தொழிலாளி
வர்க்கமானது மொழியை அடிப்படையாகக் கொண்ட தேசிய அறைகூவல்கள் தன்னை மிதமிஞ்சி
ஆட்கொள்ளப்படுவதற்கு அனுமதிக் காமல், தன்னுடைய வர்க்க ஒற்றுமையை தொடர்ந்து காப்பாற்றுமானால் அது
ஜனநாயக கருத்திற்கு வடிவம் கொடுப்பதற்கும், சீர்குலைவு சக்திகளின் சவாலைச் சந்திப்பதற்குமான ஒரு
நிலையில் இருக்கும்.
அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கமும் அதனுடைய கட்சியும்
சாதகமான நிலைமைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்பதும் உணரப்பட வேண்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமை, தேசிய ஒற்றுமை
என்ற பாரம்பரியம் மக்களின் மனதில் இன்னும் பலமாக இருக்கின்றது.
தொழிலாளி வர்க்கம் தேசிய ஒற்றுமைக்கான தேவையையும் அனைத்து
தேசிய இனங்களுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கையையும் இணைக்க வேண்டும். தேசிய
ஒற்றுமை உணர்வை ஆளும் வர்க்கங்களும் ஸ்தலத்திலுள்ள குறுகிய தேசிய வெறியர்களும்
ஒவ்வொரு நாளும் அதிரித்துக் கொண்டிருந்த போதிலும் அந்த உணர்வைத் தகர்ப்பதில் ஆ
ளும் வர்க்கம் வெற்றியடையவில்லை.
No comments:
Post a Comment