நிலமும், வளமும், கல்வியும், அதிகாரமும் என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்கிறதோ அன்றுதான் சமத்துவம் முழுமை பெறும்.
நிலம்......பொருளாதாரம் கொடுக்கக் கூடியது மட்டுமல்ல. அது அங்கீகாரத்தை உறுதிபடுத்தும் கருவி. ஆகையால்தான் துளி மண் ஆயினும் சுதந்திரம் வேண்டும் என்கிற கோட்பாட்டினை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
நிலத்தை ஆதிக்கம் செய்த மிராசுதாரர்கள், நிலக்கிழார்கள், அம்பலக் காரர்கள் சாதிய ஆதிக்கத்தையும் தூக்கிப்பிடித்தனர்.
நிலத்தை உழுதவர்கள், பாதுகாத்தவர்கள் "கூறுகள்" என்றும் "அடிமைகள்" என்றும் "சாதிய வரலாறு" அடையாளப்படுத்துகிறது.....புத்தகத்தில் படித்தது......
நமது இந்தியா என்று வருகையில் பன்முக சாதியப் பிரிவுகளால் மக்கள் பிரி்க்கப்பட்டு, அந்தப் பரிவினையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு பெருவாரியான மக்களை இப்படித்தான் இந்த சமூகக் கட்டமைப்பு இதை மாற்ற இயலாது என்ற வரையறைக்குள் கொண்டு வந்துள்ளது இந்திய முதலாளியம். இன்றைய சமுதாயம் மற்றும் புற சூழல்கள் ஏதோ சாதியம் இல்லாததைப் போன்ற தோற்றத்தை உருவாக்கினாலும், பெருவாரியான இந்தியக் கிராமங்கள் சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் (அதாவது வலுக்கட்டாயமாக) சாதியத்தை நிலை நிறுத்தும் அங்கங்களாகவே செயல்பட்டு வருகிறது என்றுதான் கூறவேண்டும்.
No comments:
Post a Comment