Friday, January 4, 2013

வரலாற்று உண்மையைக் காண விழையுங்கள்!


வரலாற்று உண்மையைக் காண விழையுங்கள்!
(Those who want to Know the truth about the History)



வரலாற்றைப் பற்றி நமது பாடப் புத்தகங்களும், நமக்கு உண்மையை கற்றுக் கொடுக்கத் தவறியவர்கள் தவறியதையும் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்ற நூல் விளக்குகிறது.

இ,எம்,எஸ்-ன் கூற்றுப்படி வரலாறு இரண்டு வகையான திரிபுகளை கொண்டது. ஒன்று ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் தான் இந்திய வரலாறு என்பதும், இதை விட நாகரீகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள் என்ற மற்றொன்றும் அவரவர் சாய்மானத்தில் முன் வைக்கப்படுகின்றன தவிர உண்மையல்ல.

ஆனால், உண்மையான வரலாற்றைப் புரிந்து கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டியது:

1) ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்திலும் இருந்த உற்பத்தி சாதனங்கள்   எவை? என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும்.

2) உற்பத்தி சாதனங்களைப் பயன்படுத்தி நடைபெற்ற உற்பத்தி முறையில் நிலவி வந்த சமூக உறவுகள் எத்தகையவை?

3) சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு அரசியல்           மோதல்கள், யுத்தங்கள் மற்றும் புரட்சிக்கு இட்டுச் சென்றன?

இது போன்ற கேள்விகளுக்கு நாம் விடை காண விழையும் போது தான் இந்திய மற்றும் உண்மையான வரலாற்றை புரிந்து கொள்ள முடியும்.

                                                                       - இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
                                           இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு (1977)

No comments:

Post a Comment