ஒட்டுமொத்த உலக மக்களும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் இது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது, வாழ்க்கை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்ட கோணத்தில் எடுத்துக் கொண்டு வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த உலகமும் எந்த பிரச்சனையை சந்திக்க இருக்கிறது என்றால் அது உணவு பற்றாக்குறை என்ற மிகப் பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கும். அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் எளிதில் எல்லோருக்கும் கிடைக்கபோவதில்லை என்ற நெருக்கடிக்குள் எல்லோரும் சிக்க இருக்கிறோம். உணவிற்காக மிகப்பெரிய அடிதடி மனித இனத்துக்குள் வர இருக்கிறது.
No comments:
Post a Comment