம்,பொருளாதாரம்,சமூகவியல் துறைகளில் மார்க்சியம் பெரு வளர்ச்சி பெற்று வருகின்றது.அதே போன்று முதலாளித்துவத்தை வீழ்த்தி புதிய சமுகத்தை,சோசலிசத்தை எவ்வாறு கட்டியமைப்பது என்கிற தளத்திலும் ஏராளமான பங்களிப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன.புரட்சிகர மாற்றத்தை சாதிப்பதற்கான உத்திகள், அமைப்புக் கோட்பாடுகள் என விரிந்த அளவில் மார்க்சியம் வளர்ச்சி பெற்று வருகின்றது.

இந்த வளர்ச்சி அனைத்தையும் தொகுப்பது இமாலயப் பணிஇந்த குறுந்தொடர் கடந்த அரை நூற்றாண்டில் மார்க்சியம் வலியுறுத்தும்புரட்சிமாற்றத்திற்கான  பாதையை செழுமைப்படுத்திட, செய்யப்பட்டுள்ள பங்களிப்புக்களை மட்டும் விவாதிக்கிறது.

மார்க்சியம் வெறும் வறட்டு சூத்திரமல்ல.அது நடைமுறைக்கு வழிகாட்டி என்பதை உணர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்திட இடையறாத போராட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.ஒரு மார்க்சிய இயக்கம் தனது நாட்டில் மாற்றத்தை சாதிக்க முனையும் போது,தனது நாட்டின் சமுக பொருளாதார அரசியல் இயங்கு முறைகளை தீவிரமாக ஆய்வு செய்கிறது.அந்த ஆய்வின் அடிப்படையில் செயல்படுவதற்கான உத்திகளையும்,திட்டங்களையும் உருவாக்குகிறது.நிலைமைகளை ஆராய்வதற்கும்,திட்டங்களை உருவாக்குவதற்கும் மார்க்சியம் துணை நிற்கிறது.ஆக,மார்க்சிய அறிவு நிலைமைகளை அறிய,புதிய அறிவு பெற உதவுகிறது.அதே நேரத்தில் உருவாக்கப்பட்ட நிலைமைகள் பற்றிய நிர்ணயிப்புக்களும்,திட்டங்களும் மார்க்சியத்திற்கு புதிய பங்களிப்பாக வந்து சேர்ந்து,மார்க்சியம் வளமும் வளர்ச்சியும் பெறுகின்றது.

ஜார்க் லூகாச், லெனினைப் பற்றி எழுதுகிற போது,லெனினுக்கு எதையும் சாதிக்கும் குணம் எதிலிருந்து வருகிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.”..லெனின் உண்மை நிலைமைகளிலிருந்து கற்றுக் கொள்வதை எப்போதும் நிறுத்திக் கொண்டதில்லை.அதே நேரத்தில் எப்போதும் செயல்படுவதற்கும் தயார் நிலையில் அவர் இருப்பார்இதுவே தத்துவமும் நடைமுறையும் இணைந்த மார்க்சிய செயல்பாடு.

இனிபுரட்சிமாற்றத்திற்கு புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் ஜார்க் லூகாச்சின் பங்களிப்பை காண்போம்.

(புத்தகம் பேசுது  இதழில் வெளியான முதல் பகுதி)

(தொடரும்)

1 comment: