Monday, July 30, 2012

மார்க்சிய - லெனினிய தத்துவம் அறிவியல் நோக்குடைய தத்துவம்


அறிவியல் நோக்குடைய தத்துவம் பற்றி சிந்திக்கும்போதோ, அதன் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கும்போதோ இந்நாட்டில் மார்க்சிய - லெனினிய வளர்ச்சியைப் பற்றியே நாம் குறிப்பிடுகிறோம். நாட்டிற்கு வெளியேயிருந்து கிடைத்த அனுபவத்தினால் மட்டும் எந்தவொரு தத்துவமும் வளர்ச்சியடைவதில்லை என்பதை நாம் முதலாவதாக உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு தத்துவமானது வளர்ச்சியடைய வேண்டுமானால், அது புரட்சிகர இயக்கத்தின் உடனடித் தேவைகளுக்கும் பயன்படக் கூடியதாக, மக்களின் உண்மையான போராட்டங்களோடு ஒன்றுபட்டதாக இருக்க வேண்டும். இவ்வகையில் ஒரு தத்துவமானது மக்களின் போராட்டத்திற்கான ஒரு கருவியாக அமைகிறது. அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்திலும் அப்புதிய தத்துவமானது வளர்ச்சியடைந்து கொண்டே போகிறது.
இரண்டாவதாக, ஒரு தத்துவமானது வெட்டவெளியில் இருந்து உருவாவதில்லை. மக்களில்லாமல், அத்தத்துவத்திற்காகப் போராடக்கூடிய வர்க்கங்களில்லாமல், அத்தத்துவத்திறகாகத் தங்களது உயிரையும் தியாகம் செய்யக்கூடிய மக்களில்லாமல், அத்தத்துவத்திற்கேற்ற வகையில் செயல்படத் தயாரான மக்கள் இல்லாமல், எந்தவொரு தத்துவத்திற்கும் எதிர்காலம் என்பதே இல்லை.
எனவே, மார்க்சிய - லெனினிய தத்தவத்தின் வளர்ச்சியைப் பற்றி அல்லது அறிவியல் நோக்கிலான தத்துவத்தின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்கும்போது, இந்தியச் சூழ்நிலையில் அத்தத்துவத்தின் பொருள் என்ன என்பதை முதலாவதாக உணர்ந்து கொள்ள வேண்டும்.....
நமது நாடு இப்போது மிகவும் மோசமான நிலையை சந்தித்து வருகிறது. கடந்த 65 ஆண்டுகால சுதந்திரத்தில் நமது மக்கள் வறுமையையும், துயரத்தையும் மட்டும் எதிர் நோக்கவில்லை. நமது நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாடும் கூட அபாயத்திற்கு ஆளாகியுள்ளன. நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், மார்க்சிய - லெனினிய தத்துவத்தின் உதவியை நாடுவது அவசியம் ஆகும். மார்க்சிய - லெனினிய தத்துவத்தை ஒதுக்கித் தள்ளிய சக்திகளும், அரசியல் கட்சிகளும் நாட்டின் பிரச்சனைகளை சரியான முறையில் கையாளத் தாங்கள் தகுதி அற்றவை என்பதை நிரூபித்துவிட்டதோடு, இந்திய அரசியலையும் குழப்பியுள்ளன. அதே போன்று மார்க்சிய - லெனினிய தத்துவத்திலிருந்து வேறுபட்ட பல்வேறு வகையான சோசலிஸ்ட் கோஷ்டிகளும் நாட்டிற்கு அழிவிற்கு மேல் அழிவு செய்துள்ளன.
இன்றைய சூழ்நிலைக்குத் தீர்வு தேடுகின்ற, நமது நாட்டின் சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை பாதுகாக்க விரும்புகின்ற அனைவரும் மார்க்சிய - லெனினிய தத்துவத்தையே சார்ந்திருக்க வேண்டும். அத்தத்துவத்தின் மூலம் தற்கால நிலைமையின் பிரச்சனைகளையும், ஜனநாயகப் புரட்சியை, மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்சனைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
உலகத்தையே மாற்றியமைக்கும் இத்தத்துவத்தை இன்றைய இளைய தலைமுறை விரும்பியேற்கும் என்று நான் விரும்புகிறேன்.
(வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு - 1987) 

Wednesday, July 25, 2012

முதலாளித்துவத்தின் உண்மையான முகம்

உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறி்ஞ்சி மேலும் தன்னை வலுப்படுத்திக் கொண்டு‍ முழு‍ வீரியத்துடன் மீண்டும் மீண்டும் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டக் கூடியது‍ முதலாளித்துவம். 

குடும்பம், தனிச்சொத்து, அரசு - எங்கெல்ஸ்


குடு்ம்பம்
குடும்பத்திற்கு‍ ஆண் தலைவர்
பெண் வீட்டு‍ வேலைகளும் மகப்பேறு‍ தொடர்பான அனைத்திற்கும் பொறுப்‌பு. மரபுரீதியாக எழுதப்படாத சட்டமாக பாலினப் பாகுபாட்டை நிலைநிறுத்தி வந்திருப்பதோடு, தலைமுறை தலைமுறையாக இக்கருத்துக்களைப் பின்வரும் சந்ததியினருக்கு‍ எடுத்துச் செல்லுகிற வலிமையான ஊடகமாகவும் குடும்பம் திகழ்கிறது.
இக் குடும்ப அமைப்பு தனிச் சொத்துரிமையின் பாதுகாவல் பொறுப்பையும் நிறைவேற்றி வந்துள்ளது.
தொடக்கால மனிதர்கள், குலங்கள், குலக் குழுக்கள், கணங்கள், இவ்வமைப்புகளினூடாக நிலவிய குடும்ப உறவுகள், குழு‍ மணங்கள், குலங்களுக்கிடையிலான உறவுகளும் போர்களும் தனிச்சொத்தின் உதயம், குலங்களுக்கிடையிலான சண்டைகள், அரசு‍ என்ற புதிய சமுதாய அமைப்பின் தோற்றம் வரை நெடிது‍ பயணித்த ஓர் ஆழமான ஆய்வைக் கொண்டது‍, எங்கெல்சின் குடும்பம்,தனிச்சொத்து,அரசு‍ ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலின் வரிகள்.

மனித இனம் சந்திக்க இருக்கும் பிரச்சனை

ஒட்டுமொத்த உலக மக்களும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் இது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது, வாழ்க்கை என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்ட கோணத்தில்  எடுத்துக் கொண்டு வாழ்க்கையை பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த உலகமும் எந்த பிரச்சனையை சந்திக்க இருக்கிறது என்றால் அது‍ உணவு பற்றாக்குறை என்ற மிகப் பெரிய பிரச்சனையாகத்தான் இருக்கும். அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் எளிதில் எல்லோருக்கும் கிடைக்கபோவதில்லை என்ற நெருக்கடிக்குள் எல்லோரும் சிக்க இருக்கிறோம்.  உணவிற்காக மிகப்பெரிய அடிதடி மனித இனத்துக்குள் வர இருக்கிறது. 

"சமத்துவம்"


நிலமும், வளமும், கல்வியும், அதிகாரமும்  என்று‍ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு‍ம் கிடைக்கிறதோ அன்றுதான் சமத்துவம் முழுமை பெறும்.
           
நிலம்......பொருளாதாரம் கொடுக்கக் கூடியது‍ மட்டுமல்ல. அது‍ அங்கீகாரத்தை உறுதிபடுத்தும் கருவி. ஆகையால்தான் துளி மண் ஆயினும் சுதந்திரம் வேண்டும் என்கிற கோட்பாட்டினை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
           
நிலத்தை ஆதிக்கம் செய்த மிராசுதாரர்கள், நிலக்கிழார்கள், அம்பலக் காரர்கள் சாதிய ஆதிக்கத்தையும் தூக்கிப்பிடித்தனர்.
           
நிலத்தை உழுதவர்கள், பாதுகாத்தவர்கள் "கூறுகள்" என்றும் "அடிமைகள்" என்றும் "சாதிய வரலாறு‍" அடையாளப்படுத்துகிறது.....புத்தகத்தில் படித்தது......

நமது‍ இந்தியா என்று‍ வருகையில் பன்முக சாதியப் பிரிவுகளால் மக்கள் பிரி்க்கப்பட்டு‍, அந்தப் பரிவினையை தனக்கு‍ச் சாதகமாக மாற்றிக் கொண்டு‍ பெருவாரியான மக்களை இப்படித்தான் இந்த சமூகக் கட்டமைப்பு இதை மாற்ற இயலாது‍ என்ற வரையறைக்குள் கொண்டு‍ வந்துள்ளது‍ இந்திய முதலாளியம்.  இன்றைய சமுதாயம் மற்றும் புற சூழல்கள் ஏதோ சாதியம் இல்லாததைப் போன்ற தோற்றத்தை உருவாக்கினாலும், பெருவாரியான இந்தியக் கிராமங்கள்  சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் (அதாவது‍ வலுக்கட்டாயமாக) சாதியத்தை நிலை நிறுத்தும் அங்கங்களாகவே செயல்பட்டு‍ வருகிறது‍ என்றுதான் கூறவேண்டும்.  
                                             

புரட்சி வாழ்க!

மார்க்ஸ் யார்?
தத்துவ ஞானி, பொருளாதார மேதை, அரசியல் சித்தாந்த அறிஞர், சமூகவியல் நிபுணர், வரலாற்று விஞ்ஞானி, விஞ்ஞான ஆய்வாளர், மொழி இயல் வல்லுநர், இலக்கிய விமர்சகர், பத்திரிக்கையாளர், பிரச்சாரகர், அமைப்பாளர், அனைத்துக்கும் மேலாக மகத்தான புரட்சிக்காரர்!
அவர்தான் மாமேதை கார்ல் மார்க்ஸ்!
அது மட்டுமல்ல! புராணக்கதைகளில் கூட காணமுடியாத அளவுக்குத் தன் மனைவிக்கு  சிறந்த காதல் கணவராகவும், குழந்தைக்குச் சிறந்த தந்தையாகவும், நண்பர்களுக்கு அருமையான தோழராகவும் விளங்கிய அன்பு மனிதர்தான் கார்ல் மார்க்ஸ்!
மார்க்ஸ், எங்கெல்சை (" As Engels teacher us ...." Capital Volume1 Page 568) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேலும் எங்கெல்சைப் பற்றி நாம் குறிப்பிட வேண்டுமா? சமூக இயக்கத்தில் தத்துவங்கள் தோன்றுவதும் அழிவதும் இயல்பாய் நடக்கும் நிகழ்வே.ஆனால் உலக மக்கள் அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் தத்துவம் ஒன்று பிறந்தது. அது மனிதகுலம் உள்ளவரை அழியாத்தத்துவம். அது இதுவரை உள்ள சமூக இயக்கத்தை மேம்படுத்த உதவியது. வர்க்கங்களை அடையாளங் கண்டு உலகுக்கு காட்டியது. முதலாளி வர்க்கத்தை எச்சரித்தது. உரிமைகளை கேட்கக் கற்றுக் கொடுத்தது. அது மட்டுமல்லாமல் கிடைக்கவில்லை என்றால் போராடி புரட்சியின் மூலம் அடையும் வழியையும் பாட்டாளி வர்க்கத்திற்கு வகுத்தளித்தது. அப்பட்டமான   அரசை அம்பலப்படுத்தியது. முடிவில் மனிதம் நிலைத்து வாழ வழி வகுத்தது. அந்தத் தத்துவமே மார்க்ஸ், எங்கெல்ஸ் வகுத்தளித்த கம்யூனிசத் தத்துவமாகும்.
இவ்வளவு முறைமைகளையும் வகுத்தளித்த கம்யூனிசம் ஏதோ கண்ணாமூச்சி வித்தை அல்ல. அது வாழ்க்கையைப் பற்றிய அறிவியல். கால ஓட்டத்தால் அது செலுமையடையுமே தவிர அழியாது. அழிவும் கிடையாது. இது மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் பற்றிய சிறு செய்தி. மார்க்ஸ்ம், எங்கெல்ஸ்ம் சமூகத்தைப் பற்றிய ஆய்வு செய்த பரப்பு மிகப்பெரியது. அந்தப் பரப்பின் எல்லையைக் காட்டும் ஒரு சுற்றுகோடுதான்  உங்களுக்காக மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் நாம் மார்க்ஸ், எங்கெல்சின் கொள்கையைப் பற்றியும், மற்றும் அதை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்தி, உழைப்பாளிகளையும் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாத சமத்துவமான சமூகத்தை உருவாக்குவோமாக! 


புரட்சி வாழ்க!!!!! 


மனிதன் தான் வரலாற்றைப் படைக்கிறான்.

மனிதன் இன்று தான் செய்யும் செயல்கள் தான் நாளைய வரலாறு. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் வரலாற்றில் இடம் பிடிப்பது எந்த வகையான செயல்கள்  என்று பார்ப்போம்.   
மக்களின் செயலை ஏதாவது ஒரு வழியில் தூண்டுவது எது ?
அது மாபெரும் தலைவர்களுடைய மன உறுதியின் விளைவா அல்லது அவர்களுடைய சிந்தனையில் தோன்றிய மேன்மையான கருத்துக்களின் விளைவா? 
அறிஞர்கள் ஒரு நாட்டை ஆட்சி செய்தால் மட்டுமே அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இருப்பார்கள் என்று ஒரு காலத்தில் பலர் நினைத்ததுண்டு. 
ஆனால் வரலாற்று எதார்த்தம் இதை நிராகரித்தது.தாங்கள் பங்கெடுக்கின்ற போராட்டங்களின் மூலம் தங்களுக்கு இத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை அறிந்தால் மட்டுமே பெருந்திரளான மக்கள்,சமூகத்தை மாற்றுகின்ற இயக்கங்களில் தீவிரமாகப் பங்கெடுப்பார்கள். மிகவும் சிறப்பான கருத்துக்கள் கூட போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒரு நபரை தூண்ட முடியாது; அதற்கு அப்போராட்டத்தின் மூலம் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.     ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட நோக்கங்களுக்குப் பாடுபடுகிறார் என்றாலும் பெரிய சமூகக் குழுக்கள் பொதுவான அக்கரைகளைக் கொடிருக்கின்றன;ஏனென்றால் அக்குழுக்களில் உள்ள தனிநபர்கள் சமூகத்தில் ஒரே இடத்தை வகிக்கிறார்கள், உதாரணமாக, முதலாளித்துவ சமூகத்தில் எல்லாத் தொழிலாளர்களும்  பொதுவான அக்கரைகளைக் கொண்டிருக்கிறார்கள்;ஏனென்றால் அவர்களில் எவரும் எந்த உற்பத்திச் சாதனங்களையும் உடைமையாகக் கொண்டிருக்கவில்லை. ஆகவே அவர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு முதலாளியிடம் உழைத்து வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு கூலியைக் கொடுத்துவிட்டு  முதலாளிகள் லாபத்தை அடைகிறார்கள். விவசாயிகளுக்கும் இது பொருந்தும். 
சமூக அமைப்பில் அவர்கள் வகிக்கின்ற இடத்தினால் அவர்களுடைய பொதுவான அக்கறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆகவே, வரலாற்று ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட சமூக உறவுகளின் அமைப்பில் தாங்கள் வகிக்கின்ற இடத்தினால் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்ற பெரிய மக்கட் குழுக்கள், வர்க்கங்கள் என்று சொல்லப்படுகின்றன. 
பொதுவான வர்க்க நலன்களுக்கான போராட்டமே மனித சமூகத்தின் நீண்ட வரலாற்றுக் காலத்தில் அதன் வளர்ச்சியை நிர்ணயித்திருக்கிறது. அதனால்தான் மார்க்சியத் தத்துவம் வர்க்கப் போராட்டமே வரலாற்றின் பிரதான இயக்கு சக்தி என்று முடிவு செய்திருக்கிறது. வரலாற்றின் அடிப்படையில் மனிதன் முழு மனிதனாக மாறியதற்கு உழைப்புதான் காரணம் என்று நம் தலைவர் கார்ல் மார்க்ஸ் சொல்லி இருக்கிறார். அந்த உழைப்பினால்தான் வரலாற்றையும் படைக்கிறான் மனிதன்.