"சமுதாய வாழ்க்கையெனும்
அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள் முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய
இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி
வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவமுடைய புரட்சிகரப் பாத்திரத்தையும்
பற்றிய தத்துவம் - இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல்
மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச் சுடரோடும் எடுத்துரைக்கிறது."
-
லெனின்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
மார்க்ஸ் - எங்கெல்ஸ்
உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!
1872-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
தொழிலாளர்களது சர்வதேச நிறுவனமாகிய கம்யூனிஸ்ட் கழகம்
அக்காலத்திய நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கழகம்
கட்சியின் விவரமான தத்துவார்த்த, நடைமுறை வேலைத்திட்டத்தை
வெளியீட்டுக்காக வகுத்திடும்படி அடியில் கையொப்பமிட்டுள்ளோரைப் பணித்தது. இவ்வாறு
பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. அச்சிடப்படுவதற்காக இதன் கையெழுத்துப் பிரதி
பிப்ரவரி புரட்சிக்கு1 ஒருசில வாரங்களக்கு முன்னால் லண்டன்
போய்ச் சேர்ந்தது. முதற்கண் ஜெர்மன் மெழியில் வெளிவந்தது, பிறகு
ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாய் வெவ்வேறான
பன்னிரண்டு பதிப்புகளுக்குக் குறையாமல் இம்மொழியில் வெளிவந்திருக்கிறது. முதன்
முறையாய் ஆங்கிலத்தில் இது 1850ல் லண்டன் Red
Republican 2 பத்திரிக்கையில் வெளியாயிற்று. இந்த மொழி பெயர்ப்பைச்
செய்தவர் மிஸ் ஹெலன் மாக்ஃபர்லென். 1871-ல் அமெரிக்காவில்
மூன்றுக்குக் குறையாத வெவ்வேறு ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்தன. பிரெஞ்சு மொழி
பெயர்ப்பு 1848-ம் ஆண்டு ஜூலை எழுச்சிக்குச் 3 சிறிது காலத்துக்கு முன் முதன்முதல் பாரிசில் வெளியாயிற்று. அண்மையில்
நியூயார்க் Le Socialiste 4 பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. புதிய ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஒன்று
தயாராகி வருகிறது. முதன்முதல் ஜெர்மன் மொழியில் வெளிவந்த பின் சிறிது காலத்துக்கு
எல்லாம் போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியிடப்பட்டது. அறுபதாம் ஆண்டுகளில்
ருஷ்யப் பதிப்பு ஒன்று ஜினீவாவில் வெளிவந்தது. முதன்முதல் வெளியாகிய பின் சிறிது
காலத்துக்குள் டேனிஷிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள்
எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில்
குறிக்கப்படும் பொதுக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும்
சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே
கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல்,
எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது
இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான்,
இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர
நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின்
வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய்
முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன
ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும், விரிவடைந்தும்
உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும்,
பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப்
பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ்
கம்யூனிலும்5 கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில்
எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில்
காலங்கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று;
அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத்
தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த காரியங்களுக்காகப்
பயன்படுத்திக் கொள்ள கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள்
எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில்
குறிக்கப்படும் பொதுக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும்
சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே
கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல்,
எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது
இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான்,
இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர
நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின்
வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முடியாது
என்பதை நிரூபித்துக் காட்டிற்று. (பார்க்கவும் : பிரான்சின் உள்நாட்டுப்போர்;
அகிலத் தொழிலாளர் சங்கப் பொது அவையின் பேருரை, ஜெர்மன் பதிப்பு பக்கம் 19; இந்த விவரம் மேலும்
விளக்கமாய் அங்கே பரிசீலிக்கப்படுகிறது. தவிரவும், சோசலிச
இலக்கியத்தைப் பற்றிய விமர்சம் இன்றைய நிலவரத்துககுப் பற்றாக்குறையானது என்பதைக்
கூறத் தேவையில்லை. ஏனெனில் 1847-ம் ஆண்டு வரையிலான நிலவரம்
மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகிறது. அதோடு, பற்பல
எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளுடைய உறவுநிலை பற்றிய குறிப்புகள்
(நான்காம் பிரிவு) கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே என்றாலுங்கூட, நடைமுறையில் காலங்கடந்தவை என்பதும் தெளிவு. ஏனென்றால், அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. வரலாற்றின் முன்னேற்றமானது
அப்பிரிவில் குறிக்கப்படும் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப்
புவிப்பரப்பிலிருந்து துடைத்து அகற்றியிருக்கிறது.
ஆனால், இந்த அறிக்கை வரலாற்று
ஆவணமாகி விட்டது. இனி இதைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை. 1847-க்கும் இன்றைக்கும் உள்ள இந்த இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு
பிற்பாடு ஒரு பதிப்பு வெளிவரலாம். தற்போது இந்த மறுபதிப்பு எதிர்பாராத முறையில்
வெளியாவதால் இதைச் செய்ய எங்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.
காரல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், லண்டன் 1872, ஜூன் 24.
1882-ஆம் ஆண்டு ருஷ்யப் பதிப்பின் முகவுரை
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது, அறுபதாம்
ஆண்டுகளின் ஆரம்பத்தில் 6 கோலகல் 7 ஏட்டின்
அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலைய நாட்டினர் அப்போது அதை (அந்த ருஷ்யப் பதிப்பை)
அரியதோர் இலக்கிய நிகழ்வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. அம்மாதிரியான ஒரு கருத்து
இன்று சாத்தியமாய் இராது.
பாட்டாளி வர்க்க இயக்கம் அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) எவ்வளவு குறுகலான வட்டத்துள் அடங்குவதாய் இருந்தது என்பதை
அறிக்கையின் கடைசிப்பிரிவு, பல்வேறு நாடுகளிலும் பற்பல
எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையைக் கூறும் இந்தப்பிரிவு,
மிகத் தெளிவாய்த் தெரியப்படுத்துகிறது. ருஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய
நாடும் இப்பிரிவில் காணப்படவே இல்லை. ருஷ்யாவானது அனைத்து ஐரோப்பியப் பிற்போக்கின்
கடைசிப் பெரும்கோட்டையாகவும், அமெரிக்க ஐக்கிய நாடு
ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி அணிகளைக் குடியேற்றத்தின் மூலம் உட்கவர்ந்து கொள்ளும்
நாடாகவும் இருந்த வந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப்பொருள்களை
வழங்கின, அதேபோது ஐரோப்பியத் தொழில்துறை உற்பத்திப்
பொருள்களுக்குச் சந்தைகளாகவும் இருந்தன. ஆகவே, அந்தக்
காலத்தில் இரு நாடுகளும் ஐரோப்பியாவிலுள்ள அமைப்புக்கு ஏதேனும் ஒரு வகையில்
ஆதாரத்தூண்களாய் இருந்தன.
நிலைமை இன்று எப்படி மாறிவிட்டது! ஐரோப்பாவிலிருந்து
நடைபெற்ற இந்தக் குடியேற்றம்தான் வடஅமெரிக்காவைப் பிரம்மாண்ட அளவிலான விவசாயப்
பொருளுற்பத்திக்குத் தயார் செய்தது ; இப்போது இந்த அமெரிக்க விவசாயப் பொருளுற்பத்தியின் போட்டி ஐரோப்பாவின்
சிறிதும் பெரிதுமான நிலவுடைமைகளது அடித்தளங்களையே ஆட்டிக் குலுக்குகிறது. அதோடு
இந்தக் குடியேற்றம், இதுகாறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும்
முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே
தகர்க்கப்படுமெனக் கூறும்படி அத்தனை விறுவிறுப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும்
அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறைச் செல்வாதாரங்களைப் பயன்படுத்திக்
கொள்வதைச் சாத்தியமாக்கிற்று. இவ்விரு நிலைமைகளும் புரட்சிகர முறையிலான
எதிர்வினையை அமெரிக்காவினுள் நடைபெறச் செய்கின்றன. அனைத்து அரசியல் அமைப்புக்கும்
அடிநிலையான சிறிநிற, நடுத்தர உழவர் நிலவுடைமைகள் பெரும்
பண்ணைகளுடைய போட்டியைச் சமாளிக்க முடியாமல் படிப்படியாய் நசிந்து வருகின்றன.
அதேபோது பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும், வியக்கத்தக்க
மிகப்பெரிய அளவிலான மூலதன ஒன்றுகுவிப்பும் தொழில்துறைப் பிரதேசங்களில்
வளர்ச்சியுறுகின்றன.
அடுத்து, இப்போது
ருஷ்யா! 1848-49-ஆம் ஆண்டுகளது புரட்சியின் போது ஐரோப்பிய
முடிமன்னர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ
வர்க்கத்தாரும்,அப்போதுதான் விழித்தெழ முற்பட்டிருந்த
பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க ருஷ்யத் தலையீடு ஒன்றே வழி என்று
இருந்தனர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் அதிபதியாய்ப் பிரகடனம்
செய்யப்பட்டார். இன்று ஜார் மன்னர் புரட்சியின் போர்க் கைதியாய்க் காட்சினாவில்
இருக்கிறார்; 8 ருஷ்யாவானது ஐரோப்பாவில் புரட்சி
நடவடிக்கையின் முன்னணியாய்த் திகழ்கிறது.
நவீன கால முதலாளித்துவச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க
முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின்
குறிக்கோள். ஆனால் ருஷ்யாவில் நாம் காண்பது என்ன? அதிவேகமாய்
வளர்ந்து வரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின்
துவக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நிலவுடைமையுடன் கூடவே, ருஷ்ய
நாட்டின் நிலங்களில் பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்கக்
காண்கிறோம். இப்போது எழும் கேள்வி இதுதான்; ருஷ்ய ஒப்ஷீன 9
(ஒப்ஷீனா- கிராம சமுதாயம்) வெகுவாய்ச் சீர்குலைக்கப்பட்டிருப்பினும்,
இன்னமும நிலத்திலான புராதனப் பொதுவுடைமையின் ஒரு வடிவமாகவே
இருக்கும் இது, நேரடியாய்க் கம்யூனிசப் பொதுவுடைமை எனும்
உயர்ந்த வடிவமாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர்மாறாய்,
மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்தச்
சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா?
இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான்: ருஷ்யப்
புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான
முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி
இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று நிறைவு பெறுமாயின், தற்போது ருஷ்யாவில் நிலத்திலுள்ள பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குரிய
துவக்க நிலையாய்ப் பயன்படக்கூடும்.
கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், லண்டன்,
1882, ஜனவரி 21
1883-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
தற்போதைய இந்தப் பதிப்பின் முகவுரைக்கு நான் - அந்தோ -
தனியே கையெழுத்திடப்பட்டாக வேண்டும். ஐரோப்பாவையும், அமெரிக்காவையும்
சேர்ந்த அனைத்துத் தொழிலாளி வர்க்கமும் மற்றவர் எவரையும் விட அதிகமாய்
மார்க்சுக்கே கடமைப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார்,
அவருடைய சமாதியின் மேல் இப்போதுதான் பசும்புல் தளிர்க்க
ஆரம்பித்திருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப் பிறகு அறிக்கையில் திருத்தம்
செய்யலாமென்றோ, செருகிச் சேர்க்கலாமென்றோ நினைப்பது
முன்னிலும் முடியாத காரியம். பின்வருவதை வெளிப்படையாய்த் திட்டவட்டமாய் மீண்டும்
இங்கு எடுத்துரைப்பது முன்னிலும் அத்தியாவசியமெனக் கருதுகிறேன்;
அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து -
வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி
இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன; ஆகவே, (புராதன நிலப்பொதுவுடைமை சிதைந்து போன காலம்
முதலாய்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும்,
சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு
உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும், ஆதிக்கம் செலுத்தும்
வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது;
ஆனால் இந்தப் போராட்டம் தற்போது வந்தடைந்திருக்கும் கட்டத்தில்
சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) சுரண்டியும்,
ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ
வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் அனைத்தையும் அதேபோது சுரண்டலிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்தும்
என்றென்றுக்கு மாய் விடுவித்தே ஆக வேண்டும் என்கிற இந்த அடிப்படை கருத்து -
முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.
(* டார்வினுடைய தத்துவம் உயிரியலுக்கு ஆற்றிய சேவையை இந்த
வரையறுப்பு என் கருத்துப்படி, வரலாற்றியலுக்கு ஆற்றப்போகிறது
என்று ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் நான் எழுதினேன். (இப்பதிப்பு பக்கம் 21-ஐப் பார்க்கவும்). 1845க்கு முந்திய சில ஆண்டுகளாகவே
நாங்கள் இருவரும் இந்த வரையறுப்பைப் படிப்படியாய் நெருங்கி வந்து கொண்டிருந்தோம்,
சுயேச்சையாய் நான் எந்த அளவுக்கு இதை நோக்கி முன்னேறி வந்தேன்
என்பதை நன்கு இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை நன்கு தெரிவிக்கின்றது.
ஆனால் 1845-ம் ஆண்டு வசந்தத்தில் நான் பிரெஸ்ஸெல்சில்
மார்க்சை மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைப்
பூரணமாய் வகுத்து வைத்திருந்தார், இங்கு நான் எடுத்துரைத்திருப்பது
போல் ஏறத்தாழ இதே அளவுக்குத் தெளிவான வாசகத்தில் எனக்கு அறிவித்தார். (1890-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு).)
முன்பே இதை நான் பல தடவை கூறியிருக்கிறேன். முக்கியமான
இப்பொழுது அறிக்கையின் முகவுரையில் இதுவும் குறிக்கப்படுதல் அவசியமாகும்.
பிரெடெரிக் ஏங்கெல்ஸ், லண்டன், 1883, ஜூன்
28
1888-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின் முகவுரை
இந்த அறிக்கை தொழிலாளர்களது சங்கமான கம்யூனிஸ்டுக்
கழகத்தின் வேலைத்திட்டமாய் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்டுக் கழகம் முதலில்
முற்றிலும் ஜெர்மன் தொழிலாளர்களுக்கு மட்டுமாய் இருந்தது. பிறகு சர்வதேச
நிறுவனமாயிற்று : 1848 முன்பு கண்டத்துள் நிலவிய அரசியல்
நிலைமைகளில் தவிர்க்க முடியாதபடி இது இரகசிய சங்கமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847
நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கழகக் காங்கிரஸ், முழு அளவிலான தத்தவார்த்த, நடைமுறைக் கட்சி
வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்தளிக்கும்படி மார்க்சையும் எங்கெல்சையும்
பணித்தது. 1848 ஜனவரியில் ஜெர்மனி மொழியில் தயாரித்து
முடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி பிப்ரவரி 24 பிரெஞ்சுப்
புரட்சிக்குச் 10 சில வாரங்களுக்கு முன்னால் லண்டன்
அச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று 1848 ஜூன் எழுச்சிக்குச் சற்று முன்னதாய் பாரிசில் வெளியாயிற்று. முதலாவது
ஆங்கில மொழிபெயர்ப்பு மிஸ் ஹெலன் மாக்ஃர்லெனால் செய்யப்பட்டு, லண்டனில் ஜார்ஜ் ஜூலியன் ஹார்னியின் Red Republican பத்திரிக்கையில்
1850-இல் வெளிவந்தது. டேனிஷ் போலிஷ் பதிப்புகளும்
வெளியாகியிருக்கின்றன.
பாட்டாளி வர்ன்கத்துக்கும், முதலாளித்துவ
வர்க்கத்துக்கும் இடையிலான முதலாவது பெரும் போராய் 1848 ஜூனில்
பாரிசில் மூண்ட எபச்ச தோல்வியுற்றதைத் தொடர்ந்து சிறிது காலத்துக்கு ஐரோப்பியத்
தொழிலாளி வர்க்கத்தின் சமூக, அரசியல் ஆர்வங்கள் மீண்டும்
பின்னிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் பிறகு மேலாண்மைக்கான போராட்டம் மீண்டும்
பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பிருந்தது போல் சொத்துடைத்த வர்க்கத்தின் வெவ்வேறு
பிரிவுகளுக்கு இடையில் மட்டும் நடைபெறும் போராட்டமாகியது; தொழிலாளி
வர்க்கம் அரசியல் நடமாட்ட இடத்துக்காகப் போராட வேண்டிய நிலைக்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் தீவிரவாதிகளது தீவிரசாரியாய் இருக்கும்
நிலைக்கும் தாழ்த்தப்பட்டது. எங்காவது சுயேச்சையான பாட்டாளி வர்க்க இயக்கங்கள்
தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் அறிகுறிகள் வெளிப்படுமாயின் ஈவிரக்கமின்றி அவை
நசுக்கப்பட்டன. இவ்வாறுதான் பிரஷ்யப் போலிஸ் அப்போது கொலோனில் இருந்த
கம்யூனிஸ்டுக்கழக மையக்குழுவை வேட்டையாடிற்று. மையக்குழு உறுப்பினர்கள் கைது
செய்யப்பட்டு, பதினெட்டு மாதங்களுக்குச் சிறையில் அடைத்து
வைக்கப்பட்டிருந்தனர். பிறகு 1852 அக்டோபரில் இவர்கள் மீது
வழக்கு தொடரப்பட்டது. புகழ் பெற்ற இந்த கொலோன் கம்யூனிஸ்ட் வழக்கு விசாரணை
அக்டோபர் 4-லிருந்து நவம்பர் 12 வரை
நடைபெற்றது. கைதிகளில் ஏழுபேருக்கு மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் வரையிலான கோட்டைச்
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சியிருந்த உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட்க்கழகம்
கலைக்கப்பட்டதாய் அறிவித்தனர். அறிக்கைகளைப் பொறுத்தவரை இனி அது தடமற்று மறைந்து
விடும் என்பதாகவே தோன்றிற்று.
ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும்
வர்க்கங்களைத் தாக்குவதற்குப் போதிய பலம் பெற்றதும்,அகிலத்
தொழிலாளர் சங்கம் உதித்தெழுந்தது. ஆனால் இந்த நிறுவனம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் படைத்த பாட்டாளி வர்க்கம்
அனைத்தையும் ஒரே அமைப்பாய் இணைத்திட வேண்டுமென்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்டதால்,
அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாய் இது ஏற்றுப்
பிரகடனம் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களுக்கும், பிரான்சையும் பெல்ஜியத்தையும் இத்தாலியையும் ஸ்பெயினையும் சேர்த்து
புரூதோன் 11 பற்றாளர்களுக்கும், ஜெர்மனியில்
லஸ்ஸாலியர்களுக்கும்* 12 (*தனிப்பட்ட முறையில் லஸ்ஸால்
எப்போதுமே எங்களிடம் தாம் மார்க்சினு சீடர் என்பதாய் ஏற்றுக் கொண்டார், எனவே, அறிக்கையையே அடிநிலையாய்க் கெண்டிருந்தார்.
அவரது கிளர்ச்சியில், அரசுக்கடன் உதவியுடன் கூட்டுறவுத்
தொழிலகங்கள் நடத்தப்பட வேண்டுமெனக் கோருவதற்கு மேல் அவர் செல்லவில்லை. (எங்கெல்ஸ்
குறிப்பு)) ஏற்புடையதாகும்படி போதிய அளவு பரவலான வேலைத்திட்டத்தையே அகிலமானது ஏற்க
வேண்டியிருந்தது. எல்லாக் கட்சியினருக்கும் திருப்திகரமான வகையில் இந்த
வேலைத்திட்டத்தை வகுத்தளித்த மார்க்ஸ், ஒன்றிணைந்த
செயற்பாட்டின் விளைவாகவும் பரஸ்பர விவாதத்தின் விளைவாகவும் தொழிலாளி
வர்க்கத்துக்கு நிச்சயமாய்க் கைவரப் பெறும் அறிவின் வளர்ச்சியில் முழு நம்பிக்கை
வைத்திருந்தார்.
மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும்,
நல்லதும் கெட்டதுமான மாற்றங்களும், போராட்டத்தின்
வெற்றிகளையும் விட அதிகமாய்த தோல்விகளும், மாந்தர்தம்
அபிமானத்துக்குரிய பலவகைப்பட்ட உத்திகளும் போதுமானவை அல்ல என்பதை அவர்களுக்கு
உணர்த்தி, தொழிலாளி வர்க்க விடுதலைக்கு வேண்டிய மெய்யான
நிலைமைகள் குறித்து முன்னிலும் அதிகமாய் முழுமையான ஞானம் பிறப்பதற்கு வழி கோலவே
செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தது போலவே நடைபெற்றது. அகிலமானது 1864-ல் இருக்கக் கண்ட தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் வேறான ஒரு
தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் வேறான ஒரு தொழிலாளி வர்க்கத்தை 1874ல் அது கலைக்கப்பட்ட போது விட்டுச் சென்றது. பிரான்சில் புரூதோனியமும்,
ஜெர்மனியில் லஸ்ஸாலியமும் இறந்து மறைந்து கொண்டிருந்தன; பழமைவாத ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும் கூட, அவற்றில்
பெரும்பாலானவை நெடுநாட்களுக்கு முன்பே அகிலத்திலிருந்து தமது தொடர்பை வெட்டிக்
கொண்டு விட்டன என்ற போதிலும் படிப்படியாய் முன்னேறி, கடந்த
ஆண்டில் ஸ்வான்சியில் அவற்றின் தலைவர் * (டிபிள்யூ .பீவன்(பதிப்பாசிரியர்)
பேசுகையில் கண்டத்து சோஷலிசத்திடம் எங்களுக்கு இருந்த கிலியெல்லாம் மறைந்து
விட்டது என்பதாய் அவற்றின் சார்பில் அறிவிக்கத் துணியும் நிலையை நோக்கி
வந்திருக்கின்றன. உண்மை என்னவென்றால், அறிக்கையின்
கோட்பாடுகள் எல்லா நாடுகளின் தொழிலாளர்களிடத்தும் கணிச அளவு செல்வாக்கு
பெற்றுவிட்டன.
அறிக்கை இவ்வாறு திரும்பவும் முன்னிலைக்கு வந்தது. 1850 முதலாய் ஜெர்மன் மூலத்தின் மறுபதிப்புகள் பல தடவை
சுவிட்சர்லாந்திலும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும்
வெளியாகியிருக்கின்றன. 1872-ல் நியூயார்க்கில் இது
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு - Wooddull and
Claflin’s Weekly -ல் வெளியிடப்பட்டது.
நியூயார்க் Le Socialiste ஏடு இந்த ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து பிரெஞ்சில் மொழி பெயர்த்து
வெளியிடப்பட்டது. அதன் பிறகு குறைந்தது மேலும் இரு ஆங்கில மொழி பெயர்ப்புகள், அதிகமாகவோ குறைவாகவோ சிதைத்துக் குலைக்கப்பட்ட வடிவில் அமெரிக்காவில்
வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று இங்கிலாந்தில் மறுபதிப்பாய்
வெளியாகியிருக்கின்றன. முதலாவது ருஷ்ய மொழி பெயர்ப்பு பக்கூனினால் செய்யப்பட்டு,
1863-ம் ஆண்டின் வாக்கில் ஜினீவாவில் கெர்த்சனின் கோலகல் ஏட்டின்
அச்சகத்திலிருந்து வெளியாயிற்று. இரண்டாவது ருஷ்ய மொழிபெயர்ப்பு வீரமிக்க வேரா
ஸசூலிச்சால் 13 செய்யப்பட்டு 1882ல்
ஜினீவாவில் வெளியாயிற்று. புதிய டேனிஷ் பதிப்பு ஒன்றை Social demokratic Biblothehek (கோப்பன்ஹேகன், 1885) நூல் தொகுப்பில்
காணலாம். பாரிசில் 1885ல் Le Socialiste ஏட்டில் ஒரு புதிய பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளிவந்தது.
இதிலிருந்து ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டு 1886ல் மாட்ரிடில் வெளியாயிற்று. ஜெர்மன் மறுபதிப்புகளுக்குக்
கணக்கில்லை. மொத்தம் பன்னிரண்டுக்குக் குறையாது. ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்று சில
மாதங்களுக்கு முன்பு கான்ஸ்டான்டிநோப்பிளில் வெளிவந்திருக்க வேண்டும், ஆனால் மார்க்சின் பெயரைக் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொண்டு வர பதிப்பாளர்
பயந்ததாலும், மொழி பெயர்ப்பாளர் அதைத் தமது படைப்பாய்க்
குறிப்பிடுவதற்கு மறுத்ததாலும், அது வெளிவராமல் நின்று
விட்டதாய்க் கேள்விப்படுகிறேன். வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டிருப்பது
பற்றிக்கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை நான் நேரில் பார்த்ததில்லை. இவ்விதம்
அறிக்கையின் வரலாறு நவீனத்தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பெருமளவுக்குப்
பிரதிபலிக்கிறது. தற்போது சோசலிச இலக்கியங்கள் யாவற்றிலும் இது மிகவும் பல்கிப்
பரவி அதிக அளவுக்கு அகிலம் தழுவிய வெளியீடாய் இருக்கிறது என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானுகோடி தொழிலாளி மக்களால்
பொது வேலைத்திட்டமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு
இடமில்லை.
ஆயினும் அது எழுதப்பட்ட காலத்தில் அதற்க நாங்கள்
சோஷலிஸ்டு அறிக்கை என்பதாய் பெயர்சூட்ட முடியவில்லை. 1847ல்
சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறத்தில் வெவ்வேறு கற்பனாவாத கருததமைப்புகளைச்
சேர்ந்தோராய் இருந்தனர்- இங்கிலாந்தில ஓவனியர்கள்,14 பிரான்சில்
ஃபூரியேயர்கள்,15 இரு வகையினரும் ஏற்கனவே குறுங்குழுக்களின்
நிலைக்குத் தாழ்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தவர்கள்; மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட சமூக மருத்துவப் புரட்டர்களாய், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராத படி பல வகையான
ஒட்டு வேலைகள் மூலம் எல்லா வகையான சமூகக் கேடுகளையும் களைகிறோமெனக் கூறிக்
கொண்டவர்களாய் இருந்தனர். இரு வகைபட்டோரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே
இருந்து கொண்டு படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாய் நாடி வந்தனர். தொழிலாளி
வர்க்கத்தில் எந்தப்பகுதி வெறும் அரசியல்புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை
ஐயமற உணர்ந்து, முழுநிறைவான சமுதாய மாற்றம் ஏற்படுவது
இன்றியமையாததெனப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக்
கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது.
அது பக்குவம் பெறாத, குத்தாயமாய் வரையப் பெற்ற, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்ததென்றாலும், அடிப்படையான விவகாரத்தைக் குறிப்பிடுவதாய் இருந்தது. பிரான்சில் காபேயின்
கற்பனாவாதக் கம்யூனிசத்தையும், ஜெர்மனியில் வைட்லிங்கின்
கற்பனாவாதக் கம்யூனிசத்தையும் 16 தோற்றுவிக்கும் அளவுக்குத்
தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் சக்தி வாய்ந்ததாய் இருந்தது. இவ்விதம் 1847-ல் சோசலிசம் மத்தியதர வர்க்க இயக்கமாய் இருக்க, கம்யூனிசம்
தொழிலாளி வர்க்க இயக்கமாய் இருந்தது. சோஷலிசம், எப்படியும்
கண்டத்திலேனும், கண்யவான் மனப்பாங்குடைத்ததாய் இருக்க,
கம்யூனிசம் இதற்கு நேர்மாறானதாய் இருந்தது. ஆதியிலிருந்தே எங்களுடைய
கருத்தோட்டம் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின்
செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும் என்பதாய் இருந்ததால், இவ்விரு
பெயர்களில் நாங்கள் எதை ஏற்பது என்பது குறித்து ஐயப்பாட்டுக்கு இடம் இருக்கவில்லை.
அதோடு அது முதலாய், இந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம்
கணமும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.
அறிக்கையானது எங்களுடைய கூட்டுப்படைப்பானதால், இதன் மையக்கருவாய் அமைந்த அடிப்படை நிர்ணயிப்பு மார்க்சுக்கே
உரியதென்பதைக் குறப்பிடுவது என்கடமையாகுமெனக் கருதுகின்றேன். அந்த அடிப்படை
நிர்ணயிப்பு வருமாறு : வரலாற்றின் வழிவந்த ஒவ்வொரு சகாப்தத்திலும், அப்போது ஒங்கிய நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி, பரிவர்த்தன
முறையும் இதிலிருநது இன்றியமையாதவாறு பெறப்படும் சமூக அமைப்பு முறையும்தான் அந்தச்
சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றின்
அடிநிலையாகின்றது, இந்த அடிநிலையிலிருந்து மட்டுமே அந்த
அரசியல், அறிவுத்துறை வரலாற்றினை மட்டுமே விளக்க முடியும்;
ஆகவே (நிலத்தைப் பொதுவுடைமையாய்க் கொண்டிருந்த புராதனக் குடிகளது
சமுதாயம் சிதைவுற்ற காலம் முதலாய்) மனிதகுல வரலாறு அனைத்தும் வர்க்கப்
போராட்டங்களது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும்
வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் , ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான பேராட்டங்களது வரலாறே ஆகும்;
இந்த வர்க்கப் போராட்டங்களது வரலாறானது பரிணாமங்களின் தொடர்
வரிசையாய் அமைந்து தற்போது வந்தடையப் பெற்றுள்ள கட்டத்தில் சுரண்டப்பட்டும்
ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் சரண்டியும், ஒடுக்கியும் வரும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின்
ஆதிக்கத்திலிருந்து தனது விடுதலையைப் பெற வேண்டுமாயின், அதேபோது
சமுதாயம் முழுதையுமே எல்லாவிதமான சுரண்டலிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும்
வர்க்கப் பாகுபாடுகளிலிலிருந்தும் வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் முற்றாகவும்,
முடிவாகவும் விடுவித்தே ஆக வேண்டும் என்றாகியுள்ளது.
டார்வினுடைய தத்துவம் உயிரியலுக்கு ஆற்றிய சேவையை இந்த வரையறுப்பு என்
கருத்துப்படி, வரலாற்றியலுக்கு ஆற்றப்போகிறது.
1845-க்கு முந்திய சில ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் இந்த
வரையறுப்பைப் படிப்படியாய் நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். சுயேச்சையாய் நான்
எந்த அளவுக்கு இதை நோக்கி முன்னேறி வந்தேன் என்பதை எனது இங்கிலாந்தில் தொழிலாளி
வர்க்கத்தின் நிலைமை* நன்கு தெரிவிக்கின்றது. ஆனால் 1845ம்
ஆண்டு வசந்தத்தில் நான் பிரஸ்ஸெல்சில் மார்க்சை மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைப் பூரணமாய் வகுத்து வைத்திருந்தார். இங்கு நான்
எடுத்துரைத்திருப்பது போல் ஏறத்தாழ இதே அளவுக்கத் தெளிவான வாசகத்தில் எனக்கு
அறிவித்தார்.
* The Condition
of the Working Class in England in 1844. By Frederick Engels. Translated by
Florence K.Wishnewetzky. New York, Lovell- London, W.Reeves, 1888(1844-ல் இங்கிலாந்தில்
தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை - பிரெடரிக் எங்கெல்ஸ், மொழிபெயர்ப்பாளர் : கே.விஷ்னெவேஸ்கி, நியூயார்க்,
லோவெல்-லண்டன், வீ.ரீவ்ஸ்) (எங்கெல்ஸ்
குறிப்பு).
1872ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய
முகவுரையிலிருந்து பின்வரும் பகுதியை அப்படியே இங்கு தருகின்றேன்:
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமை எவ்வளவுதான்
மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக்
கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும்
சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும்
எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக் கூடிய வரலாற்று நிலைமைகளைச்
சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம்
பிரிவின் இறுதியில் முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில்
வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய
வேண்டியிருக்கம்.
1848-ம் ஆண்டுக்குப் பிறகு நவீனத் தொழில்துறை பெரு நடை
போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின்
கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும் விரிவடைந்தும்
உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப்
புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல்
ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் 18 கிடைத்த நடைமுறை
அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த
வேலைத்திட்டம் சிலவிவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாய்
ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று; அதாவது ஏற்கனவே பூர்த்தியான
தயார் நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித்
தனது சொந்தக் காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்துக்
காட்டிற்று. (பார்க்கவும் : பிரான்சில் உள்நாட்டுப்போர்; அகிலத்
தொழிலாளர் சங்கப் பொது அவையின் பேருரை, லண்டன், துரூலவ், 1871, பக்கம் 15; இந்த
விவரம் மேலும் விளக்கமாய் அங்கே பரிசீலிக்கப்படுகிறது). தவிரவும், சோசலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய நிலவரத்துக்குப்
பற்றாக்குறையானது என்பதைக்கூறத் தேவையில்லை.
ஏனெனில், 1847-ம்
ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகிறது. அதோடு,
பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்ட்களுடைய உறவுநிலை
பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே
என்றாலுங்கூட நடைமுறையில் காலங்கடந்தவை என்பது தெளிவு. ஏனென்றால், அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது, வரலாற்றின்
முன்னேற்றமானது அப்பிரிவில் குறிக்கப்படும் அரசியல் கட்சிகளில் மிகப்
பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்து துடைத்து அகற்றியிருக்கிறது.
ஆனால் இந்த அறிக்கை வரலாற்று ஆவணமாகிவிட்டது. இனி இதைத்
திருத்த எங்களுக்கு உரிமை இல்லை. தற்போதைய இந்த மொழிபெயர்ப்பு, மார்க்சின், மூலதனத்தில் பெரும் பகுதியை
மொழிபெயர்த்து அளித்தவரான சாமுவேல் மூர் செய்ததாகும். இருவருமாய்ச் சேர்ந்து மொழி
பெயர்ப்பைச் சரி பார்த்தோம். வரலாற்றுச் சட்டுரைகளை விளக்கும் சில குறிப்புகளை
நான் எழுதிச் சேர்த்திருக்கின்றேன்.
பிரடெரிக் எங்கெல்ஸ் லண்டன், 1888, ஜனவரி 30
1890-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
மேற்கண்டது எழுதப்பட்ட பிறகே, * அறிக்கையின் ஒரு புதிய ஜெர்மன் பதிப்பை வெளியிடுவது அவசியமாகியுள்ளது.
அதோடுஅறிக்கைக்கு நிகழ்ந்துள்ளவை பலவற்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இரண்டாவது ரஷ்ய மொழி பெயர்ப்பு ஒன்று வேராஸசூலிச்சால்
செய்யப்பட்டு 1882ல் ஜினீவாவில் வெளியாயிற்று.
துரதிர்ஷ்டவசமாய் அதன் ஜெர்மன் மூலத்தின் கையெழுத்துப்பிரதி காணாமற் போய்விட்டது.
ஆகவே அதை நான் ருஷ்ய மொழி பெயர்ப்பிலிருந்து திருப்பிப் பெயர்த்து எழுத
வேண்டியிருக்கிறது, மூல வாசகம் இதனால் எவ்வகையிலும்
சிறப்படையப்போவதில்லை. அந்த முகவுரை வருமாறு:
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப்பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது, அறுபதாம்
ஆண்டுகளின் ஆரம்பத்தில் கோலகல் ஏட்டின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலைய
நாட்டினர் அப்போது அதை (அந்த ருஷ்ய பதிப்பை) அரியதோர் இலக்கிய நிகழ்வாய் மட்டுமே
பார்க்க முடிந்தது. அம்மாதிரியான ஒரு கருத்து இன்று சாத்தியமாய் இராது.
பாட்டாளி வர்க்க இயக்கம் அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) எவ்வளவு குறுகலான வட்டத்துள் அடங்குவதாக இருநதது
என்பதை அறிக்கையின் கடைசிப்பிரிவு, பல்வேறு நாடுகளிலும்
பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையைக் கூறும் இந்தப்பிரிவு,
மிகத்தெளிவாய்த் தெரியப்படுத்துகிறது. ருஷ்யாவும், அமெரிக்க ஐக்கிய நாடும் இப்பிரிவில் காணப்படவே இல்லை. ருஷ்யாவானது அனைத்து
ஐரோப்பிய பிற்போக்கின் கடைசிப் பெரும் கோட்டையாகவும், அமெரிக்க
ஐக்கிய நாடு ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி அணிகளைக் குடியேற்றத்தின் மூலம்
உட்கவர்ந்து கொள்ளும் நாடாகவும் இருந்த வந்த காலம் அது. இரு நாடுகளும்
ஐரோப்பாவுக்கு மூலப்பொருள்களை வழங்கின, அதேபோது ஐரோப்பியத்
தொழில்துறை உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தைகளாகவும் இருந்தன. ஆகவே, அந்தக் காலத்தில் இரு நாடுகளும் ஐரோப்பாவிலுள்ள அமைப்புக்கு ஏதேனும்
ஒருவகையில் அதாரத்தூண்களாய் இருந்தன. நிலைமை இன்று
எப்படி மாறிவிட்டது. ஐரோப்பாவிலிருந்து நடைபெற்ற இந்தக் குடியேற்றம்தான்
வடஅமெரிக்காவை பிரம்மாண்ட அளவிலான விவசாயப் பொருளுற்பத்திக்குத் தயார் செய்தது.
இப்போது இந்த அமெரிக்க விவசாயப் பொருளுற்பத்தியின் போட்டி ஐரோப்பாவின் சிறிதும்
பெரிதுமான நிலவுடைமைகளது அடித்தளங்களையே ஆட்டிக்குலுக்குகிறது. அதோடு இந்தக்
குடியேற்றம், இது காறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும்
முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே
தகர்க்கப்படுமெனக் கூறும்படி அத்தனை விறுவிறுப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும்
அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறைச் செல்வாதாரங்களைப் பயன்படுத்திக்
கொள்வதைச் சாத்தியமாக்கிற்று. இவ்விரு நிலைமைகளும் புரட்சிகர முறையிலான
எதிர்வினையை அமெரிக்காவினுள் நடைபெறச் செய்கின்றன. அனைத்து அரசியல் அமைப்புக்கும்
அடிநிலையான சிறுதிற, நடுத்தர உழவர் நிலவுடைமைகள் பெரும்
பண்ணைகளுடைய போட்டியைச் சமாளிக்க முடியாமல் படிப்படியாய் நசித்து வருகின்றன.
அதேபோது பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும் வியக்கத்தக்க மிகப் பெரிய அளவிலான மூலதன
ஒன்று குவிப்பும் தொழில் துறைப் பிரதேசங்களில் வளர்ச்சியுறுகின்றன. "அடுத்து
இப்போது ரு்ஷ்யா!"1848-49-ம் ஆண்டுகளது புரட்சியின்
போது ஐரோப்பிய முடிமன்னர்கள் மட்டுமல்ல,ஐரோப்பிய
முதலாளித்துவ வர்க்கத்தாரும், அப்போதுதான் விழித்தெழ
முற்பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க ருஷ்யத்தலையீடு ஒன்றே வழி என்று இருந்தனர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின்
அதிபதியாய்ப் பிரகடனம் செய்யப்பட்டார், இன்று ஜார் மன்னர்
புரட்சியின் போர்க் கைதியாய்க் காட்சினாவில் இருக்கிறார்;ருஷ்யாவானது
ஐரோப்பாவில் புரட்சி நடவடிக்கையின் முன்னணியாய்த் திகழ்கிறது.
"நவீன கால முதலாளித்துச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க
முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின்
குறிக்கோள். ஆனால் ருஷ்யாவில் நாம் காண்பது என்ன? அதிவேகமாய்
வளர்ந்து வரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின்
துவக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நிலவுடைமையின் கூடவே. ருஷ்ய நாட்டின் நிலங்களில்
பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்கக் காண்கிறோம். இப்போது
எழும் கேள்வி இதுதான்; ருஷ்ய 'ஒப்ஷீனா'
வெகுவாய்ச் சீர்குலைக்க்கப்பட்டிருப்பினும், வடிவமாகவே
இருக்கும் இது,நேரடியாய்க் கம்யூனிசப் பொதுவுடைமை எனும் உயர்ந்த
வடிவமாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர்மாறாய், மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்தச்
சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா?
"இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான்; ருஷ்யப்புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப்
புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று
நிறைவு பெறுமாயின், தற்போது ருஷ்யாவில் நிலத்திலுள்ள
பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குரிய துவக்க நிலையாய்ப் பயன்படக்கூடும்.
கார்ல் மார்க்ஸ், பிரெடரிக் எங்கெல்ஸ், லண்டன், 1882, ஜனவரி 21
ஏறத்தாழ இதே காலத்தில் புதிய போலிஷ் பதிப்பாகிய Manifest Kommunistyczny ஜினீவாவில் வெளிவந்தது.
தவிரவும் புதிய டேஷி பதிப்பு ஒன்று 1885-ல் Socialdemokratisk
Biblithek நூல் தொகுப்பில் வெளியாகியிருக்கிறது, துரதிர்ஷ்டவசமாய் அது மூறறும் நிறைவானதாய் இல்லை. சில
முக்கிய வாசகங்கள் மொழிபெயர்ப்பாளருக்கு இடர்ப்பாடுகளை உண்டாக்கின போலும்,
அவை விடப்பட்டிருக்கின்றன; அதோடு
கவனக்குறைவின் அறிகுறிகளும் இங்குமங்கும் தென்படுகின்றன; மொழிபெயர்ப்பாளர்
இன்னும் சற்று அதிக முயற்சி எடுத்திருந்தால் அவருடைய வேலை மிகவும் சிறப்பாய்
அமைந்திருக்கும் என்பதை அவரது மொழிபெயர்ப்பு புலப்படுத்துவதால் இந்தக்
கவனக்குறைவு வருந்தத்தக்கவாறு எடுப்பாய் முன்னிலையில் தெரிகின்றது. பாரிசில் 1885ல் Le Socialiste ஏட்டில் ஒரு புதிய பிரெஞ்ச மொழிபெயர்ப்பு வெளிவந்தது, இதுகாறும் வெளியானவற்றுள் இதுவே சிறந்ததாகும்.
இதிலிருந்து செய்யப்பட்ட ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு ஒன்று
அதேர ஆண்டில் வெளியிடப்பட்டது. முதலில் மாட்ரிடில் El Socialista ஏட்டில் அச்சிடப்பட்ட இது, பிற்பாடு பிரசுர வடிவில் வெளிவந்தது; Manifiesto del Partido Comunista, por
Carlos Marx y F.Engels. Madrid. Administraction de El Socialista, Hernan Cortes
(* கம்யூனிஸ்ட்க் கட்சி அறிக்கை, ஆக்கியோர்- கார்ல் மார்க்ஸ். பி,எங்கெல்ஸ். எல்
சோசியலிஸ்தா நிர்வாகம், மாட்ரிட், 8, கெர்னான்
கொர்டேஸ். (பதிப்பாசிரியர்)) சுவையான மற்றொரு விவரத்தையும் இங்கு குறிப்பிடலாம்;
ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்றின் கையெழுத்துப்பிரதி 1887-ல் கான்ஸ்டான்டிநோப்பிளில் ஒரு பதிப்பாளரிடம் தரப்பட்டது. பாவம்
அம்மனிதருக்கு மார்க்ஸ் பெயரைத் தாங்கிய ஒன்றை வெளியிடும் துணிவு வரவில்லை,
மொழிபெயர்ப்பாளரைத் தாமே ஆசிரியர் என்பதாய்த் தம் பெயரைப் போடுமாறு
ஆலோசனை கூறினார், ஆனால் மொழிபெயர்ப்பாளர் இதற்கு
உடன்படவில்லை.
அதிகமாகவோ குறைவாகவோ பிழைபட அமைந்த அமெரிக்க
மொழிபெயர்ப்புகள் முதலில் ஒன்றும் பிறகு மற்றொன்றுமாய் மீண்டும் மீண்டும்
மறுபதிப்புகளாய் இங்கிலாந்தில் வெளியான பின் முடிவில் 1888ல் நம்பகமான மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதைச் செய்தவர் என்
நண்பர் சாமுவேல் மூர். இதை அச்சகத்துக்கு அனுப்பு முன் நாங்கள் இருவருமாய்ச்
சேர்ந்து மீண்டும் சரி பார்த்தோம், இந்தப் பதிப்பின்
தலைப்பு வருமாறு ; Manifesto of
the Communist Party, by Karl Marx and Frederick Engels. Authorised English
Translation, edited and annotated by Frederick Engels, 1888, London, William
Reeves, 185 Fleet st. E.C. (*கம்யூனிஸ்ட்க்
கட்சி அறிக்கை, கார்ல் மார்க்ஸ். பிரெடெரிக் எங்கெல்ஸ்,
அதிகாரபூர்வமான ஆங்கில மொழி பெயர்ப்பு, பிரெடெரிக்
எங்கெல்ஸ் சரி பார்த்தது, அவர் எழுதித் தந்த கட்டுரைகளும்
அடங்கியது. 1888, லண்டன், வில்லியம்
ரீவ்ஸ். 185 பிளீட் தெரு. ஈ,ஸி,
(பதிப்பாசிரியர்)) இதன் குறிப்புகள் சிலவற்றை தற்போதைய இப்பதிப்பில்
சேர்த்திருக்கிறேன்.
அறிக்கையானது அதற்குரிய ஒரு வரலாற்றை உடையதாகும். அது
வெளிவந்த காலத்தில், எண்ணிக்கையில் அதிகம் இல்லாத விஞ்ஞான
சோஷலிச முன்னணிப்படையினர் அதை ஆர்வத்தோடு வரவேற்றனர். (முதலாவது முகவுரையில்
குறிக்கப்படும் மொழிபெயர்ப்புகளின் விவரம் இதற்கு நிரூபணமாகும்). அதன் பின்
சீக்கிரமே அது பின்னிலைக்குத் தள்ளப்பட்டது, 1848 ஜூனில்
பாரிஸ் தொழிலாளர்களின் தோல்வியைத் தொடர்ந்து மூண்ட பிற்போக்கு இப்படி அதைத்
தள்ளி்ற்று. முடிவில், 1852 நவம்பரில் கொலோன்
கம்யூனிஸ்டுகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது (20)//// "சட்டத்தின்படி" அது தீண்டாததாய் விலக்கி வைக்கப்பட்டது. பிப்ரவரிப்
புரட்சியுடன் ஆரம்பமான தொழிலாளர் இயக்கம் பொது அரங்கிலிருந்து மறைந்துவிடவே,
அதோடு கூட அறிக்கையும் பின்னிலைக்குப் போய்ச் சேர்ந்தது.
ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும்
வர்க்கங்களது ஆட்சியதிகாரத்தி்ன் மீது தாக்குதல் தொடுக்கப் போதிய பலத்தைத்
திரட்டியதும் அகிலத் தொழிலாளர் சங்கம் உருப்பெற்று எழுந்தது. ஐரோப்பாவையும்,
அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் படைத்த தொழிலாளி வர்க்கம்
அனைத்தையும் ஒரே பெரும் படையாய் ஒருசேர இணைத்திடுவதே இந்தச் சங்கத்தின் நோக்கமாய்
இருந்தது, ஆகவே இச்சங்கம் அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டுள்ள
கோட்பாடுகளிலிருந்து தொடங்க முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களையும்
பிரெஞ்சு. பெல்ஜிய. இத்தாலிய. ஸ்பெயின் நாடுகளது பூருதோனியர்களையும் ஜெர்மன்
லஸ்ஸாலியர்களையும் (* லஸ்ஸால் எங்களுடன் பேசுகையில் எப்போதுமே தாம் மார்க்சின்
சீடராய் இரு்ப்பதாகவும், எனவே. அறிக்கையையே அடிநிலையாய்க்
கொண்டிருப்பதாகவும் கூறி வந்தார். ஆனால் அவரைப் பின்பற்றியோரின் நிலை முற்றிலும்
வேறு விதமாய் இருந்தது, அரசுக்கடன்களை ஆதாரமாய்க் கொண்ட
உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வேண்டுமென்ற லஸ்ஸாலின் கோரிக்கைக்கு மேல்
அவர்கள் செல்லவில்லை.
தொழிலாளி வர்க்கம் முழுவதையுமே அவர்கள் அரசு உதவியின்
ஆதரவாளர்களாகவும் தன்னுதவின் ஆதரவாளர்களாகவும் பிளவுபடுத்தினார்கள் (எங்கெல்ஸ்
குறிப்பு)) வெளியே வைத்துக் கதவடைக்காத ஒரு வேலைத் திட்டத்தை இந்தச் சங்கம் ஏற்க
வேண்டியிருந்தது. அகிலத்தின் விதிகளது முகப்புரையாய் அமைந்த (21) இந்த வேலைத்திட்டத்தை மார்க்ஸ் வகுத்தளித்தார், பக்கூனினும் அராஜகவாதிகளுங்கூட அங்கீகரிக்கும்படி தேர்ந்த திறமையுடன்
இதைச் செய்தார். அறிக்கையில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் இறுதி வெற்றிக்கு,
ஒன்றுபட்ட செயற்பாட்டிலிருந்தும் விவாதத்தி்லிருந்தும் நிச்சயம்
ஏற்பட்டாக வேண்டிய தொழிலாளி வர்க்க ஞான வளர்ச்சியைத்தான் முற்றும்
நம்பியிருந்தார். மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும். நல்லதும் கெட்டதுமான
மாறுதல்களும், போராட்டத்தின் வெற்றிகளையும் விடஅதிகமாய்த்
தோல்விகளும், போராடுவோருக்கு எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல
சஞ்சீவியாய் இதுகாறும் அவர்கள் கருதியிருந்தவை எவ்வளவு குறைபாடானவை என்பதைத்
தெரியப்படுத்தவே செய்யும், தொழிலாளர்களது விடுதலைக்கு வேண்டிய
மெய்யான நிலைமைகளைத் தீர்க்கமாய்ப் புரிந்து கொள்வதற்கு அவர்களது மனத்தைப்
பக்குவமடையதாக்கவே செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தபடியே நடைபெற்றது.
அகிலம் கலைக்கப்பட்ட ஆண்டான 1874ல் இருந்த தொழிலாளி வர்க்கம், அகிலம் துவக்கப்பட்ட
காலமாகிய 1864ம் ஆண்டின் தொழிலாளி வர்க்கத்திலிருந்து
முற்றிலும் மாறானதாய் இருந்தது. லத்தீனிய நாடுகளில் புருதோனியமும் ஜெர்மனிக்கு
உரியதாய் இருந்த தனிவகை லஸ்ஸாலியமும் மடிந்து மறைந்து கொண்டிருந்தன.
அக்காலத்தில் கடைந்தெடுத்த பழமைவாதப் போக்கு கொண்டிருந்த ஆங்கிலேயத்
தொழிற்சங்கங்களுங்கூட படிப்படியாய் முன்னேறி 1887ல்
அவற்றின் ஸ்வான்சி காங்கிரசில் அவற்றின் தலைவர் "கண்டத்தின் சோஷலிசம்
எங்களுக்குக் கிலியூட்டுவதாய் இருந்த காலம் மறைந்து விட்டது" என்பதாய்
அச்சங்கங்களின் சார்பில் அறிவிக்கத் துணியும்படியான நிலையை நோக்கிச் சென்று
கொண்டிருந்தன. ஆயினும் கண்டத்து சோஷலிசமானது 1887க்குள்
அனேகமாய் முழு அளவுக்கு, முன்பு அறிக்கை முரசறைந்து
அறிவித்த அதே தத்துவத்தைக் குறிப்பதாய் இருந்தது. இவ்வாறு அறிக்கையின் வரலாற 1848ம் ஆண்டு முதலான நவீனத் தொழிலாளி வர்க்க இயக்க வரலாற்றை ஓரளவுக்குப்
பிரதிபலிக்கிறது. தற்போது சோஷலிச இலக்கியம் அனைத்திலும் அறிக்கைதான் மிகவும்
அதிகமாய்ப் பல்கிப்பரவி, மிகப் பெரும் அளவுக்கு சர்வதேசியத்
தன்மை கொண்ட படைப்பாகும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா
வரை எல்லா நாடுகளிலும் கோடானுகோடியான தொழிலாளர்களது பொது வேலைத்திட்டமாகும் என்பதில்
ஐயப்பாட்டுக்கு இடமில்லை. ஆயினும் முதலில் வெளிவந்த போது நாங்கள் அதற்கு
சோஷலிஸ்டு அறிக்கை என்று பெயரளிக்க முடியவில்லை.
1847ல் இரு வகையானோர் சோஷலிஸ்டுகளாய்க் கருதப்பட்டனர், ஒருபுறத்தில் பற்பல கற்பனாவாதக் கருத்தமைப்புகளைச் சேர்ந்தவர்கள்
இருந்தார்கள்; இங்கிலாந்தில் ஓவனியர்களம். பிரான்சில்
பூரியேயர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்; இரு தொகுதியோரும்
அக்காலத்திலேயே சிறிது சிறிதாய் மறைந்து சென்ற குறுங் குழுக்களாய்க் குறுகிச்
சிறுத்து விட்டவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட ரகங்களைச் சேர்ந்த சமூக
மருத்தவப் புரட்டர்கள் இருந்தார்கள்; மூலதனத்துக்கும்
இலாபத்துக்கும் இம்மியளவும் தீங்கு நேராதபடி இவர்கள் தமது சர்வரோக நிவாரணிகள்
மூலமும் எல்லா விதமான ஒட்டையடைப்புச் சில்லறைப் பணிகள் மூலமும் சமூகக் கேடுகளைக்
களைய விரும்பினார்கள். இவ்விரு வகையினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு வெளியே
இருந்தவர்கள், படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாய்
நாடியவர்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி வெறும் அரசியல் புரட்சிகள்
மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமற உணர்ந்து கொண்டு, சமுதாயத்தில்
அடிப்படை மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று கோரிற்று; இந்தப்
பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. இன்னமும் அது
அரைகுறையானதாகவே, உள்ளுணர்வால் உந்தப்பட்டதாகவே, பல சந்தர்ப்பங்களி்லும் அவ்வளவாய்ப் பக்குவமில்லாத ஒரு கம்யூனிசமாகவே
இருந்தது. என்றாலும் அது இரண்டு கற்பனாவாதக் கம்யூனிச அமைவுகளை - பிரான்சில்
காபேயின் "ஐகேரியக்; கம்யூனிசம், ஜெர்மனியில்
வைட்லிங்கின் 22 கம்யூனிசம் - தோற்றுவிக்கும் அளவுக்கு
சக்தி வாய்ந்ததாய் இருந்தது.
1847ல் சோஷலிசம் முதலாளித்துவ இயக்கத்தையும், கம்யூனிச்ம் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் குறிப்பனவாய் இருந்தன.
சோஷலிசமானது, எப்படிப்பட்ட கண்டத்திலேனும் கண்யவான்
மனப்பாங்குடைத்ததாய் இருந்தது, ஆனால் கம்யூனிசம் இதற்கு
நேர்மாறானதாய் இருந்தது. நாங்கள் அந்த ஆரம்பக் காலத்திலேயே "தொழிலாளி
வர்க்கத்தின் செயலால் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான்
பெறப்பட்டாக வேண்டும்"என்ற உறுதிமிக்க கருத்துடையோராய் இருந்ததால். இரண்டு
பெயர்களில் எதைத் தேர்ந்தெடுத்தூக கொள்வதென்பது குறித்து எங்களிடம்
தயக்கத்துக்கு இடமில்லை. அன்று முதலாய் இந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம்
ஒருபோதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை. "உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!" நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,
பாட்டாளி வர்ககம் தனது சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்து எழுந்த
அந்த முதலாவது பாரிஸ் புரட்சியின் தறுவாயில் நாங்கள் இந்த முழக்கத்தைப் பிரகடனம்
செய்தோம், அப்போது ஒருசில குரல்களே இதை எதிரொலித்து
எழுந்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28-ல்
பெருவாரியான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளிகள் அழியாப் புகழ் நினைவுக்குரிய
அகிலத் தொழிலாளர் சங்கத்தில் கைகோர்த்து நின்றார்கள். இந்த அகிலம் ஒன்பது
ஆண்டுகளுக்கே நீடித்தது என்பது மெய்தான். ஆனால் எல்லா நாடுகளையும் சேர்ந்த
பாட்டாளிகளிடத்தே அது உருவாக்கிய அமர ஐக்கியமானது இன்றும் நிலைத்து நிலவுகிறது
என்பதோடு, என்றையும் விட வலிமைமிக்கதாய் இருக்கிறது
என்பதற்கு இன்றைய தினத்தைக் காட்டிலும் சிறப்பான சான்று ஏதுமில்லை. நான் இந்த
வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும்
சேர்நத பாட்டாளி வர்க்கம் தனது போர்ப் படைகளை ஒத்திகை நடத்திப் பார்வையிடுகின்றது,
இந்தப் படைகள் முதன் முதலாய் ஒரே சேனையாய், ஒரே
கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப்
பெற்றனவாய் அணிவகுத்து நிற்கின்றன.
1886-ல் அகிலத்தின் ஜினீவா காங்கிரசாலும், மீண்டும் 1889ல் பாரிஸ் தொழிலாளர் காங்கிரசாலும்,
மீண்டும் 1889-ல் பாரிஸ் தொழிலாளர்
காங்கிரசாலும் பறைசாற்றப்பட்டது போல் சட்டம் இயற்றி முறையான எட்டு மணி நேர வேலை
நாளை நிலை நாட்ட வேண்டுமெனற் உடனடிக் கோரிக்கையை எழுப்பிப் பாட்டாளிப் படை
வாரிசைகள் அணி திரண்டிருக்கின்றன. இன்றைய இந்தக் காட்சி எல்லா நாடுகளின்
தொழிலாளர்களும் மெய்யாகவே இன்று ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்பதை எல்லா
நாடுகளின் முதலாளிகளுக்கும். நிலப்பிரபுக்களுக்கும் தெற்றெனப் புலப்படுத்தும். இதை
நேரில் தம் கண் கொண்டு களிக்க என்பக்கத்தில் மார்க்ஸ் இருந்தால் எவ்வளவு
நன்றாயிருக்கும்!
பி.எங்கெல்ஸ், லண்டன், 1890, மே 1.
1892 ஆம் ஆண்டு போலிஷ் பதிப்பின் முகவுரை
கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு புதிய போலிஷ்
பதிப்பு அவசியமாகியிருப்பதானது பற்பல சிந்தனைகளை எழச் செய்கிறது.
முதலாவதாக, அண்மையில் அறிக்கை ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில் துறையின்
வளர்ச்சியைக் காட்டும் ஒரு குறியீடு போலாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட ஒரு நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடைவதற்கு ஒத்த வீதத்தில்
அந்நாட்டின் தொழிலாளர்களிடத்தே, சொத்துடைத்த வர்க்கங்கள்
சம்பந்தமாயத் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் தமது நிலை என்ன என்பது குறித்து
அறிவொளி பெற வேண்டிய தேவை அதிகமாகிறது. அவர்களிடையே சோஷலிஸ்டு இயக்கம் பரவுகின்றது,
அறிக்கையின் தேவையும் அதிகரிக்கின்றது. இவ்விதம் அந்தந்த நாட்டிலும்
பெருவீதத் தொழில் துறையினது வளர்ச்சி மட்டுமன்றி, பெருவீதத்
தொழில்துறையினது வளர்ச்சி நிலையையும் கூட, அந்நாட்டு
மொழியில் வினியோகமாகின்ற அறிக்கையின் பிரதிகளது எண்ணிக்கையைக் கொண்டு
பெருமளவுக்குச் சரியானபடி அளவிட முடிகின்றது.
புதிய போலிஷ் பதிப்பு இவ்வாறு போலிஷ் தொழில்
துறையானது குறிப்பிடத்தக்கவாறு முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுவதாய்
உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய பதிப்பு வெளிவந்த பின் இந்த
முன்னேற்றம் மெய்யாகவே ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை.
ருஷ்யப் போலந்து, காங்கிரஸ் போலந்து 23 ருஷ்ய முடிப்பேரரசின் பெரிய தொழிற் பிராந்தியமாகியிருக்கிறது. ருஷ்யாவின்
பெருவீதத் தொழில் துறை அங்குமிங்குமாய் சிதறுண்டு காணப்படுகிறது. ஒரு பகுதி
பின்லந்து வளைகுடாவைச் சுற்றிலும், இன்னொன்று மையப்
பிரிவிலும் (மாஸ்கோவிலும் விளதீமிரிலும்), மூன்றாவது ஒன்று
கருங்கடல், அஸோவ் கடல் கரையோரங்களிலும் மற்றும் சில பகுதிகள்
வேறு இடங்களிலுமாய் அமைந்திரு்க்கிறது. ஆனால். போலந்தின் தொழில்துறை இவ்வாறன்றி
ஒப்பளவில் சிறிய பரப்பில் நெரிசலாய் அமைந்து, இந்த ஒன்று
குவிந்த நிலையின் அணுகூலங்களையும் பிரதிகூலங்களையும் ஒருங்கே அனுபவிக்கிறது.
போட்டியிடும் ருஷ்யத் தொழிலதிபர்கள் போலிஷ்காரர்களை ருஷ்யர்களாக்குவதில் தமக்குள்ள
ஆர்வத்தையும் மீறி போலந்துக்கு எதிராய்க் காப்புச் சுங்க வரிகள் வேண்டுமெனக்
கோரியதன் மூலம் இந்த அணுகூலங்கள் இருப்பதை ஒப்புக் கொண்டார்கள். பிரதிகூலங்கள் -
போலிஷ் தொழிலதிபர்களுக்கும் மற்றும் ருஷ்ய அரசாங்கத்துக்கும் இருப்பதானது, போலிஷ் தொழிலாளர்களிடையே சோசலிசக் கருத்துகள் வேகமாய்ப் பரவுவதிலும்
அறிக்கையிற்கு இருக்கும் கிராக்கி பெருகிச் செல்வதிலும் காணக் கிடக்கிறது.
ருஷ்யத் தொழில்துறை வளர்ச்சியை விஞ்சி்ச்
செல்லும் படியான வேகத்தில் போலிஷ் தொழில்துறை வளர்ச்சியானது, போலிஷ் மக்களு்டைய வற்றாத ஜீவசக்திக்கு ஒரு
புதிய நிரூபணமாவதோடு, போலந்தின் தேசிய மீட்சி விரைவில்
நடந்தேறப் போகிறது என்பதற்கு ஒரு புதிய உத்தரவாதமும் ஆகிறது. வலுமிக்க சுதந்திரப்
போலந்து மீட்சியுற்று எழ வேண்டியது போலிஷ்காரர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே அக்கறைக்கு உரியதாகும். ஐரோப்பியத் தேசம் ஒவ்வொன்றும்
அதன் சொந்த வீட்டில் முழு அளவுக்குத் தன்னாட்சி செலுத்துவதாய் இருந்தால்தான்
ஐரோப்பியத் தேசங்களிடையே உள்ளப்பூர்வமான சர்வதேச ஒத்துழைப்பு சாத்தியமாகும். 1848-ம் ஆண்டுப் புரட்சி, பாட்டாளி வர்க்கக் கொடியின்
கீழ் நடைபெற்றாலும் பாட்டாளி வர்க்கப் போர் வீரர்களை முதலாளித்துவ வர்க்கத்தாரின்
வேலையை மட்டுமே செய்ய இடமளித்த இந்தப் புரட்சி, அதன் இறுதி
விருப்ப ஆவணத்தை நிறைவேற்றியவர்களான லுயீ போனப்பார்த், பிஸ்மார்க் 24 இவர்கள் மூலம் இத்தாலிக்கும், ஜெர்மனிக்கும் சங்கேரிக்கும் சுதந்திரம் கிடைக்கச் செய்தது. ஆனால்
புரட்சிக்கு இம்மூன்று நாடுகளும் சேர்ந்து செய்ததைக் காட்டிலும் அதிகமாய் 1792 முதலாய்ச் சேவை புரிந்துள்ள போலந்து அதன் சொந்த சக்தியைச்
சார்ந்திருக்கும்படி தனியே விடப்பட்டது, 1863-ல் அது
தன்னிலும் பத்து மடங்கு கூடுதலான ருஷ்யப் படைகளுக்குப் பணிய வேண்டியதாயிற்று. 25 போலிஷ் பிர்புக் குலத்தோரால் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும்
முடியவி்ல்லை. மீட்கவும் முடியவில்லை. குறைந்த பட்சமாய்ச் சொல்வதெனில் இன்று
முதலாளித்துவ வர்க்கத்துக்கு இந்தச் சுதந்திரம் குறித்து கவலையில்லை. எனினும்,
ஐரோப்பியத் தேசங்கள் இசைவுடன் ஒத்துழைப்பதற்குப் போலந்தின்
சுதந்திரம் இன்றியமையாதது. போலந்தின் இளம் பாட்டாளி வர்க்கத்தால்தான் இந்த
சுதந்திரத்தைப் பெற முடியும், அதன் கரங்களில்தான் இந்த சுதந்திரம்
பாதுகாப்புடன் இருக்க முடியும். போலந்துத் தொழிலாளர்களுக்குப் போலந்தின்
சுதந்திரம் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு அது ஐரோப்பாவின் ஏனைய எல்லாப்
பகுதிகளிலு்ம் உள்ள தொழிலாளர்களுக்கும் அவசியமாகும்.
பி.எங்கெல்ஸ், லண்டன், 1892, பிப்ரவரி 10
1893 ஆம் ஆண்டு இத்தாலியப்
பதிப்பின் முகவுரை
இத்தாலிய வாசகருக்கு
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான
நிகழ்ச்சியானது. மிலானிலும் பெர்லினிலும் புரட்சிகள் நடைபெற்ற 1848 மார்ச் 18ம்
நாளுடன் ஒன்றித்து நடந்தேறியதாய்ச் சொல்லலாம், மிலானிலும்,
பெர்லினிலும் நடைபெற்ற புரட்சிகள், ஒன்று
ஐரோப்பா கண்டத்தின் மையத்திலும் மற்றொன்று மத்தியதரைக்கடல் பிரதேசத்தின்
மையத்திலுமாய் அமைந்த இரு தேசங்களது ஆயுதமேந்திய எழுச்சிகளாகும். இரு தேசங்களும்
அதுகாறும் பிளவுபட்டு உட்பூசலால் நலிவுற்று அதன் பலனாய் அன்னிய ஆதிக்கத்தில்
இருத்தப்பட்டுக் கிடந்தவை, இத்தாயிலானது ஆஸ்திரியாவின்
பேரரசனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்க, ஜெர்மனியானது இதனிலும்
மறைமுகமானதாயினும் வினைவலிமையில் குறைவாயிராத ஆதிக்கமாகிய அனைத்து ருஷ்யாவின் ஜார்
மன்னனது ஆதிக்கத்தில் இரூத்தப்பட்டிருந்தது.1848 மார்ச் 18ன் விளைவுகள் இத்தாலியையும் ஜெர்மனியையும் இந்த அவக்கேட்டிலிருந்து
விடுவித்தன, இம்மாபெரும் இரு தேசங்களும் 1848க்கும் 1871க்கும் இடையே மீட்டமைக்கப்பெற்று
தன்னுரிமையோடு மீண்டும் எழ முடிந்ததெனில், கார்ல் மார்க்ஸ்
அடிக்கடி கூறியது போல், 1848ம் ஆண்டுப் புரட்சியை
அடக்கியவர்கள் தம்மையும் மீறி இந்தப் புரட்சியின் இறுதி விருப்ப ஆவணத்தை நிறைவேற்ற
வேண்டியதாகியதே அதற்குக் காரணமாகும்.
எங்கும் அந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கம்
புரிந்தசெயலாகவே இருந்தது, தெருவில் தடுப்பரண்கள் அமைத்து
உயிர் இரத்தத்தையும் அளித்துப் போராடியது தொழிலாளி வர்க்கம்தான். ஆனால் பாலிஸ்
தொழிலாளர்கள் மட்டும்தான் அரசாங்கத்தை வீழ்த்துகையில் முதலாளித்தவ ஆட்சியமைப்பை
வீ்ழ்த்திடும் திட்டவட்டமான நோக்கம் கொண்டோராய் இருந்தார்கள். தமது
வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலுள்ள ஜென்மப் பகையை அவர்கள்
உண்ர்ந்திருப்பினும் கூட, நாட்டின் பொருளாதார முன்னேற்றமோ.
பிரெஞ்சுத் தொழிலாளர்களி்ல் பெரூந்திரளானோரின் அறிவுத்துறை வளர்ச்சியோ சமுதாயப்
புத்தமைப்பைச் சாத்தியமாக்கக் கூடிய கட்டத்தினை இன்னமும் வந்தடைந்து விடவில்லை.
ஆகவே இறுதியில் புரட்சியின் பலன்களை முதலாளித்துவ வர்க்கம் வசப்படூததிக் கொண்டு
விட்டது. பிற நாடுகளாகிய இத்தாலியிலும் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும்
ஆரம்பத்திலிருந்தே தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை உயர்த்தி
ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதை அன்றி எதுவும் செய்யவில்லை. தேச சுதந்திரம் பெறாமல்
எந்த நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் பெறுவது சாத்தியமன்று. எனவே.
1848ம் ஆண்டுப் புரட்சி அதுகாறும் ஒற்றுமையும் தன்னாட்சியும்
பெறாதிருந்த தேசங்களுக்கு இவை கிடைக்கச் செய்தாக வேண்டியிருந்தது. இத்தாலியும்
ஜெர்மனியும் அங்கேரியும் இவ்வாறுதான் இவற்றைப் பெற்றுக் கொண்டன. அடுத்து போலந்தும்
இவற்றைப் பெற்றுக் கொள்ளும்.
1848-ம் ஆண்டு புரட்சி இவ்விதம்
சோசலிசப் புரட்சியாய் இருக்கவில்லை; ஆயினும் அது சோசிலிசப்
புரட்சிக்குப் பாதையைச் செப்பனிட்டது. எல்லா நாடுகளிலும் முதலாளித்தவ ஆட்சியமைப்பு
பெருவீதத் தொழில் துறைக்குத் தூண்டுதல் அளித்ததன் மூலம் கடந்த நாற்பத்தைந்து
ஆண்டுகளில் எங்கும் மிகுந்த எண்ணிக்கையுடையதாய், ஒன்று
குவிந்ததிருக்கும், சக்தி மிக்கதான பாட்டாளி வர்க்கத்தைத்
தோற்றுவி்த்திருக்கிறது. இவ்வாறு அது, அறிக்கையின் சொற்களில்
சொல்வோமாயின், தனக்குச் சவக்குழி தோண்டுவோரை எழச்
செய்திருக்கிறது. ஒவ்வொரு தேசத்துக்கும். தன்னாட்சியையும் ஐக்கியத்தையும்
மீட்டளிக்காமல் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை உண்டாக்குவதோ, பொது நோக்கங்களுக்காக இந்தத் தேசங்களிடையே சமாதான வழிப்பட்ட அறிவார்ந்த
ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோ முடியாத காரியம். 1848க்கு
முன்பிருந்த அரசியல் நிலைமைகளில் இத்தாலிய, அங்கேரிய,
ஜெர்மன், போலி்ஷ், ருஷ்யத்
தொழிலாளர்கள்கூட்டாய்ச் சர்வதேச நடவடிக்கை எடுத்திருக்க முடியுமென நினைப்பதும் கூட
சாத்தியம் அல்லவே !
ஆகவே,
1848ல் புரியப்பட்ட போர்கள் வீணாகிவிடவில்லை, அந்தப்
புரட்சி சகாப்தத்துக்குப் பிற்பாடு கழிந்திருக்கும் நாற்பத்தைந்து ஆண்டுகளும்
வீணில் கழிந்து விரயமாகி விடவில்லை. இவற்றின் பலன்கள் முற்றிப் பக்குவமடைந்து
வருகின்றன. நான் விரும்புவது எல்லாம், முன்பு மூல மொழிப்
பதிப்பு சர்வதேசப் புரட்சிக்குக் கட்டியங் கூறுவதாய் அமைந்தது போல், இப்போது இந்த இத்தாலிய மொழி பெயர்ப்பு இத்தாலியத் தொழிலாளி வர்க்கத்தின்
வெற்றிக்குக் கட்டியங் கூறுவதாய் இருத்தல் வேண்டும் என்பதுதான்.
கடந்த காலத்தில் முதலாளித்துவம் ஆற்றிய
புரட்சிகரப் பங்கினை அறிக்கை தக்கச் சிறப்புடன் எடுத்துரைக்கிறது. இத்தாலிதான்
முதலாவது முதலாளித்தவ தேசம். பிரபுத்துவ மத்திய காலத்தின் இறுதியையும் நவீன
முதலாளித்துவச் சகாப்தத்தின் துவக்கத்தையும் குறிப்பவனாய் விசுவ உருவம் தரித்து
நிற்கும் மாமனிதன் ஓர் இத்தாலியன்,
மத்திய காலத்தின் கடைசிக் கவிஞனும் நவீன காலத்தின் முதற் கவிஞனுமான
தாந்தே என்பான், 1300 ம் ஆண்டைப் போலவே இன்றும் ஒரு புதிய
வரலாற்றுச் சகாப்தம் நெருங்கி வருகின்றது, இந்தப் புதிய,
பாட்டாளி வர்க்கச் சகாப்தத்தைக் குறிப்பவனாய் ஒரு புதிய தாந்தேயை
இத்தாலி நமக்கு அளிக்குமா?
பிரெடெரிக் எங்கெல்ஸ், லண்டன்,
1893, பிப்ரவரி 1
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭
ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்- கம்யூனிசம்
என்னும் பூதம். போப்பாண்டவரும், ஜாரரசனும், மெட்டர்னிகிம் கிஸோவும் (26) பிரெஞ்சுத் தீவிரவாதிகளும், ஜெர்மின் உளவாளிகளுமாய்,
பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஒட்டுவதற்காகப்
புனிதக் கூட்டு சேர்ந்திரூக்கின்றன.
ஆட்சியிலுள்ள தனது எதிராளிகளால் கம்யூனிஸ்டு
என்று ஏசப்படாத எதிர்க் கட்சி எங்கேனும் உண்டா?
கம்யூனிசம் என்று இடித்துரைத்து தன்னிலும் முன்னேறிய
எதிர்த்தரப்பாருக்கும், மற்றும் பிற்போக்கான தனது
எதிராளிகளுக்கும் பதிலடி கொடுக்காத எதிர்க்கட்சிதான் உண்டா?
இரண்டு முடிவுகள் இவ்வுண்மையிலிருந்து
எழுகின்றன;
1. கம்யூனிசமானது ஒரு
தனிப்பெரும் சக்தியாகி விட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஏற்றுக்
கொண்டு விட்டன.
2. பகிரங்கமாய் அனைத்து உலகும்
அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது
போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய்க் கட்சியின் அறிக்கை
மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய
தருணம் வந்து விட்டது.
இந்த நோக்கத்துடன், பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த
கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி, அடியிற் கண்ட அறிக்கையை
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், பிளெமிஷ், டேனிஷ்
மொழிகளில் வெளியிடுவதற்காக வகுத்திட்டனர்.-*
முதலாளிகளும் பாட்டாளிகளும்...
I
(*இக்காலத்து முதலாளிகளாகிய முதலாளித்துவ வர்க்கத்தார் (பூர்ஷ்வா
வர்க்கத்தார்) சமூகப் பொருளுற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள், கூலி உழைப்பை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். இக்காலத்துக் வலித்
தொழிலாளர்களது வர்க்கமே பாட்டாளி வர்க்கம் எனப்படுவது; இத்தொழிலாளர்கள்
சொந்தத்தில் தம்மிடம் உற்பத்திச் சாதனங்கள் இல்லாத காரணத்தால் தமது உழைப்பு
சக்தியை (Labour power) விற்று வாழ்க்கை நடத்தும் படி
தாழ்த்தப்பட்டிரூககிறவர்கள், (1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு
ஏங்கெல்ஸ் குறிப்பு).
இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு
அனைத்தும் **வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்.
(** அதாவது ஏட்டிலேறிய வரலாறு
அனைத்தும் வரலாற்றுக்கு முற்பட்ட சமுதாயம் குறித்து. எழுத்தில் பதிவாகியுள்ள
வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு குறித்து, 1847ல் அனேகமாய் ஏதும் அறியப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பிற்பாடு, ஷாக்ஸ்ஷாவுன்///////////////// (27) ருஷ்யாவில்
நிலம் பொதுவுடைமையாய் இரூந்ததென்று கண்டுபிடித்தார்; டியூட்டானிய
இனங்கள் யாவுமே நிலத்திலான பொதுவுடைமையாகிய இந்தச் சமூக
அடித்தளத்திலிருந்துதான் வரலாற்றை ஆரம்பித்தன என்று மௌரர் (28) நிரூபித்துக் காட்டினார்; ,இந்தியாவிலிருந்து
ஐயர்லாந்து வரை எங்குமே நிலத்தைப் பொதுவுடைமையாய்க் கொண்ட கிராம சமுதாயங்கள்தான்
சமுதாயத்தின் புராதன ஆதி வடிவமாய் இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது என்பது
நாளாவட்டத்தில் தெரியலாயிற்று. இவற்றுக்கு எல்லாம் மணிமுடி வைத்தாற்போல், கணம் என்பதன் மெய்யான தன்மையையும் அதற்கும் பூர்வகுடிக்குமுள்ள உறவையும்
மார்கன் (29) கண்டு பிடித்ததானது, இந்தப்
புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் தூய வகையிலான வடிவில் தெளிவாய்ப்
புலப்படுத்துகிறது. இந்தப் புராதன சமுதாயங்களின் சிதைவைத் தொடர்ந்து சமுதாயமானது
பாகுபாடுற்றுத் தனித்தனியான. முடிவில் ஒன்றுக்கொன்று பகைமையான வர்க்கங்களாய்ப் பிரிய
முற்படுகிறது. இந்தச் சிதைவு நடந்தேறிய நிகழ்ச்சிப் போக்கினை Der Ursprung
der Familie, Des Privateigenthums und des Staats (குடும்பம்.
தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்) என்ற நூலில்
(இரணடாம் பதிப்பு. ஷ்டுட்கார்ட், 1886) நான் விவரித்துக்
காட்ட முயன்றிருக்கிறேன். (1888ம் ஆண்டு ஆங்கிலப்பதிப்புக்கு
எங்கெல்ஸ் குறிப்பு).
* கைவினைச் சங்க ஆண்டான் (guild-master),
அதாவது கைவினைச் சங்கத்தின் முழு உறுப்பினன், இச்சங்கத்துக்கு
உட்பட்டுள்ள ஆண்டான்; இதன் தலைவனல்ல. (188ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு).
சுதந்திரமுடையானும் அடிமையும். பட்ரீஷிய
உயர்குலச் சீமானும் பிலெபியப் பாமரக் குடியோனும், நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைச்
சங்க ஆண்டானும்* கைவினைப் பணியாளனும், சுருங்கக்கூறுமிடத்து
ஒடுக்குவோரும் ஓடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டோராய்,
ஒரு நேரம் மறைவாகவும், ஒருநேரம்
பகிரங்கமாகவும், இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப்
போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது
போராடும் வர்க்கங்களது பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று.
பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும்...
ஒட்டுமொத்தமாய்ப்
பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் உறவு என்ன?
கம்யூனிஸ்டுகள்
ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்கு எதிரான ஒரு தனிக் கட்சியாய் இருக்கவில்லை. அவர்கள் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்னியில் தனிப்பட்ட
நலன்கள் எவையும் இல்லாதவர்கள்,
பாட்டாளி
வர்க்க இயக்கத்தை வடிவமைக்க அவர்கள் தமக்கெனக் குறுங்குழுக் கோட்பாடுகள்
எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை,
ஏனைய
தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து கம்யூனி்ஸ்டுகளை வேறுபடுத்திக் காட்டுகிறவை பின்வருவன மட்டும் தான்:
1. வெவ்வேறு நாடுகளிலும் தேச அளவில் பாட்டாளிகள்
நடத்தும் போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்து பாட்டாளி
வர்க்கம் அனைத்துக்கும் உரித்தான பொது நலன்களைச் சுட்டிக்காட்டி முன்னிலைக்குக் கொண்டு வருகிறார்கள்,
2. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி
வர்க்கப் போராட்டம் கடந்து செல்ல வேண்டியிருக்கும்
வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும்
எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்,
ஆகவே, நடைமுறையில் கம்யூனிஸ்டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி
வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய, மிகவும் வைராக்கியமான பகுதியாய், ஏனைய எல்லோரையும்
முன்னோக்கி உந்தித்தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள்: தத்துவார்த்தத்தில்
அவர்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழி நடப்பையும் நிலைமைகளையும் பொதுவான இறுதி
விளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தை,..>>>>>>>>>>
No comments:
Post a Comment