மார்க்ஸ் யார்?
தத்துவ ஞானி, பொருளாதார மேதை, அரசியல் சித்தாந்த அறிஞர், சமூகவியல் நிபுணர், வரலாற்று விஞ்ஞானி, விஞ்ஞான ஆய்வாளர், மொழி இயல் வல்லுநர், இலக்கிய விமர்சகர், பத்திரிக்கையாளர், பிரச்சாரகர், அமைப்பாளர், அனைத்துக்கும் மேலாக மகத்தான புரட்சிக்காரர்!
அவர்தான் மாமேதை கார்ல் மார்க்ஸ்!
அது மட்டுமல்ல! புராணக்கதைகளில் கூட காணமுடியாத அளவுக்குத் தன் மனைவிக்கு சிறந்த காதல் கணவராகவும், குழந்தைக்குச் சிறந்த தந்தையாகவும், நண்பர்களுக்கு அருமையான தோழராகவும் விளங்கிய அன்பு மனிதர்தான் கார்ல் மார்க்ஸ்!
மார்க்ஸ், எங்கெல்சை (" As Engels teacher us ...." Capital Volume1 Page 568) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலும் எங்கெல்சைப் பற்றி நாம் குறிப்பிட வேண்டுமா? சமூக இயக்கத்தில் தத்துவங்கள் தோன்றுவதும் அழிவதும் இயல்பாய் நடக்கும் நிகழ்வே.ஆனால் உலக மக்கள் அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் தத்துவம் ஒன்று பிறந்தது. அது மனிதகுலம் உள்ளவரை அழியாத்தத்துவம். அது இதுவரை உள்ள சமூக இயக்கத்தை மேம்படுத்த உதவியது. வர்க்கங்களை அடையாளங் கண்டு உலகுக்கு காட்டியது. முதலாளி வர்க்கத்தை எச்சரித்தது. உரிமைகளை கேட்கக் கற்றுக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் கிடைக்கவில்லை என்றால் போராடி புரட்சியின் மூலம் அடையும் வழியையும் பாட்டாளி வர்க்கத்திற்கு வகுத்தளித்தது. அப்பட்டமான அரசை அம்பலப்படுத்தியது. முடிவில் மனிதம் நிலைத்து வாழ வழி வகுத்தது. அந்தத் தத்துவமே மார்க்ஸ், எங்கெல்ஸ் வகுத்தளித்த கம்யூனிசத் தத்துவமாகும்.
இவ்வளவு முறைமைகளையும் வகுத்தளித்த கம்யூனிசம் ஏதோ கண்ணாமூச்சி வித்தை அல்ல. அது வாழ்க்கையைப் பற்றிய அறிவியல். கால ஓட்டத்தால் அது செலுமையடையுமே தவிர அழியாது. அழிவும் கிடையாது. இது மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் பற்றிய சிறு செய்தி. மார்க்ஸ்ம், எங்கெல்ஸ்ம் சமூகத்தைப் பற்றிய ஆய்வு செய்த பரப்பு மிகப்பெரியது. அந்தப் பரப்பின் எல்லையைக் காட்டும் ஒரு சுற்றுகோடுதான் உங்களுக்காக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் நாம் மார்க்ஸ், எங்கெல்சின் கொள்கையைப் பற்றியும், மற்றும் அதை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்தி, உழைப்பாளிகளையும் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாத சமத்துவமான சமூகத்தை உருவாக்குவோமாக!
புரட்சி வாழ்க!!!!!
No comments:
Post a Comment