குடு்ம்பம்
குடும்பத்திற்கு ஆண் தலைவர்
பெண் வீட்டு வேலைகளும் மகப்பேறு தொடர்பான அனைத்திற்கும்
பொறுப்பு. மரபுரீதியாக எழுதப்படாத சட்டமாக பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தி வந்திருப்பதோடு, தலைமுறை தலைமுறையாக இக்கருத்துக்களைப்
பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லுகிற வலிமையான ஊடகமாகவும் குடும்பம் திகழ்கிறது.
இக் குடும்ப அமைப்பு தனிச் சொத்துரிமையின் பாதுகாவல் பொறுப்பையும்
நிறைவேற்றி வந்துள்ளது.
தொடக்கால மனிதர்கள், குலங்கள், குலக் குழுக்கள், கணங்கள், இவ்வமைப்புகளினூடாக நிலவிய குடும்ப உறவுகள், குழு மணங்கள், குலங்களுக்கிடையிலான உறவுகளும் போர்களும்
தனிச்சொத்தின் உதயம், குலங்களுக்கிடையிலான சண்டைகள், அரசு என்ற புதிய சமுதாய அமைப்பின் தோற்றம் வரை நெடிது பயணித்த ஓர் ஆழமான
ஆய்வைக் கொண்டது, எங்கெல்சின் குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் வரிகள்.
No comments:
Post a Comment