Wednesday, May 29, 2013

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடு பற்றி மா சே துங்

ஏகாதிபத்திய சக்திகளாலும், நிலப்பிரபுத்துவ சக்திகளாலும் நசுக்கப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்ற நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சிக்கு ஒரு கடமை உண்டு. அக் கட்சி தேசிய அளவில் ஒரு பொதுவான பரந்து விரிந்த நோக்கத்தோடு தனது பதாகையை உயர்த்த வேண்டும். ஏகாதி பத்திய வேட்டை நாய் களைத் தவிர மீதமுள்ள அனைத்து சக்திகளையும் ஏகாதி பத்தியத்துக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்ட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் தேசபக்தியை உலகம் அறியச் செய்வோம். உலக சமாதானத்தையும், தேச ஒற்றுமையையும் நாம் எந்த அளவுக்கு உறுதியுடன் உயர்த்திப் பிடிக்கின்றோம் என்பதையும் உலகறியச் செய்வோம்.... (மாவோ)

மாவோ 1958ல் நான்நிங் மாநாட்டில் நிகழ்த்திய உரை யுடன் தொகுப்பு எட்டு துவங்குகிறது. தோழர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அறிவுரையுடன் ஆரம்பிக்கும் மாவோ, கட்சிக் குழுக்களில் உள்ள தோழர்களுக்கு முக்கிய மான அபாயம் எந்பது `கம்யூனிஸ்டாக இருந்து நிபுணத்துவம் பெறாமல் இருப்பதுதான் என்கிறார் யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்டு, புதிர்களை புரிந்து கொண்டு, தெளிவாக செயல்பட கற்க வேண்டும். மக்கள் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. இருப்பினும் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல் தலைமைக்குழுவின் செயல்பாட்டையும் விமர்சிக்க அவர் தவறவில்லை. மாவோவைப் பொறுத்தவரை எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தாலும், பேசி, விவாதித்து, கட்சி கமிட்டிகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த இயலு மென்பதை அழுத்தமாக நம்புகிறார். அத்தகைய நம்பிக்கை ஒருமித்த செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானதாகும். கம்யூனிஸ்டுகள் எப்படி இருக்க வேண்டும்?

எந்த ஒரு பிரச்சனையையும் அரசியலாக அணுக வேண்டும். அரசியலற்ற அணுகமுறையை விமர்சிக்க வேண்டும். தத்து வார்த்த மற்றும் அரசியல் பணி என்பது நமது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பணிக்கான தனித்திறனை உறுதி செய்வதாகும். நமது தத்துவார்த்த அரசியல் பணியில் ஏற்படும் லேசான தொய்வு, நமது பொருளாதார, தொழில்நுட்ப பணியில் நெறிதவற வழி வகுத்துவிடும்... 

நடைமுறை அறிவைப் பெறாமல் இருப்பது போலி சிவப்பாகவும், அறிவற்ற அரசியலாகவும் ஆகிவிடும் என்று வலியுறுத்துகிறார். பணிமுறைகளுக்கு அறுபது அம்சங்கள் என்ற தலைப்பின் கீழ் பல ஆலோசனைகளை - அரசியல், பொரு ளாதாரம், சமூகம், கட்சியை கட்டுதல், சோஷலிச கட்டுமானம், திட்டங்கள் - என பரவலான விஷயங்கலை தெளிவாக விளக்கி யுள்ளார். குறிப்பாக கட்சி தோழர்கள், கமிட்டிகள் ஊதாரித் தனத்தை எதிர்க்க வேண்டும் என்றும், நெறிப்படுத்தும் இயக் கத்தை அமுலாக்க ஒவ்வொரு கிளையும் சில நாட்களை ஒதுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறார். முந்தைய தொகுதிகளில் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, ஊழியர் பயிற்சியை கட்சித் தலைமை முக்கியமான விஷயமாகக் கருதவேண்டுமென்று கூறுகிறார். தவிர, ஒரு பக்கம் சோஷலிச மற்றும் ஏகாதிபத்திய உலகங்களுக்கிடையே கடுமையான வர்க்கங்கள் இன்னமும் நீடிப்பதால், நாட்டுக்குள்ளேயே வர்க்க போராட்டம் நடப்பதையும் விளக்கி, இருவகையாந அம்சங்களிலும் கட்சி, கிளைகள், தோழர்கள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதை அழுத்தமாக முன்வைக்கின்றார்.

வறட்டு வாதம்
`கற்பனாவாதம் எப்படி பல துறைகளில் பிரச்சனைகளை உருவாக்கியதோ, அதேபோல் வறட்டுவாதம் என்பதும் நிறைய பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்ததை மாவோ சோவியத் யூனியன் அனுபவங்களின் மூலம் விளக்குகிறார். வறட்டு வாதம் பல்வேறு சூழ்நிலைகளில் தோன்றுகிறது. இதை ஆராய்வது அவசியம். வறட்டுவாதம் ஏன் தோன்றுகிறது என்பதும் ஆய்வுக் குட்படுத்த வேண்டிய விஷயம். சீனாவின் கனரகத் தொழில் வளர்ச்சி, கல்வி, பொது சுகாதாரத்துறை போன்றவற்றில் சோவியத் யூனியனை அப்படியே அச்சு அரசலாக பின்பற்றியதால், சீனாவில் சில பிரச்சனைகள் தோன்றின. சோவியக் திட்டமிடலில் பெரும் பகுதி சீனாவுக்குப் பொருத்தமாக இருந்தது. அதன் ஒரு பகுதி பொருத்தமாக இல்லை. எனினும் ஆய்வின்றி அது இறக்கு மதி செய்யப்பட்டது.  சோவியத் யூனியனுக்கும், சீனாவுக்கு மிடையே இருந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ளாமல், குருட்டுத் தனமாக பின்பற்றியதால் பிரச்சனைகள் தோன்றின. அவற்றை புரிந்துகொண்ட பின்னர் நிலைமை மாறியது என மாவோ விளக்க மளித்துள்ளார். பல தோழர்கள் விதிமுறைகளையும்,  மரபுகளையும் எதிர்க்கின்றனர். ஆனால் அவற்றிற்கு மாற்று உண்டா, சீன நிலைமைகளுக்கேற்ப அவற்றை பொருத்த இயலுமா என பார்க்காமல், வறட்டுத்தனமாக எதிர்ப்பது சரியாகுமா என வினவுகிறார். சோவியத் அனுபவத்தில் நல்லவை அனைத்தையும் ஏற்று, மோசமானதை நிராகரிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு சொல்கிறார்.

ஒற்றுமை, ஒற்றுமையின்மை

கட்சித் தோழர்கள் மனதில் எழுகின்ற எண்ணங்கள் மாறிக் கொண்டே வருகின்றன. கருத்து வேறுபாடுகள் எழு கின்றன. இதனால் ஒற்றுமையின்மை ஏற்படுகிறது. ஆனால் இது தீர்க்க இயலாத பிரச்சனை அல்ல என்கிறார் மாவோ. ஒற்றுமையைப் பற்றி பேசும் பொழுதே ஒற்றுமையின்மை ஏற் படுகிறது. எல்லா நேரத் திலும் வேறுபாடற்ற ஒற்றுமையைப் பற்றி பேசி போராட்டத்தைப் பற்றி பேசாதது மார்க்சியம்-லெனினியம் அல்ல என்கிறார். மேலும், போராட்டத்தின் வழியாகவே ஒற்றுமை உருவாகிறது என்றும் கூறுகிறார். கட்சிக்குள், வர்க்கங்களுக்குள், இத்தகைய போராட் டங்கள் ஏற்பட்டு பின் ஒற்றுமை ஏற்படுகிறது. போராட்டம், முரண் பாடுகள் பற்றி பேசாமல், மாறுபடாத ஒற்றுமைப்பற்றி பேச இயலாது. இதை சோவியத் யூனியனில் நிலவிய கட்சி தலைவர்கள் - தொண்டர்கள் இடையேயான முரண்பாடுகளை மேற்கோள்காட்டி விளக்குகிறார். தலைவர்களுக்கும், தலைமை தாங்கப்படுவோ ருக்கும் இடையேயான முரண்பாடுகள் பற்றி சோவியத் யூனியன் பேசவில்லை. முரண்பாடுகள் இல்லையென்றால் போராட்டம் இருக்காது.... முன்னேற்றம் இருக்காது.... எல்லா நேரத்திலும் ஒற்றுமைபற்றியே பேசுவது தேங்கி நிற்கும் ஒரு குட்டை போன்றது. இது வெறுப்பு ஏற்பட வழிவகுக்கும் என்று கூறி, விவாதம் மூலம், முரண்பாடுகளை களைய இயலும் என்றும், ஒற்றுமை என்பதை வறட்டுத்தனமாக பார்ப்பது சரியல்ல என தெளிவுபடுத்துகிறார். இதன் மூலம் நமது தத்துவத்தை சரிசெய்து கொள்ளவும், புரிதல் நிலையை உயர்த்திக் கொள்ளவும் முடியும் என்பது வலியுறுத்தப் படுகிறது.

ஒற்றுமையை எப்படி கொண்டுவர இயலும் என்பதை விளக்கி, சிந்தனைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியதன் அவ சியத்தை சுட்டிக்காட்டுகிறார். மனம் எப்போது கரடு தட்டிப் போனாலும் அது ஆபத்தானது. நமது ஊழியர்களின் சிந்தனையை உயிர்ப்பூட்ட, மைய, வட்டார, மாகாகண ஊழியர்களுக்கு கல்வியும், பயிற்சியும் தரப்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்டுகிறார். பல விஷயங்களை முன்கூட்டியே கணிக்க இயலாது. சோஷலிசத்தை கட்டும்பொழுது, பிரச்சனைகள் எழத்தான் செய்யும். ஏகாதி பத்தியம், நிலபிரபுத்துவம், அதிகார மனோபாவ முதலாளித்துவம், வலதுசாரிகள் ஆகியோரை எதிர்கொள்வது எளிதான காரிய மல்ல. அவ்வாறு எதிர்கொள்கையில் தவறுகள் நேரும். தவறுகளை நிராகரிப்பது வறட்டுவாதம், தவறுகள் இருக்கக் கூடாதென்பது மார்க்சியத்திற்கு புறம்பானது. தவறுகளைத் தாண்டி மார்க்சும், லெனினும் சாதித்துள்ளனர் என்பதை பல உதாரணங்கள் மூலமாக மாவோ விவரித்துள்ளார். சாதிக்க வேண்டுமெனில் நமது பணி யில் முன்னேற்றம் காணவேண்டும். உறுதியுடன் செயல்படுதல், நேர்மையுடன் பேசுதல், அனைத்துப் பிரச்சனைகளையும் துடைத் தெறியும் உணர்வை கொண்டிருத்தல், ஆகியவற்றுடன் செயல்பட மார்க்சிய தத்துவத்தை முழுமையாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். கொஞ்சம் குறைகள் இருந்தாலும் கூட, இத்தகைய உணர்வுகலை ஸ்டாலின் கொண்டிருந்நததை மாவோ சுட்டிக் காட்டியுள்ளார். நம்பிக்கை கண்மூடித்தனமாக இருந்தால், சிந்தனைகள் முடங்கிப்போகும்.

புதிய சிந்தனைகளை உருவாக்கியவர்கள் பண்டைகாலம் தொட்டு, அதிகம் படித்திராத இளைஞர்களாக இருந்துள்ளனர் என்றும், அனுபவங்கள் அவர்களின் சிந்தனைகளை செழுமைப் படுத்த உதவியுள்ளன என்று கூறும் மாவோ, அதிகம் படிக்க வில்லை என்று வருந்தாமல் படிப்பது, எழுதுவது போன்ற திறமை களை ஊழியர்கள் வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலி யுறுத்துகிறார். கன்ஃபூசியஸ் இருபத்து மூன்று வயதில் எழுத ஆரம்பித்தார். சாக்கிய முனி பத்தொன்பது வயதில் புத்தமதத்தை உருவாக்கி, பின் படிப்படியாக கல்வி பெற்றார். மார்க்ஸ் மிகச் சிறிய வயதில் இயக்கவியல் பொருள் முதல்வாத்தை எழுதினார். மின் சாரத்தை கண்டுபிடித்த ஃப்ராங்களின் பத்திரிக்கைப் போடும் பையனாக வாழ்க்கையைத் துவங்கினார். மார்க்சிம் கார்க்கி துவக்க கல்வி மட்டுமே கற்றார்.  தூக்கமாத்திரை கண்டு பிடித்தவர் ஒரு மருந்தாளுநர்தான். டாக்டர் அல்ல. இப்படிப்பட்ட இளைஞர்கள் பழைய பத்தாம்பசலித்தனங்களுக்கு தீயிட்டனர். கற்றல் என்ற விஷயத்தில் இளைஞர்கள் பிடிப்புடன் இருந்தால், புதுமை படைக்க முடியும், புதிய சிந்தனைகளை உருவாக்க முடியு மென மாவோ நம்பினார். செங்போ நாட்டில் மாவோ நிகழ்த்திய உரையில் நெறிப்படுத்தும் இயக்கம் தொடர்பாக கூறிய பல விஷ யங்கள் முந்தைய தொகுப்புகளிலும் வெளிவந்த கருத்துக்கள் தான். அவை மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

1958ல் எட்டாவது கட்சி காங்கிரசில் மாவோ ஆற்றிய உரை மிகவும் பயனுள்ள உரையாகும். மார்க்சின் நூல்களை படிக்க, மார்க்சியம் பற்றி அறிந்துகொள்ள நிறைய தயக்கம் உள்ளது. அது மிகவும் கடினம் என்ற எண்ணம் நமது தோழர்கள் மத்தியிலும் உள்ளது. மாவோ கூறுகிறார். மார்க்சின் அனைத்து நூல்களை யும் படிக்க வேண்டிய தேவையில்லை. அடிப்படை விஷயங்களை படித்தாலே போதுமானது. அக்டோபர் புரட்சி பற்றி மார்க்ஸ் கூற வில்லை. ஆனால் லெனின் செய்தார். நடைமுறை விஷயத்தில் மார்க்சை லெனின் விஞ்சிவிட்டார்.... எனவே, தோழர்கள் தங்களால் கற்க இயலாது என்ற எண்ணத்தை கைவிட்டு, முன்னேற வேண்டும். சிறந்த எடுத்துக்காட்டாக கிருமிகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். கிருமிகள் என்ற நுண்ணுயிர் வகை கள் அளவில் சிறிதாக இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நிலையில் அவை மனிதனைவிட மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றிடம் மூடநம்பிக்கை இல்லை. முழுமையான சக்தியோடு இருக்கின்றன. அவற்றிடம் மூடநம்பிக்கை இல்லை. முழுமையான சக்தியுடன் இருக்கின்றன. அவை எதற்கும் அஞ்சுவதில்லை. அச்சமில்லா உணர்வுகொண்ட அவற்றிற்கு எதுவும் பொருட்டல்ல. முன்னேற்று வதற்காக அவை போராடுகின்றன. முனைப்பும், அடித்தளமும் இருந்தால் கண்டிப்பாக வெற்றிபெறமுடியும். முந்தைய தொகுப்பு களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்கள் - குறிப்பாக, மக்களிட மிருந்து கற்றுக்கொள்வது பற்றியவை-மீண்டும் மீண்டும்  வலி யுறுத்தப்பட்டுள்ளன. நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். செங்கொடியை ஏற்றி காற்றின் திசையைக் கண்டறியுங்கள். நாம் ஏற்றாவிடில் மற்றவர்கள் தங்கள் கொடிகளை ஏற்றுவார்கள். எந்த பெருமலையிலும், சிறுகுன்றிலும் விவாதத்திற்கு பிறகு செங்கொடி ஏற்றப்பட வேண்டும். காற்றின் திசை என்றால் அது கீழைக் காற்றா, மேலைக் காற்றா என்பதுதான் பொருள். கொள்கை திசை என்று பொருள் அல்ல என விளக்கம் அளிக்கிறார் மாவோ.

ஏகாதிபத்தியம் பற்றி முந்தைய தொகுப்புகளில் வெளியிடப் பட்டுள்ள கருத்துக்களையே தொகுப்பு எட்டில்  பிரதிபலிக்கின்றன. ஏகாதிபத்தியத்தின் கொடூரம் மாவோவின் பல்வேறு உரைகளில் வெளிப்படுகின்றது. சோவியத் யூனியன் இதர நாடுகளுடன் கொண்டிருந்த உறவை பரிசீலனை செய்திருப்பதும், ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் எத்தகைய நிலையில் உள்ளன என்பதைப்பற்றியும் தனது கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளார். கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் வலுச்சண் டைக்கு போகும் கொள்கையை ஏகாதிபத்திய நாடுகள் ஊக்கு விக்கின்றன. 1958ல் ஆற்றிய உரையில் மாவோ, ஏகபோக மூல தனம் நீடித்திருப்பதால் போர் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லை என்றும், இதற்கு காரணம் கச்சா பொருட்கள் மற்றும் சந்தை பற்றாக்குறை என்கிறார்.  1958ல் அமெரிக்கா பல நாடுகளில் எவ்வாறு பதட்டத்தை தோற்றுவித்தது (உ.ம். இராக்) என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்து போராடித்தான் சோஷலிச சமுதாய அணைப்பை கொண்டுவர இயலும்.

1959ல் மாகாண செயலாளர்களுக்கு ஆற்றிய உரையில் புத்த கங்கள் படிப்பது பற்றியும், வேளாண் நிலை பற்றிய கருத்துக்களும் சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். நடைமுறை அனுபவம் மூல மாகவே திட்டங்கள், இலக்குகள் பூர்த்தி அடைவதை பற்றி முறை யாக புரிந்துகொள்ள முடியும். பக்கங்கள் 253 - 276 வரையிலான பகுதி முழுவதும், மக்கள் கம்யூன் பற்றியவை. கம்யூன் என்பது என்ன, அது எப்படி செயல்பட வேண்டும், எப்படி செயல்படுகிறது, அவற்றை மேலும் வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் என்ன என்பதை தெளிவாக விவரிக்கிறார். கம்யூன் பற்றி நமக்கு புரிந்துகொள்ள இப்பகுதி மிகவும் உதவிகரமாக அமையும். கம்யூன் என்பது உண்மையில் ஒரு கூட்டமைப்பு அரசு என்கிறார் மாவோ. உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் அந்தந்த பகுதிகள் வளர்ச்சி அடைவது போன்றவற்றில் கம்யூஸ்டுகளின் பங்கு குறிப்பிடத்தக்க தாகும். உற்பத்திக்கான மூலாதாரணங்களை கம்யூன்கள் விரிவு படுத்தின என்பது போன்ற நல்ல அம்சங்கள் இருந்தபோதிலும், மக்கள் கம்யூன்களில் முரண்பாடுகள் இருந்தன. கட்சி கமிட் டிக்கும்,  கம்யூன்களுக்கும் இடையேயான் உறவு எப்படி இருக் கிறது என்பது அவ்வப்போது ஆய்வுக்குட்படுத்த வேண்டியது என்றார் மாவோ.  கட்சி கமிட்டிகளுக்கு எழுதிய கடிதத்தில் (மார்ச் 1959) கம்யூன்கள் செயல்பாட்டை விவாதத்திற்குட்படுத்தி, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.  குறிப்பாக கட்சி ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம்தான் முரண்பாடுகள் தெரியவரும். உண்மை நிலையின் அடிப்படையில் இயக்கத்தை விரிவடையச் செய்ய முடியும் என்றும், கெட்டித்தட்டிப்போன சிந்தனைகளில் நெகிழ்ச்சிதன்மையை ஏற்படுத்த இயலும். கீழிருந்து, மேலும், மேலிருந்து கீழுமான தொடர்பு வலுவாக இருந்தால், பிரச் சனைகளை தீர்க்க முடியும். தவறுகளை திருத்தி, கட்சியை வலுப் படுத்த இயலும் என்ற ஆலோசனை முன்வைக்கப்படுகிறது.

ஏழாவது ப்ளீனத்தில் மாவோ ஆற்றிய உரையில் எட்டு பிரதான விஷயங்களை முன்வைக்கிறார். இவை கட்சி கமிட்டி செயல்பட மிகவும் உதவும். எவ்வாறு திட்டமிட வேண்டும். நெருக்கடியை உறுதியுடன் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றெல்லாம் விளக்குகிறார். அதே போல பணிமுறைகள் தொடர்பான முக்கிய அம்சங்களை தொகுப்பு ஐந்தில் அவர் விளக்கியுள்ளது. மீண்டும் இத்தொகுதியில் சில மாற்றங்களுடன் தரப்பட்டுள்ளது.

இயக்கவியலின் உதாரணங்கள் என்ற (சுருக்கப்பட்ட தொகுப்பு) பகுதியில் மாவோ வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் மார்க்சிய தத்துவத்தை சீனாவின் தன்மைக்கேற்ப விளக்கியுள்ள பகுதி. இது மிகவும் பயனுள்ள பகுதியாகும். மிக எளிமையாக சில தத்துவார்த்த பிரச்சனைகள் விளக்கப்பட்டுள்ளது. இயக்க வியலை புரிந்துகொண்டால்தான் பகுப்பாய்வை புரிந்துகொள்ள இயலுமென்கிறார். மாவோ வளர்ச்சியும், இயக்கமும் எல்லையற்றது என்பது போலவே எதிர்மறைகளின் போராட்டமும் எல்லையற்றது என்கிறார் மாவோ. முரண்பாடுகளில் முதன் முரண்பாடுகளும், துணை முரண்பாடுகளும் உண்டு என்பது நாம் அறிந்தது. சீனா வில் முதன் முரண்பாடுகளின் சாரத்தை உள்வாங்கிக்கொள்ளா மல், துணை முரண்பாடுகளை முதன்மையாக கருதியதால் ஏற் பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி எது முதன்மையானது, எது துணை முரண்பாடு என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார். ஒரு பிரச்சனையிந் சாரத்தை மட்டுமின்ரி அதன் பிரதான போக்கையும், பாதையை பரிசீலிப்பதும் அவசியமென மார்க்சியம் சொல்கிறது என்பதை சுட்டிக்காட்டி, டிட்டோ தத்துவார்த்த ரீதியில் தொய்வடைந்திருப்பதின் மூலம் தான் சரியான பாதை உருவாகிறது என்கிறார். தவறுகளே இல்லாதே முழுமைதான் சரி என்ற கருத்து மார்க்சீய - லெனினியத்தை மீறியதாகும். வரலாற்றை புரட்டினால், தவறுகளே இல்லாத முழுமை நிலை எந்பது இருந்ததில்லை. இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை போற்றுவது விவாதத்தை ஊக்குவிக்கும். அதன் மூலம் சரியான பாதையை நோக்கி செல்ல முடியும். அத்துடன் சோஷலிசப் படிநிலையில் உள்ள இருவகை உடைமை முறைகளை விளக்கி, சீனா, சோவியத் யூனியன் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகளை விளக்குகிறார்.

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஒன்றுபட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற கட்டுரை இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருத்தமானது.  1959ல் தேசிய மற்றும் ஜனநாயக இயக்கங்கள் வளர்ந்ததைப் போல, தற்போதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான குரல் இப் பொழுதும் வலுவாக  எழுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் சுயசார்பு ஆதரவு இயக்கங்கள், இதர பகுதிகளிலும் ஜனநாயக இயக்கங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடக் கின்றன. உலகின் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா செய்யும் கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல என மாவோ இன்றும் உலகின் வளங்களை கொள்ளையடிக்க உலக நாடுகளின் மீது தாக்குதல் நடத்த தயங்கவில்லை என்பதுதான் யதார்த்தம்.

இளைஞர்களுக்கு செய்தி

இளைஞர்களுக்கு போதிக்க வேண்டிய கோட்பாடுகள் பற்றி 1960ல் மாவோ எழுதியுள்ளவை, வாலிபர் சங்கத் தோழர்களும், கட்சியும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். (பக்கம் 427)

1. மார்க்சியம் - லெனினியத்தை புரிந்துகொள்ளவும், குட்டி பூர்ஷ்வா உணர்வை வெல்லவும் கற்றுத்தாருங்கள்.

2. கட்டுப்பாட்டையும், அமைப்பையும் வெற்றிருக்கவும், அமைப்புக்குள் குழப்பவாதத்தையும், தாராளவாதத்தையும் எதிர்க்க கற்றுக்கொடுங்கள்.
3. கீழ்நிலையில் உள்ள நடைமுறைப் பணியில் உறுதியாக உட் செல்வதற்கும், நடைமுறை அனுபவத்தை ஏளனமாக பார்ப்பதை எதிர்ப்பதற்கு கற்றுக்கொடுங்கள்.

4. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நெருக்கமாக இருக்கவும், அவர்களுக்கு உறுதியுடன் சேவை செய்யவும் தொழி லாளர்களையும், விவசாயிகளையும் ஏளனமாக பார்க்கும் உணர்வை எதிர்க்கவும் கற்றுத்தாருங்கள்.

வர்க்கத் தனித்தன்மை பற்றி கட்டுரையும் அன்றாட கட்சிப் பணிகளில் ஈடுபடும் தோழர்கள் பல வர்க்க பின்னணியிலிருந்து வருபவர்கள்-புரிந்துகொண்டு, செயலாற்ற  உதவும். ஒருவரின் வர்க்க உள்ளடக்கத்திற்கும்,  செயல்பாட்டிற்கும் இடையே பாகு பாடு இருக்க வேண்டும். நமது வர்க்க பின்னணி எதுவாக இருப் பினும், நாம் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, கீழ், நடுத்தர விவ சாயிகள் பக்கம் இருக்கிறோமா என்பது முக்கியம். சோஷலிச கொள்கையை உருவாக்குவதற்கு வர்க் போராட்டத்தை ஆராய் வது அவசியமாகும். தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் சுரண்ட லுக்கு ஆளாகின்றனர். அவர்கள் மார்க்சிய நூல்களைப் படித்து, மார்க்சியத்தை தாங்களாகவே உருவாக்க இயலாது. வர்க்க போராட்டங்களில் ஈடுபட்டு அதை அனுபவங்களிலிருந்து கல்வி கற்கின்றனர். சுரண்டும் வர்க்கங்களிலிருந்து கட்சிக்குளஅ சிலர் வந்திருப்பார்கள். அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பார்க்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தை வீழ்த்த அனைவரும் வர்க்க உணர்வு அடிப்படையில் திரட்ட வேண்டியது கடமையாகும். நிலபிரபுத்துவ வர்க்கம் மீட்சி பெற்றது தொடர்பான ஆய்வு, புரிதலில் பின்தங்கி இருந்ததாக மாவோ சீன கம்யூனிஸ்ட் கட்சியை சுய விமர்சனம் செய்யும் அதே சமயம், நகர்ப்புற எதிர்ப் புரட்சி பற்றி நன்கு அறிந்திருந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.

ஜனநாயக மத்தியத்துவம்

1962ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் மாவோ ஆற்றிய உரை தொகுதி எட்டில் மிகவும் முக்கியமான பகுதியாகும். கூட்டம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தருவதுடன் துவங்குகிறது. சமீப காலமாக ஜனநாயக மத்தியத்துவம் பற்றி நமது தோழர்களும் விரிவாக விவாதிக்கின்ற சூழலில் (சென்ற இதழில் இது தொடர்பான கட்டுரை உள்ளிட்ட) மாவோவின் கருத்துக்களை படிப்பது, ஜன நாயக மத்தியத்துவம் பற்றி மேலும் தெளிவுபெற உதவும். மார்க்ஸ் - லெனின் விளக்கிய ஜனநாயக மத்தியத்துவம் பற்றி சிலர் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்ற விமர்சனத்துடன் துவக்குகிறார். மக்களின் மனம் திறந்த பேச்சுக்கு அஞ்ச வேண் டாம். நமது அணுகுமுறை உண்மையை ஏற்றுக் கொள்வதும், தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருப்பதும் ஆகும். நமது பணிகளில் மக்களுடன் மாறுபடும் சூழள் ஏர்படலாம்.... அதை கத்திகளாலும், துப்பாக்கிகளாலும் சரி செய்ய இயலாது. மாறுபாடுகள் பற்றி விவாதிக்க வேண்டும். விமர்சனம் மற்றும் சுய விமர்சனம் மூலமே தீர்வு காண முடியும். ஜனநாயக முறையால், மட்டுமே தார்வு காணமுடியும். கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் முழுமையான ஜனநாயகம் இருக்க வேண்டும். 
பிரச்சனைகள் வெளிப்படையாக கொண்டு வரப்பட வேண்டும். மக்களை மனம் திறந்து பேச அனுமதிக்க வேண்டும். நம்மை பழிதூற்றுவதாக இருந்தாலும்கூட வெளிப்படையாக பேச வேண்டும். பழிதூற்றுத லால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும். நாம் தள்ளாடி விழலாம், தற்போதுள்ள பதவிகளில் தொடர முடியாமல் போகலாம். கீழ்நிலை அமைப்புகளுக்கு பதவி இறக்கப்படலாம். பதவியிறக்க மும், இடமாற்றமும் சில நன்மைகளை கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். பல புதிய சூழ்நிலைகளை படிக்கவும், ஆய்வு செய்யவும் இவை பயன்படும் என்கிறார். சில தோழர்களை தவறாக நடத்தி இருக்கலாம். முழுமையாகவோ, பகுதியாகவோ என்பதல்ல பிரச்சனை. மறு ஆய்வுக்குப்பின், அவர்களை பற்றிய பிரச்சனையில் அவர்களுக்கு நிவாரணம் பிரச்சனையின் தன்மைக்கேற்ப தர வேண்டும். தவறு செய்தவர்களின் புரட்சிகர உணர்வு செம்மைப்படுத்தப்பட வேண்டும்.

சோஷலிச சமுதாயம் வந்துவிட்டாலே தவறுகள் ஏற்படாது என்று கருதக்கூடாது. சரியான, சரியற்ற பாதையிலான தலைமை யின் காலகட்டங்களில் கூட தவறுகள் நடக்கும். சரியான பாதை யின் கீழ், தவறுகள் செய்தவர்களை மறு ஆய்வு செய்து  சரி செய் யப்படும். சரியற்ற பாதையில் இது சாத்தியமில்லை. ஜனநாய.க மத்தியத்துவ முறையின் வழியாக சரியான பாதையை பிரதிநிதித் துவப்படுத்துகின்றவர்களால் மட்டுமே, பொருத்தமான சந்தர்ப் பத்தில் தோழர்களால் விமர்சிக்கப்பட்டு, உயர்நிலையில் ஆய்வு செய்யப்பட்டு சரியான முறையில் பதவியிறக்கம் செய்யப்படுகி றார்கள். அல்லது இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் இத்தகைய நடவடிக்கைகள் தவறுகளை திருத்திக்கொள்ள உதவும். தலைவர்களிடமிருந்து மாறுபட்டு விவாதத்தை துவக்குகிற, யோசனைகளை முன்வைக்க சில தோழர்கள் தயங்குகிறார்கள், அஞ்சுகிறார்கள். மக்களுக்கும், கட்சிக்கும் தீங்கு விளைவிக்கும் தவறுகளை செய்தால் மக்களின், தோழர்களின் கருத்துக்களை நாம் கேட்க வேண்டும். சுய விமர்சனம் செய்துகொள்ள தயக்கம் கூடாது. விமர்சனமும், சுய விமர்சனமும் முரண்பாடுகளை களை வதற்கான வழி. ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறைப்படுத் தாவிட்டால் விமர்சனம், சுய விமர்சனம் என்ற வழிமுறையடை செயல்படுத்த இயலாது என்கிறார் மாவோ.
மத்தியத்துவம், ஜனநாயகம் என இரண்டும் உள்ள, கட்டுப்பாடு, சுதந்திரம் என இரணடும் உள்ள, எண்ண ஒற்றுமை, தனிப்பட்ட மன சாந்தி மற்றும் கிளர்ச்சி என்ற இரண்டும் உள்ள ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இத்தகைய அரசியல் சூழ்நிலையை நாம் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மன எழுச்சியைத் தூண்டுவது சாத்தியமல்ல. ஜனநாயகம் இல்லாமல் பிரச்சனை களை வெல்ல முடியாது. மத்தியத்துவம் இல்லாமல்  இப்படி செய் வதும் கூட சாத்தியமில்லைதான். ஆனால் ஜனநாயகம் இல்லை யென்றால் மத்தியத்துவமும் இருக்காதுய
`மத்தியத்துவம் என்றால் என்ன? சரியான சிந்தனைகளில் ஒருமித்த கவனம் வேண்டும். அந்த அடிப்படையிலேயே புரிதலில், கொள்கை, திட்டம், உத்தரவு, நடவடிக்கை ஆகியவற்றில் ஒற்று மையை உருவாக்க முடியும், இதுதான் மத்தியத்துவத்தின் மூல மான ஒற்றுமை. சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனை பற்றி தெளிவாக இல்லையென்றால், அவர்களின் கருத்துக்கள் தெரிவிக்கப்படாம லேயே இருந்தால், அவர்களின் போகம் வெளிப்படாமலேயே இருந்தால், மத்தியத்துவத்தின் மூலமான ஒற்றுமையை எப்படி சாதிக்க முடியுமென மாவோ வினவுகிறார். ஜனநாயகம் இல் லாமல், அனுபவத்தை சரியாகத்  தொகுத்துரைப்பது சாத்திய மில்லை. மக்களிடமிருந்து யோசனைகள் வராமல், சரியான பாதை களை, கோட்பாடுகளை அல்லது வழிமுறைகளை உருவாக்குவது சாத்தியமில்லை. கீழே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றிய ஞானமில்லாமற்போனால், அதுபற்றி தெளிவான சிந்தனை இல்லையென்றால், உயர்நிலைக்கும், கீழ்நிலைக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லையென்றால், ஒருதலைப்பட்சமான பலத் தோடு அல்லது துல்லியமற்ற தகவல்களோடு உயர்நிலையில் உள்ள முன்னணி அமைப்புகலால் தன்னிச்சையாக பிறச்சனை களுக்கான தீர்வு முடிவு செய்யப்பட்டால், இத்தகைய முடிவுகள் அகவியமாக இருப்பதை தவிர்ப்பது சிரமம். எனவே புரிதலிலும், நடவடிக்கையிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவது அல்லது உண்மை யான மத்தியத்துவத்தை உருவாக்குவது சாத்தியமில்லாமல் போகும். முழு அளவில் ஜனநாயகம் வளர்க்கப்படாவிட்டால் ஒற்றுமை மத்தியத்துவம் என்பதெல்லாம் போலியாக இருக்கும் என்கிறார்.

பெரும்பான்மை - சிறுபான்மை மேலும், பாட்டாளிவர்க்க மத்தியத்துவம் என்பது பரந்த ஜன நாயக அடித்தளத்தைக் கொண்ட மத்தியத்துவம். கட்சி கமிட்டி யின் தலைமை என்பதற்கு கூட்டுத் தலைமை என்று பொருள். முதல்நிலை செயலாளர் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுப்ப தில்லை. முதல்நிலை செயலாளருக்கும், மற்ற செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்களுக்குமிடையேயான உறவு என்பது பெரும் பான்மைக்கு, சிறுபான்மை கட்டுப்படுவதாக இருக்க வேண்டும். நான் ஏதாவது ஒன்றைச் சொன்னால்... மற்றவர்கள் ஏற்க வில்லையென்றால், அவர்களின் கருத்துக்கு நான் இணங்கிப் போவதுதான் அடிக்கடி நிகழ்கிறது. ஏனென்றால் அவர்கள் பெரும் பான்மை, என்று தன்னையே முன்னுதாரணமாக குறிப்பிடும் மாவோ சீனாவில் சில மாகாண, வட்டார கமிட்டிகளில் ஒரு நபர் சொல்வதே நடக்கிறது என்பதை கடுமையாக சாடியுள்ளார். முக்கியமான விஷயங்களை கூட்டாக விவாதிக்க வேண்டும் என்றும், மாறுபட்ட கருத்துக்களை கவனித்து, நிலைமையின் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து, பல்வேறு சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தி, எது நல்லது, எது கெட்டது, எது எளிது, எது சிரமம், எது சாத்தியம், எது அசாத்தியம் என நிலைமையிந் பல்வேறு அம்சங்களை மதிப்பிட வேண்டும் என்று வலியுறுத்து கிறார். கூடுமானவரை கவனமாகவும், முழுமையாகவும் இது செய்யப்பட வேண்டும் என்றும் கூறுகிறார். இல்லையெனில், அது ஒரு நபர் ஆணவமாகவே இருக்கும். அத்தகைய செயலாளர்கள் ஆணவக்காரர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை செயல்படுத்தும் அணித் தலைவர்களாக அல்ல என்றும் குறிப்பிடுகிறார்.

யார் பொறுப்பு?

மாறுபட்ட கருத்தை காதுகொடுத்து கேட்கவும், எந்த விமர் சனத்தையும் தோழற்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறும் மாவோ,  சில மாகாண கமிட்டி செயலாளர்கள் வந்து உட் கார்ந்ததும், தோழர்கள் பேசுவது நின்று போகிறது என்பதை சுட்டிக்காட்டி, அது தவறு, ஜனநாயகத்திற்கு புறம்பானது என்றும் விமர்சிக்கிறார். மற்றவர்களை சுதந்திரமாக பேச அனுமதிக்கா விடில், பிரச்சனை எழும். யார் தவறு செய்தாலும், மனம் திறந்து பேசி, விமர்சிக்க தயங்கக் கூடாது. மேலும் மாவோ கூறுகிறார், பீக்கிங்கில் நடைபெற்ற செயல்முறை மாநாட்டில் எனது குறைகளையும், தவறுகளையும் பற்றி நான் விவாதித்தேன். அதை அனைத்து தோழர்கள் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டு மென்று சொல்லப்பட்டது. மத்திய குழுவால் செய்யப்படும் தவறு களில், எனக்கு நேரடியாக தொடர்புள்ளவற்றுக்கு நான் பொறுப்பு. எனக்கு நேரடியாக தொடர்பில்லாதவற்றிலும் எனக்கொரு பங்குண்டு. ஏனெனில் நான் அதன் தலைவர் வேலைகளில் ஏற் படும் குறைகளுக்கும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எவருமே அணுகமுடியாத புலியைப்போல் நடந்து கொண்டால் தோற்பது உறுதி என்றும் கூறுகிறார். உயர்ந்தபட்ச ஜனநாயகம் இல்லாமல், உயர்ந்தபட்ச மத்தியத்துவத்தை பெறுவது சாத்தியமில்லை. உயர்ந்தபட்ச மத்தியத்துவம் இல்லாமல், சோஷலிச பொருளாதாரத்தை நிறுவு வது சாத்தியமாக இருக்காது. சோஷலிச பொருளாதாரத்தை நிறுவத் தவறினால், அது திருத்தல்வாத அரசாக மாறிவிடும். உண்மையில் அது முதலாளித்துவ அரசாக மாறிவடும். அதில் பிற்போக்கு பாசிச சர்வாதிகாரம் இருக்கும் என சீனாவிலுள்ள கட்சியின் முக்கிய தலைவர்களை சிந்தித்து செயல்படும்படி மாவோ எச்சரிக்கிறார். அதேபோன்று ஜனநாயக மத்தியத்துவம் இல்லாமல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உறுதிப்பட முடியாது. தவிர, மத்திய கமிட்டியில் ஆற்றிய உரையில், சோஷலிச கட்டு மானத்தில் வர்க்க செயல்பாடுபற்றியும், எந்த வர்க்கங்களுடன் ஒன்றுபட வேண்டும் என்றும், எந்த வர்க்கங்களை நாம் அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதையும் விவாதிக்கிறார். மேலும் நெறிப் படுத்தும் இயக்கம் கட்சி ஒற்றுமையை கட்ட உதவியுள்ளதையும் விளக்கியுள்ளார்.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம்

உலகில் பல நாடுகளிலும் மார்க்சியம், லெனினியத்தை ஆதரிக்கிறார்கள். சோவியத் யூனியன்தான் முதலாவது சோஷலிச அரசு. மாவோ, 1962ல் ப்ளீனத்தில் உரையாற்றுகையில், சோவியத் கட்சி மற்றும் அரசுத் தலைமை திருத்தல்வாதிகளால் கைப்பற்றப்பட்டிருந்தாலும், அம்மக்கள் புரட்சியை விரும்புகிறார் கள் என்கிறார். சோவியத் யூனியனிலிருந்து நாம் பாடம் கற்க வில்லையெனில் நாம் தவறு செய்து விடுவோம் என்று எச் சரிக்கை விடுக்கிறார். மார்க்சிய லெனினிய அடிப்படையில் சோஷ லிச நாடுகளும், உலக கம்யூனிஸ்ட் இயக்கமும் உறுதியோடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஏகாதிபத்தியவாதிகள் கம்யூனிஸ்டு களை தூற்றுவதை நிறுத்தமாட்டார்கள். தனிமைப்படுத்த முயற்சி செய்வார்கள். சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்ற கோட் பாட்டை உலக கம்யூனிஸ்டுகள் அனைவரும் எப்போதும் பற்றி நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறார். வெளிப் படையான எதிரிகளைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. ரகசிய எதிரிகளிடம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் முகத்துக்கு முன்னால் உண்மை பேசுவதில்லை. எனவே கவனத்துடன் செயல்பட்டு, கட்சி, மக்கள் ஒற்றுமையை கட்ட வேண்டும்.

தயவு செய்து வாருங்கள். என்னை இரவு பகலாக விமர்சனம் செய்யுங்கள் (சிரிப்பொலி). பின்னர் நான் உட்கார்ந்து இதுபற்றி அமைதியாக சிந்திப்பேன். இரண்டு அல்லது  மூன்று இரவுகள் தூக்கம் போய்விடும். முழுமையாக சிந்தித்த பின், அதனை புரிந்துகொண்டபின், நேர்மையுடன் சுய விமர்சனம் எழுதுவேன்... நீங்கள் மற்றவர்களை மனம் திறந்து பேசவிட்டால், வானம் இடிந்து வீழ்ந்துவிடாது. நீங்களும் சீரழிந்துவிடமாட்டீர்கள். நீங்கள் செய்யாவிட்டால், நீங்கள் சீரழிந்துபோகும் அந்தநாள் தவிர்க்க முடியாமல் வந்தேதீரும்.
(ஜனநாயக மத்தியத்துவம் பற்றி (30..1.1962) சீன கட்சி மத்தியக்குழு கூட்டிய பணி மாநாட்டில் மாவோ ஆற்றிய உரையிலிருந்து)

வே1962 செப்டம்பரில் பத்தாவது ப்ளீனத்தில் மாவோ ஆற்றிய உரையும் இந்த தொகுப்பின் பயனுள்ள பகுதி எனலாம். திருத்தல் வாதம், சோஷலிச நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள். சீனாவுக்கும், ஏகாதிபத்தியத்திற்குமிடையேயான முரண்பாடு ஆகிய விஷயங்கள் பற்றிய தெளிவானதொரு உரையாகும். தொடர்ந்து அரசியல் பொருளாதாரம் என்ற சோவியத் பாட நூலுக்கான விமர்சன குறிப்புகள் (பக்கம் 498 - 616) பலதரப்பட்ட விஷயங்களை அலசி, ஆராய்வதாக உள்ளது. ரஷ்யா, சீனா ஒப்பீடு, இந்தியாவில் ஏன் புரட்சி செய்யமுடியவில்லை. ஜனநாயக புரட்சியிலிருந்து சோஷலிச புரட்சிக்கு மாறும்பொழுது எழும் பிரச்சனைகள், பாட்டாளி வர்க்க அரசின் வடிவம், வேளாண் - தொழில்துறை இரண்டிற்குமிடையேயான உறவு, சோஷலிச அமைப்பில் உடைமை முறைகள், சோஷலிசத்தில் தொழிலாளர் உரிமைகள், பொருள் சார்ந்த ஊக்குவிப்புகள்,. ஊதியங்களின் வடிவங்கள்.... என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. விமர்சன கண்ணோட்டத்துடன் மாவோ தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். சோவியத் யூனியனில் சோஷலிசத்தின் பொருளாதார பிரச்சனைகள் என்ற ஸ்டாலினின் நூல் மீதான விமர்சன கட்டுரையுடன் எட்டாவுது தொகுப்பு நிறைவுறுகிறது. இந்த கட்டுரை சோவியத் யூனியனில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார நிகழ்வுகளை புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும்.

முந்தைய தொகுப்புகளில் பேசப்பட்ட சில முக்கிய விஷயங்கள் இந்த தொகுப்பில் மீண்டும் இடம் பெற்றிருந்தாலும்கூட, ஜனநாயக மத்தியத்துவம், சீனாவில் கம்யூன்கள் செயல்பாடு, சோவியத் யூனியனில் வளர்ச்சி - பிரச்சனைகள் பற்றிய விமர்சனங்கள் ஆகியவை மிகவும் பயனுள்ள பகுதிகள் ஆகும். தொகுதி  எட்டு, தோழர் மயிலைபாலு அவர்களால் சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கட்டுரையாளர் ஆர்.சந்திரா

Sunday, May 19, 2013

Manchester's history of rebellion!


துயில் களைந்தெழும் சிங்கம் போல வெல்லப்பட முடியா ஆற்றலுடன் எழுக, வெகுண்‌டெழுக!

உறங்குகையில் படிந்த பனித்துளிகளை புழுதி மண்ணில் உதறி எறிவது‍ போல் எறிக உமதடிமைத் தளைகளை!



நீங்களோ பலர், அவர்களோ சிலர்: மிகச்சிலர்? 
- பெர்சி ஷெல்லி (1819)

(பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்கொண்ட மான்செஸ்ட்ர் தொழிலாளர்களை போற்றிப் பாடிய கவி்தை)

Thursday, May 9, 2013

Mao's Quotations



பிளவுபடுத்துவது புரட்சிகரமானது (To Split is Revolutionary) பிளவு தூய்மை படுத்துகின்றது (Split Purifies). ஒன்று எப்பொழுதுமே இரண்டாகும் (One always becomes Two). இரண்டு எப்பொழுதுமே ஒன்றாகாது (Two never becomes One).

வரட்டுவாதம், அனுபவவாதம், கட்டளைவாதம், வால்பிடித்தல் வாதம், குறுக்குவாதம், அதிகாரத்துவம் பணியில் அகங்காரப் போக்கு போன்ற தீமைகள் நிச்சயம் தீங்கு விளைவிப்பவையாகவும் சகித்துக் கொள்ள முடியாதவையாகவும் மக்களுக்கு இருப்பதால் கொள்கைவாதிகள் மேற்குறிப்பிட்ட குணாம்சங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

"தொழிலாளிகள், விவசாயிகளின் மூளையை
உறைய வைப்பதற்காக முதலாளிகள்
மதம் என்ற மாத்திரையைப் பயன்படுத்தினார்கள்!

ஒரு நியாயமான லட்சியம் அளவற்ற ஆதரவைப் பெறுகிறது என்பதையும், ஒரு நியாயமற்ற லட்சியம் எவ்வித ஆதரவையும் பெறுவதில்லை என்பதையும் எண்ணற்ற உண்மைகள் மெய்ப்பிக்கின்றன! 

முகமூடிக்குள் நின்று
பேசுவதைக் கைவிடுங்கள்.
எது உங்கள் அரசியல் வழியோ
அதை முன்வையுங்கள்.

ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தினால் அது இதர போராட்ட வடிவங்களை நாம் கைவிடுவது என்று அர்த்தமாகி விடாது. அதற்கு மாறாக இதர பல்வேறு போராட்டங்களும் ஆயுதப் போராட்டத்துடன் இணையாவிட்டால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெற முடியாது.

வர்க்கங்களையும், சரக்கு உற்பத்தியையும் ஒழித்துக் கட்டிய பிறகு ஜனநாயகம் முழுமையாக கைகூடி வந்த பிறகு, அரசு என்னும் அமைப்பு வாடி உதிர்ந்த பிறகு, பழைய சமுதாயத்திலுள்ள சுயநலம், ஊழல், மனித பண்பற்ற தன்மை ஆகியவற்றை காலங்காலமாக படிந்துள்ள தூசு என்று கார்ல் மார்க்சால் வர்ணிக்கப்பட்ட இவற்றை - மனிதன் துடைத்தெறிந்து விட்டு முழுமையான மனிதத் தன்மையை அடைவான்! 

"நவீன சமுதாயத்தில் தொழிலுக்கும், வேளாண்மைக்கும் இடையில் உள்ள முரண்பாடு (இது நகரத்துக்கும், நாட்டுப்புறத்துக்கும் இடையில் உள்ள பாகுபாட்டின் காரணமாக இருப்பது) உற்பத்திச் சக்திகளின் தொடர்ந்த வளர்ச்சிக்குத் தடையாக மாறுகிறது!"

"மனிதனின் சமுதாய வாழ்வே,
அவனுடைய சிந்தனையை நிர்ணயிக்கிறது." 

எதிரி ஆயுதம் ஏந்தாதவரை, விமர்சனம் என்பதே ஆயுதம்; எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால், ஆயுதம் என்பதே விமர்சனம்;

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல், அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்” 



Forms of untouchability - தீண்டாமை வடிவங்கள்

தமிழ்நாட்டின் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள் வருமாறு:

  1. பொதுப்பதையில் நடக்க முடியாமை.
  2. செருப்பு, போட்டு நடக்க முடியாமை.
  3. சைக்கிளில் செல்ல முடியாமை.
  4. தோளில் துண்டு போட முடியாமை.
  5. வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாமை.
  6. பாலிஸ்டர் வேட்ட கட்ட முடியாமை.
  7. தலைமையில் தலைப்பாகை கட்ட முடியாமை
  8. முகத்தில் அரும்பு மீசை வைக்க முடியாமை.
  9. துணிகள் இஸ்திரி செய்து கொடுக்காமை.
  10. துணிகள் சலவைச் செய்து கொடுக்காமை.
  11. சில சலவை நிலையங்களில் தலித்துகளுக்கு தனி அலமாரி (இரட்டை அலமாரி)
  12. சலூன்களில் முடிவெட்ட முடியாமை.
  13. சில சலூன்களில் தலித்துகளுக்கு தனியான சேர் (இரட்டை சேர்)
  14. தேநீர் கடைகளில் இரட்டை குவளை.
  15. உணவகங்களில் தலித்துக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
  16. சில கிராமங்களில் தலித் உட்பிரிவு வாரியாக 4 குவளைகள்
  17. தேநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை
  18. தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது
  19. தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது
  20. தாகத்தால் தண்ணீர் கேட்கும் தலித்துகளுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்தி குடிக்க வைப்பது
  21. பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாமை
  22. சில கிராமங்களில் தண்ணீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்குவது
  23. திருவிழா காலத்தில் தலித்துக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது.
  24. கிராமங்களில் தலித் அதிகாரிகள் தலைமை தாங்கும் விழாக்கள் புறக்கணிப்பு.
  25. குளங்களில் குளிக்க முடியாமை.
  26. சில குளங்களில் தலித்துகளுக்கு தனிப் படித்துறை
  27. ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு
  28. திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது
  29. ஆலய மண்டகப்படி தலித்துகளுக்கு கிடையாது
  30. ஆயலங்களில் தலித்துகளின் தாம்பூலத்தை தண்ணீர் தெளித்து எடுப்பது
  31. ஆலயங்களில் தலித்துகளுக்கு வழிபட தனியான இடம் (கிறித்துவ தேவாலயங்களிலும் கூட)
  32. பொது மயான உரிமை இல்லை.
  33. பொது மயானத்தில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு.
  34. தலித்துகளுக்கு எனத் தனி மயானம்.
  35. தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு.
  36. கிராமப் பஞ்சாயத்து தொலைக்காட்சிகளை தலித்துக்கள் பார்க்கக் கூடாது.
  37. தலித்துகளுக்கு தனியான ரேஷன் கடைகள்.
  38. தலித்துக்கள் ஆடு, மாடு வளர்க்கக் கூடாது.
  39. பொது ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு சில நாட்கள் மட்டும் ஒதுக்குவது
  40. கிராம பொது மேடைகளில் தலித்துக்கள் பேச, பாட முடியாது.
  41. சில கிராமங்களில் தபால்காரர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு தபால் கொடுப்பதில்லை (சொல்லியனுப்பினால் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்)
  42. சில கிராமங்களில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது.
  43. கோவில் திருவிழாக் காலங்களில் ஆதிக்க சக்திகளுக்கு (பழைய ஆண்டைகளில் வாரிசுகள்) தலித்துகள் ஆடுகள் இலவசமாகக் கொடுப்பது.
  44. கோவில் திருவிழா காலத்தில் கையில் காப்பு கட்டிய பிறகு தலித்துக்கள் முகத்தில் முழிக்கக் கூடாது.
  45. செத்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கட்டாயப்படுத்துவது.
  46. மயான வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது.
  47. பறையடிக்குமாறு கட்டாயப்படுத்துவது.
  48. பேருந்து நிறுத்த நிழற்குடையில் தலித்துக்கள் உட்கார முடியாது.
  49. மரணம் நேர்ந்தாலும் அக்குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் சொல்லிக் கட்டாயப்படுத்துவது (பஸ் கட்டணம் மட்டும் தருவார்கள் - உணவு கொடுத்தால் தான் சாப்பிட முடியும்)
  50. ஆதிக்க சக்திகளின் குடும்பத்திற்கு இலவசமாக உடலுறுப்புக் கொடுப்பது (மனம் இருந்தால் உடனடி கிடைக்கும்).
  51. திருமணங்களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது.
  52. தனியார் திருமண மண்படங்களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள்.
  53. வசித படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது.
  54. கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான்.
  55. பெயர்களில் மரியாதையானப் பகுதியை வெட்டி விடுவது (மாடகாரியை மாடர், முனியசாமி முலியர்)
  56. மலம் சுமக்க கட்டாயப்படுத்துவது.
  57. பள்ளிக் கூடங்களில் தலித் (அருந்ததியர்) மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது.
  58. வயதான பெரியவர்களையும் ஆதிக்க சாதி சிறுவர்கள் பெயர் சொல்லியும், வாடா, போடா என்றும் அழைப்பது.
  59. தனியார் கல்லூரிகளில் தலித்துக்களை நிர்வாகப் பிரிவில் நியமனம் செய்ய மாட்டார்கள்.
  60. சில பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
  61. தலித் குடியிருப்புகளிலிருந்து பொதுத் தெருவுக்கு செல்ல முடியாமல் தடுப்புச் சுவர் கட்டுவது (உத்தபுரம் சுவர் 600 மீட்டர்).
  62. கிராமங்களில் - சில நகரங்களில் பொதுத்தெருவிலிருந்து தலித் தெருவிற்கு நுழைய முடியாதபடி சுவர்கள் கட்டப்பட்டிருப்பது (வளைவு) இதர ஜாதி தெருக்களில் இப்படி வளைவு இருக்காது.
  63. அரசாங்கமே துப்புறவுப் பணியாளர்களாக தலித் (அருந்தியர்களை) மட்டுமே நியமனம் செய்வது.
  64. அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு காட்டுப்படு தீண்டாமை - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள்.
  65. கூலி வேலை செய்யும் தலித்துக்கள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும்.
  66. தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது.
  67. பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது (தூத்துக்குடி மாவட்டம்).
  68. பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர்.
  69. தலித்துகளின் ஊராட்சிகளை போதுமான நிதி ஒதுக்காமல் அரசு நிர்வாகமே புறக்கணிப்பது.
  70. தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்பட விடாமல் தடுப்பது.
  71. கிராமப் பொதுச் சொத்தில் தலித்துக்களுக்கு பங்கு கிடையாது.

Tuesday, May 7, 2013

Communist Manifesto Tamil

"சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு‍ முரணற்றதாய் அமைந்த பொருள் முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு‍ புதிய கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று‍ முக்கியத்துவமுடைய புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் - இவை யாவும் அடங்கிய ஒரு‍ புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச் சுடரோடும் எடுத்துரைக்கிறது‍."
- லெனின்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
மார்க்ஸ் - எங்கெல்ஸ்
உலகத் தொழிலாளர்களே, ஒன்று‍ சேருங்கள்!
I
1872-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
தொழிலாளர்களது சர்வதேச நிறுவனமாகிய கம்யூனிஸ்ட் கழகம் அக்காலத்திய நிலைமைகளில் இரகசியமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கழகம் கட்சியின் விவரமான தத்துவார்த்த, நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியீட்டுக்காக வகுத்திடும்படி அடியில் கையொப்பமிட்டுள்ளோரைப் பணித்தது. இவ்வாறு பிறப்பெடுத்ததே பின்வரும் அறிக்கை. அச்சிடப்படுவதற்காக இதன் கையெழுத்துப் பிரதி பிப்ரவரி புரட்சிக்கு1 ஒருசில வாரங்களக்கு முன்னால் லண்டன் போய்ச் சேர்ந்தது. முதற்கண் ஜெர்மன் மெழியில் வெளிவந்தது, பிறகு ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலுமாய் வெவ்வேறான பன்னிரண்டு பதிப்புகளுக்குக் குறையாமல் இம்மொழியில் வெளிவந்திருக்கிறது. முதன் முறையாய் ஆங்கிலத்தில் இது 1850ல் லண்டன் Red Republican 2 பத்திரிக்கையில் வெளியாயிற்று. இந்த மொழி பெயர்ப்பைச் செய்தவர் மிஸ் ஹெலன் மாக்ஃபர்லென். 1871-ல் அமெரிக்காவில் மூன்றுக்குக் குறையாத வெவ்வேறு ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்தன. பிரெஞ்சு மொழி பெயர்ப்பு 1848-ம் ஆண்டு ஜூலை எழுச்சிக்குச் 3 சிறிது காலத்துக்கு முன் முதன்முதல் பாரிசில் வெளியாயிற்று. அண்மையில் நியூயார்க் Le Socialiste 4 பத்திரிகையிலும் வெளிவந்திருக்கிறது. புதிய ஜெர்மன் மொழிபெயர்ப்பு ஒன்று தயாராகி வருகிறது. முதன்முதல் ஜெர்மன் மொழியில் வெளிவந்த பின் சிறிது காலத்துக்கு எல்லாம் போலிஷ் பதிப்பு ஒன்று லண்டனில் வெளியிடப்பட்டது. அறுபதாம் ஆண்டுகளில் ருஷ்யப் பதிப்பு ஒன்று ஜினீவாவில் வெளிவந்தது. முதன்முதல் வெளியாகிய பின் சிறிது காலத்துக்குள் டேனிஷிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
 கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும், விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும்5 கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று; அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த காரியங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக்கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில்முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கும். கடந்த 25 ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை பெருநடை போட்டுப் பிரமாதமாய் முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று. (பார்க்கவும் : பிரான்சின் உள்நாட்டுப்போர்; அகிலத் தொழிலாளர் சங்கப் பொது அவையின் பேருரை, ஜெர்மன் பதிப்பு பக்கம் 19; இந்த விவரம் மேலும் விளக்கமாய் அங்கே பரிசீலிக்கப்படுகிறது. தவிரவும், சோசலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சம் இன்றைய நிலவரத்துககுப் பற்றாக்குறையானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஏனெனில் 1847-ம் ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகிறது. அதோடு, பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளுடைய உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே என்றாலுங்கூட, நடைமுறையில் காலங்கடந்தவை என்பதும் தெளிவு. ஏனென்றால், அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. வரலாற்றின் முன்னேற்றமானது அப்பிரிவில் குறிக்கப்படும் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்து துடைத்து அகற்றியிருக்கிறது.
 ஆனால், இந்த அறிக்கை வரலாற்று ஆவணமாகி விட்டது. இனி இதைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை. 1847-க்கும் இன்றைக்கும் உள்ள இந்த இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு பிற்பாடு ஒரு பதிப்பு வெளிவரலாம். தற்போது இந்த மறுபதிப்பு எதிர்பாராத முறையில் வெளியாவதால் இதைச் செய்ய எங்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை.
காரல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், லண்டன் 1872, ஜூன் 24.

1882-ஆம் ஆண்டு ருஷ்யப் பதிப்பின் முகவுரை
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப் பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது, அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் 6 கோலகல் 7 ஏட்டின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலைய நாட்டினர் அப்போது அதை (அந்த ருஷ்யப் பதிப்பை) அரியதோர் இலக்கிய நிகழ்வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. அம்மாதிரியான ஒரு கருத்து இன்று சாத்தியமாய் இராது.
 பாட்டாளி வர்க்க இயக்கம் அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) எவ்வளவு குறுகலான வட்டத்துள் அடங்குவதாய் இருந்தது என்பதை அறிக்கையின் கடைசிப்பிரிவு, பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையைக் கூறும் இந்தப்பிரிவு, மிகத் தெளிவாய்த் தெரியப்படுத்துகிறது. ருஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் இப்பிரிவில் காணப்படவே இல்லை. ருஷ்யாவானது அனைத்து ஐரோப்பியப் பிற்போக்கின் கடைசிப் பெரும்கோட்டையாகவும், அமெரிக்க ஐக்கிய நாடு ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி அணிகளைக் குடியேற்றத்தின் மூலம் உட்கவர்ந்து கொள்ளும் நாடாகவும் இருந்த வந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப்பொருள்களை வழங்கின, அதேபோது ஐரோப்பியத் தொழில்துறை உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தைகளாகவும் இருந்தன. ஆகவே, அந்தக் காலத்தில் இரு நாடுகளும் ஐரோப்பியாவிலுள்ள அமைப்புக்கு ஏதேனும் ஒரு வகையில் ஆதாரத்தூண்களாய் இருந்தன.
நிலைமை இன்று எப்படி மாறிவிட்டது! ஐரோப்பாவிலிருந்து நடைபெற்ற இந்தக் குடியேற்றம்தான் வடஅமெரிக்காவைப் பிரம்மாண்ட அளவிலான விவசாயப் பொருளுற்பத்திக்குத் தயார் செய்தது ; இப்போது இந்த அமெரிக்க விவசாயப் பொருளுற்பத்தியின் போட்டி ஐரோப்பாவின் சிறிதும் பெரிதுமான நிலவுடைமைகளது அடித்தளங்களையே ஆட்டிக் குலுக்குகிறது. அதோடு இந்தக் குடியேற்றம், இதுகாறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே தகர்க்கப்படுமெனக் கூறும்படி அத்தனை விறுவிறுப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறைச் செல்வாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கிற்று. இவ்விரு நிலைமைகளும் புரட்சிகர முறையிலான எதிர்வினையை அமெரிக்காவினுள் நடைபெறச் செய்கின்றன. அனைத்து அரசியல் அமைப்புக்கும் அடிநிலையான சிறிநிற, நடுத்தர உழவர் நிலவுடைமைகள் பெரும் பண்ணைகளுடைய போட்டியைச் சமாளிக்க முடியாமல் படிப்படியாய் நசிந்து வருகின்றன. அதேபோது பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும், வியக்கத்தக்க மிகப்பெரிய அளவிலான மூலதன ஒன்றுகுவிப்பும் தொழில்துறைப் பிரதேசங்களில் வளர்ச்சியுறுகின்றன.
அடுத்து, இப்போது ருஷ்யா! 1848-49-ஆம் ஆண்டுகளது புரட்சியின் போது ஐரோப்பிய முடிமன்னர்கள் மட்டுமல்ல, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தாரும்,அப்போதுதான் விழித்தெழ முற்பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தப்பிக்க ருஷ்யத் தலையீடு ஒன்றே வழி என்று இருந்தனர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் அதிபதியாய்ப் பிரகடனம் செய்யப்பட்டார். இன்று ஜார் மன்னர் புரட்சியின் போர்க் கைதியாய்க் காட்சினாவில் இருக்கிறார்; 8  ருஷ்யாவானது ஐரோப்பாவில் புரட்சி நடவடிக்கையின் முன்னணியாய்த் திகழ்கிறது.
 நவீன கால முதலாளித்துவச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் குறிக்கோள். ஆனால் ருஷ்யாவில் நாம் காண்பது என்ன? அதிவேகமாய் வளர்ந்து வரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நிலவுடைமையுடன் கூடவே, ருஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்கக் காண்கிறோம். இப்போது எழும் கேள்வி இதுதான்; ருஷ்ய ஒப்ஷீன 9 (ஒப்ஷீனா- கிராம சமுதாயம்) வெகுவாய்ச் சீர்குலைக்கப்பட்டிருப்பினும், இன்னமும நிலத்திலான புராதனப் பொதுவுடைமையின் ஒரு வடிவமாகவே இருக்கும் இது, நேரடியாய்க் கம்யூனிசப் பொதுவுடைமை எனும் உயர்ந்த வடிவமாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர்மாறாய், மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்தச் சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா?
 இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான்: ருஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று நிறைவு பெறுமாயின், தற்போது ருஷ்யாவில் நிலத்திலுள்ள பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குரிய துவக்க நிலையாய்ப் பயன்படக்கூடும்.
 கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ்லண்டன், 1882, ஜனவரி 21

1883-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
தற்போதைய இந்தப் பதிப்பின் முகவுரைக்கு நான் - அந்தோ - தனியே கையெழுத்திடப்பட்டாக வேண்டும். ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த அனைத்துத் தொழிலாளி வர்க்கமும் மற்றவர் எவரையும் விட அதிகமாய் மார்க்சுக்கே கடமைப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார், அவருடைய சமாதியின் மேல் இப்போதுதான் பசும்புல் தளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப் பிறகு அறிக்கையில் திருத்தம் செய்யலாமென்றோ, செருகிச் சேர்க்கலாமென்றோ நினைப்பது முன்னிலும் முடியாத காரியம். பின்வருவதை வெளிப்படையாய்த் திட்டவட்டமாய் மீண்டும் இங்கு எடுத்துரைப்பது முன்னிலும் அத்தியாவசியமெனக் கருதுகிறேன்;
 அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து - வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக் கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன; ஆகவே, (புராதன நிலப்பொதுவுடைமை சிதைந்து போன காலம் முதலாய்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்துக்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும், ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது; ஆனால் இந்தப் போராட்டம் தற்போது வந்தடைந்திருக்கும் கட்டத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) சுரண்டியும், ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் அனைத்தையும் அதேபோது சுரண்டலிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்தும் என்றென்றுக்கு மாய் விடுவித்தே ஆக வேண்டும் என்கிற இந்த அடிப்படை கருத்து - முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.
 (* டார்வினுடைய தத்துவம் உயிரியலுக்கு ஆற்றிய சேவையை இந்த வரையறுப்பு என் கருத்துப்படி, வரலாற்றியலுக்கு ஆற்றப்போகிறது என்று ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் நான் எழுதினேன். (இப்பதிப்பு பக்கம் 21-ஐப் பார்க்கவும்). 1845க்கு முந்திய சில ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் இந்த வரையறுப்பைப் படிப்படியாய் நெருங்கி வந்து கொண்டிருந்தோம், சுயேச்சையாய் நான் எந்த அளவுக்கு இதை நோக்கி முன்னேறி வந்தேன் என்பதை நன்கு இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை நன்கு தெரிவிக்கின்றது. ஆனால் 1845-ம் ஆண்டு வசந்தத்தில் நான் பிரெஸ்ஸெல்சில் மார்க்சை மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைப் பூரணமாய் வகுத்து வைத்திருந்தார், இங்கு நான் எடுத்துரைத்திருப்பது போல் ஏறத்தாழ இதே அளவுக்குத் தெளிவான வாசகத்தில் எனக்கு அறிவித்தார். (1890-ம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு).)
 முன்பே இதை நான் பல தடவை கூறியிருக்கிறேன். முக்கியமான இப்பொழுது அறிக்கையின் முகவுரையில் இதுவும் குறிக்கப்படுதல் அவசியமாகும்.
பிரெடெரிக் ஏங்கெல்ஸ்லண்டன், 1883, ஜூன் 28

1888-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின் முகவுரை
இந்த அறிக்கை தொழிலாளர்களது சங்கமான கம்யூனிஸ்டுக் கழகத்தின் வேலைத்திட்டமாய் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்டுக் கழகம் முதலில் முற்றிலும் ஜெர்மன் தொழிலாளர்களுக்கு மட்டுமாய் இருந்தது. பிறகு சர்வதேச நிறுவனமாயிற்று : 1848 முன்பு கண்டத்துள் நிலவிய அரசியல் நிலைமைகளில் தவிர்க்க முடியாதபடி இது இரகசிய சங்கமாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கழகக் காங்கிரஸ், முழு அளவிலான தத்தவார்த்த, நடைமுறைக் கட்சி வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்தளிக்கும்படி மார்க்சையும் எங்கெல்சையும் பணித்தது. 1848 ஜனவரியில் ஜெர்மனி மொழியில் தயாரித்து முடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி பிப்ரவரி 24 பிரெஞ்சுப் புரட்சிக்குச் 10 சில வாரங்களுக்கு முன்னால் லண்டன் அச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. பிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்று 1848 ஜூன் எழுச்சிக்குச் சற்று முன்னதாய் பாரிசில் வெளியாயிற்று. முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்பு மிஸ் ஹெலன் மாக்ஃர்லெனால் செய்யப்பட்டு, லண்டனில் ஜார்ஜ் ஜூலியன் ஹார்னியின் Red Republican பத்திரிக்கையில் 1850-இல் வெளிவந்தது. டேனிஷ் போலிஷ் பதிப்புகளும் வெளியாகியிருக்கின்றன.
 பாட்டாளி வர்ன்கத்துக்கும், முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான முதலாவது பெரும் போராய் 1848 ஜூனில் பாரிசில் மூண்ட எபச்ச தோல்வியுற்றதைத் தொடர்ந்து சிறிது காலத்துக்கு ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சமூக, அரசியல் ஆர்வங்கள் மீண்டும் பின்னிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் பிறகு மேலாண்மைக்கான போராட்டம் மீண்டும் பிப்ரவரிப் புரட்சிக்கு முன்பிருந்தது போல் சொத்துடைத்த வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் மட்டும் நடைபெறும் போராட்டமாகியது; தொழிலாளி வர்க்கம் அரசியல் நடமாட்ட இடத்துக்காகப் போராட வேண்டிய நிலைக்கும், முதலாளித்துவ வர்க்கத்தின் தீவிரவாதிகளது தீவிரசாரியாய் இருக்கும் நிலைக்கும் தாழ்த்தப்பட்டது. எங்காவது சுயேச்சையான பாட்டாளி வர்க்க இயக்கங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் அறிகுறிகள் வெளிப்படுமாயின் ஈவிரக்கமின்றி அவை நசுக்கப்பட்டன. இவ்வாறுதான் பிரஷ்யப் போலிஸ் அப்போது கொலோனில் இருந்த கம்யூனிஸ்டுக்கழக மையக்குழுவை வேட்டையாடிற்று. மையக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, பதினெட்டு மாதங்களுக்குச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பிறகு 1852 அக்டோபரில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. புகழ் பெற்ற இந்த கொலோன் கம்யூனிஸ்ட் வழக்கு விசாரணை அக்டோபர் 4-லிருந்து நவம்பர் 12 வரை நடைபெற்றது. கைதிகளில் ஏழுபேருக்கு மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் வரையிலான கோட்டைச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எஞ்சியிருந்த உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட்க்கழகம் கலைக்கப்பட்டதாய் அறிவித்தனர். அறிக்கைகளைப் பொறுத்தவரை இனி அது தடமற்று மறைந்து விடும் என்பதாகவே தோன்றிற்று. 
 ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும் வர்க்கங்களைத் தாக்குவதற்குப் போதிய பலம் பெற்றதும்,அகிலத் தொழிலாளர் சங்கம் உதித்தெழுந்தது. ஆனால் இந்த நிறுவனம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் படைத்த பாட்டாளி வர்க்கம் அனைத்தையும் ஒரே அமைப்பாய் இணைத்திட வேண்டுமென்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்டதால், அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாய் இது ஏற்றுப் பிரகடனம் செய்ய முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களுக்கும், பிரான்சையும் பெல்ஜியத்தையும் இத்தாலியையும் ஸ்பெயினையும் சேர்த்து புரூதோன் 11 பற்றாளர்களுக்கும், ஜெர்மனியில் லஸ்ஸாலியர்களுக்கும்* 12 (*தனிப்பட்ட முறையில் லஸ்ஸால் எப்போதுமே எங்களிடம் தாம் மார்க்சினு சீடர் என்பதாய் ஏற்றுக் கொண்டார், எனவே, அறிக்கையையே அடிநிலையாய்க் கெண்டிருந்தார். அவரது கிளர்ச்சியில், அரசுக்கடன் உதவியுடன் கூட்டுறவுத் தொழிலகங்கள் நடத்தப்பட வேண்டுமெனக் கோருவதற்கு‍ மேல் அவர் செல்லவில்லை. (எங்கெல்ஸ் குறிப்பு)) ஏற்புடையதாகும்படி போதிய அளவு பரவலான வேலைத்திட்டத்தையே அகிலமானது ஏற்க வேண்டியிருந்தது. எல்லாக் கட்சியினருக்கும் திருப்திகரமான வகையில் இந்த வேலைத்திட்டத்தை வகுத்தளித்த மார்க்ஸ், ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவாகவும் பரஸ்பர விவாதத்தின் விளைவாகவும் தொழிலாளி வர்க்கத்துக்கு நிச்சயமாய்க் கைவரப் பெறும் அறிவின் வளர்ச்சியில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். 
 மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும், நல்லதும் கெட்டதுமான மாற்றங்களும், போராட்டத்தின் வெற்றிகளையும் விட அதிகமாய்த தோல்விகளும், மாந்தர்தம் அபிமானத்துக்குரிய பலவகைப்பட்ட உத்திகளும் போதுமானவை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தி, தொழிலாளி வர்க்க விடுதலைக்கு வேண்டிய மெய்யான நிலைமைகள் குறித்து முன்னிலும் அதிகமாய் முழுமையான ஞானம் பிறப்பதற்கு வழி கோலவே செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தது போலவே நடைபெற்றது. அகிலமானது 1864-ல் இருக்கக் கண்ட தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் வேறான ஒரு தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும் வேறான ஒரு தொழிலாளி வர்க்கத்தை 1874ல் அது கலைக்கப்பட்ட போது விட்டுச் சென்றது. பிரான்சில் புரூதோனியமும், ஜெர்மனியில் லஸ்ஸாலியமும் இறந்து மறைந்து கொண்டிருந்தன; பழமைவாத ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களும் கூட, அவற்றில் பெரும்பாலானவை நெடுநாட்களுக்கு முன்பே அகிலத்திலிருந்து தமது தொடர்பை வெட்டிக் கொண்டு விட்டன என்ற போதிலும் படிப்படியாய் முன்னேறி, கடந்த ஆண்டில் ஸ்வான்சியில் அவற்றின் தலைவர் * (டிபிள்யூ .பீவன்(பதிப்பாசிரியர்) பேசுகையில் கண்டத்து சோஷலிசத்திடம் எங்களுக்கு இருந்த கிலியெல்லாம் மறைந்து விட்டது என்பதாய் அவற்றின் சார்பில் அறிவிக்கத் துணியும் நிலையை நோக்கி வந்திருக்கின்றன. உண்மை என்னவென்றால், அறிக்கையின் கோட்பாடுகள் எல்லா நாடுகளின் தொழிலாளர்களிடத்தும் கணிச அளவு செல்வாக்கு பெற்றுவிட்டன. 

அறிக்கை இவ்வாறு திரும்பவும் முன்னிலைக்கு வந்தது. 1850 முதலாய் ஜெர்மன் மூலத்தின் மறுபதிப்புகள் பல தடவை சுவிட்சர்லாந்திலும், இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வெளியாகியிருக்கின்றன. 1872-ல் நியூயார்க்கில் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு - Wooddull and Claflin’s Weekly -ல் வெளியிடப்பட்டது. நியூயார்க் Le Socialiste ஏடு இந்த ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து பிரெஞ்சில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் பிறகு குறைந்தது மேலும் இரு ஆங்கில மொழி பெயர்ப்புகள், அதிகமாகவோ குறைவாகவோ சிதைத்துக் குலைக்கப்பட்ட வடிவில் அமெரிக்காவில் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று இங்கிலாந்தில் மறுபதிப்பாய் வெளியாகியிருக்கின்றன. முதலாவது ருஷ்ய மொழி பெயர்ப்பு பக்கூனினால் செய்யப்பட்டு, 1863-ம் ஆண்டின் வாக்கில் ஜினீவாவில் கெர்த்சனின் கோலகல் ஏட்டின் அச்சகத்திலிருந்து வெளியாயிற்று. இரண்டாவது ருஷ்ய மொழிபெயர்ப்பு வீரமிக்க வேரா ஸசூலிச்சால் 13 செய்யப்பட்டு 1882ல் ஜினீவாவில் வெளியாயிற்று. புதிய டேனிஷ் பதிப்பு ஒன்றை Social demokratic Biblothehek (கோப்பன்ஹேகன், 1885) நூல் தொகுப்பில் காணலாம். பாரிசில் 1885ல் Le Socialiste ஏட்டில் ஒரு புதிய பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதிலிருந்து ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டு 1886ல் மாட்ரிடில் வெளியாயிற்று. ஜெர்மன் மறுபதிப்புகளுக்குக் கணக்கில்லை. மொத்தம் பன்னிரண்டுக்குக் குறையாது. ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்று சில மாதங்களுக்கு முன்பு கான்ஸ்டான்டிநோப்பிளில் வெளிவந்திருக்க வேண்டும், ஆனால் மார்க்சின் பெயரைக் கொண்ட ஒரு புத்தகத்தைக் கொண்டு வர பதிப்பாளர் பயந்ததாலும், மொழி பெயர்ப்பாளர் அதைத் தமது படைப்பாய்க் குறிப்பிடுவதற்கு மறுத்ததாலும், அது வெளிவராமல் நின்று விட்டதாய்க் கேள்விப்படுகிறேன். வேறு மொழிகளிலும் பெயர்க்கப்பட்டிருப்பது பற்றிக்கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவற்றை நான் நேரில் பார்த்ததில்லை. இவ்விதம் அறிக்கையின் வரலாறு நவீனத்தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது சோசலிச இலக்கியங்கள் யாவற்றிலும் இது மிகவும் பல்கிப் பரவி அதிக அளவுக்கு அகிலம் தழுவிய வெளியீடாய் இருக்கிறது என்பதிலும், சைபீரியாவிலிருந்து கலிபோர்னியா வரையில் கோடானுகோடி தொழிலாளி மக்களால் பொது வேலைத்திட்டமாய் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயப்பாட்டுக்கு இடமில்லை. 
 ஆயினும் அது எழுதப்பட்ட காலத்தில் அதற்க நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என்பதாய் பெயர்சூட்ட முடியவில்லை. 1847ல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறத்தில் வெவ்வேறு கற்பனாவாத கருததமைப்புகளைச் சேர்ந்தோராய் இருந்தனர்- இங்கிலாந்தில ஓவனியர்கள்,14 பிரான்சில் ஃபூரியேயர்கள்,15 இரு வகையினரும் ஏற்கனவே குறுங்குழுக்களின் நிலைக்குத் தாழ்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தவர்கள்; மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட சமூக மருத்துவப் புரட்டர்களாய், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராத படி பல வகையான ஒட்டு வேலைகள் மூலம் எல்லா வகையான சமூகக் கேடுகளையும் களைகிறோமெனக் கூறிக் கொண்டவர்களாய் இருந்தனர். இரு வகைபட்டோரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்து கொண்டு படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாய் நாடி வந்தனர். தொழிலாளி வர்க்கத்தில் எந்தப்பகுதி வெறும் அரசியல்புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமற உணர்ந்து, முழுநிறைவான சமுதாய மாற்றம் ஏற்படுவது இன்றியமையாததெனப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண்டது. 
 அது பக்குவம் பெறாத, குத்தாயமாய் வரையப் பெற்ற, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்ததென்றாலும், அடிப்படையான விவகாரத்தைக் குறிப்பிடுவதாய் இருந்தது. பிரான்சில் காபேயின் கற்பனாவாதக் கம்யூனிசத்தையும், ஜெர்மனியில் வைட்லிங்கின் கற்பனாவாதக் கம்யூனிசத்தையும் 16 தோற்றுவிக்கும் அளவுக்குத் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் சக்தி வாய்ந்ததாய் இருந்தது. இவ்விதம் 1847-ல் சோசலிசம் மத்தியதர வர்க்க இயக்கமாய் இருக்க, கம்யூனிசம் தொழிலாளி வர்க்க இயக்கமாய் இருந்தது. சோஷலிசம், எப்படியும் கண்டத்திலேனும், கண்யவான் மனப்பாங்குடைத்ததாய் இருக்க, கம்யூனிசம் இதற்கு நேர்மாறானதாய் இருந்தது. ஆதியிலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும் என்பதாய் இருந்ததால், இவ்விரு பெயர்களில் நாங்கள் எதை ஏற்பது என்பது குறித்து ஐயப்பாட்டுக்கு இடம் இருக்கவில்லை. அதோடு அது முதலாய், இந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம் கணமும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை. 
 அறிக்கையானது எங்களுடைய கூட்டுப்படைப்பானதால், இதன் மையக்கருவாய் அமைந்த அடிப்படை நிர்ணயிப்பு மார்க்சுக்கே உரியதென்பதைக் குறப்பிடுவது என்கடமையாகுமெனக் கருதுகின்றேன். அந்த அடிப்படை நிர்ணயிப்பு வருமாறு : வரலாற்றின் வழிவந்த ஒவ்வொரு சகாப்தத்திலும், அப்போது ஒங்கிய நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி, பரிவர்த்தன முறையும் இதிலிருநது இன்றியமையாதவாறு பெறப்படும் சமூக அமைப்பு முறையும்தான் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றின் அடிநிலையாகின்றது, இந்த அடிநிலையிலிருந்து மட்டுமே அந்த அரசியல், அறிவுத்துறை வரலாற்றினை மட்டுமே விளக்க முடியும்; ஆகவே (நிலத்தைப் பொதுவுடைமையாய்க் கொண்டிருந்த புராதனக் குடிகளது சமுதாயம் சிதைவுற்ற காலம் முதலாய்) மனிதகுல வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் , ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான பேராட்டங்களது வரலாறே ஆகும்; இந்த வர்க்கப் போராட்டங்களது வரலாறானது பரிணாமங்களின் தொடர் வரிசையாய் அமைந்து தற்போது வந்தடையப் பெற்றுள்ள கட்டத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் சரண்டியும், ஒடுக்கியும் வரும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தனது விடுதலையைப் பெற வேண்டுமாயின், அதேபோது சமுதாயம் முழுதையுமே எல்லாவிதமான சுரண்டலிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப் பாகுபாடுகளிலிலிருந்தும் வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் முற்றாகவும், முடிவாகவும் விடுவித்தே ஆக வேண்டும் என்றாகியுள்ளது. 
 டார்வினுடைய தத்துவம் உயிரியலுக்கு ஆற்றிய சேவையை இந்த வரையறுப்பு என் கருத்துப்படி, வரலாற்றியலுக்கு ஆற்றப்போகிறது. 1845-க்கு முந்திய சில ஆண்டுகளாகவே நாங்கள் இருவரும் இந்த வரையறுப்பைப் படிப்படியாய் நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். சுயேச்சையாய் நான் எந்த அளவுக்கு இதை நோக்கி முன்னேறி வந்தேன் என்பதை எனது இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை* நன்கு தெரிவிக்கின்றது. ஆனால் 1845ம் ஆண்டு வசந்தத்தில் நான் பிரஸ்ஸெல்சில் மார்க்சை மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைப் பூரணமாய் வகுத்து வைத்திருந்தார். இங்கு நான் எடுத்துரைத்திருப்பது போல் ஏறத்தாழ இதே அளவுக்கத் தெளிவான வாசகத்தில் எனக்கு அறிவித்தார். 
 * The Condition of the Working Class in England in 1844. By Frederick Engels. Translated by Florence K.Wishnewetzky. New York, Lovell- London, W.Reeves, 1888(1844-ல் இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை - பிரெடரிக் எங்கெல்ஸ், மொழிபெயர்ப்பாளர் : கே.விஷ்னெவேஸ்கி, நியூயார்க், லோவெல்-லண்டன், வீ.ரீவ்ஸ்) (எங்கெல்ஸ் குறிப்பு). 
 1872ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முகவுரையிலிருந்து பின்வரும் பகுதியை அப்படியே இங்கு தருகின்றேன்: 
 கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமை எவ்வளவுதான் மாறியிருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில விவரங்களைச் செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக் கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தை இன்று வேறு விதமாய் வரைய வேண்டியிருக்கம். 
 1848-ம் ஆண்டுக்குப் பிறகு நவீனத் தொழில்துறை பெரு நடை போட்டுப் பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும், மேம்பாடுற்றும் விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும், மற்றும் முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய், முதன்முதலாய்ப் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் 18 கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சிலவிவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்துக் காட்டிற்று; அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார் நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்தக் காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று. (பார்க்கவும் : பிரான்சில் உள்நாட்டுப்போர்; அகிலத் தொழிலாளர் சங்கப் பொது அவையின் பேருரை, லண்டன், துரூலவ், 1871, பக்கம் 15; இந்த விவரம் மேலும் விளக்கமாய் அங்கே பரிசீலிக்கப்படுகிறது). தவிரவும், சோசலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய நிலவரத்துக்குப் பற்றாக்குறையானது என்பதைக்கூறத் தேவையில்லை. 
ஏனெனில், 1847-ம் ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெறுகிறது. அதோடு, பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்ட்களுடைய உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாடு அளவில் இன்றும் பிழையற்றவையே என்றாலுங்கூட நடைமுறையில் காலங்கடந்தவை என்பது தெளிவு. ஏனென்றால், அரசியல் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது, வரலாற்றின் முன்னேற்றமானது அப்பிரிவில் குறிக்கப்படும் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்து துடைத்து அகற்றியிருக்கிறது. 
ஆனால் இந்த அறிக்கை வரலாற்று ஆவணமாகிவிட்டது. இனி இதைத் திருத்த எங்களுக்கு உரிமை இல்லை. தற்போதைய இந்த மொழிபெயர்ப்பு, மார்க்சின், மூலதனத்தில் பெரும் பகுதியை மொழிபெயர்த்து அளித்தவரான சாமுவேல் மூர் செய்ததாகும். இருவருமாய்ச் சேர்ந்து மொழி பெயர்ப்பைச் சரி பார்த்தோம். வரலாற்றுச் சட்டுரைகளை விளக்கும் சில குறிப்புகளை நான் எழுதிச் சேர்த்திருக்கின்றேன். 
பிரடெரிக் எங்கெல்ஸ் லண்டன், 1888, ஜனவரி 30

V
1890-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை
மேற்கண்டது எழுதப்பட்ட பிறகே, * அறிக்கையின் ஒரு புதிய ஜெர்மன் பதிப்பை வெளியிடுவது அவசியமாகியுள்ளது. அதோடுஅறிக்கைக்கு நிகழ்ந்துள்ளவை பலவற்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 
இரண்டாவது ரஷ்ய மொழி பெயர்ப்பு ஒன்று வேராஸசூலிச்சால் செய்யப்பட்டு 1882ல் ஜினீவாவில் வெளியாயிற்று. துரதிர்ஷ்டவசமாய் அதன் ஜெர்மன் மூலத்தின் கையெழுத்துப்பிரதி காணாமற் போய்விட்டது. ஆகவே அதை நான் ருஷ்ய மொழி பெயர்ப்பிலிருந்து திருப்பிப் பெயர்த்து எழுத வேண்டியிருக்கிறது, மூல வாசகம் இதனால் எவ்வகையிலும் சிறப்படையப்போவதில்லை. அந்த முகவுரை வருமாறு: 
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதலாவது ருஷ்யப்பதிப்பு, பக்கூனின் மொழி பெயர்த்தது, அறுபதாம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கோலகல் ஏட்டின் அச்சகத்தால் வெளியிடப்பட்டது. மேலைய நாட்டினர் அப்போது அதை (அந்த ருஷ்ய பதிப்பை) அரியதோர் இலக்கிய நிகழ்வாய் மட்டுமே பார்க்க முடிந்தது. அம்மாதிரியான ஒரு கருத்து இன்று சாத்தியமாய் இராது. 
பாட்டாளி வர்க்க இயக்கம் அந்தக் காலத்தில் (1847 டிசம்பர்) எவ்வளவு குறுகலான வட்டத்துள் அடங்குவதாக இருநதது என்பதை அறிக்கையின் கடைசிப்பிரிவு, பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்டுகளின் நிலையைக் கூறும் இந்தப்பிரிவு, மிகத்தெளிவாய்த் தெரியப்படுத்துகிறது. ருஷ்யாவும், அமெரிக்க ஐக்கிய நாடும் இப்பிரிவில் காணப்படவே இல்லை. ருஷ்யாவானது அனைத்து ஐரோப்பிய பிற்போக்கின் கடைசிப் பெரும் கோட்டையாகவும், அமெரிக்க ஐக்கிய நாடு ஐரோப்பாவின் உபரிப் பாட்டாளி அணிகளைக் குடியேற்றத்தின் மூலம் உட்கவர்ந்து கொள்ளும் நாடாகவும் இருந்த வந்த காலம் அது. இரு நாடுகளும் ஐரோப்பாவுக்கு மூலப்பொருள்களை வழங்கின, அதேபோது ஐரோப்பியத் தொழில்துறை உற்பத்திப் பொருள்களுக்குச் சந்தைகளாகவும் இருந்தன. ஆகவே, அந்தக் காலத்தில் இரு நாடுகளும் ஐரோப்பாவிலுள்ள அமைப்புக்கு ஏதேனும் ஒருவகையில் அதாரத்தூண்களாய் இருந்தன. நிலைமை இன்று எப்படி மாறிவிட்டது. ஐரோப்பாவிலிருந்து நடைபெற்ற இந்தக் குடியேற்றம்தான் வடஅமெரிக்காவை பிரம்மாண்ட அளவிலான விவசாயப் பொருளுற்பத்திக்குத் தயார் செய்தது. இப்போது இந்த அமெரிக்க விவசாயப் பொருளுற்பத்தியின் போட்டி ஐரோப்பாவின் சிறிதும் பெரிதுமான நிலவுடைமைகளது அடித்தளங்களையே ஆட்டிக்குலுக்குகிறது. அதோடு இந்தக் குடியேற்றம், இது காறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே தகர்க்கப்படுமெனக் கூறும்படி அத்தனை விறுவிறுப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலாத் தொழில்துறைச் செல்வாதாரங்களைப் பயன்படுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கிற்று. இவ்விரு நிலைமைகளும் புரட்சிகர முறையிலான எதிர்வினையை அமெரிக்காவினுள் நடைபெறச் செய்கின்றன. அனைத்து அரசியல் அமைப்புக்கும் அடிநிலையான சிறுதிற, நடுத்தர உழவர் நிலவுடைமைகள் பெரும் பண்ணைகளுடைய போட்டியைச் சமாளிக்க முடியாமல் படிப்படியாய் நசித்து வருகின்றன. அதேபோது பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும் வியக்கத்தக்க மிகப் பெரிய அளவிலான மூலதன ஒன்று‍ குவிப்பும் தொழில் துறைப் பிரதேசங்களில் வளர்ச்சியுறுகின்றன. "அடுத்து‍ இப்போது‍ ரு்‌ஷ்யா!"1848-49-ம் ஆண்டு‍களது‍ புரட்சியின் போது‍ ஐரோப்பிய முடிமன்னர்கள் மட்டுமல்ல,ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தாரும், அப்போதுதான் விழித்தெழ முற்பட்டிருந்த பாட்டாளி வர்க்கத்திடமிருந்து‍ தப்பிக்க ருஷ்யத்தலையீடுஒன்றே வழி என்று‍ இருந்தனர். ஜார் மன்னர் ஐரோப்பியப் பிற்போக்கின் அதிபதியாய்ப் பிரகடனம் செய்யப்பட்டார், இன்று‍ ஜார் மன்னர் புரட்சியின் போர்க் கைதியாய்க் காட்சினாவில் இருக்கிறார்;ருஷ்யாவானது‍ ஐரோப்பாவில் புரட்சி நடவடிக்கையின் முன்னணியாய்த் திகழ்‌கிறது. 
"நவீன கால முதலாளித்துச் சொத்துடைமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி‍ நெருங்கி வருவதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் குறிக்கோள். ஆனால் ருஷ்யாவில் நாம் காண்பது‍ என்ன? அதிவேகமாய் வளர்ந்து‍ வரும் முதலாளித்துவ முறையோடு‍ கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையிலுள்ள முதலாளித்துவ நிலவுடைமையின் கூடவே. ருஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு‍ மேற்பட்டவை விவசாயிகளது‍ பொதுவுடைமையாய் இருக்கக் காண்கிறோம். இப்போது எழும் கேள்வி இதுதான்; ருஷ்ய 'ஒப்ஷீனா' வெகுவாய்ச் சீர்குலைக்க்கப்பட்டிருப்பினும், வடிவமாகவே இருக்கும் இது,நேரடியாய்க் கம்யூனிசப் பொதுவுடைமை எனும் உயர்‌ந்த வடிவமாய் வளர முடியுமா? அல்லது‍ இதற்கு‍ நேர்மாறாய், மேற்கு‍ நாடுகளது‍ வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்தச் சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது‍ கடக்க வேண்டியிருக்குமா

"இதற்கு‍ இன்று‍ சாத்தியமான ஒரே பதில் இதுதான்; ருஷ்யப்புரட்சியானது‍ மேற்கு‍ நாடுகளில் ஒரு‍ பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று‍ துணை நின்று‍ நிறைவு பெறுமாயின், தற்போது‍ ருஷ்யாவில் நிலத்திலுள்ள பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குரிய துவக்க நிலையாய்ப் பயன்படக்கூடும்.
கார்ல் மார்க்ஸ், பிரெடரிக் எங்கெல்ஸ்லண்டன், 1882, ஜனவரி 21  
ஏறத்தாழ இதே காலத்தில் புதிய போலிஷ் பதிப்பாகிய Manifest Kommunistyczny ஜினீவாவில் வெளிவந்தது.
தவிரவும் புதிய டேஷி பதிப்பு ஒன்று‍ 1885-ல் Socialdemokratisk Biblithek நூல் தொகுப்பில் வெளியாகியிருக்கிறது, துரதிர்ஷ்டவசமாய் அது‍ மூறறும் நிறைவானதாய் இல்லை. சில முக்கிய வாசகங்கள் மொழிபெயர்ப்பாளருக்கு‍ இடர்ப்பாடுகளை உண்டாக்கின போலும், அவை விடப்பட்டிருக்கின்றன; அதோடு‍ கவனக்குறைவின் அறிகுறிகளும் இங்குமங்கும் தென்படுகின்றன; மொழிபெயர்‌ப்பாளர் இன்னும் சற்று‍ அதிக முயற்சி எடுத்திருந்தால் அவருடைய வேலை மிகவும் சிறப்பாய் அமைந்திருக்கும் என்பதை அவரது‍ மொழிபெயர்ப்‌பு புலப்படுத்துவதால் இந்தக் கவனக்குறைவு வருந்தத்தக்கவாறு‍ எடுப்பாய் முன்னிலையில் தெரிகின்றது. பாரிசில் 1885ல் Le Socialiste ஏட்டில் ஒரு‍ புதிய பிரெஞ்ச மொழிபெயர்ப்பு வெளிவந்தது, இதுகாறும் வெளியானவற்றுள் இதுவே சிறந்ததாகும். ‍
இதிலிருந்து‍ செய்யப்பட்ட ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு ஒன்று‍ அதேர ஆண்டில் வெளியிடப்பட்டது. முதலில் மாட்ரிடில் El Socialista ஏட்டில் அச்சிடப்பட்ட இது, பிற்பாடு‍ பிரசுர வடிவில் வெளிவந்தது‍; Manifiesto del Partido Comunista, por Carlos Marx y F.Engels. Madrid. Administraction de El Socialista, Hernan Cortes (* கம்யூனிஸ்ட்க் கட்சி அறிக்கை, ஆக்கியோர்- கார்ல் மார்க்ஸ். பி,எங்கெல்ஸ். எல் சோசியலிஸ்தா நிர்வாகம், மாட்ரிட், 8, கெர்னான் கொர்டேஸ். (பதிப்பாசிரியர்)) சுவையான மற்றொரு‍ விவரத்தையும் இங்கு‍ குறிப்பிடலாம்; ஆர்மீனிய மொழிபெயர்ப்பு ஒன்றின் கையெழுத்துப்பிரதி 1887-ல் கான்ஸ்டான்டிநோப்பிளில் ஒரு‍ பதிப்பாளரிடம் தரப்பட்டது. பாவம் அம்மனிதருக்கு‍ மார்க்ஸ் பெயரைத் தாங்கிய ஒன்றை வெளியிடும் துணிவு வரவில்லை, மொழிபெயர்ப்பாளரைத் தாமே ஆசிரியர் என்பதாய்த் தம் பெயரைப் போடுமாறு‍ ஆலோசனை கூறினார், ஆனால் மொழிபெயர்ப்பாளர் இதற்கு‍ உடன்படவில்லை.
அதிகமாகவோ குறைவாகவோ பிழைபட அமைந்த அமெரிக்க மொழிபெயர்ப்புகள் முதலில் ஒன்றும் பிறகு‍ மற்றொன்றுமாய் மீண்டும் மீண்டும் மறுபதிப்புகளாய் இங்கிலாந்தில் வெளியான பின் முடிவில் 1888ல் நம்பகமான மொழிபெயர்ப்பு வெளிவந்தது. இதைச் செய்தவர் என் நண்பர் சாமுவேல் மூர். இதை அச்சகத்துக்கு‍ அனுப்பு முன் நாங்கள் இருவருமாய்ச் சேர்ந்து‍ மீண்டும் சரி பார்த்தோம், இந்தப் பதிப்பின் தலைப்பு வருமாறு ; Manifesto of the Communist Party, by Karl Marx and Frederick Engels. Authorised English Translation, edited and annotated by Frederick Engels, 1888, London, William Reeves, 185 Fleet st. E.C. (*கம்யூனிஸ்ட்க் கட்சி அறிக்கை, கார்ல் மார்க்ஸ். பிரெடெரிக் எங்கெல்ஸ், அதிகாரபூர்வமான ஆங்கில மொழி பெயர்ப்பு, பிரெடெரிக் எங்கெல்ஸ் சரி பார்த்தது, அவர் எழுதித் தந்த கட்டுரைகளும் அடங்கியது. 1888, லண்டன், வில்லியம் ரீவ்ஸ். 185 பிளீட் தெரு. ஈ,ஸி, (பதிப்பாசிரியர்)) இதன் குறிப்புகள் சிலவற்றை தற்போதைய இப்பதிப்பில் சேர்த்திருக்கிறேன்.
அறிக்கையானது‍ அதற்குரிய ஒரு‍ வரலாற்றை உடையதாகும். அது‍ வெளிவந்த காலத்தில், எண்ணிக்கையில் அதிகம் இல்லாத விஞ்ஞான சோஷலிச முன்னணிப்படையினர் அதை ஆர்வத்தோடு‍ வரவேற்றனர். (முதலாவது‍ முகவுரையில் குறிக்கப்படும் மொழிபெயர்ப்புகளின் விவரம் இதற்கு‍ நிரூபணமாகும்). அதன் பின் சீக்கிரமே அது‍ பின்னிலைக்குத் தள்ளப்பட்டது, 1848 ஜூனில் பாரிஸ் தொழிலாளர்களின் தோல்வியைத் தொடர்ந்து‍ மூண்ட பிற்போக்கு‍ இப்படி‍ அதைத் தள்ளி்ற்று. முடிவில், 1852 நவம்பரில் கொலோன் கம்யூனிஸ்டுகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது‍ (20)//// "சட்டத்தின்படி‍" அது‍ தீண்டாததாய் விலக்கி வைக்கப்பட்டது. பிப்ரவரிப் புரட்சியுடன் ஆரம்பமான தொழிலாளர் இயக்கம் பொது‍ அரங்கிலிருந்து‍ மறைந்துவிடவே, அதோடு‍ கூட அறிக்கையும் பின்னிலைக்குப் போய்ச் சேர்ந்தது.
 ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும் வர்க்கங்களது‍ ஆட்சியதிகாரத்தி்ன் மீது‍ தாக்குதல் தொடுக்கப் போதிய பலத்தைத் திரட்டியதும் அகிலத் தொழிலாளர் சங்கம் உருப்பெற்று‍ எழுந்தது. ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் படைத்த தொழிலாளி வர்க்கம் அனைத்தையும் ஒரே பெரும் படையாய் ஒருசேர இணைத்திடுவதே இந்தச் சங்கத்தின் நோக்கமாய் இருந்தது, ஆகவே இச்சங்கம் அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டுள்ள கோட்பாடுகளிலிருந்து‍ தொடங்க முடியவில்லை. ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களையும் பிரெஞ்சு. பெல்ஜிய. இத்தாலிய. ஸ்பெயின் நாடுகளது‍ பூருதோனியர்களையும் ஜெர்மன் லஸ்ஸாலியர்களையும் (* லஸ்ஸால் எங்களுடன் பேசுகையில் எப்போதுமே தாம் மார்க்சின் சீடராய் இரு்ப்பதாகவும், எனவே. அறிக்கையையே அடிநிலையாய்க் கொண்டிருப்பதாகவும் கூறி வந்தார். ஆனால் அவரைப் பின்பற்றியோரின் நிலை முற்றிலும் வேறு‍ விதமாய் இருந்தது, அரசுக்கடன்களை ஆதாரமாய்க் கொண்ட உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் வேண்டுமென்ற லஸ்ஸாலின் கோரிக்கைக்கு‍ மேல் அவர்கள் செல்லவில்லை.
தொழிலாளி வர்க்கம் முழுவதையுமே அவர்கள் அரசு‍ உதவியின் ஆதரவாளர்களாகவும் தன்னுதவின் ஆதரவாளர்களாகவும் பிளவுபடுத்தினார்கள் (எங்கெல்ஸ் குறிப்பு)) வெளியே வைத்துக் கதவடைக்காத ஒரு‍ வேலைத் திட்டத்தை இந்தச் சங்கம் ஏற்க வேண்டியிருந்தது. அகிலத்தின் விதிகளது‍ முகப்புரையாய் அமைந்த (21) இந்த வேலைத்திட்டத்தை மார்க்ஸ் வகுத்தளித்தார், பக்கூனினும் அராஜகவாதிகளுங்கூட அங்கீகரிக்கும்படி‍ தேர்ந்த திறமையுடன் இதைச் செய்தார். அறிக்கையில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் இறுதி வெற்றிக்கு, ஒன்றுபட்ட செயற்பாட்டிலிருந்தும் விவாதத்தி்லிருந்தும் நிச்சயம் ஏற்பட்டாக வேண்டிய தொழிலாளி வர்க்க ஞான வளர்ச்சியைத்தான் முற்றும் நம்பியிருந்தார். மூலதனத்துக்கு‍ எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும். நல்லதும் கெட்டதுமான மாறுதல்களும், போராட்டத்தின் வெற்றிகளையும் விடஅதிகமாய்த் தோல்விகளும், போராடுவோருக்கு‍ எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல சஞ்சீவியாய் இதுகாறும் அவர்கள் கருதியிருந்தவை எவ்வளவு குறைபாடானவை என்பதைத் தெரியப்படுத்தவே செய்யும், தொழிலாளர்களது‍ விடுதலைக்கு‍ வேண்டிய மெய்யான நிலைமைகளைத் தீர்க்கமாய்ப் புரிந்து‍ கொள்வதற்கு‍ அவர்களது‍ மனத்தைப் பக்குவமடையதாக்கவே செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தபடியே நடைபெற்றது.
அகிலம் கலைக்கப்பட்ட ஆண்டான 1874ல் இருந்த தொழிலாளி வர்க்கம், அகிலம் துவக்கப்பட்ட காலமாகிய 1864ம் ஆண்டின் தொழிலாளி வர்க்கத்திலிருந்து‍ முற்றிலும் மாறானதாய் இருந்தது. லத்தீனிய நாடுகளில் புருதோனியமும் ஜெர்மனிக்கு‍ உரியதாய் இருந்த தனிவகை லஸ்ஸாலியமும் மடிந்து‍ மறைந்து‍ கொண்டிருந்தன. அக்காலத்தில் கடைந்தெடுத்த பழமைவாதப் போக்கு‍ கொண்டிருந்த ஆங்கிலேயத் தொழிற்சங்கங்களுங்கூட படிப்படியாய்‌ முன்னேறி 1887ல் அவற்றின் ஸ்வான்சி காங்கிரசில் அவற்றின் தலைவர் "கண்டத்தின் சோஷலிசம் எங்களுக்குக் கிலியூட்டுவதாய் இருந்த காலம் மறைந்து‍ விட்டது‍" என்பதாய் அச்சங்கங்களின் சார்பில் அறிவிக்கத் துணியும்படி‍யான நிலையை நோக்கிச் சென்று‍ கொண்டிருந்தன. ஆயினும் கண்டத்து‍ சோஷலிசமானது‍ 1887க்குள் அனேகமாய் முழு‍ அளவுக்கு, முன்பு அறிக்கை முரசறைந்து‍ அறிவித்த அதே தத்துவத்தைக் குறிப்பதாய் இருந்தது. இவ்வாறு‍ அறிக்கையின் வரலாற 1848ம் ஆண்டு‍ முதலான நவீனத் தொழிலாளி வர்க்க இயக்க வரலாற்றை ஓரளவுக்குப் பிரதிபலிக்கிறது. தற்போது‍ சோஷலிச இலக்கியம் அனைத்திலும் அறிக்கைதான் மிகவும் அதிகமாய்ப் பல்கிப்பரவி, மிகப் பெரும் அளவுக்கு‍ சர்வதேசியத் தன்மை கொண்ட படைப்பாகும், சைபீரியாவிலிருந்து‍ கலிபோர்னியா வரை எல்லா நாடுகளிலும் கோடானுகோடி‍யான தொழிலாளர்களது‍ பொது‍ வேலைத்திட்டமாகும் என்பதில் ஐயப்பாட்டுக்கு‍ இடமில்லை. ஆயினும் முதலில் வெளிவந்த போது‍ நாங்கள் அதற்கு‍ சோஷலிஸ்டு‍ அறிக்கை என்று‍ பெயரளிக்க முடியவில்லை.
1847ல் இரு‍ வகையானோர் சோஷலிஸ்டுகளாய்க் கருதப்பட்டனர், ஒருபுறத்தில் பற்பல கற்பனாவாதக் கருத்தமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்; இங்கிலாந்தில் ஓவனியர்களம். பிரான்சில் பூரியேயர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்; இரு‍ தொகுதியோரும் அக்காலத்திலேயே சிறிது‍ சிறிதாய் மறைந்து‍ சென்ற குறுங் குழுக்களாய்க் குறுகிச் சிறுத்து‍ விட்டவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட ரகங்களைச் சேர்ந்த சமூக மருத்தவப் புரட்டர்கள் இருந்தார்கள்; மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் இம்மியளவும் தீங்கு‍ நேராதபடி‍ இவர்கள் தமது‍ சர்வரோக நிவாரணிகள் மூலமும் எல்லா விதமான ஒட்டையடைப்புச் சில்லறைப் பணிகள் மூலமும் சமூகக் கேடுகளைக் களைய விரும்பினார்கள். இவ்விரு‍ வகையினரும் தொழிலாளர் இயக்கத்துக்கு‍ வெளியே இருந்தவர்கள், படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாய் நாடியவர்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு‍ பகுதி வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது‍ என்பதை ஐயமற உணர்ந்து‍ கொண்டு, சமுதாயத்தில் அடிப்படை மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று‍ கோரிற்று‍; இந்தப் பகுதி அன்று‍ தன்னைக் கம்யூனிஸ்டு‍ என்று‍ அழைத்துக் கொண்டது. இன்னமும் அது‍ அரைகுறையானதாகவே, உள்ளுணர்வால் உந்தப்பட்டதாகவே, பல சந்தர்ப்பங்களி்லும் அவ்வளவாய்ப் பக்குவமில்லாத ஒரு‍ கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும் அது‍ இரண்டு‍ கற்பனாவாதக் கம்யூனிச அமைவுகளை - பிரான்சில் காபேயின் "ஐகேரியக்; கம்யூனிசம், ஜெர்மனியில் வைட்லிங்கின் 22 கம்யூனிசம் - தோற்றுவிக்கும் அளவுக்கு‍ சக்தி வாய்ந்ததாய் இருந்தது.
1847ல் சோஷலிசம் முதலாளித்துவ இயக்கத்தையும், கம்யூனிச்ம் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் குறிப்பனவாய் இருந்தன. சோஷலிசமானது‍, எப்படிப்பட்ட கண்டத்திலேனும் கண்யவான் மனப்பாங்குடைத்ததாய் இருந்தது, ஆனால் கம்யூனிசம் இதற்கு‍ நேர்மாறானதாய் இருந்தது. நாங்கள் அந்த ஆரம்பக் காலத்திலேயே "தொழிலாளி வர்க்கத்தின் செயலால் விடுதலை நேரடியாய்த் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும்"என்ற உறுதிமிக்க கருத்துடையோராய் இருந்ததால். இரண்டு‍ பெயர்களில் எதைத் தேர்ந்தெடுத்தூக கொள்வதென்பது‍ குறித்து‍ எங்களிடம் தயக்கத்துக்கு‍ இடமில்லை. அன்று‍ முதலாய் இந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு‍ ஏற்பட்டதில்லை. "உலகத் தொழிலாளர்களே, ஒன்று‍ சேருங்கள்!" நாற்பத்து‍ இரண்டு‍ ஆண்டுகளுக்கு‍ முன்பு, பாட்டாளி வர்ககம் தனது‍ சொந்தக் கோரிக்கைகளை முன்வைத்து‍ எழுந்த அந்த முதலாவது‍ பாரிஸ் புரட்சியின் தறுவாயில் நாங்கள் இந்த முழக்கத்தைப் பிரகடனம் செய்தோம், அப்போது‍ ஒருசில குரல்களே இதை எதிரொலித்து‍ எழுந்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28-ல் பெருவாரியான மேற்கு‍ ஐரோப்பிய நாடுகளின் பாட்டாளிகள் அழியாப் புகழ் நினைவுக்குரிய அகிலத் தொழிலாளர் சங்கத்தில் கைகோர்த்து‍ நின்றார்கள். இந்த அகிலம் ஒன்பது‍ ஆண்டுகளுக்கே நீடித்தது‍ என்பது‍ மெய்தான். ஆனால் எல்லா நாடுகளையும் சேர்‌ந்த பாட்டாளிகளிடத்தே அது‍ உருவாக்கிய அமர ஐக்கியமானது‍ இன்றும் நிலைத்து‍ நிலவுகிறது‍ என்பதோடு, என்றையும் விட வலிமைமிக்கதாய் இருக்கிறது‍ என்பதற்கு‍ இன்றைய தினத்தைக் காட்டிலும் சிறப்பான சான்று‍ ஏதுமில்லை. நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய தினம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்நத பாட்டாளி வர்க்கம் தனது‍ போர்ப் படைகளை ஒத்திகை நடத்திப் பார்வையிடுகின்றது, இந்தப் படைகள் முதன் முதலாய் ஒரே சேனையாய், ஒரே கொடியின் கீழ், ஒரே உடனடிக் குறிக்கோளுக்காகத் திரட்டப் பெற்றனவாய் அணிவகுத்து‍ நிற்கின்றன.
1886-ல் அகிலத்தின் ஜினீவா காங்கிரசாலும், மீண்டும் 1889ல் பாரிஸ் தொழிலாளர் காங்கிரசாலும், மீண்டும் 1889-ல் பாரிஸ் தொழிலாளர் காங்கிரசாலும் பறைசாற்றப்பட்டது‍ போல் சட்டம் இயற்றி முறையான எட்டு‍ மணி நேர வேலை நாளை நிலை நாட்ட வேண்டுமெனற் உடனடிக் கோரிக்கையை எழுப்பிப் பாட்டாளிப் படை வாரிசைகள் அணி திரண்டிருக்கின்றன. இன்றைய இந்தக் காட்சி எல்லா நாடுகளின் தொழிலாளர்களும் மெய்யாகவே இன்று‍ ஒன்று‍ சேர்ந்து‍ விட்டார்கள் என்பதை எல்லா நாடுகளின் முதலாளிகளுக்கும். நிலப்பிரபுக்களுக்கும் தெற்றெனப் புலப்படுத்தும். இதை நேரில் தம் கண் கொண்டு‍ களிக்க என்பக்கத்தில் மார்க்ஸ் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
பி.எங்கெல்ஸ்லண்டன், 1890, மே 1.

1892 ஆம் ஆண்டு‍ போலிஷ் பதிப்பின் முகவுரை
கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு புதிய போலிஷ் பதிப்பு அவசியமாகியிருப்பதானது பற்பல சிந்தனைகளை எழச் செய்கிறது.
 முதலாவதாக, அண்மையில் அறிக்கை ஐரோப்பாக் கண்டத்தில் பெருவீதத் தொழில் துறையின் வளர்ச்சியைக் காட்டும் ஒரு குறியீடு போலாகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிட்ட ஒரு நாட்டில் பெருவீதத் தொழில்துறை விரிவடைவதற்கு ஒத்த வீதத்தில் அந்நாட்டின் தொழிலாளர்களிடத்தே, சொத்துடைத்த வர்க்கங்கள் சம்பந்தமாயத் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் தமது நிலை என்ன என்பது குறித்து அறிவொளி பெற வேண்டிய தேவை அதிகமாகிறது. அவர்களிடையே சோஷலிஸ்டு இயக்கம் பரவுகின்றது, அறிக்கையின் தேவையும் அதிகரிக்கின்றது. இவ்விதம் அந்தந்த நாட்டிலும் பெருவீதத் தொழில் துறையினது வளர்ச்சி மட்டுமன்றி, பெருவீதத் தொழில்துறையினது வளர்ச்சி நிலையையும் கூட, அந்நாட்டு மொழியில் வினியோகமாகின்ற அறிக்கையின் பிரதிகளது எண்ணிக்கையைக் கொண்டு பெருமளவுக்குச் சரியானபடி அளவிட முடிகின்றது.
புதிய போலிஷ் பதிப்பு இவ்வாறு போலிஷ் தொழில் துறையானது குறிப்பிடத்தக்கவாறு முன்னேற்றம் கண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுவதாய் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய பதிப்பு வெளிவந்த பின் இந்த முன்னேற்றம் மெய்யாகவே ஏற்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ருஷ்யப் போலந்து, காங்கிரஸ் போலந்து   23 ருஷ்ய முடிப்பேரரசின் பெரிய தொழிற் பிராந்தியமாகியிருக்கிறது. ருஷ்யாவின் பெருவீதத் தொழில் துறை அங்குமிங்குமாய் சிதறுண்டு காணப்படுகிறது. ஒரு பகுதி பின்லந்து வளைகுடாவைச் சுற்றிலும், இன்னொன்று மையப் பிரிவிலும் (மாஸ்கோவிலும் விளதீமிரிலும்), மூன்றாவது ஒன்று கருங்கடல், அஸோவ் கடல் கரையோரங்களிலும் மற்றும் சில பகுதிகள் வேறு இடங்களிலுமாய் அமைந்திரு்க்கிறது. ஆனால். போலந்தின் தொழில்துறை இவ்வாறன்றி ஒப்பளவில் சிறிய பரப்பில் நெரிசலாய் அமைந்து, இந்த ஒன்று குவிந்த நிலையின் அணு‍கூலங்களையும் பிரதிகூலங்களையும் ஒருங்கே அனுபவிக்கிறது. போட்டியிடும் ருஷ்யத் தொழிலதிபர்கள் போலிஷ்காரர்களை ருஷ்யர்களாக்குவதில் தமக்குள்ள ஆர்வத்தையும் மீறி போலந்துக்கு எதிராய்க் காப்புச் சுங்க வரிகள் வேண்டுமெனக் கோரியதன் மூலம் இந்த அணு‍கூலங்கள் இருப்பதை ஒப்புக் கொண்டார்கள். பிரதிகூலங்கள் - போலிஷ் தொழிலதிபர்களுக்கும் மற்றும் ருஷ்ய அரசாங்கத்துக்கும் இருப்பதானது, போலிஷ் தொழிலாளர்களிடையே சோசலிசக் கருத்துகள் வேகமாய்ப் பரவுவதிலும் அறிக்கையிற்கு இருக்கும் கிராக்கி பெருகிச் செல்வதிலும் காணக் கிடக்கிறது.
ருஷ்யத் தொழில்துறை வளர்ச்சியை விஞ்சி்ச் செல்லும் படியான வேகத்தில் போலிஷ் தொழில்துறை வளர்ச்சியானது, போலிஷ் மக்களு்டைய வற்றாத ஜீவசக்திக்கு ஒரு புதிய நிரூபணமாவதோடு, போலந்தின் தேசிய மீட்சி விரைவில் நடந்தேறப் போகிறது என்பதற்கு ஒரு புதிய உத்தரவாதமும் ஆகிறது. வலுமிக்க சுதந்திரப் போலந்து மீட்சியுற்று எழ வேண்டியது போலிஷ்காரர்களுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே அக்கறைக்கு உரியதாகும். ஐரோப்பியத் தேசம் ஒவ்வொன்றும் அதன் சொந்த வீட்டில் முழு அளவுக்குத் தன்னாட்சி செலுத்துவதாய் இருந்தால்தான் ஐரோப்பியத் தேசங்களிடையே உள்ளப்பூர்வமான சர்வதேச ஒத்துழைப்பு சாத்தியமாகும். 1848-ம் ஆண்டுப் புரட்சி, பாட்டாளி வர்க்கக் கொடியின் கீழ் நடைபெற்றாலும் பாட்டாளி வர்க்கப் போர் வீரர்களை முதலாளித்துவ வர்க்கத்தாரின் வேலையை மட்டுமே செய்ய இடமளித்த இந்தப் புரட்சி, அதன் இறுதி விருப்ப ஆவணத்தை நிறைவேற்றியவர்களான  லுயீ போனப்பார்த், பிஸ்மார்க் 24 இவர்கள் மூலம் இத்தாலிக்கும், ஜெர்மனிக்கும் சங்கேரிக்கும் சுதந்திரம் கிடைக்கச் செய்தது. ஆனால் புரட்சிக்கு இம்மூன்று‍ நாடுகளும் சேர்ந்து செய்ததைக் காட்டிலும் அதிகமாய் 1792 முதலாய்ச் சேவை புரிந்துள்ள போலந்து அதன் சொந்த சக்தியைச் சார்ந்திருக்கும்படி தனியே விடப்பட்டது, 1863-ல் அது தன்னிலும் பத்து மடங்கு கூடுதலான ருஷ்யப் படைகளுக்குப் பணிய வேண்டியதாயிற்று. 25 போலிஷ் பிர்புக் குலத்தோரால் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் முடியவி்ல்லை. மீட்கவும் முடியவில்லை. குறைந்த பட்சமாய்ச் சொல்வதெனில் இன்று முதலாளித்துவ வர்க்கத்துக்கு இந்தச் சுதந்திரம் குறித்து கவலையில்லை. எனினும், ஐரோப்பியத் தேசங்கள் இசைவுடன் ஒத்துழைப்பதற்குப் போலந்தின் சுதந்திரம் இன்றியமையாதது. போலந்தின் இளம் பாட்டாளி வர்க்கத்தால்தான் இந்த சுதந்திரத்தைப் பெற முடியும், அதன் கரங்களில்தான் இந்த சுதந்திரம் பாதுகாப்புடன் இருக்க முடியும். போலந்துத் தொழிலாளர்களுக்குப் போலந்தின் சுதந்திரம் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு அது ஐரோப்பாவின் ஏனைய எல்லாப் பகுதிகளிலு்ம் உள்ள தொழிலாளர்களுக்கும் அவசியமாகும்.
 பி.எங்கெல்ஸ்லண்டன், 1892, பிப்ரவரி 10

1893 ஆம் ஆண்டு‍ இத்தாலியப் பதிப்பின் முகவுரை
இத்தாலிய வாசகருக்கு
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான நிகழ்ச்சியானது. மிலானிலும் பெர்லினிலும் புரட்சிகள் நடைபெற்ற 1848 மார்ச் 18ம் நாளுடன் ஒன்றித்து நடந்தேறியதாய்ச் சொல்லலாம், மிலானிலும், பெர்லினிலும் நடைபெற்ற புரட்சிகள், ஒன்று ஐரோப்பா கண்டத்தின் மையத்திலும் மற்றொன்று மத்தியதரைக்கடல் பிரதேசத்தின் மையத்திலுமாய் அமைந்த இரு தேசங்களது ஆயுதமேந்திய எழுச்சிகளாகும். இரு தேசங்களும் அதுகாறும் பிளவுபட்டு உட்பூசலால் நலிவுற்று அதன் பலனாய் அன்னிய ஆதிக்கத்தில் இருத்தப்பட்டுக் கிடந்தவை, இத்தாயிலானது ஆஸ்திரியாவின் பேரரசனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்க, ஜெர்மனியானது இதனிலும் மறைமுகமானதாயினும் வினைவலிமையில் குறைவாயிராத ஆதிக்கமாகிய அனைத்து ருஷ்யாவின் ஜார் மன்னனது ஆதிக்கத்தில் இரூத்தப்பட்டிருந்தது.1848 மார்ச் 18ன் விளைவுகள் இத்தாலியையும் ஜெர்மனியையும் இந்த அவக்கேட்டிலிருந்து விடுவித்தன, இம்மாபெரும் இரு தேசங்களும் 1848க்கும் 1871க்கும் இடையே மீட்டமைக்கப்பெற்று தன்னுரிமையோடு மீண்டும் எழ முடிந்ததெனில், கார்ல் மார்க்ஸ் அடிக்கடி கூறியது போல், 1848ம் ஆண்டுப் புரட்சியை அடக்கியவர்கள் தம்மையும் மீறி இந்தப் புரட்சியின் இறுதி விருப்ப ஆவணத்தை நிறைவேற்ற வேண்டியதாகியதே அதற்குக் காரணமாகும்.

எங்கும் அந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கம் புரிந்தசெயலாகவே இருந்தது, தெருவில் தடுப்பரண்கள் அமைத்து உயிர் இரத்தத்தையும் அளித்துப் போராடியது தொழிலாளி வர்க்கம்தான். ஆனால் பாலிஸ் தொழிலாளர்கள் மட்டும்தான் அரசாங்கத்தை வீழ்த்துகையில் முதலாளித்தவ ஆட்சியமைப்பை வீ்ழ்த்திடும் திட்டவட்டமான நோக்கம் கொண்டோராய் இருந்தார்கள். தமது வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலுள்ள ஜென்மப் பகையை அவர்கள் உண்ர்ந்திருப்பினும் கூட, நாட்டின் பொருளாதார முன்னேற்றமோ. பிரெஞ்சுத் தொழிலாளர்களி்ல் பெரூந்திரளானோரின் அறிவுத்துறை வளர்ச்சியோ சமுதாயப் புத்தமைப்பைச் சாத்தியமாக்கக் கூடிய கட்டத்தினை இன்னமும் வந்தடைந்து விடவில்லை. ஆகவே இறுதியில் புரட்சியின் பலன்களை முதலாளித்துவ வர்க்கம் வசப்படூததிக் கொண்டு விட்டது. பிற நாடுகளாகிய இத்தாலியிலும் ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் ஆரம்பத்திலிருந்தே தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தை உயர்த்தி ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதை அன்றி எதுவும் செய்யவில்லை. தேச சுதந்திரம் பெறாமல் எந்த நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் பெறுவது சாத்தியமன்று. எனவே. 1848ம் ஆண்டுப் புரட்சி அதுகாறும் ஒற்றுமையும் தன்னாட்சியும் பெறாதிருந்த தேசங்களுக்கு இவை கிடைக்கச் செய்தாக வேண்டியிருந்தது. இத்தாலியும் ஜெர்மனியும் அங்கேரியும் இவ்வாறுதான் இவற்றைப் பெற்றுக் கொண்டன. அடுத்து போலந்தும் இவற்றைப் பெற்றுக் கொள்ளும்.
1848-ம் ஆண்டு புரட்சி இவ்விதம் சோசலிசப் புரட்சியாய் இருக்கவில்லை; ஆயினும் அது சோசிலிசப் புரட்சிக்குப் பாதையைச் செப்பனிட்டது. எல்லா நாடுகளிலும் முதலாளித்தவ ஆட்சியமைப்பு பெருவீதத் தொழில் துறைக்குத் தூண்டுதல் அளித்ததன் மூலம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் எங்கும் மிகுந்த எண்ணிக்கையுடையதாய், ஒன்று குவிந்ததிருக்கும், சக்தி மிக்கதான பாட்டாளி வர்க்கத்தைத் தோற்றுவி்த்திருக்கிறது. இவ்வாறு அது, அறிக்கையின் சொற்களில் சொல்வோமாயின், தனக்குச் சவக்குழி தோண்டுவோரை எழச் செய்திருக்கிறது. ஒவ்வொரு தேசத்துக்கும். தன்னாட்சியையும் ஐக்கியத்தையும் மீட்டளிக்காமல் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை உண்டாக்குவதோ, பொது நோக்கங்களுக்காக இந்தத் தேசங்களிடையே சமாதான வழிப்பட்ட அறிவார்ந்த ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோ முடியாத காரியம். 1848க்கு முன்பிருந்த அரசியல் நிலைமைகளில் இத்தாலிய, அங்கேரிய, ஜெர்மன், போலி்ஷ், ருஷ்யத் தொழிலாளர்கள்கூட்டாய்ச் சர்வதேச நடவடிக்கை எடுத்திருக்க முடியுமென நினைப்பதும் கூட சாத்தியம் அல்லவே ! 
ஆகவே, 1848ல் புரியப்பட்ட போர்கள் வீணாகிவிடவில்லை, அந்தப் புரட்சி சகாப்தத்துக்குப் பிற்பாடு கழிந்திருக்கும் நாற்பத்தைந்து ஆண்டுகளும் வீணில் கழிந்து விரயமாகி விடவில்லை. இவற்றின் பலன்கள் முற்றிப் பக்குவமடைந்து வருகின்றன. நான் விரும்புவது எல்லாம், முன்பு மூல மொழிப் பதிப்பு சர்வதேசப் புரட்சிக்குக் கட்டியங் கூறுவதாய் அமைந்தது போல், இப்போது இந்த இத்தாலிய மொழி பெயர்ப்பு இத்தாலியத் தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்குக் கட்டியங் கூறுவதாய் இருத்தல் வேண்டும் என்பதுதான்.
கடந்த காலத்தில் முதலாளித்துவம் ஆற்றிய புரட்சிகரப் பங்கினை அறிக்கை தக்கச் சிறப்புடன் எடுத்துரைக்கிறது. இத்தாலிதான் முதலாவது முதலாளித்தவ தேசம். பிரபுத்துவ மத்திய காலத்தின் இறுதியையும் நவீன முதலாளித்துவச் சகாப்தத்தின் துவக்கத்தையும் குறிப்பவனாய் விசுவ உருவம் தரித்து நிற்கும் மாமனிதன் ஓர் இத்தாலியன், மத்திய காலத்தின் கடைசிக் கவிஞனும் நவீன காலத்தின் முதற் கவிஞனுமான தாந்தே என்பான், 1300 ம் ஆண்டைப் போலவே இன்றும் ஒரு புதிய வரலாற்றுச் சகாப்தம் நெருங்கி வருகின்றது, இந்தப் புதிய, பாட்டாளி வர்க்கச் சகாப்தத்தைக் குறிப்பவனாய் ஒரு புதிய தாந்தேயை இத்தாலி நமக்கு அளிக்குமா
பிரெடெரிக் எங்கெல்ஸ்லண்டன், 1893, பிப்ரவரி 1

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭☭
ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்- கம்யூனிசம் என்னும் பூதம். போப்பாண்டவரும், ஜாரரசனும், மெட்டர்னிகிம் கிஸோவும் (26) பிரெஞ்சுத் தீவிரவாதிகளும், ஜெர்மின் உளவாளிகளுமாய், பழைய ஐரோப்பாவின் சக்திகள் அனைத்தும் இந்தப் பூதத்தை ஒட்டுவதற்காகப் புனிதக் கூட்டு சேர்ந்திரூக்கின்றன.
ஆட்சியிலுள்ள தனது எதிராளிகளால் கம்யூனிஸ்டு என்று ஏசப்படாத எதிர்க் கட்சி எங்கேனும் உண்டா?  கம்யூனிசம் என்று இடித்துரைத்து தன்னிலும் முன்னேறிய எதிர்த்தரப்பாருக்கும், மற்றும் பிற்போக்கான தனது எதிராளிகளுக்கும் பதிலடி கொடுக்காத எதிர்க்கட்சிதான் உண்டா?

இரண்டு முடிவுகள் இவ்வுண்மையிலிருந்து எழுகின்றன
1. கம்யூனிசமானது ஒரு தனிப்பெரும் சக்தியாகி விட்டதை ஐரோப்பிய சக்திகள் அனைத்தும் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டன.
2. பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய்க் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
இந்த நோக்கத்துடன், பல்வேறு தேசிய இனங்களையும் சேர்ந்த கம்யூனிஸ்டுகள் லண்டனில் கூடி, அடியிற் கண்ட அறிக்கையை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், பிளெமிஷ், டேனிஷ் மொழிகளில் வெளியிடுவதற்காக வகுத்திட்டனர்.-*

முதலாளிகளும் பாட்டாளிகளும்...
I
 (*இக்காலத்து முதலாளிகளாகிய முதலாளித்துவ வர்க்கத்தார் (பூர்ஷ்வா வர்க்கத்தார்) சமூகப் பொருளுற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள், கூலி உழைப்பை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். இக்காலத்துக் வலித் தொழிலாளர்களது வர்க்கமே பாட்டாளி வர்க்கம் எனப்படுவது; இத்தொழிலாளர்கள் சொந்தத்தில் தம்மிடம் உற்பத்திச் சாதனங்கள் இல்லாத காரணத்தால் தமது உழைப்பு சக்தியை (Labour power) விற்று வாழ்க்கை நடத்தும் படி தாழ்த்தப்பட்டிரூககிறவர்கள், (1888ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் குறிப்பு).
இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் **வர்க்கப் போராட்டங்களது வரலாறே ஆகும்.
(** அதாவது ஏட்டிலேறிய வரலாறு அனைத்தும் வரலாற்றுக்கு முற்பட்ட சமுதாயம் குறித்து. எழுத்தில் பதிவாகியுள்ள வரலாற்றுக்கு முன்பு நிலவிய சமூக ஒழுங்கமைப்பு குறித்து, 1847ல் அனேகமாய் ஏதும் அறியப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பிற்பாடு, ஷாக்ஸ்ஷாவுன்///////////////// (27) ருஷ்யாவில் நிலம் பொதுவுடைமையாய் இரூந்ததென்று கண்டுபிடித்தார்;  டியூட்டானிய இனங்கள் யாவுமே நிலத்திலான பொதுவுடைமையாகிய இந்தச்  சமூக அடித்தளத்திலிருந்துதான் வரலாற்றை ஆரம்பித்தன என்று மௌரர் (28)  நிரூபித்துக் காட்டினார்; ,இந்தியாவிலிருந்து ஐயர்லாந்து வரை எங்குமே நிலத்தைப் பொதுவுடைமையாய்க் கொண்ட கிராம சமுதாயங்கள்தான் சமுதாயத்தின் புராதன ஆதி வடிவமாய் இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது என்பது நாளாவட்டத்தில் தெரியலாயிற்று. இவற்றுக்கு எல்லாம் மணிமுடி வைத்தாற்போல், கணம் என்பதன் மெய்யான தன்மையையும் அதற்கும் பூர்வகுடிக்குமுள்ள உறவையும் மார்கன் (29) கண்டு பிடித்ததானது, இந்தப் புராதனக் கம்யூனிச சமுதாயத்தின் உள்ளமைப்பை அதன் தூய வகையிலான வடிவில் தெளிவாய்ப் புலப்படுத்துகிறது. இந்தப் புராதன சமுதாயங்களின் சிதைவைத் தொடர்ந்து சமுதாயமானது பாகுபாடுற்றுத் தனித்தனியான. முடிவில் ஒன்றுக்கொன்று பகைமையான வர்க்கங்களாய்ப் பிரிய முற்படுகிறது. இந்தச் சிதைவு நடந்தேறிய நிகழ்ச்சிப் போக்கினை Der Ursprung der Familie, Des Privateigenthums und des Staats (குடும்பம். தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்) என்ற நூலில் (இரணடாம் பதிப்பு. ஷ்டுட்கார்ட், 1886) நான் விவரித்துக் காட்ட முயன்றிருக்கிறேன். (1888ம் ஆண்டு ஆங்கிலப்பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு).
* கைவினைச் சங்க ஆண்டான் (guild-master), அதாவது கைவினைச் சங்கத்தின் முழு உறுப்பினன், இச்சங்கத்துக்கு உட்பட்டுள்ள ஆண்டான்; இதன் தலைவனல்ல. (188ம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் குறிப்பு).
சுதந்திரமுடையானும் அடிமையும். பட்ரீஷிய உயர்குலச் சீமானும் பிலெபியப் பாமரக் குடியோனும், நிலப்பிரபுவும் பண்ணையடிமையும், கைவினைச் சங்க ஆண்டானும்* கைவினைப் பணியாளனும், சுருங்கக்கூறுமிடத்து ஒடுக்குவோரும் ஓடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை  கொண்டோராய், ஒரு நேரம் மறைவாகவும், ஒருநேரம் பகிரங்கமாகவும், இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதன் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்களது பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுறலாயிற்று.
 பாட்டாளிகளும் கம்யூனிஸ்ட்டுகளும்...
ஒட்டுமொத்தமாய்ப் பாட்டாளிகளுடன் கம்யூனிஸ்டுகளுக்குஇருக்கும் உறவு என்ன?
கம்யூனிஸ்டுகள் ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளுக்குஎதிரான ஒருதனிக் கட்சியாய் இருக்கவில்லை. அவர்கள் பாட்டாளி வர்க்கம் அனைத்துக்குமுள்ள நலன்களை அன்னியில் தனிப்பட்ட நலன்கள் எவையும் இல்லாதவர்கள்,
பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்க அவர்கள் தமக்கெனக் குறுங்குழுக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை,
ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்துகம்யூனி்ஸ்டுகளை வேறுபடுத்திக் காட்டுகிறவை பின்வருவன மட்டும் தான்:
1. வெவ்வேறுநாடுகளிலும் தேச அளவில் பாட்டாளிகள் நடத்தும் போராட்டங்களில் அவர்கள் தேசிய இனம் கடந்துபாட்டாளி வர்க்கம் அனைத்துக்கும் உரித்தான பொது நலன்களைச் சுட்டிக்காட்டிமுன்னிலைக்கு‍க் கொண்டுவருகிறார்கள்,
2. முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான தொழிலாளி வர்க்கப் போராட்டம் ‍ கடந்து செல்ல வேண்டியிருக்கும் வெவ்வேறுவளர்ச்சிக் கட்டங்களிலும் அவர்கள் எப்போதும் எங்கும் இயக்கம் அனைத்துக்குமான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்,
ஆகவே, நடைமுறையில் கம்யூனிஸ்‌டுகள் எல்லா நாடுகளிலும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளது மிகவும் முன்னேறிய, மிகவும் வைராக்கியமான பகுதியாய், ஏனைய எல்லோரையும் முன்னோக்கி உந்தித்தள்ளும் பகுதியாய் இருக்கிறார்கள்: தத்துவார்த்தத்தில் அவர்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வழி நடப்பையும் நிலைமைகளையும் பொதுவான இறுதி விளைவுகளையும் தெளிவாய்ப் புரிந்து கொள்ளும் அனுகூலத்தை,..>>>>>>>>>>