Monday, June 17, 2013

Lenin and the Indian independence (லெனினும் இந்திய விடுதலையும்)

லெனினும் இந்திய விடுதலையும்

ஜூலை 1, 1905 அன்று இந்தியன் ஒப்பீனியன் ஏட்டில் காந்தி இப்படி எழுதினார். ‘ரஷ்ய மக்கள் வெற்றி பெற்றால், ரஷ்யாவில் இந்தப் புரட்சியானது இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வாகக் கருதப்படும். நாங்களும்கூட கொடுங்கோன்மைக்கு எதிராக ரஷ்யாவின் பாதையைப் பின்பற்றலாம்.’ புரட்சி வெற்றிபெற்ற பிறகு, 1928ல் காந்தி இவ்வாறு எழுதினார். ‘போல்ஷ்விக் பதாகைக்குப் பின்னர் எண்ணற்ற ஆண்கள் மற்றும் பெண்களின் தூய்மையான தியாகம் உள்ளது என்ற உண்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர்கள் தங்கள் லட்சியத்துக்காக அனைத்தையும் இழந்தார்கள். லெனின் போன்ற இத்தகைய உயர்ந்த ஆத்மாக்களின் தியாகத்தினால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் வீணாகாது.’
1917 ரஷ்யப் புரட்சி இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷி எழுதிய லெனினும் இந்திய விடுதலையும் என்னும் நூல் இந்தப் பணியைச் சீராகத் தொடங்கிவைத்தது.
ரஷ்யப் புரட்சியைக் கண்டு பிரிட்டிஷ் இந்தியா சினமும் அச்சமும் கொண்டிருந்த காலகட்டம் அது. அவ்வாறு அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்பது காந்தியின் கருத்து. போல்ஷ்விக் புரட்சியை அவர் அபாயம் என்று கருதவில்லை. யங் இந்தியாவில் 1920ல் காந்தி எழுதியது.‘போல்ஷ்விக் அபாயம் என்பதை நான் ஒருபோதும் நம்பியதில்லை. ரஷ்ய போல்ஷ்விக் அபாயம் அல்லது வேறு எந்தவொரு அபாயம் குறித்து இந்திய அரசாங்கம் ஏன் பயன்படவேண்டும்?’
ஆனால், பிரிட்டிஷ் இந்தியா நிம்மதியின்றி தவித்துக்கொண்டிருந்தது. ரஷ்யர்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியர்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியை இங்கே அரங்கேற்றமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? லெனினையும் அவரது போல்ஷ்விக் கட்சியையும் முன்னுதாரணமாகக் கொள்ளமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஜார் அரசுக்கு ஏற்பட்டது பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?
ஓர் உபாயத்தைக் கையாண்டது பிரிட்டன். போல்ஷ்விக் புரட்சி பற்றியும் குறிப்பாக லெனின் பற்றியும் செய்திகள் எதுவும் பரவாதபடி தடை செய்தது. ரஷ்யாவிலிருந்து ஆவணங்கள் கொண்டு வருவது தடை செய்யப்பட்டது. கிடைத்தவையெல்லாம் எதிர்மறையான செய்திகள்தாம். லெனினின் சர்வாதிகாரம் பற்றிய, போல்ஷ்விக்குகளின் வன்முறை செயல்பாடுகள் பற்றிய செய்திகளே பிரிட்டனால் வரலாறு என்னும் போர்வையில் பரப்பப்பட்டன. கம்யூனிசம் மனித குலத்துக்கு விரோதமான ஒரு தத்துவம் என்பது தீவிரமாக வாதிடப்பட்டது. கம்யூனிசத்தைப் பின்பற்றுவது அல்ல, அவ்வாறு நினைப்பதும்கூட சமூக விரோதமான செயல் என்று அறிவுறுத்தப்பட்டது. லெனின் ஒரு கொடூரமான கொலைகாரன் என்றும், ரத்தக் காட்டேரி என்றும் மண்டையோட்டு மாலை போட்டுக்கொண்டு வலம் வருபவர் என்றும் குறிப்பிடப்பட்டது.
ஆனால், அனைத்து தடைகளையும் மீறி, ஆங்கிலேயர்களின் கட்டுக்கதைகளை உடைத்து, லெனினை இந்தியர்கள் தரிசித்தார்கள். நேரு, காந்தி, திலகர் போன்ற இந்திய தேசியவாதத் தலைவர்களையும் இந்திய மக்களையும் போல்ஷ்விக் தத்துவம் ஒருசேரப் பற்றிக்கொண்டது. உண்மையில், போல்ஷ்விக்குகள் பற்றிய பிரிட்டனின் தவறான பிரசாரமே, பல மக்களை லெனினை நோக்கித் திருப்பியது என்றும் சொல்லலாம். அப்படி என்ன ஆபத்தான சித்தாந்தம் என்னும் ஆர்வக் குறுகுறுப்புடன் பலர் சோவியத் நோக்கி நகரத் தொடங்கினர்.
இது குறித்து எஸ்.ஏ. டாங்கே இவ்வாறு எழுதுகிறார். ‘போல்ஷ்வியம் என்பது ரஷ்யாவின் தலைவன் ஆனபின், அனைத்து நாடுகளையும் சேர்ந்த அரசாங்கங்களும் அதை பேய்த்தனமானது, அட்டூழியமானது மற்றும் சர்வாதிகாரமானது என்று சித்தரித்து மக்களின் சிந்தனையில் அவை குறித்து அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் செயல்பாடு என்று லேசான சாயல் உள்ள ஒவ்வொரு முயற்சியும் ஒடுக்கப்படுகிறது என்பதுடன் எந்தவொரு நாட்டிலுமுள்ள மக்களுடன் தொடர்பு கொள்வதில் இருந்தும் மக்கள் துண்டிக்கப்படுகிறார்கள்…போல்ஷ்விக்குகளின் உறுதியான சர்வதேச கொள்கையில் இதற்கான காரணம் பொதிந்துள்ளது.’
அந்தக் கொள்கை இதுதான். அடிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காலனி நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் அவர்களுடைய தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சோவியத் ஆதரவு அளிக்கும் என்று லெனின் குறிப்பிட்டிருந்தார். மக்களை காலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து மீட்டெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் கடமை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
காந்தியின் அமைதி வழியிலான போராட்டம் இந்திய சுதந்தரத்தைப் பெற்றுத்தராது, ரஷ்யாவில் நடைபெற்றதைப் போன்ற புரட்சி மூலமே ஆங்கில ஆதிக்கத்தை உடைக்கமுடியும் என்னும் கருத்தாக்கம் உருபெற ஆரம்பித்தது. எஸ்.ஏ. டாங்கேயின் எழுத்துகளில் இந்த உண்மை காணக்கிடைக்கிறது.
‘ஒரே ஒரு பரிகாரம்தான் உள்ளது… அது இந்தியத் தொழிலாளரின் கரங்களில் உள்ளது. பயங்கரப் போக்கில் ஈடுபடும் ராணுவச் செயல்பாடுகளும், அவற்றின் வெற்றியும் சிப்பாய்களை ஒரு மையத்திலிருந்து மற்றொரு மையத்துக்கு வேகமாகக் கொண்டுசெல்வதிலும், ராணுவத்திற்கான உணவுப் பொருட்கள் வெடிபொருட்களை கொண்டுசெல்வதிலும் பிரதானமாகச் சார்ந்துள்ளன. இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளிகளால் செய்யப்படுகின்றன. முக்கியமான தருணத்தில் இந்தியத் தொழிலாளிகள் ஒட்டுமொத்தமாக வேலை செய்ய மறுத்தால், ரயில்வேத் தொழிலாளிகள், தந்தி ஊழியர்கள், கூலிகள் மற்றுமிதர வகைப்பட்ட தொழிலாளிகள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்தால், அதாவது சதிவேலை என்றழைக்கப்படுவதை ஏற்பாடு செய்தால் நம்முடைய வெற்றி நிச்சயம். அரசாங்க பயங்கரப் போக்கு என்பதன் முழுச் செயல்பாடும் முடக்கப்படும் என்பதுடன் அது பணிந்தே தீரவேண்டும்.’
மராத்தி மொழியில் லெனினின் முதல் வாழ்க்கை வரலாறு 1922ல் வெளியிடப்பட்டது. ‘நிகோலய் லெனின் : ரஷ்ய ஜனநாயகத்தின் நிறுவனருடைய வரலாறு’ என்னும் இந்நூலை எழுதியவர், ராம்கிருஷ்ண கோபால் பிடே என்பவர். ஏன் லெனினின் வாழ்க்கை வரலாறை அவர் எழுதத் துணிந்தார் என்பதற்கான காரணம் முன்னுரையில் காணப்படுகிறது.
‘அது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கொடிகட்டிப் பறந்த நாட்களாகும். இந்தியர்களாகிய நாங்கள் சுதந்தரத்திற்கான எங்களுடைய போராட்டத்திற்கான ஆதர்சனத்தைப் பெற தெரிந்த ஒவ்வொரு ஆதாரத்தையும் நாடினோம். லெனின் மற்றும் அவருடைய போல்ஷ்விக் ரஷ்யாவைவிட சிறந்த ஆதாரம் வேறென்ன இருக்கமுடியும்? ஆனால் அந்நாட்களில் இந்த ஆதாரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாது. எனவே புரிபடாமல் இருந்தது. அந்தக் காரணத்திற்காகவே அது எங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. லெனினுடையதானது ஒரு இணையற்ற தத்துவத்தோடு கூடிய புரட்சியின் ஒரு முற்றிலும் புதிய பரிசோதனை என்று நாங்கள் உணர்ந்தோம். அது நம்முடைய பண்டைக்கால தத்துவம் புகுந்திருந்த எங்களுடைய சிந்தனைக்கு ஒரு பெரும் ஈர்ப்பாக இருந்தது.’
லெனின் பற்றிய விவாதங்கள் இங்கே மும்முரமாக தொடங்கின. பால கங்காதர திலகர் நடத்திய கேசரி பத்திரிகை அலுவலகத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஆங்கில மாத ஏடுகள் இருந்தன என்றும் அலுவலக நூலகத்தில் சில புத்தகங்கள் இருந்தன என்றும் தெரியவருகிறது. (லெனினும் இந்திய விடுதலையும், பி.சி. ஜோஷி).
சம்ஹதி (ஒற்றுமை) என்னும் வங்கமொழிப் பத்திரிகை 1923ம் ஆண்டு ஜிதேன் குப்தா என்னும் ஏழை அச்சுத் தொழிலாளியால் தொடங்கப்பட்டது. தன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் கிடந்து துவள நேரிட்டபோதும்கூட கடைசி வரை பத்திரிகையை அவர் நடத்தி வந்தார். ரஷ்யப் புரட்சி குறித்து சம்ஹதி என்ன சொல்லியிருக்கிறது? ‘எவ்வாறாயினும் மேல்தட்டு வர்க்கங்கள் தாம் உலகில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தின. தற்பொழுது கீழ்மட்ட வர்க்கங்கள் விழித்துக்கொண்டுவிட்டன என்பதுடன் அவற்றை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது. இன்று பேய்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இந்தப் புதிய மகிழ்ச்சியானது மிக்க வேதனைகள் மூலம் வருகிறது. உருவாக்கத்திற்கு இத்தகைய வேதனைகள் தேவைப்படுகின்றன.’
ஜனவரி 30, 1925ல் முகம்மதி என்னும் இஸ்லாமிய ஏட்டிய வெளிவந்த கருத்து இது. ‘லெனின் ரஷ்யாவை மட்டும் விடுதலை செய்தார் என்று கூறுவது உண்மையைக் குறைத்துச் சொல்வதாகும். செயலற்றிருந்த மனித குலத்தை சுதந்தரப் பாடலுடன் ஒருவர் கிளர்ந்தெழச் செய்தானென்றால், லட்சோப லட்சம் மக்களுக்கு மகிழ்ச்சி என்று எதிர்பால ராஜ்யத்தின் கதவை ஒருவர் திறந்தானென்றால், துன்பதுயரமும், வறுமையும் நிறைந்த இவ்வுலகில் ஒருவர் சாந்தப்படுத்தும் அமிர்தத்தை விநியோகித்தாரென்றால் அவர்தான் லெனின்.’
இங்கு சிறு கலகம் ஏற்பட்டாலும், சிறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும் லெனினை நோக்கி கை நீட்டியது பிரிட்டிஷ் இந்தியா. காந்தியும்கூட லெனினின் சித்தாந்தத்தால் கவரப்பட்டுவிட்டார் என்றும் இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்றும் அவர்கள் குற்றச்சம்சாட்டினார்கள். ஸ்வராஜ்யா புனா, மராத்தி வார இதழில் மார்ச் 30, 1920 அன்று இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு வெளியானது. ‘இந்தியா மீது போல்ஷ்விக் திட்டங்கள் குறித்தும் போல்ஷ்விக்குகளுடன் திரு. காந்தியின் தொடர்புகள் குறித்தும் செய்திகள் எங்கும் பரவியுள்ளன. ஆனால், உண்மையில் இத்தகைய செய்திகள் அனைத்தும் தவறானவையாகும். போல்ஷ்விக் பிரசாரம் இல்லாமலேயே இந்தியாவில் அதிருப்தி நிலவுகிறது. நாட்டின் பொருளாதார திவால் நிலைமையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையும்தான் போல்ஷ்வியத்தை தோன்றச் செய்துள்ளது. இங்கிலாந்து அரசியல்வாதிகள் உலகம் முழுவதும் அதிகாரத்தைச் செலுத்த ஆசை கொண்டுள்ளனர். அவ்வாறிருக்கும்போது, ஏன் போல்ஷ்விக்குகள் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தப்படுகிறது?…நான்கு ஆண்டுகளுக்கு 90 கோடி ரூபாய்க்கு குறையாத பற்றாக்குறைக்கு பொறுப்பான நிர்வாக முறையின் விளைவுதானே போல்ஷ்வியமாக இருக்கமுடியும்?’
காங்கிரஸ் தலைமையேற்று நடத்திய தேசிய விடுதலைப் போராட்டம் ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் தன் திசைவழியை மாற்றிக்கொண்டது என்கிறது ஜூலை 26, 1922 அன்று வெளிவந்த ஆத்ம சுத்தி என்னும் இந்தி இதழ். ‘ஏழைகள் பிரச்சினை இதுவரை காங்கிரஸில் இடம்பெறவில்லை. காங்கிரஸ் கட்சியானது நடுத்தர வர்க்க மனிதர்களின் கரங்களில் உள்ளது. ஆங்கிலேயர் நாட்டைவிட்டுப் போகும்போது அதிகாரம் தங்கள் கரங்களில் வருமென்று அவர்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்களும் வர்த்தகர்களுமாவர். சுயராஜ்ஜியம் வரும்பொழுது அன்னியப் பொருள்களுக்கு வரி விதிப்பதன் மூலம் லாபம் பெற வர்த்தகர்கள் விரும்புகிறார்கள். வழக்கறிஞர்கள் அப்பொழுது உயர் பதவிகள் கிடைக்குமென்று கருதுகின்றர். எனவே, சாதாரண மக்கள் காங்கிரஸ் குறித்து அக்கறை காட்டவில்லை.’
காஸி இஸ்லாம் தூமகேது, டிசம்பர் 15, 1922 இதழில் இந்தக் கருத்தைத் தெளிவாக முன்வைக்கிறார். ‘ஒரு நாட்டின் சுதந்திரமானது, மக்களால் உதவிடப் பெறாத ஒரு சில படித்த மனிதர்களைக் கொண்டு மட்டும் அடையப் பெற்றுவிடாது என்ற மகத்தான உண்மை இயக்கத் தலைவர்களுக்குத் தோன்றவில்லை. துவக்கத்தில் நாம் செய்த தவறை இன்று நாம் கண்டுபிடித்து விட்டோம். அனைத்து அதிகாரங்களும் ஒரு சில படித்த தலைவர்களின் பிடியில் இருப்பது மட்டும் சுதந்திரமல்ல. சுய பாதுகாப்பிற்காக நமது நாட்டை நாம் பலப்படுத்த விரும்பினால் நாம் இதயபூர்வமாக ஆன்மாபூர்வமாக மக்களுடன் இணைத்துக்கொள்ளவேண்டும்.’
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல உலக மக்களுக்கும் லெனினும் ரஷ்யப் புரட்சியும் கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். மக்களிடம், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்திடம் ஒன்றுகலக்காமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல் எதிலும் எப்போதும் வெற்றிபெறமுடியாது.

About Workers : Karl Marx (தொழிலாளர்கள் பற்றி கார்ல் மார்க்ஸ்)

தொழிலாளர்கள் பற்றி கார்ல் மார்க்ஸ்


Karl-Marxதொழிலாளர்களின் இன்றைய நிலை என்ன? முன்பைவிட இப்போது அவர்களுடைய வாழ்நிலை உயர்ந்திருக்கிறதா? அவர்களுடைய பிரச்னைகள் குறைந்திருக்கின்றனவா? பணிச்சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையெனில் அவர்கள் என்ன செய்யவேண்டும்? ‘போராட வேண்டும்’ என்று பலரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் யாரை எதிர்த்து? எதை வேண்டி? எந்த லட்சியத்துடன்?
முதலில், தொழிலாளர்கள் எதற்காகப் போராட வேண்டும்? முதலாளிகள் அனுபவிக்கும் சுகங்களையும் செல்வத்தையும் தாம் அடைய வேண்டும் என்பதற்காகவா? உல்லாசமான கேளிக்கையான வாழ்வைப் பெறுவதற்காகவா? அல்ல என்கிறார் கார்ல் மார்க்ஸ். ’வர்க்கத் தனி உரிமைகளுக்கும் ஏகபோகங்களுக்கும் நடைபெறும் போராட்டம்’ அல்ல இது. ‘சமத்துவமான உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் எல்லா வகையான வர்க்க ஆதிக்கத்தை ஒழிப்பதற்கும் நடைபெறுகின்ற போராட்டமே’ தொழிலாளர்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டமாகும்.
அதற்கு முன்னால், ஒரு தொழிலாளர் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரவேண்டும் அல்லவா? அதற்கு, தன்னுடைய நிலை என்ன என்பதை ஒரு தொழிலாளர் புரிந்துகொள்ளவேண்டும். எது அடிமைத்தனம்? ‘உழைப்புச் சாதனங்களை அதாவது வாழ்க்கையின் ஆதாரங்களை ஏகபோகமாக வைத்திருப்பவரிடம் உழைக்கும் மனிதன் பொருளாதார ரீதியில் கீழ்ப்பட்டிருப்பது.’ சமூகத் துன்பத்துக்கும் அறியாமைக்கும் அரசியல் அடிமைத்தனத்துக்கும் அடியில் இருப்பது இதுவே என்கிறார்.
எனவே, தொழிலாளர்களின் பிரச்னை என்பது குறிப்பிட்டதொரு பிரதேசத்தின் பிரச்னையல்ல. இது உலகம் தழுவிய சமூகப் பிரச்னை. அந்த வகையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் பிரிவு பிற நாடுகளில் உள்ள தொழிலாளர் பிரிவினருடன் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தொழிலாளர் வர்க்கத்தினரிடையே சகோதரப் பிணைப்பு இருந்தால் மட்டுமே அடிமைத்தனத்துக்கு எதிராகப் போரிடுவது சாத்தியமாகும் என்கிறார் மார்க்ஸ். அதே சமயம் இவ்வாறு தொழிலாளர்கள் ஒன்றுபடுவது இதுவரை சாத்தியமாகாமல் இருப்பதற்குக் காரணம் தொழிலாளர்களேதான்; அவர்களிடைய ஒன்றுமை இல்லாததுதான் என்றும் சொல்கிறார் மார்க்ஸ்.
இந்தச் சவாலை எதிர்கொள்ள சர்சதேசத் தொழிலாளர் சங்கத்துக்குச் சில விதிமுறைகளை மார்க்ஸ் உருவாக்கினார். 1871ம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளிவந்த அந்தப் பிரசுரத்தில் காணப்படும் சில முக்கிய அம்சங்கள் கீழே.
  • பிரசுரத்தின் தொடக்க வாசகங்கள். ‘இதில் சேர்கின்ற எல்லாச் சங்கங்களும் மற்றும் தனி நபர்களும் தங்களுக்கிடையேயும் எல்லா மனிதர்களுக்கு இடையிலும் நிறம், மதம், தேசிய இன வேறுபாடுகளைக் கடந்து உண்மை, நீதி, அறநெறி ஆகியவற்றைத் தம் நடத்தையின் அடிப்படையாகக் கொள்வர்.’
  • கடமைகள் இல்லாமல் உரிமைகள் இல்லை. உரிமைகள் இல்லாமல் கடமைகள் இல்லை.
  • தொழிலாளர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அடிப்படையில் அவர்களுடைய லட்சியம் ஒன்றாக இருக்கவேண்டும். தொழிலாளி வர்க்கங்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் பரிபூரண விடுதலை.
  • ஒரு தொழிலாளர் மற்ற பிரதேசங்களிலும் மற்ற நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களைப் பற்றியும் அவர்களுடைய பிரச்னைகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதற்குச் சர்வதேசச் சங்கம் உதவிட வேண்டும்.
  • தொழிலாளர்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.  இந்த ஆய்வறிக்கைகளை வைத்துக்கொண்டு தொழிலாளர்களுடன் சங்கம் உரையாடவேண்டும். பொதுநலன் சார்ந்த பிரச்னைகளை அனைவரும் விவாதிக்கவேண்டும்.
  • சங்கத்தின் கிளைகள் ஒன்றிணைந்து ஒரு சர்வதேச அமைப்பாக ஒரே சமயத்தில் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
  • ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் கோட்பாடுகளை அங்கீகரித்து, அவற்றைக் காத்து நிற்கும் ஒவ்வொருவரும் இதன் உறுப்பினராகத் தகுதியுடையவர். ஒவ்வொரு கிளையும் அது சேர்த்துக்கொள்ளும் உறுப்பினர்களுடைய நேர்மைக்குப் பொறுப்புடையதாகும்.’
  • ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் ஒவ்வொரு உருப்பினரும் தன் குடியிருப்பை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு மாற்றிக் கொள்ளும்பொழுது அங்கேயுள்ள இணைக்கப்பட்ட சங்கத் தொழிலாளர்களுடைய சகோதர ஆதரவைப் பெறுவர்.’
தொழிற்சங்கங்களின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை மார்க்ஸ் வேறோரிடத்தில் குறிப்பிடுகிறார்.
  • தொழிலாளி வர்க்கத்தின் முழுமையான விடுதலையை மாபெரும் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.
  • தொழிலாளி வர்க்கத்தைத் திரட்டும் அமைப்பாகவும் உணர்வுடன் செயலாற்றும் மையமாகவும் திகழவேண்டும்.
  • இந்தத் திசையில் செல்ல விரும்பும் ஒவ்வொரு சமூக, அரசியல் இயக்கத்துக்கும் உதவிட வேண்டும்.
  • ‘அனைத்து தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவாளர்களாகவும் பிரதிநிதிகளாகவும் தம்மைக் கருதி அவ்விதமாகச் செயலாற்றும்பொழுது அவை, சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களைத் தங்கள் அணிகளில் சேர்க்குமாறு செய்யவேண்டும்.’
  • ‘மிகவும் மோசமான கூலி கொடுக்கப்படுகின்ற தொழில்களை, உதாரணமாக, பாதகமான நிலைமைகளின் காரணமாக சக்தியில்லாதவர்களாக இருக்கும் விவசாயத் தொழிலாளர்களுடைய நலன்களுக்காக தொழிற்சங்கம் அதிகமான கவனத்துடன் பாடுபடவேண்டும்.’
  • ‘தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் குறுகிய நோக்குடையவையோ அல்லது சுயநலமானவையோ அல்ல, கீழே மிதிக்கப்பட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான மக்களின் விடுதலையே அவற்றின் நோக்கம் என்பதை உலகத்தினர் நம்புகின்ற வகையில் அவை நடந்துகொள்ளவேண்டும்.’

தொழிலாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களையும் தொழிற்சங்கங்கள் கற்கவேண்டிய விஷயங்களையும் மார்க்ஸ் மீண்டும் மீண்டும் பல இடங்களில் பட்டியலிடுகிறார். ஓர் அமைப்பாக தொழிலாளர்கள் திரளவேண்டிய அவசியத்தையும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறார். ’தொழிலாளி வர்க்கத்தினரின் விடுதலையைத் தொழிலாளி வர்க்கத்தினரே வென்றெடுத்துக்கொள்ளவேண்டும். ‘ என்கிறார்.
இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஒரு நாட்டின் தொழிலாளர் பிரிவுக்கு இன்னொரு நாட்டின் தொழிலாளர் பிரிவினரே தொழில்முறைப் போட்டியாளராக உருவாகியிருப்பதை நாம் காண்கிறோம். இது பற்றிய மார்க்ஸின் விவாதங்கள் முக்கியமானவை. சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகத் திரளவேண்டும் என்று மார்க்ஸ் சொன்னது ஏன் என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். அது பற்றிய அவருடைய விவாதங்களை  தேடிப்படித்து வாசிப்பதோடு அவற்றைத் தொழிலாளர்களிடமும் கொண்டு சென்று சேர்ப்பிக்கவேண்டும்.
ஒன்று நிச்சயம். தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைக்காட்டிலும் சிக்கலானவை அல்ல மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் சிந்தனைகள். எனவே இந்த மே தினத்தை அவர்களுடைய படைப்புகளை வாசிப்பதன்மூலம் தொடங்குவோம். நம் உலகையும் சக மனிதர்களையும் புரிந்துகொள்ள இதைக் காட்டிலும் பொருத்தமான வேறு வழிமுறை இல்லை.
மேலதிகம் வாசிக்க :
  1. சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் பொது விதிமுறைகள், கார்ல் மார்க்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 5. முன்னேற்றப் பதிப்பகம்
  2. தற்காலிய மத்தியக் கவுன்சிலின் பிரதிநிதிகளுக்கு சில பிரச்னைகளைப் பற்றிய ஆணைகள், கார்ல் மார்க்ஸ், மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், தொகுதி 5. முன்னேற்றப் பதிப்பகம்

Friday, June 14, 2013

Marx still threatening them!

திருவாளர் எஸ். குருமூர்த்தி “மறைந்து போன மார்க்சியமும், மங்கி வரும் மார்க்கெட்டும்” என்றொரு நூல் எழுதியிருக்கிறார். “கிழக்கு” பதிப்பகத் தின் இந்த வெளியீட்டில், “அரசியல், பொருளாதார விமர்சகர்” என்று இவர் குறிப்பிடப்பட்டுள்ளார். ஏதோ பொதுவான மனிதர் போன்ற பிம்பத்தைக் காட்டும் வார்த்தைகள்! உள்ளே தனது முன்னு ரையில் “சுதேசி விழிப்புணர்வு இயக்க நண்பர்கள்” பற்றிக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். அந்த இயக்கம் ஆர்.எஸ். எஸ்.சின் துணை அமைப்பு என்பதை அறிந்து கொண்டால் இவர் எப்படிப்பட்ட வர் என்பதைச் சட்டென்று புரிந்து கொள்ளலாம்.

மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த நூலின் முதல்பகுதியில் “லெனின், ஸ்டா லின், சிலைகளைப் போல மார்க்சும் ஒரு பழமைச் சின்னமாகவும் பயன் ஒழிந்து போன மனிதராகவும் ஆகிவிட்டார்” என்று உற்சாகமாகப் பிரகடனப்படுத்தியிருக் கிறார் மனிதர். அது மட்டுமா? இதற்கான காரணத்தையும் அரிய கண்டுபிடிப்பாய் வெளியிட்டிருக்கிறார். அது “காரல் மார்க்ஸ் பழமையாகிப் பயனற்றுப் போன தற்கு மார்க்சைவிட மார்க்சிஸ்டுகளே காரணம்”. பயனற்றுப் போனவர் பற்றி இந்த அதிமேதாவி ஏனிப்படி வரிந்து கட் டிக்கொண்டு ஆங்கிலத்தில் நூல் எழுதி, அதை தமிழிலும் பெயர்த்து வெளியிட வேண்டும்? முடிந்தது கதை என்று வேறு வேலைக்குப் போயிருக்கலாம் அல்லவா? முடியவில்லை இவரால். அந்தப் “பழமைச் சின்னமாக” ஆகிப் போனவர் இன்று இவரைப் புத்தம் புதிய ஆயுதமாய் மிரட்டிக் கொண்டே இருக்கிறார்.

அதனால் தான் தனது காட்டத்தையெல்லாம் அந்த மாமேதை மீது காட்டியிருக்கிறார். மார்க்ஸ் பயனற்றுப் போனதற்கு மார்க் சிஸ்டுகள் தாம் காரணமாம்! அடடா! அப்படியென்றால் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அவரைக் காலமெல்லாம் போற்றி வந்தார்களா? அவரைப் “பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு” என்று புகழ்பாடி வந்தார்களோ? இவர் களது குருஜி கோல்வால்கர் தனது மூன்று எதிரிகளாக வருணித்தது “முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்” அல் லவா? அவரைக் காலமெல்லாம் தூற்றி வந்தவர்கள் தாம் இப்போதும் தூற்று கிறார்கள் என்பதை மார்க்சிஸ்டுகள் நன்கு அறிவார்கள்.

மார்க்ஸ் நல்லவர், மார்க்சிஸ்டுகளே கெட்டவர்கள் - மாமரம் நல்லது, மாங்கனி களே கசப்பானவை - எனும் இந்த அர்த்த மற்ற வாதத்தை தொடர்ந்து பராமரிக்கவும் அவரால் முடியவில்லை. மார்க்சின் அடிப் படைக் கோட்பாடுகளுக்கு துரோகம் செய் கிறவர்கள் மெய்யான மார்க்சிஸ்டுகள் அல்ல என்பதால் சட்டென்று மார்க் சையே நேரடியாகத் தாக்கத் துவங்குகிறார்.“காரல் மார்க்சின் பொருள்முதல் வாதச் சித்தாந்தம் முழுவதும் கிறிஸ்தவ அனுபவங்களின் அடிப்படையிலும், அதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படை யிலும் அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. மார்க்சியச் சிந்த னைக் கட்டமைப்புக்கு கிறிஸ்துவ உல கைத் தவிர்த்து வெளியிலிருந்து குறிப் பிடும்படியான உள்ளீடுகள் ஏதும் கிடையாது” என்கிறார்.

மார்க்சியமானது கிறிஸ் துவத்தின் நீட்சியே என்பதாகவும், அதனால் இது முழு உலகத்திற்கும் பொருந் தாது என்பதாகவும் நிலைநிறுத்த மனிதர் துடியாத் துடித்திருக்கிறார்.இந்துத்துவாவாதிகளின் பிறமத வெறுப்பு உலகறிந்ததே. அதை மார்க்சியத் தைக் கொச்சைப்படுத்தவும் பயன்படுத்தி யிருப்பது தான் இந்த நூலாசிரியரின் தனித்துவம். மார்க்ஸ் வடித்தெடுத்த இயங்கியல் பொருள்முதல்வாதமானது கிறிஸ்துவத்திற்கு மட்டுமல்ல, சகல மதங்களின் ஆத்திகத் தத்துவங்களுக்கும் நேர் எதிரானது.

19ம் நூற்றாண்டிலேயே உலகம் சுருங்கிப் போனது. லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் உலக ஞானச் சுவடிகள் எல்லாம் இருந்தன. அவற்றையெல்லாம் உள்வாங்குகிற ஒரு தவத்தை மார்க்ஸ் மேற்கொண்டார் என் பதை அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள் அறிவார்கள். குருமூர்த்தி போல் நுனிப்புல் மேய்கிறவர்களுக்கு அது தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.வினோதம் என்னவென்றால், மாமேதை மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி அறிவார், அது பற்றிய சில மதிப்பீடு களைத் தந்திருக்கிறார் என்பதையும் இவரால் மறைக்க முடியவில்லை. ஆனால் “கிறிஸ்துவர்கள் பயன்படுத்திய தகவல்களையே இந்திய நாகரிகத்தை மதிப்பிடுவதற்கான கருவியாகப் பயன் படுத்திக் கொண்டார்” என்று அங்கும் தனது பிறமத வெறுப்பைக் கக்குகிறார்.

“குரங்குகளையும், பசுமாடுகளையும் வணங்குவோர்” என்று இந்துக்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டார் என்று மனிதர் பொருமுகிறார். அது உண்மைதானே? இன்றைக்கும் கோமாதா அரசியல் நடத்து கிறவர்கள், இன்றைக்கும் “பஜ்ரங்தள்” என்று அனுமார் சேனை வைத்திருப் பவர்கள் அதற்காகக் கோபப்படுவதில் அர்த்தம் இல்லை.

உண்மையைக் கிறிஸ் தவர் சொன்னால் என்ன, இந்து சொன் னால் என்ன, நாத்திகர் சொன்னால் என்ன, உண்மை உண்மைதானே?ஆனால், மார்க்ஸ் இந்துக்கள் மத்தி யிலிருந்த இந்த விலங்கு வழிபாட்டை மட்டும் சுட்டிக்காட்டியவர் அல்ல. இந்த மக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் எப்படிக் கொடூரமாகச் சுரண்டப் படுகிறார்கள் என்பதையும் அதே பிரிட்டனில் இருந்து கொண்டு உலக மன சாட்சியாய் முரசறைந்து சொன்னவர். பழைய உலகத்தைத் தட்டிப் பறித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் ஒரு புதிய உல கத்தை இந்தியாவுக்கு வழங்கவில்லை என்றும் வருத்தப்பட்டவர். இங்குள்ள சாதிய கட்டுகள் பற்றிக் கவலைப்பட்டவர். அதை நவீனத் தொழிற்சாலைகளாவது தளர்த்தி விடாதா என்று ஏங்கியவர். அந்த மகத்தான மனிதாபிமானியை கிறிஸ்துவக் குடுவைக்குள் அடைக்கப் பார்க்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். கொடுக்கின் வேலை எடுபடாது.

இந்தியா பற்றி மார்க்ஸ் எழுதியதை எல்லாம் சேர்த்துவைத்துப் படிக்கிற எவரும் இவரது பித்தலாட்ட வியாக்யானத்தை இடக்கையால் புறந்தள்ளுவார்.“உபரி, லாபம் எனும் கருத்தியலே மார்க்சியப் பொருளாதாரத்தின் அஸ்தி வாரம். மார்க்சின் இந்தக் கருத்தியல் அஸ்திவாரம் அவர் அறிந்திருந்த திடச் சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டிராத மிகப் பெரிய அறிவுசார் அமைப்பின் கீழ் புதையுண்டு விட்டது” என்று குருமூர்த்தியார் கொக்கரிக்கிறார்.அரசு வெளியிடும் காகிதப் பணம், அதுபோலத் தனியார்கள் தரும் உண்டி யல்கள் - காசோலைகள், கம்பெனிப் பங்குகள், அவற்றின் மீதான ஊக வணிகம் போன்றவற்றைக் காட்டி, இவை “புரொஃ பெஷனல்கள் எனப்படும் நிபுணர்களால் இயக்கப்படுகிறது” என்பதைச் சுட்டிக் காட்டி, இவற்றில் மார்க்சின் பொருளா தாரக் கோட்பாடு திவாலாகிவிட்டதாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறார். இன்று இவை உலகப் பொருளாதாரத் தில் தீவிர செல்வாக்கை செலுத்துகின் றன என்பது உண்மையே என்றாலும், இவையெல்லாம் மார்க்ஸ் காலத்திலேயே துவங்கியவை தான். “கிழக்கந்தியக் கம்பெனி” என்று அவர் காலத்திலேயே கார்ப்பரேட் நிறுவனங்கள் புறப்பட்டு, அவை உலக வர்த்தகத்தை ஆட்டிப் படைக்க முயன்றன. அவற்றின் பங்குகள் ஏற்ற இறக்கமாக எகிறுவதும் நடந்தது. பொருளாதாரத்தில் பண ஊடாட்டத்தின் முக்கியம் பற்றியும் மார்க்ஸ் பேசியிருக்கிறார்.ஆனால், இந்தக் காகிதப் பணங்களும், அவற்றின் மீதான ஊக வணிகங்களும், அவை நிபுணர்களின் துணை கொண்டு நடத்தப்படுவதும், எல்லாம் பொருள் உற்பத்தி எனும் திடச் சொத்து உருவாக் கத்தையே அஸ்திவாரமாகக் கொண்டுள் ளன என்பதையும் அவர் அறிவார். ஒரு சிமிண்ட் கம்பெனியின் பங்கு மதிப்பு ஊக வணிகத்தால் கூடலாம், குறையலாம். ஆனால் அந்தக் கம்பெனி தனது சிமிண்ட் உற்பத்தியைச் சுத்தமாக நிறுத்திவிட்டால் அந்தப் பங்கின் கதி அதோ கதிதான்.

அதன் மீது ஊக வணிகம் நடக்காது; போட்ட பணத்தில் எவ்வளவு திருப்பி வரும் எனும் கவலையே மிஞ்சி நிற்கும். இயக்கம்தான் ஊகத்திற்கு வாய்ப்புத் தருகிறது. உற்பத்திதான் ஊக வணிகத் திற்கு வாய்ப்புத் தருகிறது. பொருள் உற்பத்தி இல்லையென்றால், திடச் சொத்து உருவாக்கம் இல்லையென்றால் ‘புரோஃபஷனல்களால் புனையப்பட்ட’ பொருளாதாரம் என்கிறாரே அது இருக் கவே இருக்காது, மணல் வீடாய்க் கரைந்து போகும். முதலாளிகள் இல்லையென்றால் இந்தப் புரோஃபஷனல்களே கிடையாது.குருமூர்த்தியோ விஷயத்தை தலை கீழாக முன்வைக்கிறார். அதிலும் குரூர மான முறையில் சொல்கிறார். “பராம்பரிய முதலாளித்துவ முறையில் எவ்வாறு உழைக்கும் வர்க்கம் சுரண்டப்பட்டதோ அதே வகையில் இன்று புதிய வடிவான அறிவுச் சக்தியினால் இயக்கப்படும் முத லாளித்துவத்தில் புரொஃபஷனல்கள் தான் முதலாளிகளை சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த வகை முதலாளித்துவத்தை மார்க்ஸ் கற் பனை கூடச் செய்து பார்க்கவில்லை” என்கிறார் மகானுபாவர்.

முதலாளிகளிடம் சம்பளம் பெறும் மூளை உழைப்பாளர்களை - அந்த நிபு ணர்களை - சுரண்டல்காரர்கள் என்றும், மெய்யான சுரண்டலில் ஈடுபடும் முத லாளிகளை பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் என்றும் சித்தரிக்கும் இந்தக் குருமூர்த்தி களை மார்க்ஸ் கற்பனை செய்து பார்த் திருக்கமாட்டார் தான்! வக்கிர புத்தியின் வீச்சு இந்த அளவுக்குப் போகும் என்பது அந்த மகா ஞானியின் கற்பனைக்கும் எட்டாததுதான்.தகவல் தொடர்புத் தொழில் உள்ள நிபுணர்களை கார்ப்பரேட் முதலாளிகள் நினைத்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்களே - அந்த உரிமையோடே அவர்களை வேலைக்கு எடுக்கிறார்களே - இதற்குப் பெயர் “புரோஃபஷனல்களின் சுரண்டலா?” எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிபுணர் என்றாலும் அவரது உழைப்பால் முத லாளிக்கு உபரி மதிப்பு கிடைத்தால் தான் அவரை அதே சம்பளத்திற்கு வைத்துக் கொள்வார். இல்லையெனில் சம்பளத்தை வெட்டுவார் அல்லது வெளியே அனுப்பு வார். இதுதான் இப்போதும் நடக்கிறது. இந்த மெய்மை நீடிக்கும் போது மார்க்ஸ் எப்படித் தோற்றுப் போவார்? அவரது கருத்தியல் எப்படிக் காலாவதியாகும்?பொருளுற்பத்தி தான், திடமான சொத்து உருவாக்கம் தான் சகல பொருளாதாரச் செயல்பாடுகளுக்கும் அஸ்திவாரம் என்பதால், அதில் உபரி, லாபம் என்பது கிடைக்கும்போது தான் கார்ப் பரேட் நிறுவனங்கள அதைத் தொடரு கின்றன என்பதும் உண்மை.

லாபம் எனப் படுவது ஏதோ யதேச்சையாகக் கூடுதல் விலை கிடைப்பதால் உருவாவதல்ல. உற்பத்தியில் செலுத்தப்படும் உழைப்புக் கான ஊதியத்தைக் காட்டிலும் அதில் கூடுதல் மதிப்பு உருவாவதால் ஏற்படு வது. வேறு மாதிரியாகச் சொன்னால், கிடைத்த கூடுதல் மதிப்பைக் காட்டிலும் உழைப்பாளிகளுக்கு குறைந்த ஊதியத் தைக் கொடுத்ததால் ஏற்படுவது அது வெறும் புனைவு அல்ல, திடமான மெய்ப் பொருள்.இப்படி யோசித்துப் பாருங்கள். ஒரு பொருளுக்கு எவ்வளவுதான் கூடுதல் விலை கிடைத்தாலும் உற்பத்திச் செலவு அதைவிடக் கூடுதலாக இருந்தால் லாபம் கிடைக்குமோ? கிடைக்காது அல்லவா. அதனால் குறைந்த உற்பத்திச் செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருளை உற்பத்தி செய்து வைத்துக் கொள்ளவே முயலுகிறார் ஒரு முதலாளி. அந்தப் பொருளுக்கு எதிர்பார்த்த விலையைக் காட்டிலும் கூடுதலான அல்லது குறை வான விலை கிடைப்பது வேறு சில வர்த்த கக் காரணங்களால் நடப்பது. அது அவருக்கு இரண்டாம் பட்சம். அடிப்படை விஷயம் குறைந்த செலவில் கூடுதல் மதிப்புள்ள பொருள். இல்லையென்hறல் உற்பத்தியை நிறுத்திவிடுவார். பல தொழிற் சாலைகள் அவ்வப்போது மூடுவிழா காண்பதற்கான காரணம் இதுதான்.முதலாளித்துவ பொருளாதாரத்தின் இந்த அடிப்படை இயங்குநிலை இப்போ தும் தொடரத்தானே செய்கிறது.

இப்போதும் மார்க்ஸ் கண்டறிந்து சொன்ன உபரி மதிப்பு எனும் மகத்தான கோட்பாடு செயல்பட்டுக் கொண்டுதானே இருக் கிறது. எங்கே அது புதையுண்டு போனது? பாவம், குருமூர்த்தி யார்! அப்படி அது புதை யுண்டு போக வேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால், உலகப் பொருளாதார வாழ்வியல் உண்மையோ வேறுமாதிரி யாக உள்ளது.மார்க்ஸ் மறைந்து ஐம்பது ஆண்டு களில்- 1930களில் - அமெரிக்காவில் “மகாமந்தம்” எனும் பொருளாதார நெருக் கடி வந்தது. அதற்குப் பிறகு முதலாளித் துவ உலகில் பெரிதும் சிறிதுமாக நெருக் கடிகள் அவ்வப்போது வந்து கொண்டே யிருக்கின்றன. இப்போது கூட கிரீஸ், சைப்ரஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் திவால் நிலைக்கு ஆளாகியுள்ளன. வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு, நிதி நெருக்கடி, வங்கிகள் மூடல், கடன் சுமை, வெளிநாட்டு வர்த் தகத்தில் குளறுபடி, இதனால் நாடுகளி டையே உரசல்கள், உள்நாட்டு வாழ்வில் வர்க்கங்களிடையே கொடூரமான ஏற்றத் தாழ்வு - இவை இல்லாத முதலாளித்துவ நாடுகள் உண்டா?

இதற்கெல்லாம் மூல காரணம் முதலாளித்துவ அமைப்பானது சுரண்டலை அடிப்படையாகக் கொண் டது என்பதே.மார்க்ஸ் எனும் அந்தத் தாடிக்காரக் கிழவன் ஒரு முழு மனிதன், மகா தீர்க்க தரிசி. “அவன் சொன்னது சரிதான், சரி தான்” என்று வாழ்வின் ஒவ்வொரு கூறும் அடித்து அடித்துச் சொல்கிறது. அது சங்பரிவாரத்தினரின் காதுகளில் விழ வில்லையென்றால் அவர்கள் தூங்குவது போல நடிப்பவர்கள். சரித்திரம் அவர் களைத் தாண்டிச் செல்லும்.

எதிர்ப்பது மேற்கத்திய முதலாளித்துவத்தையே!

நூலின் முதல் பகுதியில் “மறைந்து போன மார்க்சியம்” பற்றிப் பேசிய எஸ். குருமூர்த்தி இரண்டாம் பகுதியில் “மங்கி வரும் மார்க்கெட்டு” பற்றி பேசுகிறார். முதலாளித்துவத்தைக் குறிக்கவே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அது பொருத்தமானது அல்ல. “மார்க்கெட்” - சந்தை - எனப்படுவது விற்கிறவரும், வாங்குகிறவரும் சந்திக்கும் இடம். அது முதலாளித்துவத்தின் கண்டு பிடிப்பு அல்ல. வெள்ளைக்காரர்கள் இங்கே வருவதற்கு முன்பே வாரச்சந்தை, மாதச் சந்தை என்று கூடியதை தமிழர் களாகிய நாமறிவோம்.

ஆண்டான் - அடிமை யுகம் காலத்திலிருந்து இருக்கக் கூடிய சந்தையை ஏதோ முதலாளித் துவத்தின் கண்டுபிடிப்பு போலச் சொல்லி, அதை மார்க்சியர்கள் இப்போது தான் அங்கீகரித்திருக்கிறார்கள் என்பது போல எழுதிச் செல்கிறார். இரண்டுமே தவறு. முதலாளித்துவத்தின் தனித்தன்மை சந்தையில் இல்லை; அது ஆலைமுறை என்கிற புதிய உற்பத்தி முறையிலும், அதற் கான மூலதன ‘உருவாக்கத்திலும்’ அதைத் தனியுடைமையாகக் கொண்ட முதலாளிகள் என்கிற புதிய வர்க்கம் பிறந்ததாலும், அதன் மறுபக்கமாக உழைப்பையே சொந்தமாகக் கொண்ட தொழிலாளர்கள் எனும் மற்றொரு புதிய வர்க்கம் உதயமானதிலும் உள்ளது. இப்படி இருவேறு முரண்பட்ட நலன்கள் கொண்ட வர்க்கங்கள் உருவாகி, அதனால் தவிர்க்க முடியாதபடி அவற்றுக்கிடையே போராட் டம் நடக்கிறது எனும் உண்மையை அங்கீ கரிக்க இவருக்கு மனமில்லை. அத னாலும் மார்க்கெட் ஆராய்ச்சிக்குள் தன்னை அடைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.எனினும் அத்தகைய அலசலிலிருந் தும் அவர் வந்து சேர்ந்த முடிவு என்னவோ இதுதான்: “1930-களில் அமெரிக்கா சந் தித்த பெரும் பொருளாதாரச் தொய்வை விட மோசமானது (தற்போதைய நெருக் கடி) இது. வெறும் நிதி சார்ந்த அமைப்பின் வீழ்ச்சியல்ல இது; அவர்களுடைய முன் மாதிரியின் வீழ்ச்சி. அதாவது, ஆங்கிலோ சாக்சனிய கட்டற்ற சந்தை முன்மாதிரி யின் வீழ்ச்சி ஆகும்”.

அமெரிக்கா உரு வாக்கித் தந்துள்ள முதலாளித்துவமும் தோற்றுபோய் வருகிறது என்பது தான் குருமூர்த்தியின் கணிப்பு. முதலாளித்துவம் தோற்கத்தான் செய்யும், அதன் உள்முரண்கள் அவ்வளவு கடுமையானவை என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துக் காட்டியதில் தான் மார்க்சின் பெருமை உள்ளது. ஒருபுறம் மார்க்சின் சித்தாந்தம் புதைந்து போய்விட் டது என்று கெக்கலி கொட்டிச் சிரித்தவர், மறுபுறம் அமெரிக்க மாடல் முதலாளித் துவமும் சிதைந்து வருகிறது என்று சொல்லி கன்னத்தில் கை வைக்கிறார். கவனியுங்கள், எல்லா வகை முதலாளித் துவத்தையும் எதிர்க்கவில்லை, அமெரிக்க பாணியை மட்டும்தான் எதிர்க்கிறார்!அமெரிக்க பாணி மீது இவருக்கு என்ன இவ்வளவு கோபம்? “தனிமனிதர் களின் அதிகரித்து வரும் அரசுச் சார் பினால் குடும்பத்தின் கடமைகள் தேசிய மயமாக்கப்பட்டு மிகப்பெரிய பொதுக் கடமையான மக்களின் சமூகப் பாது காப்பு, பிற பாதுகாப்புகள் என்ற பெரும் சுமையை அரசு தன் மேல் ஏற்றிக் கொண் டுள்ளது” - என்பதில் தான் இவருக்கு ஏக வருத்தம்!

குருமூர்த்தியார் விஷயத்தை தலை கீழாக முன்வைக்கிறார். முதலாளித்துவ மானது குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கிறது என்பது உண்மை. சேமிப்பு என்பது இளையவர், முதியவரின் எதிர்காலப் பாது காப்புக்குத் தேவையாக இருந்தது. அவர் களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்கிற மனப்போக்கை உருவாக்கி, அதன் விளைவாக சேமிப்புப் பழக்கத்தை ஒழித் துக்கட்டி, ஊதியத்தை எல்லாம் நுகர் பொருளில் செலவழிக்கிற நுகர்வு கலாச் சாரத்தை உருவாக்கியது முதலாளித் துவம். இது இளையவரையும், முதியவரை யும் அனாதைகளாக்கியது. அந்தக் கட்டத் தில் அரசு தலையிட வேண்டிய அவசியம் உருவானது. அப்படித்தான் வேலையில் லாக் கால நிவாரணம், முதியோர் ஓய்வூதி யம், மருத்துவ மானியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அமெரிக்கா - ஐரோப்பாவில் தலையெடுத்தன. இங்கே சேர்த்துச் சொல்ல வேண்டிய விஷயம் அன்றைய சோவியத் ஒன்றியத்தின சோச லிசக் கட்டுமானம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் முன்னணியில் நின்றது. அமெரிக்கா - ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் அத்தகைய திட்டங்கள் வேண்டு மென்று போர்க்கொடி தூக்கிய போது வேறு வழியின்றி அரைகுறைமனதோடு சில திட்டங்களை மேற்குலக முதலாளித்துவ நாடுகளும் அமல்படுத்தின.சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக் குப் பிறகு இந்த சமூகப் பாதுகாப்புத் திட் டங்களையும் வெட்டத் துணிகின்றன முத லாளித்துவ அரசுகள். எஜமானனைக் காட்டிலும் அதிக எஜமான விசுவாசம் காட்டுகிற குருமூர்த்தியார் இந்தத் திட்டங் கள் தான் அமெரிக்க பாணி முதலாளித் துவத்தின் மிகப்பெரிய ஊனம் என்கிறார், அதனால்தான் அது வீழ்ந்து வருகிறது என்கிறார். முதலாளித்துவம் உருவாக்கிய குடும்பச் சீரழிவு காரணமாகவே சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வந்தன, இப் போதும் தேவைப்படுகின்றன என்பதை மறைத்து விட்டு, இந்தத் திட்டங்கள் காரணமாகத் தான் குடும்ப அமைப்பு சீரழி கிறது என்று பெரும் போடாகப் போடுகிறார்.இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங் களும் இல்லையென்றால் முதலாளித்துவ உலகில் பாட்டாளிகளின் வாழ்வு மேலும் பரிதாபமாகிப் போகும்.

அதைப் பற்றிக் கவலைப்படாவிட்டாலும் அத னால் தீவிரமான வர்க்கப் போராட்டங் களும் சமூகப் பதட்டங்களும் ஏற்படும் என்பதை இந்த ஆர்.எஸ்.எஸ்.காரரைக் காட்டிலும் மேற்கத்திய முதலாளித்துவ அரசுகள் நன்கு உணர்ந்துள்ளன. அத னால் தான் இந்தத் திட்டங்களை ஒழித் துக் கட்ட வேண்டுமென்று அவை உள் ளூர ஆசைப்பட்டாலும் அப்படிச் செய்யா மல், அவ்வப்போது வெட்டிச் சுருக்கவே முயலுகின்றன.ஜெர்மனியின் தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் உர்சுலா வோன் டெர் லெயன் கூறுகிறார்: “எங்களது சமூகப் பாதுகாப்புத் திட்டம் நிலைப்படுத்தும் கருவியாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓய்வூதியம், வேலையில்லாக் கால நிவாரணம் மற்றும் இதர உதவிகள் மக்களிடம் பணம் இருக்குமாறும், அதனால் சரக்குகளுக்கு உள்நாட்டில் தேவை இருக்குமாறும் பார்த் துக்கொள்கின்றன. எனவே, நெருக்கடியை நாங்கள் பெரிதாக உணரவில்லை” (டைம்ஸ் ஆப் இண்டியா, 7.6.2013)முதலாளித்துவ ஆட்சியாளர்களே சமூகப் பாதுகாப்புத்திட்டங்களின் தேவை யை இந்தப்படியாக உணர்ந்திருக்கும் போது குருமூர்த்தியார் குதர்க்கமாகச் சிந்திக்கிறார். அவற்றை அரசின் மீதான “பெரும்சுமை” என்று மிரட்டி, “இந்தச் சிதைவானது உண்மையில் தீவிரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு கலாச்சாரச் சீரழிவே” என்று முத்தாய்ப்பு கொடுக்கிறார். சங்பரிவாரத் தினர் ஏழை, எளியவர்களின் நேர் எதிரி கள் என்பதை இதிலிருந்து சட்டென்று புரிந்து கொள்ளலாம்.முதலாளித்துவத்தில் குடும்ப அமைப்பு சீர்குலைவது பற்றி குருமூர்த்தி கவலைப்படுகிறாரே என்று தோன்றலாம். அவர் காப்பாற்ற விரும்புகிற குடும்ப அமைப்பு ஜனநாயகமயமானது அல்ல, மாறாக பழைய கட்டுப்பெட்டி அமைப்பு. 

அமெரிக்காவின் தற்போதைய நிலைமை யின் மோசமான அம்சங்கள் என்று இவர் பட்டியலிட்டிருப்பதில் இதுவும் ஒன்று; “1980ல் கூட ஆண்கள் வேலைக்குப் போவதும், பெண்கள் வீட்டில் இருப்பது மான முன்மாதிரியே பழக்கத்தில் இருந் தது. 2000 ஆண்டுவாக்கில் கணவன், மனைவி இருவருமே பணி புரியும் முன்மாதிரியே மேலாண்மை செலுத்து கிறது.”முதலாளித்துவத்தின் சில நல்ல கூறுகளில் ஒன்று தனது பொருளாதாரத் தேவை கருதி பெண்களையும் சுதந்திரத் தொழிலாளர்களாக மாற்றியிருப்பது. நிலப் பிரபுத்துவம் பெண்களை அடுப்படியில் அடைத்துப் போட்டது என்றால் இது அவர்ளை ஆலைகளிலும் அலுவலகங் களிலும் வேலை பார்க்க வைத்தது. அத னால் அவர்கள் பொருளாதார ரீதியாகச் சொந்தக்காலில் நிற்க முடிந்து, காலங் காலமாகத் தொடர்ந்த ஆணாதிக்கப் போக்குகளை எதிர்த்துப் போராடும் சூழல் உருவானது. இது பொறுக்கவில்லை குருமூர்த்தியாருக்கு.

அமெரிக்க பாணி முதலாளித்துவம் அழியப் போவதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் இந்தப் புத்திசாலி! ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சமூக சீர்திருத்தத்தின் பிரதான எதிரிகள், ஒட்டுமொத்தச் சமுதாயத்தின் மகா விரோதிகள் என்பதை இது துல்லியமாக வெளிப்படுத்துகிறது.குடும்பங்களின் சேமிப்பு குறைந்து போன நிலையில், அந்தக் குறைந்த சேமிப்பையும் பங்குச் சந்தையில் போட அவை பயப்படுகின்றன. ஜெர்மனியிலும், ஜப்பானிலும் பங்குச் சந்தையில் குடும் பங்களின் முதலீடு மிகக் குறைவே. “ஐந்து வருடச் சேமிப்புக் கணக்குக்கு 1 சதவீத வட்டியே கிடைக்கும் சூழலில் கூட ஜப்பானியர்கள் தாங்கள் சேமிப்பின் 56 சதவிகிதத்தை ஜப்பானிய வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர்” என்கிறார் குருமூர்த்தி. இதற்கு நேர்மாறாக, அமெரிக் காவில் “பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கக் குடும்பங்கள் பங்குச் சந்தையின் முதலீடு செய்துள்ளன” என்றும் கூறுகிறார்.

இதற்கு மூல காரணம் அமெரிக்காவில் பங்குச் சந்தை மட்டுமல்லாது வங்கிகளது நடவடிக்கைகளும் ஊக வணிகமாக இருப்பது. எந்த நேரத்தில் எந்த வங்கி மூழ் கும் என்று சொல்ல முடியாது. சமீபத்தில், கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் சில தனியார் வங்கிகள் திவாலாகின. அவற்றில் பணம் போட்டவர்களின் கதி அதோ கதியானது. மறுபுறம் கடன்காரர் களை நெருக்கிப் பிடித்ததில் அவர்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு தெரு வோரம் நின்றிருந்த கார்களில் குடிபுகுந்த அவலமும் ஏற்பட்டது! பொருளாதாரம் தனியார்மயமான பிறகு அந்த வங்கிகளில் போடப்படும் தங்களது சேமிப்புக்கு பாதுகாப்பு இல்லை என் பதை அறியும் மத்திய தர வர்க்கம் பங்குச் சந்தைப் பக்கம் திரும்பியது. அங்கும் பாது காப்பு இல்லை. விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் எங்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான்.இதைத் தவிர்க்க வங்கி - இன்சூரன்ஸ் போன்ற நிதி நிறுவனங்களாவது பொதுத் துறையில் இருக்க வேண்டுமென்பது தான் இதிலிருந்து பெறப்படும் பாடம். இந் தியாவின் நிதி மேலாண்மை தற்போதைய உலக நெருக்கடியை ஓரளவு சமாளித்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் நமது பொதுத்துறை வங்கிகள் - ஈட்டுறுதி நிறுவனங்கள். இந்த உண்மையை ஒப்புக் கொண்டு நிதித்துறையைத் தனியார்மய மாக்காதே என்பாரா குருமூர்த்தியார்? அதுதான் இல்லை. அப்படியெல்லாம் தப்பித்தவறியும் சொல்லவில்லை. நிச்சயமற்ற பொருளாதார எதிர்காலமே முத லாளித் துவத்தின் உள்ளார்ந்த விதி எனும் உண்மையைப் போட்டு உடைக்கவோ, அதை ஓரளவாவது கட்டுக்குள் வைத் திருக்க அரசின் தலையீடு வேண்டுமென் பதை வலியுறுத்தவோ அவர் தயாராயில்லை. எனவே, பொதுத்துறையின் பெருமையை அல்ல, பழைய குடும்ப அமைப்பின் புனிதத்தைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகிறார். அதை இழந்துவிட்ட அமெரிக்கா சகலத்தையும் இழந்து விட்டது என்கிறார். “கம்யூனிசம் வீழ்ந்ததை விட வேகமாக முதலாளித் துவ மேற்கும் வீழ்ந்துவிடும்” என்று உற் சாகமாகக் கூறுகிறார்.இந்த விஷயத்தில் அமெரிக்கபாணி முதலாளித்துவமே உலகின் இறுதி இலக்கு, அதை அடைந்துவிட்டதால் மனித குல வரலாறே முடிந்து போனது என்பதாக ஆணவத்தோடு முரசறைந்த ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவின் கருத்தை யும் மறுதலிக்கிறார்.

தனது சமீபத்திய நூல் ஒன்றில் கலாச்சாரத்திற்கு உள்ள பங் களிப்பைத் தான் புறக்கணித்துவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் கொஞ்சம் மகிழ்ந்து போகிறார். ஆகவே, கலாச்சாரத்தை - அதாவது புனித குடும் பத்தை - கைவிட்டுவிட்ட முதலாளித் துவ மேற்கு வீழத்தான் செய்யும் என்று ஆணையிட்டுச் சொல்கிறார்!அப்படியென்றால் அதனிடத்தில் என்ன வந்து உட்காரும்? உலகம் “ஒரு மாற்றுப் பொருளாதார மாதிரியைத் தேடி நகர்ந்து கொண்டிருக்கிறது” என்கிறார். நமக்கு ஆர்வம் பிறக்கிறது. ஆஹா! ஆர்.எஸ்.எஸ். காரரும் மாற்றுப் பொருளா தாரம் பற்றிப் பேசுகிறாரே!ஆனால், கவனத்தில் வையுங்கள் “முதலாளித்துவ மேற்கு வீழ்ந்து விடும்” என்று தான் சொல்கிறாரே தவிர முத லாளித்துவமே வீழ்ந்து விடும் என்று சொல்லவில்லை. இவர் முன்வைக்கிற மாற்றுப் பொருளாதாரம் “முதலாளித்துவ கிழக்கு” ஆகும். அதுதான் இவரது நூலின் அபத்தமான உச்சக்கட்டம். அந்த மாற் றின் லட்சணத்தை, அதாவது அவலட் சணத்தை அடுத்துக் காண்போம்.

கிழக்கிந்திய முதலாளித்துவமும் கேடானதே!

நூலின் மூன்றாம் பகுதிக்கான தலைப்பே பரபரப்பானது. அது : “மார்க்ச்சுக்கும், மார்க்கெட்டுக்கும் அப்பால் உலகத்துக்கான முன் மாதிரி”. இந்திய அரசியலில் மூன்றாவது மாற்று பற்றிப் பேசப்படுவது போல உலக சமூகக் கட்டமைப்பிற்கு ஒரு மூன்றாவது மாற்றைப் பரிந்துரைக்கிறார் எஸ்.குருமூர்த்தி. தலைப்பைப் பார்த்தால் இது சோசலிசமும் அல்ல, முதலாளித்துவமும் அல்ல என்பது போலப்படும். ஆனால் முத்தாய்ப்பாக இவர் கூறுவது “நமக்குத் தேவை முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக் கூடிய ஒரு சந்தை. அது மட்டுமே நிலைத்து நிற்கும்” என்பதுதான். சந்தை என்று இவர் கூறுவது முதலாளித்துவத்தையே என்பதைக் கண்டு வந்தோம். அதிலே ஒரு வகையைத் தான் மனிதர் பரிந்துரைக்கிறார். ஆக, இது மூன் றாவது மாற்றே அல்ல. ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ அமைப்பில் ஒரு முக்கிய மாறுதலையே கோருகிறார்.அது என்னவெனில் “முறைசாரா அமைப்பு களோடு இணைந்து செயலாற்றக்கூடிய” தன்மை முதலாளித்துவத்திற்கு வேண்டும். அதுதான் அமெரிக்க பாணி முதலாளித்துவத்திடம் இல்லை என்கிறார். அப்படியெனில், “முறைசாரா அமைப்புகள்” என்று இவர் எவற் றைச் சொல்லுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.மனிதர் இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

ஆதி காலத்தில் பல நூற்றாண்டுகளாகப் பொருளாதாரத்தில் ஓங்கி நின்றிருந்த இந்தியாவும், சீனா வும் பின்னர் தேங்கிப் போயின என்பதை ஒப் புக் கொள்கிறார். வணிகம் சார்ந்த முதலாளித் துவ அமைப்பு முறை மேற்கில் எழுந்து வந்த தால்தான் அது கிழக்கை முந்திப்போனது என் பதையும் ஏற்றுக் கொள்கிறார்.

நாகரிகத்தில் பெரிதும் செழித்திருந்ததாகச் சொல்லப்பட்ட ஆசியாவில் முதலாளித்துவம் தோன்றாமல் அது ஏன் ஐரோப்பாவில் தோன்றியது எனும் கேள்வி வரும்போது தான் மனிதர் குழம்பிப் போகிறார். அவரால் சத்தியத்தை நேருக்கு நேராய் தரிசிக்க முடியவில்லை.“நவீன முதலாளித்துவம் என்பது புரா டெஸ்டன்ட் கிறித்துவ நெறிமுறைகளின் விளைபொருள்” என்று மாக்ஸ் வெபர் எழுதி னார். ஆகையினால் கர்மா, மறுபிறப்பு ஆகி யவை மீது நம்பிக்கை கொண்டிருந்த இந்து மதம், பௌத்தம் போன்ற சமயங்கள் எல்லாம் நவீன முதலாளித்துவம் வளர உதவாது என் றும் அவர் சொன்னார்” என்று வருத்தத்தோடு எழுதிச் செல்கிறார்.

முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கும், கத்தோலிக்க கிறித்துவத்திற்கு எதிராக ஐரோப்பாவில் கிளர்ந்தெழுந்த புராடெஸ்டன்ட் இயக்கத்தின் தோற்றத்திற்கும் இடையே பலத்த தொடர்பு உண்டு. கத்தோலிக்க கிறித்துவமானது நிலப்பிரபுத் துவத்தின் சித்தாந்த அடையாளம் மற்றும் மத ஸ்தாபனமாக இருந்தது. அதை எதிர்த்த இயக்கமானது தோற்றத்தில் மதச்சீர்திருத்த செயல்பாடாகவும், உள்ளுக்குள் புதிதாக எழுந்து வந்திருந்த முதலாளி வர்க்கத்தின் பொருளாதார- சித்தாந்த அபிலாஷைகளின் வெளிப்பாடாகவும் இருந்தது. கிறித்துவத்தின் சில அடிப்படை அம்சங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்ற கூறுகளை எல்லாம் பகுத்தறிவு நோக்கில் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இது முரட்டு நம்பிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி பகுத்தறிவுவாதத்தை முன்னுக்கு கொண்டு வந்தது. இது முடிவில் பரிசோத னை அடிப்படையிலான விஞ்ஞானத்தையும், புதிய இயந்திரக் கண்டுபிடிப்புகளையும் ஐரோப்பாவுக்கு வழங்கியது. வேறு சில பௌதீக-பூகோள-வரலாற்றுக் காரணங்கள் இருந்தாலும் இந்தச் சித்தாந்தப் போராட்டம் ஒரு முக்கியமான பங்களிப்பை செலுத்தியது. இப்படியொரு எதிர்ப்பு இயக்கம் வைதீக இந்து மதத்திற்குள்ளோ அல்லது இஸ்லாமிற் குள்ளோ அல்லது பௌத்தத்திற்குள்ளோ நடக்கவில்லை.

ஆசியாவின் நிலப்பிரபுத்துவமும், அதன் சித்தாந்த அடையாளமான மதங் களும் இங்கே மூடுண்ட அமைப்புகளாகவே இருந்தன. பிரம்மத்தோடு ஒன்றுதல், பக்தி இயக்கங்கள், சரணாகதி தத்துவங்கள் என்ற பெயரில் இவை நம்பிக்கைவாதத்தையே தூக் கிப் பிடித்தன.

பகுத்தறிவு கீற்றுக்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. மனிதர்களை நம்பு ... நம்பு.... என்று வம்பு செய்தனவே தவிர, சுதந்திரமாக யோசி...யோசி என்று உற்சாகப் படுத்தவில்லை- குறிப்பாக இடைக்காலம் எனப்பட்ட நிலப்பிரபுத்துவ யுகத்தில். அதனால்தான் கிழக்கு பிந்தியது, மேற்கு முந்தியது- கூடவே வேறு சில காரணங்கள் இருந்த போதிலும்.இந்த வரலாற்று உண்மையை ஏற்க குரு மூர்த்தியாருக்கு மனமில்லை. அவருக்கு கோபம் கோபமாக வருகிறது. “மாக்ஸ் வெபர் இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் சிந்தனையாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதன் விளைவாக இந்தியச் சிந்தனையாளர்கள் கர்மா, மறுபிறவி ஆகியவற் றின் மீதான நம்பிக்கை, இந்தியாவின் சாதி அமைப்பு ஆகியவையெல்லாம் ஒன்று சேர்ந்து இந்தியாவை அழித்து விட்டது என்று முழுமை யாக நம்பினார்கள். ஆகவே இந்தியா இவற்றை யெல்லாம் துறந்தால் ஒழிய, அதாவது இந்தியா தன்னையே மறுதலித்தால் அன்றி முன்னேற வழியில்லை என்று நம்பினார்கள்” என்று ஆத்திரத்தோடு எழுதுகிறார். பூனைக்குட்டி சாக்குப்பையிலிருந்து வெளியே வந்துவிட்டது.

இந்தியா என்றாலே கர்மா, மறுபிறவி, சாதி என்பதுதானாம்! அவற்றைக் கைவிடச் சொல்வது இந்தி யாவையே கைவிடுவதாம்! இந்தியா பின்தங் கிப் போனதற்கு வைதீக மதக்கோட்பாடுகளும் காரணமல்ல, சாதி எனும் சமூகக்கட்ட மைப்பும் காரணமல்ல, பிறகு எது காரணம்? அதற்குள் போகவில்லை குருமூர்த்தியார். வை தீக மதத்தையும், சாதியத்தையும் காத்து நிற் பதில் குறியாக இருக்கிறாரே தவிர, வேறு எது காரணமாக இருக்கும் என்று அலசவில்லை. அது பயனற்றது என்பதை அவர் அறிவார். உண்மையான காரணம் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டு விட்டது. அதை மூடி மறைக்கிற வேலை மட்டுமே தங்களுக்கு இருப்பதை இவ ரைப் போன்ற பழமைவாதிகள் அறிவார்கள்.ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்து முடிவில் ஆட்சியையே பிடித்து விட்டார்கள், துலாக்கோல் பிடித்து வந்து முடிவில் செங்கோலைப் பிடித்து விட்டார்கள். இதற்கு மூலகாரணம் இங்கே இருந்த நிலப் பிரபுத்தவத்தை விட அவர்கள் வசம் முத லாளித்துவம் எனும் நவீன அமைப்பு இருந் தது. அவர்கள்தாம் அதை நமக்கு அறிமுகப் படுத்தினார்கள். அதன் பிறகுதான் இங்கே நவீன தொழில்வளர்ச்சி ஏறபட்டது. ஏகாதிபத் திய ஆடசி எனும் கெடுதலில் நமக்கு கிடைத்த ஒரு நன்மை அது.
இப்போதும் அந்த முதலாளித்துவம்தான் இங்கே பரவி வருகிறது - அதனுடைய சகல எதிர்மறைக் கூறுகளுடனும்.இங்கே ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்கிறார் குருமூர்த்தியார். அது : “இந் தியா தன் சொந்தப் பொருளாதார முன்மாதிரி யை உருவாக்கிக் கொண்டிருக்கிறது....(இது) உயிர்த்துடிப்போடு இயங்கும் இந்திய சமு தாயத்தின் அங்கங்களான இந்தியக் குடும்பங் கள், சமூகங்கள், சாதிகள் எதையும் தனிமைப் படுததி அணுமயமாக்கவில்லை. எப்போதும் நம் மேட்டுக்குடி மக்களால், நம் ஜனநாயக அர சியல் சமுதாயம் சிதைவதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் சாதிய, சமூக அடிப்படையிலான அரசியல் கூட ஒரு வகையில் ஒத்திசைந்து போகக்கூடிய ஒரு வழிமுறைதான்.”இந்திய முதலாளித்துவம் முழுக்க முழுக்க மேற்கத்திய பாணி அல்ல. அங்கே உருவான முதலாளித்துவமானது அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அங்கங்களை எல்லாம் சிதறடித்துவிட்டது. இங்கே உருவான முதலாளித்துவமோ அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவ அங்கங்களான குடும்பங்களை மட்டுமல்ல, “சமூகங்கள், சாதிகள்” என்பவற்றையும் பாது காத்துக் கொண்டது, அவற்றோடு ஒத்தி சைந்து போனது, அதாவது, மேற்கத்திய முத லாளித்துவம் காலாவதியான நிலப்பிரபுத்துவத்தை முட்டி மோதி வீழ்த்தியது என்றால் இந்திய நிலப்பிரபுத்துவமோ அத்தோடு பல விஷயங்களில் சமரசம் செய்து கொண்டது. இதுதான் இந்திய முதலாளித்துவத்தின் தனிச் சிறப்பு. இதுவே குருமூர்த்தியாரின் கருத்து. இது நல்ல ஒப்புதல் வாக்குமூலம். இதை யொரு பெருமையான விஷயமாகக் கருதி, இங்கே முதலாளித்தவமானது சாதியத்தோடு எப்படி இசைந்து போகிறது, ஒட்டி உறவாடு கிறது என்பதற்கு உதாரணங்களையும் தரு கீறார் மனிதர்.

சில சாதிகளின் பெயர்களைச் சொல்லி, அந்த சாதியக் கட்டமைப்புக்குள்ளேயே அவர்கள் எப்படி சில தொழில்துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள் என்று பெருமிதத் தோடு குறிப்பிட்டிருக்கிறார். பிறகு இதை யொரு கருத்தியலாக இப்படி வடித்தெடுக்கிறார்: “ இந்தியாவில் சாதி, சமூகங்கள் எல்லாம் அண்டைப்புறம் தாண்டிச் செயல்படும் சமுதாய அமைப்புகளாகும். மேற்கத்திய நாடுகளில் தொழில்மயமாக்கத்தி னால் மக்களிடையே இருந்த அண்டைப் புற உறவுமுறைகள் குலைக்கப்பட்டன. ஆனால் நம் நாட்டின் சாதிய, சமூக அமைப்புகளால் தொழில் மயமாக்குதலின் பிரச்சனையை எளி தாகவும், செயலாற்றலுடனும் கையாள முடிந்தது.”இந்திய முதலாளித்துவமானது மடிசஞ்சி நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டணி அமைத் திருப்பதைக் கொஞ்சி மகிழ்கிறார். இந்த நவீன காலத்தில் சாதியத்தை இப்படிப் பச்சையாக ஆதரிக்கிற ஓர் அறிவு ஜீவியை நீங்கள் கண் டதுண்டா? சங் பரிவாரத்தில்தான் அப்படிப் பட்ட ஆட்கள் இருப்பார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிப் போனது.முதலாளித்துவ வளர்ச்சிக்கு சாதியம் இடையூறாக இல்லை, மாறாக உதவியிருக் கிறது என்று கைநடுங்காமல் எழுதியிருக் கிறார். “சுதந்திரம், சமத்தவம், சகோதரத்துவம்” என்று ஐரோப்பாவில் முழங்கிப் புறப்பட்ட முதலாளித்துவம் இந்தியாவில் சாதியம் எனும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டில் மடங்கிப் போய் தனது கொள்கை முழக்கத் தைக் கைவிட்ட கொடுமையைச் சுத்தமாக மறைத்திருக்கிறார். அந்த அசிங்கத்தை அற்புதச் செயலாக வருணித்திருக்கிறார்.

கனடாவின் “நார்தர்ன் பிரிட்டிஷ் கொலம் பியா பல்கலைக்கழகத்தை” சார்ந்த மூன்று பேராசிரியர்கள் இந்தியக் கம்பெனிகளின் இயக்குனர் அவைகளில் சாதியம் எப்படி நிலவுகிறது என்பது பற்றி ஓர் ஆய்வு நடத்தி னார்கள்; அதன் முடிவுகளை “எக்னாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி” இதழில் (11-8-12) வெளியிட்டார்கள். தங்களது இந்த ஆய் வுக்காக இந்தியாவின் ஆயிரம் பெரிய கம்பெனி களை எடுத்துக் கொண்டார்கள். இந்தியாவின் அனைத்துக் கம்பெனிகளது மொத்த சந்தைப் படுத்தப்பட்ட மூலதனத்தின் ஐந்தில் நான்கு பங்கு இந்த ஆயிரம் கம்பெனிகளுக்குடையது. அப்படியென்றால் இவை எவ்வளவு பெரிய வை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அவர்களது ஆய்வு முடிவுகள் வருமாறு: “இயக்குநர் அவை உறுப்பினர்களில் 93 சதவிகிதம் பேர் முன்னேறிய சாதியினர். 46 சதவிகிதம் பேர் வைசியர்கள், 44 சதவிகிதம் பேர் பிராமணர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் முறையே 3.8 சதவிகிதம் பேர் மற்றும் 3.5 சதவிகிதம் பேர். கிட்டத்தட்ட 65 சதவிகிதம் இந்தியக் கம்பெனிகளின் இயக் குநர் அவை ஒவ்வொன்றும் ஒரேயொரு முன் னேறிய சாதியினரைக் கொண்டுள்ளது.”சரித்திர ரீதியான நியாயப்படி பார்த்தால் நிலப்பிரபுத்துவ சாதியத்தை முதலாளித்துவம் சிதைத்திருக்க வேண்டும். இந்தியாவிலோ அது சாதியத்தோடு சமரசம் செய்து கொண் டுள்ளது. இங்கே வர்க்கமும் சாதியமும் இன்ன மும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இந் திய முதலாளித்துவத்தின் படுபிற்போக்குத் தனமான குணம் இது தான். இதைத்தான் குருமூர்த்தியார் ஏற்றிப் போற்றுகிறார்!இன்னும் சொல்லப்போனால், நம்நாட்டு முதலாளித்துவம், தாழ்த்தப்பட்ட - பழங்குடி யின - பிற்படுத்தப்பட்ட மக்களை மட்டுமல் லாது மதச் சிறுபான்மையினரான முஸ்லிம் களையும் அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. இந்தியப் பெரும் கம்பெனிகளில் - அவற்றின் இயக்குனர் அவைகளில் - இவர்கள் மிகச் சொற்பமே என்பதையும் இந்தப் புள்ளிவிபரங் கள் வெளிப்படுத்துவதை நோக்குங்கள். ஏற் கனவே இதுபற்றி சச்சார் குழுவும், மிஸ்ரா கமி சனும் பேசியிருக்கின்றன. இந்தியத் தொழில் துறையில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படு கிறார்கள் என்பதை உணர்ந்துதான் இவர் களுக்கென்றே தனி நிதி கார்ப்பரேசன் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலைமை இங்கே உள்ளது. ஆனால், குருமூர்த்தியாருக்கோ இதுவெல்லாம் இந்தியப் பெருமையாக உள்ளது.”“முறைசாரா அமைப்புகளோடு இணைந்து செயலாற்றக்கூடிய ஒரு சந்தை.... அது மட்டுமே நிலைத்து நிற்கும்” என்றாரே அது இப்படிப்பட்ட இந்திய முதலாளித்துவம் தான். சாதி மதப்பாகுபாடு காட்டிக் கொண்டே வளருகிற முதலாளித்துவம் தான். இதிலே பாலினப்பாகுபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும் கம்பெனிகளது நிர்வாகத் தில் பெண்களின் பங்கும் மிகமிகச் சொற்பமே. இதுபற்றி பெண்களுக்கான தேசிய கமிசன் தனது கவலையை அவ்வப்போது வெளி யிட்டு வருகிறது. மொத்தத்தில் இந்திய பாணி முதலாளித்துவமானது சாதியமும், ஆணாதிக் கமும் நிறைந்த வருணாசிரம முதலாளித் துவம். இதைத்தான் துதிக்கிறார் மனிதர்.இதைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும், குலைத்து விடக்கூடாது என்றும் இப்படி வலி யுறுத்துகிறார். “வளர்ந்து வரும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, குழந்தைகளின் உரிமை தொடங்கி பெரியவர்களின் உரிமை, பெண் ணுரிமை, ஒற்றைப்பாலினர் உரிமை வரை அனைத்துமே சமுதாயத்தைப் பிரிக்கவே உதவுகின்றன. இவை முறைசாரா அமைப்பு களையும், உறவுமுறைகளையும் வலுவிழக்கச் செய்துவிட்டன.” பெண்ணுரிமை எல்லாம் பேசக்கூடாது, மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இருக்கக்கூடாது, அப்படி இல்லாமலாக்கியதுதான் பாரதத்தின் முறைசாரா அமைப்புகளும், உறவுமுறைகளும்! இவற்றைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டே இங்கே முதலாளித்துவம் வளருகிறது. ... அது தொடர வேண்டும் அது மட்டுமா? இதுவே அமெரிக்கப் பாணி முதலாளித்துவத்திற்கு சரியான மாற்று! இதை உலகம் முழுக்க ஏற்க வேண்டும், இந்திய வருணாசிரம முதலாளித் துவத்தை உலகம் முழுக்கக் கொண்டு வரப் பகற்கனவு காண்கிறது ஆர்எஸ்எஸ். அதையே எதிரொலிக்கிறார் இந்த பிரகஸ்பதி.

குருமூர்த்தியாருக்குச் சொல்லிக் கொள்வோம் - உங்கள் கனவு பலிக்காது. அமெரிக்க பாணி முதலாளித்துவம் அழியப்போவது உண்மை. ஆனால் அதனிடத்தில் கேடு கெட்ட இந்திய பாணி முதலாளித்துவம் வராது. மாறாக, சகல பாணி முதலாளித்துவமும் அழி யும். அதனிடத்தில் சோசலிச சமுதாயம் மல ரும்.

அதுவே முதலாளித்துவத்திற்கான மெய்யான மாற்று.மார்க்ஸ் இன்னும் வாழ்கிறார், தனது சீரிய விஞ்ஞானச் சிந்தனையால் வாழ்கிறார். அவரின் தேவையை உலக வாழ்வு நித்தம் நித்தம் உணர்த்திக் கொண்டிருக்கிறது. பூமிப் பந்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமல்ல, இந்த “புண்ணிய பூமி”-க்கும் அவர் தேவைப்படு கிறார்.நிலப்பிரபுத்துவத்தின் சாதியத்தை ஒழிக்க வேண்டிய முதலாளித்துவம், அதனோடு கூட்டுச் சேர்ந்து கொண்ட அநீதி இங்கே நடந் திருக்கிறது. தனது எதிரி செய்து முடித்திருக்க வேண்டிய வேலையும் தனது தோள் மீது விழுந்திருப்பதை இந்தியப் பாட்டாளி வர்ககம் உணர்ந்திருக்கிறது. அது வருணாசிரமம், முதலாளித்துவம் இரண்டையும் ஒருசேர வீழ்த்தி இங்கும் சோசலிசத்தை உருவாக்கிக் காட்டும். அதற்கும் மாமேதை மார்க்சே வழி காட்டுவார். அந்த வெற்றி கீதத்தை குரு மூர்த்தியார் கேட்காமல் போகலாம்; ஆனால் அவரின் சந்ததியார் கண்டிப்பாகக் கேட்பார்கள்.

 அருணன்

Wednesday, June 5, 2013

துருக்கி அரசிற்கு எதிராக 2.50 லட்சம் பொதுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்


துருக்கி அரசிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அந்நாட்டு பொதுத்துறைகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களும் செவ்வாயன்று பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துருக்கியை ஆளும் பிரதமர் ரைய்ப் ஏர்டோகன் தலைமையிலான அரசு, தொழிலாளர் நலச் சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்திருத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த சட்ட திருத்தங்களை கண்டித்து கடந்த வாரம் அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள டாக்சிம் சதுக்கத்தில் அரசிற்கு எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்நாட்டின் காவல்துறை கண்முடித்தனமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், காவல்துறையினர் பயன்படுத்திய கண்ணீர்புகை குண்டு தாக்குதல் உள்ளிட்டவைகளால் பலர் பார்வையிழந்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.துருக்கி அரசின் இத்தகைய தொழிலாளர் விரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர், ஜனநாயக அமைப்புகளின் சார்பில் கடந்த ஒருவார காலமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அந்நாட்டின் பொதுத்துறைகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

இதன்படி, செவ்வாயன்று பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்நாட்டின் பொதுத்துறை நிறுவன பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கின.மேலும், அரசிற்கு எதிரான இந்த எதிர்ப்பு போரட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் பரவியுள்ளன. குறிப்பாக அந்நாட்டின் தலைநகர் அங்காரா மற்றும் கடற்கரை நகரங்களான அன்டாலயா, இஸ்மீர் உள்ளிட்ட 67 நகரங்களுக்கு இந்த எதிர்ப்பு போராட்டங்கள் பரவியுள்ளது. இதனிடையே, இப்போராட்டத்தின் போது போலிசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Methane gas project: Cauvery Delta Farmers Struggle (மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுக: காவிரி டெல்டா விவசாயிகள் போராட்டம்)


கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்ப ரேசன் லிமிடெட் என்ற தனியார் நிறு வனத்துக்கு திருவாரூர், நாகை, தஞ் சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட் டங்களில் காவிரி படுகையில் படிந் துள்ள மீத்தேன் எரிவாயுவை எடுப் பதற்கான அனுமதியை மத்தியஅரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட் டால் டெல்டா மாவட்ட விவசாயம் முற்றிலுமாக அழிந்துபோகும் என்ற அபாயத்தை எடுத்துரைத்து, இத்திட் டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

நிலத்தடி நீரை வெளி யேற்றிவிட்டு, அதன்பிறகே மீத்தேன் எரிவாயுவை சேமிக்க வேண்டும்.ஏற்கனவே காவிரிடெல்டா மாவட் டங்கள் சாகுபடிப் பணிகளில் மிகுந்த பின்னடைவைத் சந்தித்து வருகின் றன. நிலத்தடி நீரும் குறைந்து வரு கிறது. இந்த மோசமான சூழ்நிலை யில் மேற்கண்ட தனியார் நிறுவனம் நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டால் விவ சாய விளைநிலங்கள் முற்றிலுமாக அழிந்துபோகும். மேலும் கடல்நீர் உள்ளே புகுந்து இருக்கின்ற தண் ணீரும் உப்புநீராக மாறிவிடும் ஆபத் தும் உள்ளது. வாயுமண்டலம் பாதிக் கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படும் ஆபத்தும் இதில் உள்ளது.

பாதிக்கப்படும் பகுதிகள்: குடவாசல் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியப் பகுதிகளில் சித்தாடி, குடவாசல், மேலப்பாலையூர், மழுவச்சேரி, ஓகை, கீழப்பாலையூர், கமு கக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்ப்பாகூர், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர், நீடாமங்கலம் ஒன்றியத் தில் அனுமந்தபுரம், பூவனூர், கீழாள வந்தசேரி, அரிச்சபுரம், கோயில் வெண்ணி, ஆதனூர், அன்ன வாசல், காளாச்சேரி, மன்னார்குடி ஒன்றியத்தில் கர்ணாகூர், வடபாதி, சேரன் குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், பருத்திக்கோட்டை, காளாஞ்சிமேடு, வலங்கைமான் ஒன் றியத்தில் சாரநத்தம், மாணிக்கமங் கலம், கொட்டையூர், கீழவிடையல், ராஜேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கண்டியூர் ஆகிய பகுதிகள் முற்றிலு மாக விவசாயம் பாதிக்கப்பட்டு குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பாலைவன மாக டெல்டா மாவட்டங்கள் மாறி விடும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்ற விவசாயிகள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் கும்ப கோணம், பாபநாசம், ஒரத்தநாடு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 12 கிராமங்களிலும் மீத்தேன் எடுக்கும் நிறுவனம் முதல்கட்டவேலையைத் துவங்கியுள்ளது. மேலும் 254 கிரா மங்களில் இத்திட்டத்தைச் செயல் படுத்தப்போவதாகவும் அறிவித்துள் ளது. இதனால் சுமார் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாலைவனமாக் கப்படும் அச்சம் விவசாயிகளிடத்தில் ஏற்பட்டுள்ளது. 

Monday, June 3, 2013

சீனாவில் கோழி இறைச்சிக்கூடத்தில் தீ விபத்து: 113 பேர் பலி - 55 பேர் படுகாயம்

பெய்ஜிங், ஜூன் 3-
சீனாவில் கோழி இறைச்சிக் கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 113 பேர் பலியாகினர். 55 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சீனாவில் ஜிலின் மாகாணத்தில் டெகு என்ற இடத்தில் கோழி இறைச்சிக்கூடம் உள்ளது. இதில் 1200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கப்பட்ட இந்த தொழிற்சாலையின் மூலம் ஆண்டிற்கு 67 ஆயிரம் டன் இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திங்களன்று உள்ளுர் நேரப்படி காலை 6 மணிளவில் தொழிற்சாலையில் 300 தொழிலாளர்கள் பணியாற்ற வந்திருக்கின்றனர்.

திடீரென தொழிற்சாலையில் தீ பற்றி எரிந்திருக்கிறது. இதையடுத்துஅங்கு அபாய ஒலி எழுப்பப்பட்டிருக்கிறது. இதனால் பதறியடித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு தப்பி வெளியே ஓடி வந்துள்ளனர். ஆனால் பற்றியெறிந்த தீயால் சூழ்ந்த கரும்புகையில் எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள்ளையே மாட்டிக் கொண்டனர். பலர் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து 40 மீட்டர் தூரம் வரை தீ பற்றிய நிலையில் ஓடி வந்துள்ளனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை தொடர்ந்து அணைத்து வந்தனர். மதியம் தீ முழுமையாக அனைக்கப்பட்டது. தீ அணைக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலடங்கள் மீட்கப்பட்டன. அதில் இதுவரை மொத்தம் 113 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் 55 பேர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஷாங்சங் சென்ட்ரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்துகோழிஇறைச்சி தொழிற்சாலையில் சுற்றுச்சூழல்மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி அமைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Wednesday, May 29, 2013

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு பற்றி மா சே துங்

ஏகாதிபத்திய சக்திகளாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் நசுக்கப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்ற நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சிக்கு ஒரு கடமை உண்டு. அக் கட்சி தேசிய அளவில் ஒரு பொதுவான பரந்து விரிந்த நோக்கத்தோடு தனது பதாகையை உயர்த்த வேண்டும். ஏகாதி பத்திய வேட்டை நாய் களைத் தவிர மீதமுள்ள அனைத்து சக்திகளையும் ஏகாதி பத்தியத்துக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் தேசபக்தியை உலகம் அறியச் செய்வோம். உலக சமாதானத்தையும், தேச ஒற்றுமையையும் நாம் எந்த அளவுக்கு உறுதியுடன் உயர்த்திப் பிடிக்கின்றோம் என்பதையும் உலகறியச் செய்வோம்.... (மாவோ)

மாவோ 1958ல் நான்நிங் மாநாட்டில் நிகழ்த்திய உரை யுடன் தொகுப்பு எட்டு துவங்குகிறது. தோழர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அறிவுரையுடன் ஆரம்பிக்கும் மாவோ, கட்சிக் குழுக்களில் உள்ள தோழர்களுக்கு முக்கிய மான அபாயம் எந்பது `கம்யூனிஸ்டாக இருந்து நிபுணத்துவம் பெறாமல் இருப்பதுதான் என்கிறார் யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்டு, புதிர்களை புரிந்து கொண்டு, தெளிவாக செயல்பட கற்க வேண்டும். மக்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. இருப்பினும் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல் தலைமைக்குழுவின் செயல்பாட்டையும் விமர்சிக்க அவர் தவறவில்லை. மாவோவைப் பொறுத்தவரை எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தாலும், பேசி, விவாதித்து, கட்சி கமிட்டிகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த இயலு மென்பதை அழுத்தமாக நம்புகிறார். அத்தகைய நம்பிக்கை ஒருமித்த செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானதாகும். கம்யூனிஸ்டுகள் எப்படி இருக்க வேண்டும்?

எந்த ஒரு பிரச்சனையையும் அரசியலாக அணுக வேண்டும். அரசியலற்ற அணுகமுறையை விமர்சிக்க வேண்டும். தத்து வார்த்த மற்றும் அரசியல் பணி என்பது நமது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பணிக்கான தனித்திறனை உறுதி செய்வதாகும். நமது தத்துவார்த்த அரசியல் பணியில் ஏற்படும் லேசான தொய்வு, நமது பொருளாதார, தொழில்நுட்ப பணியில் நெறிதவற வழி வகுத்துவிடும்... 

நடைமுறை அறிவைப் பெறாமல் இருப்பது போலி சிவப்பாகவும், அறிவற்ற அரசியலாகவும் ஆகிவிடும் என்று வலியுறுத்துகிறார். பணிமுறைகளுக்கு அறுபது அம்சங்கள் என்ற தலைப்பின் கீழ் பல ஆலோசனைகளை - அரசியல், பொரு ளாதாரம், சமூகம், கட்சியை கட்டுதல், சோஷலிச கட்டுமானம், திட்டங்கள் - என பரவலான விஷயங்கலை தெளிவாக விளக்கி யுள்ளார். குறிப்பாக கட்சி தோழர்கள், கமிட்டிகள் ஊதாரித் தனத்தை எதிர்க்க வேண்டும் என்றும், நெறிப்படுத்தும் இயக் கத்தை அமுலாக்க ஒவ்வொரு கிளையும் சில நாட்களை ஒதுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். முந்தைய தொகுதிகளில் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, ஊழியர் பயிற்சியை கட்சித் தலைமை முக்கியமான விஷயமாகக் கருதவேண்டுமென்று கூறுகிறார். தவிர, ஒரு பக்கம் சோஷலிச மற்றும் ஏகாதிபத்திய உலகங்களுக்கிடையே கடுமையான வர்க்கங்கள் இன்னமும் நீடிப்பதால், நாட்டுக்குள்ளேயே வர்க்க போராட்டம் நடப்பதையும் விளக்கி, இருவகையாந அம்சங்களிலும் கட்சி, கிளைகள், தோழர்கள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக முன்வைக்கின்றார்.

வறட்டு வாதம்
`கற்பனாவாதம் எப்படி பல துறைகளில் பிரச்சனைகளை உருவாக்கியதோ, அதேபோல் வறட்டுவாதம் என்பதும் நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்ததை மாவோ சோவியத் யூனியன் அனுபவங்களின் மூலம் விளக்குகிறார். வறட்டு வாதம் பல்வேறு சூழ்நிலைகளில் தோன்றுகிறது. இதை ஆராய்வது அவசியம். வறட்டுவாதம் ஏன் தோன்றுகிறது என்பதும் ஆய்வுக் குட்படுத்த வேண்டிய விஷயம். சீனாவின் கனரகத் தொழில் வளர்ச்சி, கல்வி, பொது சுகாதாரத்துறை போன்றவற்றில் சோவியத் யூனியனை அப்படியே அச்சு அரசலாக பின்பற்றியதால், சீனாவில் சில பிரச்சனைகள் தோன்றின. சோவியக் திட்டமிடலில் பெரும் பகுதி சீனாவுக்குப் பொருத்தமாக இருந்தது. அதன் ஒரு பகுதி பொருத்தமாக இல்லை. எனினும் ஆய்வின்றி அது இறக்கு மதி செய்யப்பட்டது.  சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கு மிடையே இருந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ளாமல், குருட்டுத் தனமாக பின்பற்றியதால் பிரச்சனைகள் தோன்றின. அவற்றை புரிந்துகொண்ட பின்னர் நிலைமை மாறியது என மாவோ விளக்க மளித்துள்ளார். பல தோழர்கள் விதிமுறைகளையும்,  மரபுகளையும் எதிர்க்கின்றனர். ஆனால் அவற்றிற்கு மாற்று உண்டா, சீன நிலைமைகளுக்கேற்ப அவற்றை பொருத்த இயலுமா என பார்க்காமல், வறட்டுத்தனமாக எதிர்ப்பது சரியாகுமா என வினவுகிறார். சோவியத் அனுபவத்தில் நல்லவை அனைத்தையும் ஏற்று, மோசமானதை நிராகரிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறார்.

ஒற்றுமை, ஒற்றுமையின்மை

கட்சித் தோழர்கள் மனதில் எழுகின்ற எண்ணங்கள் மாறிக் கொண்டே வருகின்றன. கருத்து வேறுபாடுகள் எழு கின்றன. இதனால் ஒற்றுமையின்மை ஏற்படுகிறது. ஆனால் இது தீர்க்க இயலாத பிரச்சனை அல்ல என்கிறார் மாவோ. ஒற்றுமையைப் பற்றி பேசும் பொழுதே ஒற்றுமையின்மை ஏற் படுகிறது. எல்லா நேரத் திலும் வேறுபாடற்ற ஒற்றுமையைப் பற்றி பேசி போராட்டத்தைப் பற்றி பேசாதது மார்க்சியம்-லெனினியம் அல்ல என்கிறார். மேலும், போராட்டத்தின் வழியாகவே ஒற்றுமை உருவாகிறது என்றும் கூறுகிறார். கட்சிக்குள், வர்க்கங்களுக்குள், இத்தகைய போராட் டங்கள் ஏற்பட்டு பின் ஒற்றுமை ஏற்படுகிறது. போராட்டம், முரண் பாடுகள் பற்றி பேசாமல், மாறுபடாத ஒற்றுமைப்பற்றி பேச இயலாது. இதை சோவியத் யூனியனில் நிலவிய கட்சி தலைவர்கள் - தொண்டர்கள் இடையேயான முரண்பாடுகளை மேற்கோள்காட்டி விளக்குகிறார். தலைவர்களுக்கும், தலைமை தாங்கப்படுவோ ருக்கும் இடையேயான முரண்பாடுகள் பற்றி சோவியத் யூனியன் பேசவில்லை. முரண்பாடுகள் இல்லையென்றால் போராட்டம் இருக்காது.... முன்னேற்றம் இருக்காது.... எல்லா நேரத்திலும் ஒற்றுமைபற்றியே பேசுவது தேங்கி நிற்கும் ஒரு குட்டை போன்றது. இது வெறுப்பு ஏற்பட வழிவகுக்கும் என்று கூறி, விவாதம் மூலம், முரண்பாடுகளை களைய இயலும் என்றும், ஒற்றுமை என்பதை வறட்டுத்தனமாக பார்ப்பது சரியல்ல என தெளிவுபடுத்துகிறார். இதன் மூலம் நமது தத்துவத்தை சரிசெய்து கொள்ளவும், புரிதல் நிலையை உயர்த்திக் கொள்ளவும் முடியும் என்பது வலியுறுத்தப் படுகிறது.

ஒற்றுமையை எப்படி கொண்டுவர இயலும் என்பதை விளக்கி, சிந்தனைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியதன் அவ சியத்தை சுட்டிக்காட்டுகிறார். மனம் எப்போது கரடு தட்டிப் போனாலும் அது ஆபத்தானது. நமது ஊழியர்களின் சிந்தனையை உயிர்ப்பூட்ட, மைய, வட்டார, மாகாகண ஊழியர்களுக்கு கல்வியும், பயிற்சியும் தரப்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டுகிறார். பல விஷயங்களை முன்கூட்டியே கணிக்க இயலாது. சோஷலிசத்தை கட்டும்பொழுது, பிரச்சனைகள் எழத்தான் செய்யும். ஏகாதி பத்தியம், நிலபிரபுத்துவம், அதிகார மனோபாவ முதலாளித்துவம், வலதுசாரிகள் ஆகியோரை எதிர்கொள்வது எளிதான காரிய மல்ல. அவ்வாறு எதிர்கொள்கையில் தவறுகள் நேரும். தவறுகளை நிராகரிப்பது வறட்டுவாதம், தவறுகள் இருக்கக் கூடாதென்பது மார்க்சியத்திற்கு புறம்பானது. தவறுகளைத் தாண்டி மார்க்சும், லெனினும் சாதித்துள்ளனர் என்பதை பல உதாரணங்கள் மூலமாக மாவோ விவரித்துள்ளார். சாதிக்க வேண்டுமெனில் நமது பணி யில் முன்னேற்றம் காணவேண்டும். உறுதியுடன் செயல்படுதல், நேர்மையுடன் பேசுதல், அனைத்துப் பிரச்சனைகளையும் துடைத் தெறியும் உணர்வை கொண்டிருத்தல், ஆகியவற்றுடன் செயல்பட மார்க்சிய தத்துவத்தை முழுமையாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் குறைகள் இருந்தாலும் கூட, இத்தகைய உணர்வுகலை ஸ்டாலின் கொண்டிருந்நததை மாவோ சுட்டிக் காட்டியுள்ளார். நம்பிக்கை கண்மூடித்தனமாக இருந்தால், சிந்தனைகள் முடங்கிப்போகும்.

புதிய சிந்தனைகளை உருவாக்கியவர்கள் பண்டைகாலம் தொட்டு, அதிகம் படித்திராத இளைஞர்களாக இருந்துள்ளனர் என்றும், அனுபவங்கள் அவர்களின் சிந்தனைகளை செழுமைப் படுத்த உதவியுள்ளன என்று கூறும் மாவோ, அதிகம் படிக்க வில்லை என்று வருந்தாமல் படிப்பது, எழுதுவது போன்ற திறமை களை ஊழியர்கள் வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலி யுறுத்துகிறார். கன்ஃபூசியஸ் இருபத்து மூன்று வயதில் எழுத ஆரம்பித்தார். சாக்கிய முனி பத்தொன்பது வயதில் புத்தமதத்தை உருவாக்கி, பின் படிப்படியாக கல்வி பெற்றார். மார்க்ஸ் மிகச் சிறிய வயதில் இயக்கவியல் பொருள் முதல்வாத்தை எழுதினார். மின் சாரத்தை கண்டுபிடித்த ஃப்ராங்களின் பத்திரிக்கைப் போடும் பையனாக வாழ்க்கையைத் துவங்கினார். மார்க்சிம் கார்க்கி துவக்க கல்வி மட்டுமே கற்றார்.  தூக்கமாத்திரை கண்டு பிடித்தவர் ஒரு மருந்தாளுநர்தான். டாக்டர் அல்ல. இப்படிப்பட்ட இளைஞர்கள் பழைய பத்தாம்பசலித்தனங்களுக்கு தீயிட்டனர். கற்றல் என்ற விஷயத்தில் இளைஞர்கள் பிடிப்புடன் இருந்தால், புதுமை படைக்க முடியும், புதிய சிந்தனைகளை உருவாக்க முடியு மென மாவோ நம்பினார். செங்போ நாட்டில் மாவோ நிகழ்த்திய உரையில் நெறிப்படுத்தும் இயக்கம் தொடர்பாக கூறிய பல விஷ யங்கள் முந்தைய தொகுப்புகளிலும் வெளிவந்த கருத்துக்கள் தான். அவை மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

1958ல் எட்டாவது கட்சி காங்கிரசில் மாவோ ஆற்றிய உரை மிகவும் பயனுள்ள உரையாகும். மார்க்சின் நூல்களை படிக்க, மார்க்சியம் பற்றி அறிந்துகொள்ள நிறைய தயக்கம் உள்ளது. அது மிகவும் கடினம் என்ற எண்ணம் நமது தோழர்கள் மத்தியிலும் உள்ளது. மாவோ கூறுகிறார். மார்க்சின் அனைத்து நூல்களை யும் படிக்க வேண்டிய தேவையில்லை. அடிப்படை விஷயங்களை படித்தாலே போதுமானது. அக்டோபர் புரட்சி பற்றி மார்க்ஸ் கூற வில்லை. ஆனால் லெனின் செய்தார். நடைமுறை விஷயத்தில் மார்க்சை லெனின் விஞ்சிவிட்டார்.... எனவே, தோழர்கள் தங்களால் கற்க இயலாது என்ற எண்ணத்தை கைவிட்டு, முன்னேற வேண்டும். சிறந்த எடுத்துக்காட்டாக கிருமிகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். கிருமிகள் என்ற நுண்ணுயிர் வகை கள் அளவில் சிறிதாக இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அவை மனிதனைவிட மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றிடம் மூடநம்பிக்கை இல்லை. முழுமையான சக்தியோடு இருக்கின்றன. அவற்றிடம் மூடநம்பிக்கை இல்லை. முழுமையான சக்தியுடன் இருக்கின்றன. அவை எதற்கும் அஞ்சுவதில்லை. அச்சமில்லா உணர்வுகொண்ட அவற்றிற்கு எதுவும் பொருட்டல்ல. முன்னேற்று வதற்காக அவை போராடுகின்றன. முனைப்பும், அடித்தளமும் இருந்தால் கண்டிப்பாக வெற்றிபெறமுடியும். முந்தைய தொகுப்பு களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்கள் - குறிப்பாக, மக்களிட மிருந்து கற்றுக்கொள்வது பற்றியவை-மீண்டும் மீண்டும்  வலி யுறுத்தப்பட்டுள்ளன. நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். செங்கொடியை ஏற்றி காற்றின் திசையைக் கண்டறியுங்கள். நாம் ஏற்றாவிடில் மற்றவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றுவார்கள். எந்த பெருமலையிலும், சிறுகுன்றிலும் விவாதத்திற்கு பிறகு செங்கொடி ஏற்றப்பட வேண்டும். காற்றின் திசை என்றால் அது கீழைக் காற்றா, மேலைக் காற்றா என்பதுதான் பொருள். கொள்கை திசை என்று பொருள் அல்ல என விளக்கம் அளிக்கிறார் மாவோ.

ஏகாதிபத்தியம் பற்றி முந்தைய தொகுப்புகளில் வெளியிடப் பட்டுள்ள கருத்துக்களையே தொகுப்பு எட்டில்  பிரதிபலிக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் கொடூரம் மாவோவின் பல்வேறு உரைகளில் வெளிப்படுகின்றது. சோவியத் யூனியன் இதர நாடுகளுடன் கொண்டிருந்த உறவை பரிசீலனை செய்திருப்பதும், ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் எத்தகைய நிலையில் உள்ளன என்பதைப்பற்றியும் தனது கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளார். கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் வலுச்சண் டைக்கு போகும் கொள்கையை ஏகாதிபத்திய நாடுகள் ஊக்கு விக்கின்றன. 1958ல் ஆற்றிய உரையில் மாவோ, ஏகபோக மூல தனம் நீடித்திருப்பதால் போர் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை என்றும், இதற்கு காரணம் கச்சா பொருட்கள் மற்றும் சந்தை பற்றாக்குறை என்கிறார்.  1958ல் அமெரிக்கா பல நாடுகளில் எவ்வாறு பதட்டத்தை தோற்றுவித்தது (உ.ம். இராக்) என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்து போராடித்தான் சோஷலிச சமுதாய அணைப்பை கொண்டுவர இயலும்.

1959ல் மாகாண செயலாளர்களுக்கு ஆற்றிய உரையில் புத்த கங்கள் படிப்பது பற்றியும், வேளாண் நிலை பற்றிய கருத்துக்களும் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். நடைமுறை அனுபவம் மூல மாகவே திட்டங்கள், இலக்குகள் பூர்த்தி அடைவதை பற்றி முறை யாக புரிந்துகொள்ள முடியும். பக்கங்கள் 253 - 276 வரையிலான பகுதி முழுவதும், மக்கள் கம்யூன் பற்றியவை. கம்யூன் என்பது என்ன, அது எப்படி செயல்பட வேண்டும், எப்படி செயல்படுகிறது, அவற்றை மேலும் வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் என்ன என்பதை தெளிவாக விவரிக்கிறார். கம்யூன் பற்றி நமக்கு புரிந்துகொள்ள இப்பகுதி மிகவும் உதவிகரமாக அமையும். கம்யூன் என்பது உண்மையில் ஒரு கூட்டமைப்பு அரசு என்கிறார் மாவோ. உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் அந்தந்த பகுதிகள் வளர்ச்சி அடைவது போன்றவற்றில் கம்யூஸ்டுகளின் பங்கு குறிப்பிடத்தக்க தாகும். உற்பத்திக்கான மூலாதாரணங்களை கம்யூன்கள் விரிவு படுத்தின என்பது போன்ற நல்ல அம்சங்கள் இருந்தபோதிலும், மக்கள் கம்யூன்களில் முரண்பாடுகள் இருந்தன. கட்சி கமிட் டிக்கும்,  கம்யூன்களுக்கும் இடையேயான் உறவு எப்படி இருக் கிறது என்பது அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்த வேண்டியது என்றார் மாவோ.  கட்சி கமிட்டிகளுக்கு எழுதிய கடிதத்தில் (மார்ச் 1959) கம்யூன்கள் செயல்பாட்டை விவாதத்திற்குட்படுத்தி, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.  குறிப்பாக கட்சி ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம்தான் முரண்பாடுகள் தெரியவரும். உண்மை நிலையின் அடிப்படையில் இயக்கத்தை விரிவடையச் செய்ய முடியும் என்றும், கெட்டித்தட்டிப்போன சிந்தனைகளில் நெகிழ்ச்சிதன்மையை ஏற்படுத்த இயலும். கீழிருந்து, மேலும், மேலிருந்து கீழுமான தொடர்பு வலுவாக இருந்தால், பிரச் சனைகளை தீர்க்க முடியும். தவறுகளை திருத்தி, கட்சியை வலுப் படுத்த இயலும் என்ற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.

ஏழாவது ப்ளீனத்தில் மாவோ ஆற்றிய உரையில் எட்டு பிரதான விஷயங்களை முன்வைக்கிறார். இவை கட்சி கமிட்டி செயல்பட மிகவும் உதவும். எவ்வாறு திட்டமிட வேண்டும். நெருக்கடியை உறுதியுடன் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றெல்லாம் விளக்குகிறார். அதே போல பணிமுறைகள் தொடர்பான முக்கிய அம்சங்களை தொகுப்பு ஐந்தில் அவர் விளக்கியுள்ளது. மீண்டும் இத்தொகுதியில் சில மாற்றங்களுடன் தரப்பட்டுள்ளது.

இயக்கவியலின் உதாரணங்கள் என்ற (சுருக்கப்பட்ட தொகுப்பு) பகுதியில் மாவோ வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் மார்க்சிய தத்துவத்தை சீனாவின் தன்மைக்கேற்ப விளக்கியுள்ள பகுதி. இது மிகவும் பயனுள்ள பகுதியாகும். மிக எளிமையாக சில தத்துவார்த்த பிரச்சனைகள் விளக்கப்பட்டுள்ளது. இயக்க வியலை புரிந்துகொண்டால்தான் பகுப்பாய்வை புரிந்துகொள்ள இயலுமென்கிறார். மாவோ வளர்ச்சியும், இயக்கமும் எல்லையற்றது என்பது போலவே எதிர்மறைகளின் போராட்டமும் எல்லையற்றது என்கிறார் மாவோ. முரண்பாடுகளில் முதன் முரண்பாடுகளும், துணை முரண்பாடுகளும் உண்டு என்பது நாம் அறிந்தது. சீனா வில் முதன் முரண்பாடுகளின் சாரத்தை உள்வாங்கிக்கொள்ளா மல், துணை முரண்பாடுகளை முதன்மையாக கருதியதால் ஏற் பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி எது முதன்மையானது, எது துணை முரண்பாடு என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார். ஒரு பிரச்சனையிந் சாரத்தை மட்டுமின்ரி அதன் பிரதான போக்கையும், பாதையை பரிசீலிப்பதும் அவசியமென மார்க்சியம் சொல்கிறது என்பதை சுட்டிக்காட்டி, டிட்டோ தத்துவார்த்த ரீதியில் தொய்வடைந்திருப்பதின் மூலம் தான் சரியான பாதை உருவாகிறது என்கிறார். தவறுகளே இல்லாதே முழுமைதான் சரி என்ற கருத்து மார்க்சீய - லெனினியத்தை மீறியதாகும். வரலாற்றை புரட்டினால், தவறுகளே இல்லாத முழுமை நிலை எந்பது இருந்ததில்லை. இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை போற்றுவது விவாதத்தை ஊக்குவிக்கும். அதன் மூலம் சரியான பாதையை நோக்கி செல்ல முடியும். அத்துடன் சோஷலிசப் படிநிலையில் உள்ள இருவகை உடைமை முறைகளை விளக்கி, சீனா, சோவியத் யூனியன் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குகிறார்.

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஒன்றுபட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற கட்டுரை இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருத்தமானது.  1959ல் தேசிய மற்றும் ஜனநாயக இயக்கங்கள் வளர்ந்ததைப் போல, தற்போதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான குரல் இப் பொழுதும் வலுவாக  எழுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுயசார்பு ஆதரவு இயக்கங்கள், இதர பகுதிகளிலும் ஜனநாயக இயக்கங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடக் கின்றன. உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா செய்யும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல என மாவோ இன்றும் உலகின் வளங்களை கொள்ளையடிக்க உலக நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயங்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

இளைஞர்களுக்கு செய்தி

இளைஞர்களுக்கு போதிக்க வேண்டிய கோட்பாடுகள் பற்றி 1960ல் மாவோ எழுதியுள்ளவை, வாலிபர் சங்கத் தோழர்களும், கட்சியும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். (பக்கம் 427)

1. மார்க்சியம் - லெனினியத்தை புரிந்துகொள்ளவும், குட்டி பூர்ஷ்வா உணர்வை வெல்லவும் கற்றுத்தாருங்கள்.

2. கட்டுப்பாட்டையும், அமைப்பையும் வெற்றிருக்கவும், அமைப்புக்குள் குழப்பவாதத்தையும், தாராளவாதத்தையும் எதிர்க்க கற்றுக்கொடுங்கள்.
3. கீழ்நிலையில் உள்ள நடைமுறைப் பணியில் உறுதியாக உட் செல்வதற்கும், நடைமுறை அனுபவத்தை ஏளனமாக பார்ப்பதை எதிர்ப்பதற்கு கற்றுக்கொடுங்கள்.

4. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நெருக்கமாக இருக்கவும், அவர்களுக்கு உறுதியுடன் சேவை செய்யவும் தொழி லாளர்களையும், விவசாயிகளையும் ஏளனமாக பார்க்கும் உணர்வை எதிர்க்கவும் கற்றுத்தாருங்கள்.

வர்க்கத் தனித்தன்மை பற்றி கட்டுரையும் அன்றாட கட்சிப் பணிகளில் ஈடுபடும் தோழர்கள் பல வர்க்க பின்னணியிலிருந்து வருபவர்கள்-புரிந்துகொண்டு, செயலாற்ற  உதவும். ஒருவரின் வர்க்க உள்ளடக்கத்திற்கும்,  செயல்பாட்டிற்கும் இடையே பாகு பாடு இருக்க வேண்டும். நமது வர்க்க பின்னணி எதுவாக இருப் பினும், நாம் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, கீழ், நடுத்தர விவ சாயிகள் பக்கம் இருக்கிறோமா என்பது முக்கியம். சோஷலிச கொள்கையை உருவாக்குவதற்கு வர்க் போராட்டத்தை ஆராய் வது அவசியமாகும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் சுரண்ட லுக்கு ஆளாகின்றனர். அவர்கள் மார்க்சிய நூல்களைப் படித்து, மார்க்சியத்தை தாங்களாகவே உருவாக்க இயலாது. வர்க்க போராட்டங்களில் ஈடுபட்டு அதை அனுபவங்களிலிருந்து கல்வி கற்கின்றனர். சுரண்டும் வர்க்கங்களிலிருந்து கட்சிக்குளஅ சிலர் வந்திருப்பார்கள். அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பார்க்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தை வீழ்த்த அனைவரும் வர்க்க உணர்வு அடிப்படையில் திரட்ட வேண்டியது கடமையாகும். நிலபிரபுத்துவ வர்க்கம் மீட்சி பெற்றது தொடர்பான ஆய்வு, புரிதலில் பின்தங்கி இருந்ததாக மாவோ சீன கம்யூனிஸ்ட் கட்சியை சுய விமர்சனம் செய்யும் அதே சமயம், நகர்ப்புற எதிர்ப் புரட்சி பற்றி நன்கு அறிந்திருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஜனநாயக மத்தியத்துவம்

1962ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரை தொகுதி எட்டில் மிகவும் முக்கியமான பகுதியாகும். கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தருவதுடன் துவங்குகிறது. சமீப காலமாக ஜனநாயக மத்தியத்துவம் பற்றி நமது தோழர்களும் விரிவாக விவாதிக்கின்ற சூழலில் (சென்ற இதழில் இது தொடர்பான கட்டுரை உள்ளிட்ட) மாவோவின் கருத்துக்களை படிப்பது, ஜன நாயக மத்தியத்துவம் பற்றி மேலும் தெளிவுபெற உதவும். மார்க்ஸ் - லெனின் விளக்கிய ஜனநாயக மத்தியத்துவம் பற்றி சிலர் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்ற விமர்சனத்துடன் துவக்குகிறார். மக்களின் மனம் திறந்த பேச்சுக்கு அஞ்ச வேண் டாம். நமது அணுகுமுறை உண்மையை ஏற்றுக் கொள்வதும், தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருப்பதும் ஆகும். நமது பணிகளில் மக்களுடன் மாறுபடும் சூழள் ஏர்படலாம்.... அதை கத்திகளாலும், துப்பாக்கிகளாலும் சரி செய்ய இயலாது. மாறுபாடுகள் பற்றி விவாதிக்க வேண்டும். விமர்சனம் மற்றும் சுய விமர்சனம் மூலமே தீர்வு காண முடியும். ஜனநாயக முறையால், மட்டுமே தார்வு காணமுடியும். கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஜனநாயகம் இருக்க வேண்டும். 
பிரச்சனைகள் வெளிப்படையாக கொண்டு வரப்பட வேண்டும். மக்களை மனம் திறந்து பேச அனுமதிக்க வேண்டும். நம்மை பழிதூற்றுவதாக இருந்தாலும்கூட வெளிப்படையாக பேச வேண்டும். பழிதூற்றுத லால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும். நாம் தள்ளாடி விழலாம், தற்போதுள்ள பதவிகளில் தொடர முடியாமல் போகலாம். கீழ்நிலை அமைப்புகளுக்கு பதவி இறக்கப்படலாம். பதவியிறக்க மும், இடமாற்றமும் சில நன்மைகளை கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். பல புதிய சூழ்நிலைகளை படிக்கவும், ஆய்வு செய்யவும் இவை பயன்படும் என்கிறார். சில தோழர்களை தவறாக நடத்தி இருக்கலாம். முழுமையாகவோ, பகுதியாகவோ என்பதல்ல பிரச்சனை. மறு ஆய்வுக்குப்பின், அவர்களை பற்றிய பிரச்சனையில் அவர்களுக்கு நிவாரணம் பிரச்சனையின் தன்மைக்கேற்ப தர வேண்டும். தவறு செய்தவர்களின் புரட்சிகர உணர்வு செம்மைப்படுத்தப்பட வேண்டும்.

சோஷலிச சமுதாயம் வந்துவிட்டாலே தவறுகள் ஏற்படாது என்று கருதக்கூடாது. சரியான, சரியற்ற பாதையிலான தலைமை யின் காலகட்டங்களில் கூட தவறுகள் நடக்கும். சரியான பாதை யின் கீழ், தவறுகள் செய்தவர்களை மறு ஆய்வு செய்து  சரி செய் யப்படும். சரியற்ற பாதையில் இது சாத்தியமில்லை. ஜனநாய.க மத்தியத்துவ முறையின் வழியாக சரியான பாதையை பிரதிநிதித் துவப்படுத்துகின்றவர்களால் மட்டுமே, பொருத்தமான சந்தர்ப் பத்தில் தோழர்களால் விமர்சிக்கப்பட்டு, உயர்நிலையில் ஆய்வு செய்யப்பட்டு சரியான முறையில் பதவியிறக்கம் செய்யப்படுகி றார்கள். அல்லது இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் இத்தகைய நடவடிக்கைகள் தவறுகளை திருத்திக்கொள்ள உதவும். தலைவர்களிடமிருந்து மாறுபட்டு விவாதத்தை துவக்குகிற, யோசனைகளை முன்வைக்க சில தோழர்கள் தயங்குகிறார்கள், அஞ்சுகிறார்கள். மக்களுக்கும், கட்சிக்கும் தீங்கு விளைவிக்கும் தவறுகளை செய்தால் மக்களின், தோழர்களின் கருத்துக்களை நாம் கேட்க வேண்டும். சுய விமர்சனம் செய்துகொள்ள தயக்கம் கூடாது. விமர்சனமும், சுய விமர்சனமும் முரண்பாடுகளை களை வதற்கான வழி. ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறைப்படுத் தாவிட்டால் விமர்சனம், சுய விமர்சனம் என்ற வழிமுறையடை செயல்படுத்த இயலாது என்கிறார் மாவோ.
மத்தியத்துவம், ஜனநாயகம் என இரண்டும் உள்ள, கட்டுப்பாடு, சுதந்திரம் என இரணடும் உள்ள, எண்ண ஒற்றுமை, தனிப்பட்ட மன சாந்தி மற்றும் கிளர்ச்சி என்ற இரண்டும் உள்ள ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இத்தகைய அரசியல் சூழ்நிலையை நாம் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மன எழுச்சியைத் தூண்டுவது சாத்தியமல்ல. ஜனநாயகம் இல்லாமல் பிரச்சனை களை வெல்ல முடியாது. மத்தியத்துவம் இல்லாமல்  இப்படி செய் வதும் கூட சாத்தியமில்லைதான். ஆனால் ஜனநாயகம் இல்லை யென்றால் மத்தியத்துவமும் இருக்காதுய
`மத்தியத்துவம் என்றால் என்ன? சரியான சிந்தனைகளில் ஒருமித்த கவனம் வேண்டும். அந்த அடிப்படையிலேயே புரிதலில், கொள்கை, திட்டம், உத்தரவு, நடவடிக்கை ஆகியவற்றில் ஒற்று மையை உருவாக்க முடியும், இதுதான் மத்தியத்துவத்தின் மூல மான ஒற்றுமை. சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனை பற்றி தெளிவாக இல்லையென்றால், அவர்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்படாம லேயே இருந்தால், அவர்களின் போகம் வெளிப்படாமலேயே இருந்தால், மத்தியத்துவத்தின் மூலமான ஒற்றுமையை எப்படி சாதிக்க முடியுமென மாவோ வினவுகிறார். ஜனநாயகம் இல் லாமல், அனுபவத்தை சரியாகத்  தொகுத்துரைப்பது சாத்திய மில்லை. மக்களிடமிருந்து யோசனைகள் வராமல், சரியான பாதை களை, கோட்பாடுகளை அல்லது வழிமுறைகளை உருவாக்குவது சாத்தியமில்லை. கீழே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றிய ஞானமில்லாமற்போனால், அதுபற்றி தெளிவான சிந்தனை இல்லையென்றால், உயர்நிலைக்கும், கீழ்நிலைக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லையென்றால், ஒருதலைப்பட்சமான பலத் தோடு அல்லது துல்லியமற்ற தகவல்களோடு உயர்நிலையில் உள்ள முன்னணி அமைப்புகலால் தன்னிச்சையாக பிறச்சனை களுக்கான தீர்வு முடிவு செய்யப்பட்டால், இத்தகைய முடிவுகள் அகவியமாக இருப்பதை தவிர்ப்பது சிரமம். எனவே புரிதலிலும், நடவடிக்கையிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவது அல்லது உண்மை யான மத்தியத்துவத்தை உருவாக்குவது சாத்தியமில்லாமல் போகும். முழு அளவில் ஜனநாயகம் வளர்க்கப்படாவிட்டால் ஒற்றுமை மத்தியத்துவம் என்பதெல்லாம் போலியாக இருக்கும் என்கிறார்.

பெரும்பான்மை - சிறுபான்மை மேலும், பாட்டாளிவர்க்க மத்தியத்துவம் என்பது பரந்த ஜன நாயக அடித்தளத்தைக் கொண்ட மத்தியத்துவம். கட்சி கமிட்டி யின் தலைமை என்பதற்கு கூட்டுத் தலைமை என்று பொருள். முதல்நிலை செயலாளர் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுப்ப தில்லை. முதல்நிலை செயலாளருக்கும், மற்ற செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்களுக்குமிடையேயான உறவு என்பது பெரும் பான்மைக்கு, சிறுபான்மை கட்டுப்படுவதாக இருக்க வேண்டும். நான் ஏதாவது ஒன்றைச் சொன்னால்... மற்றவர்கள் ஏற்க வில்லையென்றால், அவர்களின் கருத்துக்கு நான் இணங்கிப் போவதுதான் அடிக்கடி நிகழ்கிறது. ஏனென்றால் அவர்கள் பெரும் பான்மை, என்று தன்னையே முன்னுதாரணமாக குறிப்பிடும் மாவோ சீனாவில் சில மாகாண, வட்டார கமிட்டிகளில் ஒரு நபர் சொல்வதே நடக்கிறது என்பதை கடுமையாக சாடியுள்ளார். முக்கியமான விஷயங்களை கூட்டாக விவாதிக்க வேண்டும் என்றும், மாறுபட்ட கருத்துக்களை கவனித்து, நிலைமையின் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து, பல்வேறு சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தி, எது நல்லது, எது கெட்டது, எது எளிது, எது சிரமம், எது சாத்தியம், எது அசாத்தியம் என நிலைமையிந் பல்வேறு அம்சங்களை மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்து கிறார். கூடுமானவரை கவனமாகவும், முழுமையாகவும் இது செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். இல்லையெனில், அது ஒரு நபர் ஆணவமாகவே இருக்கும். அத்தகைய செயலாளர்கள் ஆணவக்காரர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை செயல்படுத்தும் அணித் தலைவர்களாக அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.

யார் பொறுப்பு?

மாறுபட்ட கருத்தை காதுகொடுத்து கேட்கவும், எந்த விமர் சனத்தையும் தோழற்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறும் மாவோ,  சில மாகாண கமிட்டி செயலாளர்கள் வந்து உட் கார்ந்ததும், தோழர்கள் பேசுவது நின்று போகிறது என்பதை சுட்டிக்காட்டி, அது தவறு, ஜனநாயகத்திற்கு புறம்பானது என்றும் விமர்சிக்கிறார். மற்றவர்களை சுதந்திரமாக பேச அனுமதிக்கா விடில், பிரச்சனை எழும். யார் தவறு செய்தாலும், மனம் திறந்து பேசி, விமர்சிக்க தயங்கக் கூடாது. மேலும் மாவோ கூறுகிறார், பீக்கிங்கில் நடைபெற்ற செயல்முறை மாநாட்டில் எனது குறைகளையும், தவறுகளையும் பற்றி நான் விவாதித்தேன். அதை அனைத்து தோழர்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டு மென்று சொல்லப்பட்டது. மத்திய குழுவால் செய்யப்படும் தவறு களில், எனக்கு நேரடியாக தொடர்புள்ளவற்றுக்கு நான் பொறுப்பு. எனக்கு நேரடியாக தொடர்பில்லாதவற்றிலும் எனக்கொரு பங்குண்டு. ஏனெனில் நான் அதன் தலைவர் வேலைகளில் ஏற் படும் குறைகளுக்கும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எவருமே அணுகமுடியாத புலியைப்போல் நடந்து கொண்டால் தோற்பது உறுதி என்றும் கூறுகிறார். உயர்ந்தபட்ச ஜனநாயகம் இல்லாமல், உயர்ந்தபட்ச மத்தியத்துவத்தை பெறுவது சாத்தியமில்லை. உயர்ந்தபட்ச மத்தியத்துவம் இல்லாமல், சோஷலிச பொருளாதாரத்தை நிறுவு வது சாத்தியமாக இருக்காது. சோஷலிச பொருளாதாரத்தை நிறுவத் தவறினால், அது திருத்தல்வாத அரசாக மாறிவிடும். உண்மையில் அது முதலாளித்துவ அரசாக மாறிவடும். அதில் பிற்போக்கு பாசிச சர்வாதிகாரம் இருக்கும் என சீனாவிலுள்ள கட்சியின் முக்கிய தலைவர்களை சிந்தித்து செயல்படும்படி மாவோ எச்சரிக்கிறார். அதேபோன்று ஜனநாயக மத்தியத்துவம் இல்லாமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உறுதிப்பட முடியாது. தவிர, மத்திய கமிட்டியில் ஆற்றிய உரையில், சோஷலிச கட்டு மானத்தில் வர்க்க செயல்பாடுபற்றியும், எந்த வர்க்கங்களுடன் ஒன்றுபட வேண்டும் என்றும், எந்த வர்க்கங்களை நாம் அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதையும் விவாதிக்கிறார். மேலும் நெறிப் படுத்தும் இயக்கம் கட்சி ஒற்றுமையை கட்ட உதவியுள்ளதையும் விளக்கியுள்ளார்.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்

உலகில் பல நாடுகளிலும் மார்க்சியம், லெனினியத்தை ஆதரிக்கிறார்கள். சோவியத் யூனியன்தான் முதலாவது சோஷலிச அரசு. மாவோ, 1962ல் ப்ளீனத்தில் உரையாற்றுகையில், சோவியத் கட்சி மற்றும் அரசுத் தலைமை திருத்தல்வாதிகளால் கைப்பற்றப்பட்டிருந்தாலும், அம்மக்கள் புரட்சியை விரும்புகிறார் கள் என்கிறார். சோவியத் யூனியனிலிருந்து நாம் பாடம் கற்க வில்லையெனில் நாம் தவறு செய்து விடுவோம் என்று எச் சரிக்கை விடுக்கிறார். மார்க்சிய லெனினிய அடிப்படையில் சோஷ லிச நாடுகளும், உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் உறுதியோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஏகாதிபத்தியவாதிகள் கம்யூனிஸ்டு களை தூற்றுவதை நிறுத்தமாட்டார்கள். தனிமைப்படுத்த முயற்சி செய்வார்கள். சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்ற கோட் பாட்டை உலக கம்யூனிஸ்டுகள் அனைவரும் எப்போதும் பற்றி நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறார். வெளிப் படையான எதிரிகளைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. ரகசிய எதிரிகளிடம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் முகத்துக்கு முன்னால் உண்மை பேசுவதில்லை. எனவே கவனத்துடன் செயல்பட்டு, கட்சி, மக்கள் ஒற்றுமையை கட்ட வேண்டும்.

தயவு செய்து வாருங்கள். என்னை இரவு பகலாக விமர்சனம் செய்யுங்கள் (சிரிப்பொலி). பின்னர் நான் உட்கார்ந்து இதுபற்றி அமைதியாக சிந்திப்பேன். இரண்டு அல்லது  மூன்று இரவுகள் தூக்கம் போய்விடும். முழுமையாக சிந்தித்த பின், அதனை புரிந்துகொண்டபின், நேர்மையுடன் சுய விமர்சனம் எழுதுவேன்... நீங்கள் மற்றவர்களை மனம் திறந்து பேசவிட்டால், வானம் இடிந்து வீழ்ந்துவிடாது. நீங்களும் சீரழிந்துவிடமாட்டீர்கள். நீங்கள் செய்யாவிட்டால், நீங்கள் சீரழிந்துபோகும் அந்தநாள் தவிர்க்க முடியாமல் வந்தேதீரும்.
(ஜனநாயக மத்தியத்துவம் பற்றி (30..1.1962) சீன கட்சி மத்தியக்குழு கூட்டிய பணி மாநாட்டில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து)

வே1962 செப்டம்பரில் பத்தாவது ப்ளீனத்தில் மாவோ ஆற்றிய உரையும் இந்த தொகுப்பின் பயனுள்ள பகுதி எனலாம். திருத்தல் வாதம், சோஷலிச நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். சீனாவுக்கும், ஏகாதிபத்தியத்திற்குமிடையேயான முரண்பாடு ஆகிய விஷயங்கள் பற்றிய தெளிவானதொரு உரையாகும். தொடர்ந்து அரசியல் பொருளாதாரம் என்ற சோவியத் பாட நூலுக்கான விமர்சன குறிப்புகள் (பக்கம் 498 - 616) பலதரப்பட்ட விஷயங்களை அலசி, ஆராய்வதாக உள்ளது. ரஷ்யா, சீனா ஒப்பீடு, இந்தியாவில் ஏன் புரட்சி செய்யமுடியவில்லை. ஜனநாயக புரட்சியிலிருந்து சோஷலிச புரட்சிக்கு மாறும்பொழுது எழும் பிரச்சனைகள், பாட்டாளி வர்க்க அரசின் வடிவம், வேளாண் - தொழில்துறை இரண்டிற்குமிடையேயான உறவு, சோஷலிச அமைப்பில் உடைமை முறைகள், சோஷலிசத்தில் தொழிலாளர் உரிமைகள், பொருள் சார்ந்த ஊக்குவிப்புகள்,. ஊதியங்களின் வடிவங்கள்.... என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. விமர்சன கண்ணோட்டத்துடன் மாவோ தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். சோவியத் யூனியனில் சோஷலிசத்தின் பொருளாதார பிரச்சனைகள் என்ற ஸ்டாலினின் நூல் மீதான விமர்சன கட்டுரையுடன் எட்டாவுது தொகுப்பு நிறைவுறுகிறது. இந்த கட்டுரை சோவியத் யூனியனில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார நிகழ்வுகளை புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும்.

முந்தைய தொகுப்புகளில் பேசப்பட்ட சில முக்கிய விஷயங்கள் இந்த தொகுப்பில் மீண்டும் இடம் பெற்றிருந்தாலும்கூட, ஜனநாயக மத்தியத்துவம், சீனாவில் கம்யூன்கள் செயல்பாடு, சோவியத் யூனியனில் வளர்ச்சி - பிரச்சனைகள் பற்றிய விமர்சனங்கள் ஆகியவை மிகவும் பயனுள்ள பகுதிகள் ஆகும். தொகுதி  எட்டு, தோழர் மயிலைபாலு அவர்களால் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கட்டுரையாளர் ஆர்.சந்திரா