Thursday, May 2, 2013

போலந்து பிரச்சனை

சர்வதேச உழைப்பாளர் கழகத்தின் (முதல் அகிலம்) தற்காலிக பொதுக்குழுவின் பிரதிநிதிகள் செய்ய வேண்டியது குறித்து 1866 ஆம் ஆண்டில் மார்க்ஸ் குறிப்புகள் எழுதினார். அதில் போலந்துக்காரர்கள் பிரச்சனை என்ற தலைப்பில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

(அ) ஐரோப்பியத் தொழிலாளிகள் இந்தப் பிரச்சனையை ஏன் எடுக்க வேண்டும்? முதலில் நடுத்தர வர்க்க எழுத்தாளர்களும், கிளர்ச்சியாளர் களும் இதை ஒடுக்குவதற்காகச் சதி செய்கின்றனர். ஐரோப்பியக் கண்டத்தில் ஏன் அயர்லாந்திலும் கூட அனைத்து வகைப்பட்ட தேசிய இனங்களுக்கும் அவர்கள் ஆதரவளிக்கிறார்கள் என்ற போதிலும் போலந்துக்காரர்கள் விஷயத்தில் சதி செய்கிறார்கள். இந்த மவுனம் எங்கிருந்து வருகின்றது. ஏனென்றால் பிரபுக்களும், முதலாளித்துவ வர்க்கத்தினரும் இந்த பிற்போக்கு ஆசிய சக்தியை (ரஷ்யாவை) தொழிலாளி வர்க்க வெற்றிகளின் முன்னேற்ற அலைக்கு எதிரான கடைசி ஆதாரம் என்ற பின்னணியில் காண்கின்றனர். போலந்தை ஒரு ஜனநாயக அடிப்படையில் மீண்டும் நிலை நிறுத்துவதன் மூலமே இந்த சக்தியை கடுமையாக ஒடுக்க முடியும்.

(ஆ) மத்திய ஐரோப்பாவின் இன்றைய மாறிய நிலை, அதிலும் குறிப்பாக ஜெர்மனி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்பொழுது, ஒரு ஜனநாயக போலந்தை பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் முன்னெப்பொழுதையும் விட அதிகமாகத் தேவைப்படுகின்றது. அது இல்லாமல், ஜெர்மனி என்பது புனித கூட்டு (Holy Alliance) என்பதனுடைய ராணுவப் பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக மாறிவிடும். அத்துடன் அந்தப் புனித கூட்டின் கூட்டாளியான பிரான்ஸ் குடியரசின் ராணுவப் பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக மாறிவிடும்.

இந்த மகத்தான ஐரோப்பிய பிரச்சனை தீர்க்கப்படும் வரை தொழிலாளி வர்க்க இயக்கம் தொடர்ந்து குறுக்கீடு செய்யப்படும்
(காரல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ், தேர்வு நூல்கள் பாகம் 2, பக்கம் 84)

போல்ஷ்விக்குகளின் சரியான நிலை

போலந்தின் பிரச்சனையானது ஐரோப்பிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டதாகும். எனவே தான் அதற்கு முக்கியத்துவம் உள்ளது. அதே சமயத்தில் ஒடுக்கும் நாடுகளும் ஒடுக்கப்பட்ட நாடுகளும் உள்ள ஜார் மன்னனின் ரஷ்யாவில் மார்க்சியம்... லெனினியம், ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு சுயநிர்ணய உரிமையை ஆதரித்தது, அதற்காகப் போராடவும் செய்தது. 

ரஷ்யாவின் புரட்சிக்காகப் போராடிக்கொண்டிருந்த காலம் முழுவதிலும் லெனின் தலைமையின் கீழிருந்த போல்ஷ்விக் கட்சி இந்த சுயநிர்ணய உரிமைக் காகப் போராடியது. தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து கொண்டு சுயநிர்ணய உரிமையை ஏதாவதொரு வடிவத்தில் எதிர்த்துக் கொண்டிருந்த மகத்தான ரஷ்யா என்ற கருத்தைக் கொண்டிருந்த குறுகிய தேசிய வெறி பிடித்தவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் போல்ஷ்விக் கட்சி கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தது. 

ஆனால், இதனால் போல்ஷ்விக்குகள் பிரிவினைக்காகவும், பிளவுக்காகவும் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்று பொருளாதார சுயநிர்ணய உரிமைக்காக வாதாடியதன் மூலம் போல்ஷ்விக் வழிமுறை என்பது முற்றிலும் சமத்துவமானது, அனைத்து தேசிய சலுகைகளையும் ஒடுக்குமுறைகளையும் அகற்றக் கூடியது என்று ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை அவர்கள் சம்மதிக்கச் செய்தார்கள். அதே சமயத்தில் பொதுவான தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மூலமாகவும் ஒடுக்கப்படும், ஒடுக்கும் தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளைக் கொண்டிருந்த பொதுவான தொழிலாளி வர்க்க ஸ்தாபனம் மூலமாகவும் ஒற்றுமைக்கான தேவையை அவர்கள் பேணிக்காத்தனர். அதன் மூலம், புரட்சிக்குப் பிறகு அவர்களை அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றாக வைத்திருக்க முடிந்தது.





தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக

மக்களில் பலர், தேசியப் பிரச்சனைகள் குறித்த மார்க்சிஸ்ட் அணுகுமுறையை பிரிவினைவாதம் பிளவுவாதத்துடனே சேர்த்துப் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமான மார்க்சியம் அதனுடைய கண்ணோட்டத்தில் சர்வதேசத் தன்மை வாய்ந்ததாகும். அது உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைக்காக நிற்கின்றது. இறுதியில் உலகத்தை ஒன்றுபடுத்துவதற்காக நிற்கின்றது. பிரிவினைவாதத்தை அது தன்னுடைய அடித்தளமாகக் கொண்டிருக்க முடியாது.

லெனின் கூறியது:

லெனின் இப்பிரச்சனை குறித்து சரியான கண்ணோட்டத்தை பின்வரும் வார்த்தைகளில் கூறினார்.

தொழிலாளி வர்க்கக் கட்சி எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு பெரிதான ஒரு நாட்டை உருவாக்கப் பாடுபடுகின்றது. ஏனென்றால் இது உழைக்கும் மக்களுக்கு நன்மை அளிப்பதாய் இருக்கும். அது, நாடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருப்பதற்கு பாடுபடுகின்றது; அவர்கள் மேலும் இணைவதற்கு, அது பாடுபடும்; ஆனால் இந்த லட்சியத்தை அது வன்முறை மூலம் அடைய விரும்பவில்லை. ஆனால் அனைத்து நாடுகளின் தொழிலாளிகள், உழைக்கும் மக்களின் ஒரு சுதந்திரமான, சகோதரத்துவ ஒன்றியத்தின் மூலம் மட்டுமே அதை அடைய விரும்புகின்றது.
(தொகுதி நூல்கள், பாகம் 24, பக்கம் 73)


இதுதான் தேசிய இனப் பிரச்சனைக்கு மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்களின் அணுகுமுறையாகும். இது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை தேசிய இனங்களின் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றோடு இணைத்து தாங்களே விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒன்றியத்திற்கு இட்டுச் செல்கின்றது.
நம்பிக்கையைப் பெற்றது எவ்வாறு? இப்பிரச்சனை குறித்து புரட்சிகரப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே தொழிலாளி வர்க்கக் கட்சிக்கு சரியான நிர்ணயிப்பும், அணுகுமுறையும் இல்லையென்றால் தாங்களே விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒன்றியத்தை அமைக்க இயலாது. லெனினுடைய வழி காட்டலின் கீழ், போல்ஷ்விக் கட்சி, புரட்சிக்காகப் போராடிக் கொண்டிருந்த ஆண்டுகளில் இதே அணுகுமுறையை உறுதியாகக் கடைப்பிடித்தது. இதனால் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின் போல்ஷ்விக் கட்சி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

பல நாடுகள் ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஜார் மன்னனின் ரஷ்யாவில் இருந்த பிரச்சனை எதுவென்றால், இந்த நாடுகளின் உரிமைகளையும், சமத்துவத்தையும் எவ்வாறு பாதுகாப்பதென்பதும், அதே நேரத்தில் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளின் வர்க்க ஒற்றுமையை எவ்வாறு பாதுகாப்பதென்பதுமேயாகும்.

தேசிய இனங்களின் உரிமைகளுக்காக இந்தியாவில் தீவிரமாக வாதாடும் சிலர், தொழிலாளர் வர்க்க ஒற்றுமை அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளின் ஒற்றுமை ஆகியவற்றை மறந்துவிட்டு அவர்களுடைய கோரிக்கைகளை குறுகிய பிரிவினைவாதக் கோரிக்கையாக மாற்றுகின்றார்கள்.


நினைவிற் கொள்ளப்பட வேண்டிய இரண்டாவது அம்சமானது மார்க்சியம், தேசியப் பிரச்சனைக்கான தீர்வை யதார்த்தத்துக்குப் புறம்பாகக் கருதுவதில்லை என்பதாகும். சமூக வளர்ச்சியின் அன்றைய கட்டம் வர்க்கப் போராட்டத்தின் அன்றைய கட்டம் ஆகியவைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு நமது காலங்களின் வர்க்கப் போராட்டமான பொதுவான சமூகப் போராட்டத்தை வளர்ச்சி பெறச் செய்வதில் அதனுடைய பங்கிற்கு உரித்தான முக்கியத்துவத்தை இந்தப் பிரச்சனைகள் அளிக்கின்றது.

Friday, April 19, 2013

Frederick Engels

கருத்துக்களுக்கும் தத்துவங்களுக்கும் ஒரு‍ வர்க்கத் தன்மை உண்டு‍... 
                                          



-------- பிடெரிக் ஏங்கெல்ஸ்

Tuesday, April 9, 2013

Engels Quotes

முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன........


.....................ஏங்கெல்ஸ் (1839)

Engels Quotes

மதவாத தத்துவமானது‍ சாதாரண மக்களின் அரசியல் நலன்களுக்கு‍ எதிரானது. முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகவே உள்ளது...... 


பிடெரிக் ஏங்கெல்ஸ் (-1839)

Friday, April 5, 2013

The Making of the Madras Working Class


என் நெஞ்சைத் தொட்ட புத்தகம் 


பிரகாஷ் காரத் 



தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு (The Making of the Madras Working Class) என்னும் புத்தகம் லெப்ட்வேர்ட் (Leftworld) பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டு, அவர்களது அலுவலகமான “மே 1” அரங்கத்தில் மார்ச் 21 அன்று வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நூலினை வெளியிட்டுப் பேசியதாவது:




‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடு மாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃப்ட்வேர்ட் பதிப்பகத்தால் வெளி யிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளி யீட்டாளர்களே புத்தகத்தை வெளியிடும் நிகழ் வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத் தகத்தின் உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட ஒப்புக் கொண்டேன். 

நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும் இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத் தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாந கரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்ப கால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநக ரத்தில் தொழிற்சாலைகளும் தொழிலாளர் களும் உருவான பின்னணி குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். 1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக் கப்பட்டிருக்கிறது.


இந்தியாவிலேயே முதலாவ தாகப் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கமாக மத ராஸ் லேபர் யூனியன்தான் கருதப்படுகிறது. மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக ‘பின்னி’ என்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது. 1918இலிருந்து ‘பின்னி’ ஆலை தான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக் கத்தின் மையமாக இருந்திருக்கிறது. 

பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும் போது, அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற் சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென் னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்க வேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர் கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந் திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்த தையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப் பிட்டிருக்கிறார். 

மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர் பார்க்க முடியாத பின்புலத்திலிருந்து வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங் கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறு வனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார். தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணி களும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடை களின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர் களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக் கின்றனர். 

உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வபதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வபதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார்.மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழி லாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்கு வதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது. தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் ‘பின்னி’யில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார்...........

Sunday, March 10, 2013

Homage to Hugo Chavez!


உலகம் முழுவதிலும் ஆயிரம் ஆயிரமாய் உழைக்கும் வர்க்க மக்கள் இரங்கல் ஊர்வலம் போனதையும் சமீப காலத்தில் இந்த உலகம் பார்த்திருக்கவில்லை.





தென் அமெரிக்காவின் முகத்தோற்றத்தை மாற்றி அமைத்த இடதுசாரி புரட்சியாளர் வெனிசுளாவின் அதிபர் , தோழர் சாவேஸ் அவர்கள் நம்மை விட்டு‍ பிரிந்து‍ விட்டார்.. முதலாளித்துவத்திற்கு‍ எதிரான போராட்டத்தில் ஒரு‍ மாபெரும் திருப்பத்தை கியூபாவுடன் இணைந்து‍  இலத்தீன் அமெரிக்க நாட்டில் ஏற்படுத்தியிருக்கிறார்... அமெரிக்காவின் எண்ணெய் வள பசிக்கு‍ இறையாகாமல் சோசலிச பாதையில் அமெரிக்காவிற்கு‍ அடி‍ பணியாமல் வெனிசுலா நாட்டை 20 ஆண்டுகளாக வீறு‍ நடையேற்றியவர் சாவேஸ்... 


தோழர் ஸ்டாலின் இறந்ததும் தோழர் சாவேஸ் இறந்ததும் ஒரே தேதி ஒரே மாதம் வருடம்தான் வேறு‍ (ஸ்டாலின் இறந்த தினம் 5 March 1953, சாவேஸ் இறந்த தினம் March 5, 2013) இருவரையும் ஒப்பிட முடியாது. ஆனால், இருவரின் நோக்கமும் ஒன்றே! ஏகாதிபத்தியத்தை உடைத்தெறிய வேண்டும் என்பதே....

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளுக்கு எதிராக நேருக்கு நேர் மோதிக் கொண்டிருப்பவர்கள்” 

நம் நாட்டில் (இந்தியா) உள்ள சில வார இதழ்களும் சாவேசுக்கு‍ சர்வாதிகாரி பட்டம் அளித்து‍ தனது‍ முதலாளித்துவ சிந்தனையை நிரூத்துக் கொண்டிருக்கின்றன... இங்கு‍ இருப்பவனே இப்படி‍ என்றால் முதலாளித்துவத்தின் ஒட்டுமொத்தம் - அமெரிக்கா என்ன செய்வான்.... அமெரிக்காவின் சதிகளுக்‌கு‍ ஒரே ஒரு‍ உதாரணம் பிடல் தான். 635 முறை பிடலை கொலை செய்ய முயற்சித்துள்ளது‍ என்று‍ அவரே எழுதியுள்ளார்.......


“அதெப்படி லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 6 தலைவர்களுக்கு அடுத்தடுத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது? புற்றுநோய் பாதித்த ஆறு பேருமே தங்களது நாடுகளை சுதந்திரமாக, இறையாண்மை மிக்க தேசங்களாக வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள்; 




மேலும் தெரிந்து‍ கொள்ள.......