தமிழ்நாட்டின் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள் வருமாறு:
- பொதுப்பதையில் நடக்க முடியாமை.
- செருப்பு, போட்டு நடக்க முடியாமை.
- சைக்கிளில் செல்ல முடியாமை.
- தோளில் துண்டு போட முடியாமை.
- வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாமை.
- பாலிஸ்டர் வேட்ட கட்ட முடியாமை.
- தலைமையில் தலைப்பாகை கட்ட முடியாமை
- முகத்தில் அரும்பு மீசை வைக்க முடியாமை.
- துணிகள் இஸ்திரி செய்து கொடுக்காமை.
- துணிகள் சலவைச் செய்து கொடுக்காமை.
- சில சலவை நிலையங்களில் தலித்துகளுக்கு தனி அலமாரி (இரட்டை அலமாரி)
- சலூன்களில் முடிவெட்ட முடியாமை.
- சில சலூன்களில் தலித்துகளுக்கு தனியான சேர் (இரட்டை சேர்)
- தேநீர் கடைகளில் இரட்டை குவளை.
- உணவகங்களில் தலித்துக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
- சில கிராமங்களில் தலித் உட்பிரிவு வாரியாக 4 குவளைகள்
- தேநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை
- தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது
- தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது
- தாகத்தால் தண்ணீர் கேட்கும் தலித்துகளுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்தி குடிக்க வைப்பது
- பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாமை
- சில கிராமங்களில் தண்ணீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்குவது
- திருவிழா காலத்தில் தலித்துக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது.
- கிராமங்களில் தலித் அதிகாரிகள் தலைமை தாங்கும் விழாக்கள் புறக்கணிப்பு.
- குளங்களில் குளிக்க முடியாமை.
- சில குளங்களில் தலித்துகளுக்கு தனிப் படித்துறை
- ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு
- திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது
- ஆலய மண்டகப்படி தலித்துகளுக்கு கிடையாது
- ஆயலங்களில் தலித்துகளின் தாம்பூலத்தை தண்ணீர் தெளித்து எடுப்பது
- ஆலயங்களில் தலித்துகளுக்கு வழிபட தனியான இடம் (கிறித்துவ தேவாலயங்களிலும் கூட)
- பொது மயான உரிமை இல்லை.
- பொது மயானத்தில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு.
- தலித்துகளுக்கு எனத் தனி மயானம்.
- தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு.
- கிராமப் பஞ்சாயத்து தொலைக்காட்சிகளை தலித்துக்கள் பார்க்கக் கூடாது.
- தலித்துகளுக்கு தனியான ரேஷன் கடைகள்.
- தலித்துக்கள் ஆடு, மாடு வளர்க்கக் கூடாது.
- பொது ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு சில நாட்கள் மட்டும் ஒதுக்குவது
- கிராம பொது மேடைகளில் தலித்துக்கள் பேச, பாட முடியாது.
- சில கிராமங்களில் தபால்காரர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு தபால் கொடுப்பதில்லை (சொல்லியனுப்பினால் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்)
- சில கிராமங்களில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது.
- கோவில் திருவிழாக் காலங்களில் ஆதிக்க சக்திகளுக்கு (பழைய ஆண்டைகளில் வாரிசுகள்) தலித்துகள் ஆடுகள் இலவசமாகக் கொடுப்பது.
- கோவில் திருவிழா காலத்தில் கையில் காப்பு கட்டிய பிறகு தலித்துக்கள் முகத்தில் முழிக்கக் கூடாது.
- செத்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கட்டாயப்படுத்துவது.
- மயான வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது.
- பறையடிக்குமாறு கட்டாயப்படுத்துவது.
- பேருந்து நிறுத்த நிழற்குடையில் தலித்துக்கள் உட்கார முடியாது.
- மரணம் நேர்ந்தாலும் அக்குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் சொல்லிக் கட்டாயப்படுத்துவது (பஸ் கட்டணம் மட்டும் தருவார்கள் - உணவு கொடுத்தால் தான் சாப்பிட முடியும்)
- ஆதிக்க சக்திகளின் குடும்பத்திற்கு இலவசமாக உடலுறுப்புக் கொடுப்பது (மனம் இருந்தால் உடனடி கிடைக்கும்).
- திருமணங்களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது.
- தனியார் திருமண மண்படங்களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள்.
- வசித படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது.
- கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான்.
- பெயர்களில் மரியாதையானப் பகுதியை வெட்டி விடுவது (மாடகாரியை மாடர், முனியசாமி முலியர்)
- மலம் சுமக்க கட்டாயப்படுத்துவது.
- பள்ளிக் கூடங்களில் தலித் (அருந்ததியர்) மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது.
- வயதான பெரியவர்களையும் ஆதிக்க சாதி சிறுவர்கள் பெயர் சொல்லியும், வாடா, போடா என்றும் அழைப்பது.
- தனியார் கல்லூரிகளில் தலித்துக்களை நிர்வாகப் பிரிவில் நியமனம் செய்ய மாட்டார்கள்.
- சில பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
- தலித் குடியிருப்புகளிலிருந்து பொதுத் தெருவுக்கு செல்ல முடியாமல் தடுப்புச் சுவர் கட்டுவது (உத்தபுரம் சுவர் 600 மீட்டர்).
- கிராமங்களில் - சில நகரங்களில் பொதுத்தெருவிலிருந்து தலித் தெருவிற்கு நுழைய முடியாதபடி சுவர்கள் கட்டப்பட்டிருப்பது (வளைவு) இதர ஜாதி தெருக்களில் இப்படி வளைவு இருக்காது.
- அரசாங்கமே துப்புறவுப் பணியாளர்களாக தலித் (அருந்தியர்களை) மட்டுமே நியமனம் செய்வது.
- அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு காட்டுப்படு தீண்டாமை - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள்.
- கூலி வேலை செய்யும் தலித்துக்கள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும்.
- தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது.
- பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது (தூத்துக்குடி மாவட்டம்).
- பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர்.
- தலித்துகளின் ஊராட்சிகளை போதுமான நிதி ஒதுக்காமல் அரசு நிர்வாகமே புறக்கணிப்பது.
- தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்பட விடாமல் தடுப்பது.
- கிராமப் பொதுச் சொத்தில் தலித்துக்களுக்கு பங்கு கிடையாது.
No comments:
Post a Comment