1) அறிவை மேம்படுத்தவும் உற்சாகம் அளிக்கவும் உதவாத கல்வி படிப்படியாக சுவாரஸ்யம் அற்றதாகிவிடும்.
2) பாரம்பரியமாகத் தொடர்ந்து வரும் ஒரு செயலை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதில் எந்த ஒரு பிரயோஜனமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
3) தனியார் தொழில் நிறுவனங்கள் முதலாளிகளின் சொந்த சொத்துக்கள் என்பது வர்க்க ரீதியான சிந்தனையுடைய தொழிலாளிக்குத் தெரியும்.
ஆனால், தான் பங்காளியாகும் வருங்கால சோசலிச நடைமுறையில் தனது வர்க்கம் உட்பட சமூகத்தின் அனைவரது பொதுச் சொத்தாகப் போகிறவை தான் இன்றைய தனியுடைமை நிறுவனங்கள்.
4) இந்தியாவிலுள்ள இன மற்றும் சமூக வேறுபாடுகளின் ஆணிவேரைப் பிடுங்கி எறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி வர்க்கப் புரட்சிக் கட்சியின் உறுப்பினர் நான்.
5)முதலாளித்துவ குடியரசு அமைப்புகளுக்கான தேர்தல்களில் பங்கெடுப்பதுடன், வாய்ப்புக் கிடைத்தால் ஆட்சி நடத்துவது என்பது மார்க்சியக் கொள்கைக்கு எதிரானதல்ல.
6) முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாமல் விட்ட கடமைகளையும் சேர்த்து நிறைவு செய்ய, தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைக்கும் வாய்ப்பு தேர்தல்.
7)வர்க்கப் போராட்த்தின் ஏனைய களங்களுடன் நாடாளுமன்றச் செயல்பாடுகளும், மாறுபட்ட கருத்துகளின்றி ஒற்றுமையுடன் செயல்படுத்துவதில் தான் அனுபவமிக்க கம்யூனிஸ்ட்டின் வெற்றி இருக்கிறது.
8) மக்களிடம் புரட்சிகர எண்ணத்தை வளர்க்க வேண்டும். அதுவே சோசலிசத்தை நோக்கி சரியான பாதையில் முன்னேறச் செய்யும்.
9) இறுதியாக, வர்க்கப் போராட்டம் தீர்மானகரமான நேரத்தை அணுகும் பொழுது, ஆளும் வர்க்கத்துக்குள், மெய்யாகவே பழைய சமூகம் முழுமையிலுமே, சிதைந்து கரையும் இயக்கப் போக்கு வெகு உக்கிரமாகவும் பட்டவர்த்தனமாகவுநடைபெறுகிறது. அதனால், ஆளும் வர்க்கத்தில் சிறுபகுதி தன்னைத் துண்டித்துக் கொண்டு, எதிர்காலத்தை தன் கையில் வைத்திருக்கும் வர்க்கத்துடன் சேர்கிறது.

........இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்
No comments:
Post a Comment