Thursday, May 2, 2013

போலந்து பிரச்சனை

சர்வதேச உழைப்பாளர் கழகத்தின் (முதல் அகிலம்) தற்காலிக பொதுக்குழுவின் பிரதிநிதிகள் செய்ய வேண்டியது குறித்து 1866 ஆம் ஆண்டில் மார்க்ஸ் குறிப்புகள் எழுதினார். அதில் போலந்துக்காரர்கள் பிரச்சனை என்ற தலைப்பில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்.

(அ) ஐரோப்பியத் தொழிலாளிகள் இந்தப் பிரச்சனையை ஏன் எடுக்க வேண்டும்? முதலில் நடுத்தர வர்க்க எழுத்தாளர்களும், கிளர்ச்சியாளர் களும் இதை ஒடுக்குவதற்காகச் சதி செய்கின்றனர். ஐரோப்பியக் கண்டத்தில் ஏன் அயர்லாந்திலும் கூட அனைத்து வகைப்பட்ட தேசிய இனங்களுக்கும் அவர்கள் ஆதரவளிக்கிறார்கள் என்ற போதிலும் போலந்துக்காரர்கள் விஷயத்தில் சதி செய்கிறார்கள். இந்த மவுனம் எங்கிருந்து வருகின்றது. ஏனென்றால் பிரபுக்களும், முதலாளித்துவ வர்க்கத்தினரும் இந்த பிற்போக்கு ஆசிய சக்தியை (ரஷ்யாவை) தொழிலாளி வர்க்க வெற்றிகளின் முன்னேற்ற அலைக்கு எதிரான கடைசி ஆதாரம் என்ற பின்னணியில் காண்கின்றனர். போலந்தை ஒரு ஜனநாயக அடிப்படையில் மீண்டும் நிலை நிறுத்துவதன் மூலமே இந்த சக்தியை கடுமையாக ஒடுக்க முடியும்.

(ஆ) மத்திய ஐரோப்பாவின் இன்றைய மாறிய நிலை, அதிலும் குறிப்பாக ஜெர்மனி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்பொழுது, ஒரு ஜனநாயக போலந்தை பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் முன்னெப்பொழுதையும் விட அதிகமாகத் தேவைப்படுகின்றது. அது இல்லாமல், ஜெர்மனி என்பது புனித கூட்டு (Holy Alliance) என்பதனுடைய ராணுவப் பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக மாறிவிடும். அத்துடன் அந்தப் புனித கூட்டின் கூட்டாளியான பிரான்ஸ் குடியரசின் ராணுவப் பாதுகாப்பு முறையின் ஒரு பகுதியாக மாறிவிடும்.

இந்த மகத்தான ஐரோப்பிய பிரச்சனை தீர்க்கப்படும் வரை தொழிலாளி வர்க்க இயக்கம் தொடர்ந்து குறுக்கீடு செய்யப்படும்
(காரல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ், தேர்வு நூல்கள் பாகம் 2, பக்கம் 84)

போல்ஷ்விக்குகளின் சரியான நிலை

போலந்தின் பிரச்சனையானது ஐரோப்பிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டதாகும். எனவே தான் அதற்கு முக்கியத்துவம் உள்ளது. அதே சமயத்தில் ஒடுக்கும் நாடுகளும் ஒடுக்கப்பட்ட நாடுகளும் உள்ள ஜார் மன்னனின் ரஷ்யாவில் மார்க்சியம்... லெனினியம்ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு சுயநிர்ணய உரிமையை ஆதரித்ததுஅதற்காகப் போராடவும் செய்தது. 

ரஷ்யாவின் புரட்சிக்காகப் போராடிக்கொண்டிருந்த காலம் முழுவதிலும் லெனின் தலைமையின் கீழிருந்த போல்ஷ்விக் கட்சி இந்த சுயநிர்ணய உரிமைக் காகப் போராடியது. தொழிலாளி வர்க்க இயக்கத்திலிருந்து கொண்டு சுயநிர்ணய உரிமையை ஏதாவதொரு வடிவத்தில் எதிர்த்துக் கொண்டிருந்த மகத்தான ரஷ்யா என்ற கருத்தைக் கொண்டிருந்த குறுகிய தேசிய வெறி பிடித்தவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் போல்ஷ்விக் கட்சி கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தது. 

ஆனால்இதனால் போல்ஷ்விக்குகள் பிரிவினைக்காகவும்பிளவுக்காகவும் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்று பொருளாதார சுயநிர்ணய உரிமைக்காக வாதாடியதன் மூலம் போல்ஷ்விக் வழிமுறை என்பது முற்றிலும் சமத்துவமானதுஅனைத்து தேசிய சலுகைகளையும் ஒடுக்குமுறைகளையும் அகற்றக் கூடியது என்று ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை அவர்கள் சம்மதிக்கச் செய்தார்கள். அதே சமயத்தில் பொதுவான தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மூலமாகவும் ஒடுக்கப்படும்ஒடுக்கும் தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளிகளைக் கொண்டிருந்த பொதுவான தொழிலாளி வர்க்க ஸ்தாபனம் மூலமாகவும் ஒற்றுமைக்கான தேவையை அவர்கள் பேணிக்காத்தனர். அதன் மூலம்புரட்சிக்குப் பிறகு அவர்களை அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றாக வைத்திருக்க முடிந்தது.





No comments:

Post a Comment